Tuesday, April 19, 2011

பொது மக்களுக்கு எதிரான பேருந்துகளும் நமது உரிமையும்

                               தேர்தலுக்கு முந்தைய நாள்.பயணிகள் ஆர்வமாக ஊருக்கு செல்வதற்காக குவிந்து விட்டார்கள்.பேருந்துகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன.வேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் பேருந்து ஒன்றை சுற்றி மக்கள் வெள்ளம்.அப்பேருந்து செல்லும் வழியில் இருக்கும் முக்கிய ஊர்கள் ஆம்பூர்,வாணியம்பாடி போன்றவை.

                               வழியில் உள்ள ஊர்களை சார்ந்த யாரையும் எந்த பேருந்தும் ஏற்றிக்கொள்ள முன்வரவில்லை.சொல்லிவைத்த்து போல எல்லா பஸ்களின் நட்த்துனர்,ஓட்டுனரும் இது நான் ஸ்டாப் வழியில் நிற்காது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.இவ்வளவு நாளும் நிறுத்தித்தானே போனீர்கள்? என்றார்கள் பயணிகள்.டைம் இல்லைஎன்று பதில் வந்த்து.

                               வெகு நேரம் பொறுத்துப்பார்த்த பயணிகள் பஸ்ஸில் ஏறி அமர்ந்துகொண்டார்கள்.நட்த்துனர் படியில் நின்று கொண்டு இது நான் ஸ்டாப்,நான் ஸ்டாப் என்று கத்திக்கொண்டிருக்க,பயணிகள் எல்லா இடங்களிலும் நிற்கும் என்று கூவி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.இருக்கைகள் நிரம்பியாகிவிட்ட்து.

                               கண்டக்டர் இன்னொரு உத்தியை மேற்கொண்டார்.வழியில் உள்ள ஊர்களுக்கு டிக்கெட் கேட்டவருக்கு திருப்பத்தூர் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.பத்து ரூபாய்க்கு பதிலாக நாற்பது ரூபாய் கொடுக்க வேண்டும்.டிக்கெட்டில் எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்கு பயணம் என்ற விவரம் இல்லை.நல்ல வேளை விவரமான ஆசாமிகள் அங்கே இருந்தார்கள்.நீ கேட்கும் பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொள்கிறேன்.அந்த சீட்டில் வேலூரிலிருந்து ஆம்பூருக்கு என்று எழுதிக்கொடு!’’

                             வேறு வழியில்லை.அவர்கள் பணிந்து போனார்கள்.அடங்கிப்போய்விட்டார்கள்.டிக்கெட்டில் எழுதிக்கொடுத்தால் என்ன ஆகியிருக்கும்.பயணி நுகர்வோர் நீதிமன்றம் சென்றிருப்பார்.நட்த்துனருக்கும்,நிர்வாகத்துக்கும் எதிரான தீர்ப்பு வரும்.பயணி நஷ்ட ஈடு பெறுவார்.பதினான்கு ரூபாய் டிக்கெட் என்றால் ஒரு  ரூபாய் எப்போதும் அவர்களிடம் சில்லறை இருப்பதில்லை.

                              அய்ம்பது பைசா சில்லறை தராத நட்த்துனர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆயிரக்கணக்கில் நஷ்ட ஈடு பெற்ற சம்பவங்கள் உண்டு.வக்கீல் தேவையில்லை.அதிக செலவும் இல்லை.உரிய ஆதரம் இருந்தால் போதுமானது.நிவாரணம் பெறலாம்.அதற்கென இருக்கும் தொண்டு நிறுவன்ங்கள் உதவி செய்கின்றன.

                               கொடுக்கும் பணத்திற்கு தரமான சேவையை பெறும் உரிமை நமக்கு இருக்கிறது.சட்டம் அதற்கு வழி செய்கிறது.உரிய சட்டங்கள் எளிமையாக இருந்தும் அதிகம் பயன்படுத்தாத நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.அரசுகள் நுகர்வோர் விழிப்புணர்வுக்காக பணம் செலவு செய்துகொண்டிருக்கின்றன.

                               பேருந்தில் மழைநீர் ஒழுகுவதிலிருந்து,சில்லறை பிரச்சினை வரை உங்களை மன உளைச்சல் ஏற்படுத்தினால் எளிய முறையில் நிவாரணம் பெற முடியும்.கடையில் ஒரு பொருள் வாங்கி தரமாக இல்லாவிட்டாலும் உரியவாறு மாற்றிப்பெற நமக்கு உரிமை இருக்கிறது.எதற்கு பிரச்சினை என்று ஒதுங்கி ஒதுங்கி வாழ பழகிவிட்டோம் என்று தோன்றுகிறது.இந்தியாவில் இது அதிகம்.இது நல்லதல்ல!
-

10 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மைதாங்க ஏதே ஏறியாச்சி.. அப்புறம் இறங்கியாச்சி என்றே முடிந்து விடுகிறது....

உண்மையில் இந்திய பேருந்தில் பலவேறு அவலங்கள் றிறைந்து காணப்படுகிறது...

நல்ல விழிப்புணர்வு பதிவு .. வாழ்த்துக்கள்..

விக்கி உலகம் said...

நல்ல விழிப்புணர்வு பதிவு

MANO நாஞ்சில் மனோ said...

//.எதற்கு பிரச்சினை என்று ஒதுங்கி ஒதுங்கி வாழ பழகிவிட்டோம் என்று தோன்றுகிறது.இந்தியாவில் இது அதிகம்.இது நல்லதல்ல!//

உங்க பதிவு விழிப்புணர்வு பதிவு, ஆனாலும் மக்கா நம்ம மக்களுக்கு மறதியும், சகிப்புத்தன்மையும் கூடித்தான் போச்சு....

நிரூபன் said...

பொது மக்களை ஏமாற்றும் பேருந்துகள் பற்றியும், அப் பேருந்துகள் மீது எவ்வாறு வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பாகவும் ஒரு அலசல் பதிவினை எழுதியிருக்கிறீர்கள்.

Sankar Gurusamy said...

இது பெரும்பாலும் அனைத்து வழித்தடங்களிலும் நடக்கும் ஒரு விஷயம்தான். இப்போதும் சில பேருந்துகளில் டிக்கெட் தரும்போது ஏறும் இடம் இறங்கும் இடம் எழுதுவதில்லை. அதில் எழுதும் சில எழுத்துகளைப் புரிந்துகொள்ள ஒரு குழுதான் தனியாக அமைக்கவேண்டும். தலை எழுத்து...

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

shanmugavel said...

@# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மைதாங்க ஏதே ஏறியாச்சி.. அப்புறம் இறங்கியாச்சி என்றே முடிந்து விடுகிறது....

உண்மையில் இந்திய பேருந்தில் பலவேறு அவலங்கள் றிறைந்து காணப்படுகிறது...

நல்ல விழிப்புணர்வு பதிவு .. வாழ்த்துக்கள்..

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

shanmugavel said...

@விக்கி உலகம் said...

நல்ல விழிப்புணர்வு பதிவு

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

shanmugavel said...

@MANO நாஞ்சில் மனோ said...

//.எதற்கு பிரச்சினை என்று ஒதுங்கி ஒதுங்கி வாழ பழகிவிட்டோம் என்று தோன்றுகிறது.இந்தியாவில் இது அதிகம்.இது நல்லதல்ல!//

உங்க பதிவு விழிப்புணர்வு பதிவு, ஆனாலும் மக்கா நம்ம மக்களுக்கு மறதியும், சகிப்புத்தன்மையும் கூடித்தான் போச்சு....

ஆமாம் மனோ நன்றி

shanmugavel said...

@நிரூபன் said...

பொது மக்களை ஏமாற்றும் பேருந்துகள் பற்றியும், அப் பேருந்துகள் மீது எவ்வாறு வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பாகவும் ஒரு அலசல் பதிவினை எழுதியிருக்கிறீர்கள்.

thanks Nirupan

shanmugavel said...

@Sankar Gurusamy said...

இது பெரும்பாலும் அனைத்து வழித்தடங்களிலும் நடக்கும் ஒரு விஷயம்தான். இப்போதும் சில பேருந்துகளில் டிக்கெட் தரும்போது ஏறும் இடம் இறங்கும் இடம் எழுதுவதில்லை. அதில் எழுதும் சில எழுத்துகளைப் புரிந்துகொள்ள ஒரு குழுதான் தனியாக அமைக்கவேண்டும். தலை எழுத்து...

பகிர்வுக்கு நன்றி..

உண்மைதான் சங்கர் .நன்றி