Saturday, April 16, 2011

பெண் எழுத்து


                             இது எப்படி ஏற்பட்ட்தென்று தெரியவில்லை.சகோதரி சாகம்பரி உங்களை பெண் எழுத்து தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.அவரது கோரிக்கையை தட்ட முடியாமல் நானும் வருவது வரட்டும் என்று இறங்கிவிட்டேன்.

                                                                               எழுத்தில் ஆண் பெண் வித்தியாசமில்லை என்பவர்கள் பெண்ணால் சிலவற்றை எழுத முடியாது என்றும் சொல்கிறார்கள்.பெண்ணால் சில தை எழுத முடியாது என்னும்போதே அது பெண் எழுத்து என்று பிரிந்து விடுகிறது.வித்தியாசமும் வந்துவிடுகிறது.

                                                                                     பெண்  எழுத்து என்றால் என்ன? பெண்ணால் எழுதப்படும் எழுத்தா? அடக்க ஒடுக்கமாய் எழுத வேண்டும் என்பதுதான் பெண் எழுத்தா? தலை குனிந்து யார் என்ன சொல்வாகளோ என்று அஞ்சி அஞ்சி எழுதுவது பெண் எழுத்தா?ஒரு பெண்,பெண்ணின் வலிகளையும்,சிரமங்களையும்,பெண்ணாக பிறந்ததற்காகவே அனுபவிக்க நேர்ந்தவை பற்றியும்,தன் மீது ஏவப்பட்ட வன்முறைகளையும்,இரண்டாந்தர பாலினமாக வாழ்ந்து கொண்டு அங்கீகாரம் இல்லாத நிலையையும் எழுதுவது பெண்

எழுத்தா? தன்னுடைய,தன்னைப்போன்றவர்களின் உரிமைக்காக எழுதுவது பெண் எழுத்தாபெண்ணின் சிரமங்களை ஆண் எழுதுவதற்கும்,பெண் எழுதுவதற்கும் என்ன வித்தியாசம் ? வலி அனுபவித்தவன் அதை எழுதுவதற்கும்,வேடிக்கை பார்த்தவன் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம்தான்.

                                                                       அம்பையின் கதைகளில் காணும் பெண்களை ஒரு ஆணின் படைப்பில் நான் கண்டதில்லை.ஆண் பெண்ணைப்பற்றி எழுதவேண்டுமானால் கூடு விட்டு கூடு பாய வேண்டும்.ஆங்கிலத்தில் Empathy என்றொரு வார்த்தை இருக்கிறது.நீங்கள் என்ன உணர்கிறீர்களோ அதையே நானும் உணர்வது.இது அவ்வளவு சுலபமல்ல! கைவரப்பெற்றவர்கள் நல்ல எழுத்தாளர்களாக விளங்குகிறார்கள்.

                                                                           ராஜம் கிருஷ்ணன்  'காலம்தோறும் பெண்மை' எழுதினார்.அதை ஆண்கள் அவ்வளவு தீவிரத்துடன் எழுதுவது சாத்தியமா? என் சமூகத்தை நான் எழுதினால் அது சரியாகவும்,உயிருடனும் இருக்கும்.இப்படி எழுதினால் அப்படி சொல்வார்கள் அப்படி எழுதினால் இப்படி சொல்வார்கள் என்று விமர்சனத்திற்கு அஞ்சி நடுங்குவதும்,புலம்புவதும் இன்று பெண் எழுத்தாக இருக்கிறது.

                                                                              ஒரு கதையை படித்த ஆயிரம்பேரில் ஒருவர் மோசமாக விமர்சித்தார் என்பதற்காக கூட்டுக்குள் முடங்கிக் கொள்ள வேண்டுமா? பெண் முன்னேற்றத்திற்காகவும்,உரிமைக்காகவும் முன் நின்ற ஆண்கள் எதிர்ப்பை சந்திக்கவில்லையா?தந்தை பெரியார் எதிர்கொள்ளாத எதிர்ப்புகளா? பெண் என்றால்  சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன.இருந்தும் சிறப்பாக செயல்பட முடியும் என்றே கருதுகிறேன்.இதை உறுதி செய்ய நான் மகாகவியின் வார்த்தைகளை தருகிறேன்.பாரதியார் கட்டுரைகளிலிருந்து சில வரிகள்
                  ஸகோதரிகளே,தயங்காதீர்கள்,மலைக்காதீர்கள்.திரும்பிப் பாராமல் நாம் செய்ய வேண்டிய எந்தக் கார்யத்தையும் நிறைவேற்றும்வரை-நம்முடைய லஷ்யத்தை அடையும் வரை-முன் வைத்த காலை பின் வைக்காமல் நடந்து செல்லுங்கள்.பேடிகளாயிருந்தால் திரும்புங்கள்.

                               நாம் கொண்ட காரியமோ பெரிது.இதற்குப் பெரிய இடையூறுகள் நிச்சயமாக நேரிடும்.ஆனால் நீங்கள் பயப்படக்கூடாது.

                               பயமே பாபமாகும்என்று விவேகானந்தர் சொல்லியதை மறவாதீர்கள்.ந்ந்தனார் விடுதலைக்குப்பட்ட சிரமங்களை நினைத்துப் பாருங்கள்.

                                உங்களுடைய ஒவ்வொருவருடைய கொள்கைகளை இன்று வாய்விட்டு விஸ்தாரமாக சொல்லிவிடுங்கள்.மனதிலுள்ள பயம்,வெட்கம், என்ற பேய்களை தைர்ய வாளால் வெட்டி வீழ்த்தி விட்டு பாரத ஸகோதரிகள் பாரதமாதாவுக்கு தெரிவிக்க வேண்டுமென்பதே என்னுடைய பிரார்த்தனை.ஓம் வந்தேமாதரம்.
                         
-

10 comments:

மைந்தன் சிவா said...

பரவாயில்லை கடின தலைப்பை வைத்து எழுதிவிட்டீர்கள்..முதலில் அதற்க்கு வாழ்த்துக்கள் பாஸ்

shanmugavel said...

ஆமாம் சிவா, என்னையும் எழுது என்றார்கள்.நன்றி

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நன்று.

shanmugavel said...

@Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

நன்றி ரத்னவேல்

shanmugavel said...

@ராமலக்ஷ்மி said...

நன்று.

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

சாகம்பரி said...

த்திமேல் நடக்கச் சொல்லுகிறீர்கள். பெண்ணால் எழுத முடியாது என்றில்லை. விளைவுகளை புரிந்து எழுத வேண்டும். அதுதான் என்னுடைய கருத்து. பெண் எழுத்து பற்றிய உங்கள் சிந்தனை நன்று. பாராட்டுக்கள். எங்கள் ஊரில் அழகர் திருவிழா. அதில் கொஞ்சம் பிஸி.

இராஜராஜேஸ்வரி said...

வலி அனுபவித்தவன் அதை எழுதுவதற்கும்,வேடிக்கை பார்த்தவன் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம்தான்.
True...

shanmugavel said...

@சாகம்பரி said...

த்திமேல் நடக்கச் சொல்லுகிறீர்கள். பெண்ணால் எழுத முடியாது என்றில்லை. விளைவுகளை புரிந்து எழுத வேண்டும். அதுதான் என்னுடைய கருத்து. பெண் எழுத்து பற்றிய உங்கள் சிந்தனை நன்று. பாராட்டுக்கள். எங்கள் ஊரில் அழகர் திருவிழா. அதில் கொஞ்சம் பிஸி.

கத்திமேல் வேண்டாம்.அச்சமின்றி நிமிர்ந்து நடந்தாலே போதும்.நன்றி

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

வலி அனுபவித்தவன் அதை எழுதுவதற்கும்,வேடிக்கை பார்த்தவன் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம்தான்.
True...

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி