Showing posts with label AIDS. Show all posts
Showing posts with label AIDS. Show all posts

Friday, July 26, 2013

எய்ட்ஸ் இப்படியும் பரவுமா?



இந்தியாவில் 1986  ஆம் ஆண்டு சென்னையில்தான் எச்.ஐ.வி கண்டறியப்பட்ட்து.சில ஆண்டுகள் கழித்து எங்கள் பக்கத்து கிராமத்தில் நடந்த விஷயம் இது.தொலைதூர வாகன ஓட்டுநர் அவர்.எய்ட்ஸ் நோய் முற்றிய நிலையில் இருந்தார்.அப்போது எச்.ஐ.வி கட்டுப்படுத்தும் மருந்துகள் இல்லை.(எச்.ஐ.வி என்பது வைரஸ்,எய்ட்ஸ் என்பது பல்வேறு நோய்களின் கூட்டு.எச்.ஐ.வி யால் நோய் எதிர்ப்பு சக்தி பெருமளவு குறைந்த பின்னர் இந்நிலை ஏற்படும்).மேலும் தகவல்களுக்கு பிரபல இடுகைகள் பகுதியில் உள்ள எய்ட்ஸ் பற்றிய இடுகையை படிக்கவும்.


எய்ட்ஸ் நிலையில் இருந்த வாகன ஓட்டுநர் விஷயத்திற்கு வருவோம்.மருத்துவமனையில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லிவிட்டார்கள்.அவரை வீட்டுக்கு கொண்டுவராமல் நேரடியாக சுடுகாட்டில் கொண்டுபோய் போட்டுவிட்டார்கள்.சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.சுமார் இருபது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது உத்திரப்பிரதேச கிராமத்தின் செய்தியை படித்தேன்.எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்குப்பிறந்த குழந்தைகள் சுடுகாட்டில் வாழ்க்கை நட்த்துகிறார்கள்.அவர்களுக்கும் எச்.ஐ.வி இருக்கலாம் என்ற கலக்கத்தில் உறவினர்களால் ஒதுக்கப்பட்டார்கள்.

எச்.ஐ.வி. எப்படி பரவும்,பரவாது என்பது தெரியாத நிலைதான் ஒதுக்குதலுக்கான முக்கியமான காரணம்.இருபது ஆண்டுகளுக்குப்பிறகும் அறியாமை அகலாமல் இருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.பல பட்டம் பெற்றவர்களிடம் கூட இந்த அறியாமை இருக்கிறது.நாட்டின் சமூக,பொருளாதார காரணிகளைப் பாதிக்கும் ஒரு நோயைப்பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே இருக்கவேண்டும்.நாம் சினிமா செய்திகளில் காட்டும் ஆர்வம் இது போன்ற விஷயங்களில் இருப்பதில்லை.


மீன் தண்ணீரில் வாழ்வது போல மனித உடலுக்கு வெளியே எச்.ஐ.வி உயிர் வாழாது.பாதிக்கப்பட்டவரின் இரத்தம், உடல் திரவங்களில் இந்த வைரஸ் உயிருடன் இருக்கும்.தொடுவதனாலோ,நமது வீட்டில் இருப்பதனால்,கழிப்பறையை பயன்படுத்துவதால்,ஒன்றாக சாப்பிடுவதால் வைரஸ் பரவாது.பெரும்பான்மையாக உடலுறவு மூலம் பரவுகிறது.பரிசோதிக்காமல் பாதிக்கப்பட்டவரின் இரத்தம் ஏற்றுவதன் மூலமும்,தாயிடமிருந்து குழந்தைக்கும்,ஊசி மூலமாகவும்(போதை ஊசி பகிர்ந்து கொள்பவ்ர்களிடையே) பரவ வாய்ப்பிருக்கிறது.தாயிடமிருந்து குழந்தக்குப்பரவுவதை இப்போது பெருமளவு தடுக்க முடிந்திருக்கிறது.

எச்.ஐ.வி. உள்ளவர்களை ஒதுக்குவது அறியாமையின் உச்சம்.இது எச்.ஐ.வி பரவலைக்கட்டுப்படுத்துவதில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தும்.எய்ட்ஸ் தனிமனித பிரச்சினை மட்டுமல்ல, சமூக பொருளாதார பிரச்சினையும் கூட! ஒவ்வொரு குடிமகனுக்கும் இதனால் பாதிப்பு உண்டு.இத்தனை வருடங்களில் ஊடகங்களில் இது பற்றிய தகவல்கள் வராமல் இல்லை.


நமக்கு இவற்றில் ஆர்வம் இல்லை என்பதே நிஜம்.உத்திரப்பிரதேச கிராமத்தில்படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் யாரேனும் இருக்கலாம்.அருகில் உள்ள ஒரு மருத்துவர் அல்லது மருத்துவமனையை அணுகி எச்.ஐ.வி பற்றி கேட்டிருக்கமுடியும்.இதன் மூலம் கிராமத்தில் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க முடியும்.
-

Tuesday, June 7, 2011

எய்ட்ஸ் -தெரிந்ததும் தெரியாததும்

எய்ட்ஸ் பற்றி ஓரளவுக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும்.பரவலாக அறியப்பட்ட்து அது பால்வினை நோய் என்பதும்,உடலுறவு மூலம் பரவும் என்பதும்தான்.தெரியாத்து நிறைய இருக்கிறது.அக்குயர்ட் இம்யூனோ டிஃபிசியன்ஸி சிண்ட்ரோம்”(Acquired immune deficiency syndrome) என்பதன் சுருக்கம் தான் எய்ட்ஸ்.இது HIV என்னும் வைரஸால் ஏற்படும் ஒருநிலை.

                                  மனிதனுக்கு இயற்கையாகவே நோய் தடுப்பாற்றல் உண்டு. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள்(Antigen) உள்ளே நுழையும்போது (உதாரணமாக பாக்டீரியா,வைரஸ்,விஷம்போன்றவை) எதிராக வேதிப்பொருட்களை(Antibody) உருவாக்கி அதை அழித்துவிடும்.இந்த வேலையை செய்வது நமது ரத்த்த்தில் உள்ள வெள்ளையணுக்கள்.

                                    HIV  கிருமி உடலில் நுழைந்தவுடன் நோய் எதிர்ப்பு வேலையை செய்யும் வெள்ளையணுக்களை அழிக்க ஆரம்பித்து விடுகின்றன.கிருமிகள் அதிகரிக்க அதிகரிக்க உடலில் சுத்தமாக ஒரு வகை வெள்ளையணுக்கள் குறைந்துபோய் வேலி இல்லாத வெள்ளாமை போல உடலில் பலவகை நோய்களும் ஏற்பட்டு விடும்.

                                    முழுவதுமாக எதிர்ப்பு சக்தி இல்லாமல் எடை குறைந்து ,ஆரம்பத்தில் பத்திரிகையிலும்,டி.வி,யிலும் காட்டப்பட்ட்து போல எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் நிலைதான் எய்ட்ஸ்.இது கடைசி நிலை.ஆனால் இந்த நிலை ஏற்பட ஒருவருக்கு கிருமித்தாக்கம் ஏற்பட்டு பல வருடங்கள் ஆகலாம்.அதுவரை அவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் மற்றவர்கள் மாதிரி இயல்பாகவே இருப்பார்.ரத்தம் பரிசோதனை செய்தால் மட்டும் தெரியும்.

                                      இப்போது கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் உள்ளதால் எலும்பும்,தோலுமாக இருக்கும் எய்ட்ஸ் நிலையில் இருக்கும் நோயாளிகளை காணமுடியாது.ஆப்பிரிக்காவில் தோன்றிய போதிலும் முதலில் அமெரிக்காவில்தான் கண்டறிந்து(ஓரினச்ச்சேர்க்கையாளர்களிடம்) நாமகரணம் சூட்டப்பட்ட்து.இந்தியாவில் 1986-ல் சென்னையில் ஆறு பாலியல் தொழிலாளர்களிடம் தொற்று இருப்பதை உறுதி செய்தார்கள்

                                      இன்று பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இக்கிருமி தோன்றியத்ற்கான பல அனுமான்ங்கள் இருக்கின்றன.ஆப்பிரிக்காவில் சிம்பன்ஸியிடமிருந்து மனிதனுக்கு பரவியது என்பதே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட்து.ஆப்பிரிக்கர்களிடம் சிம்பன்ஸி கறி சாப்பிடும் வழக்கம் உண்டு.

                           நாம் கோழி,ஆடு வெட்டுவது போல அவர்களும் வெட்டும்போது ரத்தம் தெரிக்கும் இல்லையா? அப்போது உடலில் உள்ள காயங்கள் வழியாக பரவியிருக்கலாம் என்கிறார்கள்.இன்னொன்று உயிரியல் யுத்தம்(bio war) .தசாவதாரமும்,ஈ படமும் நினைவுக்கு வரலாம்.சுற்றுலா பயணிகள் மூலமாக உலக நாடுகளுக்கு பரவிவிட்ட்து.

                            Know aids for no aids  என்கிறார்கள். முழுமையான அறிவே இந்நோயை ஒழிக்க துணை செய்யும்.பாதுகாப்பு இல்லாத உடலுறவு மூலம் எச்.அய்.வி பரவுவது அதிகம்.சுத்தம் செய்யாத ஊசி போன்ற பொருட்கள்,பாதிக்கப்பட்டவரின் ரத்தம் பரிசோதிக்காமல் செலுத்துவது,தாயிடம் இருந்து குழந்தைக்கு ஆகிய நான்கு வகையில் மட்டுமே பரவும்.வேறு வகையில் இது பரவாது.

                             தேவையில்லாத பயத்தினால் இக்கிருமியால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதற்கு பயந்த காலம் உண்டு.இன்னும் சிலருக்கு அந்த பயம் இருக்கிறது.தொட்டால் எல்லாம் ஒட்டிக்கொள்ளாது.அப்படி பார்த்தால் இந்தியாவில் முக்கால்வாசி பேருக்கு வந்து விட்டிருக்கும்.ஏனென்றால் பலர் பார்க்காவிட்டாலும் பஸ்ஸிலோ,ரயிலிலோ அவர்களுடன் பயணம் செய்திருக்கிறீர்கள்.

                           ஆளைப்பார்த்தால் ஒருவருக்கு எச்.அய்.வி. இருப்பதை கண்டுபிடிக்க முடியாது.கொசு மூலமும் பரவாது.மனித உடலை தவிர வேறெங்கும் உயிர்வாழ அதற்கு உணவு இல்லை.மனிதனின் ரத்தம் ,உடல் திரவங்களில்தான் உயிர்வாழும்.அதனால்தான் human immune deficiency virus  என்று பெயர்.சரி எச்.அய்.வி. மற்றும் எய்ட்ஸ் என்ன வித்தியாசம்? எச்.அய்.வி. என்பது கிருமி,எய்ட்ஸ் என்பது அதனால் உருவாகும் பல நோய்களின் கூட்டு நிலை.

                               எச்.அய்.வி. யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் மருத்துவ வசதி அளிக்கிறது.வாழ்நாள் முழுக்க அவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.பாதிக்கப்பட்ட பல பெண்களும் குழந்தைகளும் ஒரு பாவமும் செய்யாதவர்கள்.நமது கடமை அவர்கள் மீது அன்பு செலுத்துவதே!

-