Tuesday, June 7, 2011

எய்ட்ஸ் -தெரிந்ததும் தெரியாததும்

எய்ட்ஸ் பற்றி ஓரளவுக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும்.பரவலாக அறியப்பட்ட்து அது பால்வினை நோய் என்பதும்,உடலுறவு மூலம் பரவும் என்பதும்தான்.தெரியாத்து நிறைய இருக்கிறது.அக்குயர்ட் இம்யூனோ டிஃபிசியன்ஸி சிண்ட்ரோம்”(Acquired immune deficiency syndrome) என்பதன் சுருக்கம் தான் எய்ட்ஸ்.இது HIV என்னும் வைரஸால் ஏற்படும் ஒருநிலை.

                                  மனிதனுக்கு இயற்கையாகவே நோய் தடுப்பாற்றல் உண்டு. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள்(Antigen) உள்ளே நுழையும்போது (உதாரணமாக பாக்டீரியா,வைரஸ்,விஷம்போன்றவை) எதிராக வேதிப்பொருட்களை(Antibody) உருவாக்கி அதை அழித்துவிடும்.இந்த வேலையை செய்வது நமது ரத்த்த்தில் உள்ள வெள்ளையணுக்கள்.

                                    HIV  கிருமி உடலில் நுழைந்தவுடன் நோய் எதிர்ப்பு வேலையை செய்யும் வெள்ளையணுக்களை அழிக்க ஆரம்பித்து விடுகின்றன.கிருமிகள் அதிகரிக்க அதிகரிக்க உடலில் சுத்தமாக ஒரு வகை வெள்ளையணுக்கள் குறைந்துபோய் வேலி இல்லாத வெள்ளாமை போல உடலில் பலவகை நோய்களும் ஏற்பட்டு விடும்.

                                    முழுவதுமாக எதிர்ப்பு சக்தி இல்லாமல் எடை குறைந்து ,ஆரம்பத்தில் பத்திரிகையிலும்,டி.வி,யிலும் காட்டப்பட்ட்து போல எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் நிலைதான் எய்ட்ஸ்.இது கடைசி நிலை.ஆனால் இந்த நிலை ஏற்பட ஒருவருக்கு கிருமித்தாக்கம் ஏற்பட்டு பல வருடங்கள் ஆகலாம்.அதுவரை அவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் மற்றவர்கள் மாதிரி இயல்பாகவே இருப்பார்.ரத்தம் பரிசோதனை செய்தால் மட்டும் தெரியும்.

                                      இப்போது கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் உள்ளதால் எலும்பும்,தோலுமாக இருக்கும் எய்ட்ஸ் நிலையில் இருக்கும் நோயாளிகளை காணமுடியாது.ஆப்பிரிக்காவில் தோன்றிய போதிலும் முதலில் அமெரிக்காவில்தான் கண்டறிந்து(ஓரினச்ச்சேர்க்கையாளர்களிடம்) நாமகரணம் சூட்டப்பட்ட்து.இந்தியாவில் 1986-ல் சென்னையில் ஆறு பாலியல் தொழிலாளர்களிடம் தொற்று இருப்பதை உறுதி செய்தார்கள்

                                      இன்று பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இக்கிருமி தோன்றியத்ற்கான பல அனுமான்ங்கள் இருக்கின்றன.ஆப்பிரிக்காவில் சிம்பன்ஸியிடமிருந்து மனிதனுக்கு பரவியது என்பதே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட்து.ஆப்பிரிக்கர்களிடம் சிம்பன்ஸி கறி சாப்பிடும் வழக்கம் உண்டு.

                           நாம் கோழி,ஆடு வெட்டுவது போல அவர்களும் வெட்டும்போது ரத்தம் தெரிக்கும் இல்லையா? அப்போது உடலில் உள்ள காயங்கள் வழியாக பரவியிருக்கலாம் என்கிறார்கள்.இன்னொன்று உயிரியல் யுத்தம்(bio war) .தசாவதாரமும்,ஈ படமும் நினைவுக்கு வரலாம்.சுற்றுலா பயணிகள் மூலமாக உலக நாடுகளுக்கு பரவிவிட்ட்து.

                            Know aids for no aids  என்கிறார்கள். முழுமையான அறிவே இந்நோயை ஒழிக்க துணை செய்யும்.பாதுகாப்பு இல்லாத உடலுறவு மூலம் எச்.அய்.வி பரவுவது அதிகம்.சுத்தம் செய்யாத ஊசி போன்ற பொருட்கள்,பாதிக்கப்பட்டவரின் ரத்தம் பரிசோதிக்காமல் செலுத்துவது,தாயிடம் இருந்து குழந்தைக்கு ஆகிய நான்கு வகையில் மட்டுமே பரவும்.வேறு வகையில் இது பரவாது.

                             தேவையில்லாத பயத்தினால் இக்கிருமியால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதற்கு பயந்த காலம் உண்டு.இன்னும் சிலருக்கு அந்த பயம் இருக்கிறது.தொட்டால் எல்லாம் ஒட்டிக்கொள்ளாது.அப்படி பார்த்தால் இந்தியாவில் முக்கால்வாசி பேருக்கு வந்து விட்டிருக்கும்.ஏனென்றால் பலர் பார்க்காவிட்டாலும் பஸ்ஸிலோ,ரயிலிலோ அவர்களுடன் பயணம் செய்திருக்கிறீர்கள்.

                           ஆளைப்பார்த்தால் ஒருவருக்கு எச்.அய்.வி. இருப்பதை கண்டுபிடிக்க முடியாது.கொசு மூலமும் பரவாது.மனித உடலை தவிர வேறெங்கும் உயிர்வாழ அதற்கு உணவு இல்லை.மனிதனின் ரத்தம் ,உடல் திரவங்களில்தான் உயிர்வாழும்.அதனால்தான் human immune deficiency virus  என்று பெயர்.சரி எச்.அய்.வி. மற்றும் எய்ட்ஸ் என்ன வித்தியாசம்? எச்.அய்.வி. என்பது கிருமி,எய்ட்ஸ் என்பது அதனால் உருவாகும் பல நோய்களின் கூட்டு நிலை.

                               எச்.அய்.வி. யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் மருத்துவ வசதி அளிக்கிறது.வாழ்நாள் முழுக்க அவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.பாதிக்கப்பட்ட பல பெண்களும் குழந்தைகளும் ஒரு பாவமும் செய்யாதவர்கள்.நமது கடமை அவர்கள் மீது அன்பு செலுத்துவதே!

-

23 comments:

மைந்தன் சிவா said...

மறுபடியும் எயிட்ச்சா??
ஆமா பல புதிய தகவல்கள்...

மைந்தன் சிவா said...

நமக்கு தேவை இல்லை காரணம் நாம நல்ல பசங்க ஹிஹி

Anonymous said...

அனைவரும் அறிய வேண்டிய பயனுள்ள பகிர்வு..எய்ட்ஸால் பாதிக்க பட்டவரிடம் அன்பு காட்டுதல் அவசியம்..

றமேஸ்-Ramesh said...

நல்ல இடுகை.
இங்கும் ஏலவே வந்தததை பின்னூட்டமாக்குகிறேன்
பார்க்க.
http://sidaralkal.blogspot.com/search/label/%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் அண்ணே, எயிட்ஸ் பற்றி இன்னொரு பக்கத்தை எடுத்துரைத்தமைக்கு நன்றிகள்!!

A.K.RASAN said...

நல்ல பதிவு.

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

மறுபடியும் எயிட்ச்சா??
ஆமா பல புதிய தகவல்கள்...

ஆமாம் சிவா ,உங்களுக்கு தெரியாததும் இருக்குதானே? நன்றி.

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

நமக்கு தேவை இல்லை காரணம் நாம நல்ல பசங்க ஹிஹி

நல்ல பசங்களூக்கும் தேவை சிவா!பொது அறிவு மட்டுமல்லாது ஒரு நாட்டின் பெரிய போருக்கு சமமான அபாயம்.நன்றி

shanmugavel said...

@தமிழரசி said...

அனைவரும் அறிய வேண்டிய பயனுள்ள பகிர்வு..எய்ட்ஸால் பாதிக்க பட்டவரிடம் அன்பு காட்டுதல் அவசியம்..
தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@றமேஸ்-Ramesh said...

நல்ல இடுகை.
இங்கும் ஏலவே வந்தததை பின்னூட்டமாக்குகிறேன்
பார்க்க.

படித்தேன் நன்று.கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் அண்ணே, எயிட்ஸ் பற்றி இன்னொரு பக்கத்தை எடுத்துரைத்தமைக்கு நன்றிகள்!!

உனக்கு நன்றி றஜீவா!

நிரூபன் said...

எயிட்ஸ் நோய் பற்றிய வரலாற்றினையும்,

சமூகத்தில் இன்றைய கால கட்டத்தில் எயிட்ஸ் நோய் பற்றிய பார்வையினையும் தொகுத்துத் தந்துள்ளீர்கள். நன்றி சகோ.

Anonymous said...

மிகவும் அவசியமான ஒரு பதிவு.. முறையற்ற உறவு, முறைப்படுத்தப்படாத இரத்த மாற்று, ஊசிகள், போதை ஊசிகள் போன்றவற்றினால் இது பரவும் ...

தாயிடம் இருந்து சிசுவுக்குப் பரவுவதைத் தடுக்க முடியும் ...

ஓரினச்சேர்க்கையாளருக்கு மட்டும் தான் அல்லது அவர்களால் தான் பரவுகின்றது என்பதும் பொய்யான தகவல்.. ஓரினச் சேர்க்கையாளரோ, எதிரின சேர்க்கையாளரோ .. பல பேருடன் தகாத உறவு வைத்தால் நிச்சயம் இது வர வாய்ப்புள்ளது..

ஆணுறை ஒரு நல்ல பாதுகாப்பு, ஆனால் ... அது 100 சதவீதப் பாதுக்காப்பு என சொல்ல முடியாது..

எய்ட்ஸ் நோயினை தொடுவதால், உணவுகளை பகிர்வதால், காற்றில் என இவற்றால் பரவுவதில்லை ..

என்பன கூடுதல் தகவல் சகோ...

அனைத்து நோயாளர்களையும் அன்புடன் பராமறிக்கவும், அவரளை அரவணைக்கும் பக்குவம் அனைவருக்கும் வருதலும் அவசியம் ..

shanmugavel said...

A.K.RASAN said...

நல்ல பதிவு.
நன்றி

shanmugavel said...

@நிரூபன் said...

எயிட்ஸ் நோய் பற்றிய வரலாற்றினையும்,

சமூகத்தில் இன்றைய கால கட்டத்தில் எயிட்ஸ் நோய் பற்றிய பார்வையினையும் தொகுத்துத் தந்துள்ளீர்கள். நன்றி சகோ.

உங்களுக்கும் நன்றி சகோதரம்

shanmugavel said...

@ இக்பால் செல்வன் said...

விட்டுப்போனதையும் சொல்லிவிட்டீர்கள்.நன்றி இக்பால் செல்வன்

Vijiskitchencreations said...

நல்ல இடுகை.
அனைத்து நோயாளர்களையும் அன்புடன் பராமறிக்கவும், அவரளை அரவணைக்கும் பக்குவம் அனைவருக்கும் வருதலும் அவசியம் repeat. good post.

Sankar Gurusamy said...

மிக பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு விழிப்புணர்வு பதிவு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான போஸ்ட், அவசியம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

ஷர்புதீன் said...

//நமது கடமை அவர்கள் மீது அன்பு செலுத்துவதே//

i strongly agreed this !

சாகம்பரி said...

ஒரு எய்ட்ஸ் நோயாளியை வாழத்தகுதியில்லாதவர் எனக் கருதி உறவே கூடி உயிரை விடச் செய்த கொடுமை- அவரும் சம்மதித்தே- தெரிந்தபின் இது பற்றிய விழிப்புணர்வை என் மாணவர்களிடம் ஏற்படுத்தி வருகிறேன். இப்போது கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருக்கிறது. தேவையான பதிவு.

Faizal said...

நல்ல பயனுள்ள கருத்து .. .. ...