Friday, September 23, 2011

இரவு நேரத்துக்கு ஏற்ற உணவுகள்

ஜீரண மண்டலங்கள் எப்போது சிறப்பாக இயங்கும்? வேலை செய்யும்போதா? ஓய்வாக இருக்கும்போதா? தூங்கும்போது அவற்றின் செயல்பாடு எப்படி இருக்கும்? இவற்றுக்கான விடையை உங்களால் எளிதில் சொல்லிவிட முடியும்.ஆமாம்,உறக்கத்திலும்,ஓய்வு நிலையிலும் செரிமானத்தின் ஆற்றல் மிதமாக இருக்கும்.

                               இரவு நேரத்தில் எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும் என்று இப்போது புரிந்திருக்கும்.எளிதாக ஜீரணம் செய்யத்தகுந்தவையாக இருக்க வேண்டும்.அசைவம் உள்ளிட்ட கொழுப்பு உணவுகள் தவிர்க்கப்பட வேண்டியவை.பழங்கள் போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
                               ராத்திரி பொழுதுகளில் வயிற்றை சங்கடப்படுத்தும் உணவுகள் தூக்கத்தையும் பாதிக்கின்றன.தூக்கம் பாதிக்கப்பட்டாலே உடலில் நோய்களுக்கான வாசல் திறக்கப்பட்டு விட்ட்து என்று அர்த்தம்.வாயுவை உண்டாக்கும் கிழங்கு வகைகள்,அதிக பருப்புகள்,முட்டை,முட்டைக்கோஸ்,காலிஃபிளவர் ஆகியன பலருக்கு நல்ல உறக்கத்தை கெடுக்கும்.
                               அசைவ உணவுகள் எளிதில் செரிப்பவை அல்ல! ஆனால் இரவு நேரங்களில்தான் அசைவ உணவு வகைகளும்,மற்ற கொழுப்பு நிறைந்த உணவு வகைகளும் அதிகம் விற்பனையாவதாக ஹோட்டல் நட்த்துபவர்கள் சொல்கிறார்கள்.மதுப் பிரியர்கள் ஒரு காரணம் என்றால் இன்றைய வாழ்க்கை முறையும் அப்படித்தான்.

                                உள்ளூரில் தொழில் நட்த்தும் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.நைட்லதான் சார் நிம்மதியா உட்கார்ந்து சாப்பிட முடிகிறது,ருசி பார்த்து சாப்பிடறதும் அப்போதான்காலையில் அரக்க பரக்க வெந்த்தையும்,வேகாத பண்ட்த்தையும் வாயில் திணித்துக் கொண்டு பறக்க வேண்டியிருக்கிறது.பிள்ளைகளுக்கு தயார் செய்ய வேண்டும்,அலுவலகத்துக்கு,தொழிலுக்கு தயாராக வேண்டும்.இந்நேரத்தில் மதிய உணவையும் அவ்வளவு சிறப்பாக தயார் செய்ய முடிவதில்லை.
                                குடும்பத்தோடு ஒரு நாளைக்கு ஹோட்டலில் சாப்பிடலாம் என்ற பழக்கம் அதிகரித்து வருகிறது.இது பெரும்பாலும் இரவு நேரங்களில் இருக்கும்.தின்பதும் அதிக மசாலா சேர்க்கப்பட்ட கொழுப்பு வகைகளையும்,மைதாவால் செய்யப்பட்ட பண்டங்களையும்தான்.மைதா நீரிழிவை தூண்டுகிறதென்று கேரளாவில் இயக்கம் நட்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.தென்னிந்தியாவில் இதன் பயன்பாடு அதிகம் என்கிறார்கள்.

                                நொறுக்குத்தீனிகளை உண்பதும் மாலை நேரங்களில்தான்.வயிற்றுப் புண்ணிலிருந்து நீரிழிவு வரையிலான பிரச்சினைகளுக்கு காரணம் நமது பழக்கங்கள்தான்.இவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.மருந்துக்கடைகளில் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.இவற்றுக்கு ராத்திரி நேரத்து உணவுகளுக்கு அதிகம் பங்கிருக்கிறது.
                                 தொலைக்காட்சி வரவுக்குப் பிறகு தூங்கும் நேரமும் வெகுவாக குறைந்து விட்ட்து.இன்று சராசரியாக தூங்கப்போகும் நேரம் பல வீடுகளில் இரவு பன்னிரண்டு மணி.இதன் விளைவுகளை உணர்ந்து திருத்திக் கொள்பவர்கள் பாக்கியவான்கள்,அவர்கள் நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள்.
-

46 comments:

மைந்தன் சிவா said...

சரியான நேரத்தில சரியான பதிவு ஹிஹி!!எப்பிடி பாஸ் தமிழ்மணம் செட் ஆகுது உடன!!

kavithai said...

மிக அருமையான பதிவு. ஆனால் யார் இதைக் கடைப்பிடிக்கிறார்கள் ?. உலகே மிகக் கெட்டதாக மாறிவிட்டது. ஆனால் சொல்ல வேண்டியதை எப்போதும் கூற வேண்டியது தான். புத்தியுள்ளவர்கள் கேட்பார்கள்.வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

சரியான நேரத்தில சரியான பதிவு ஹிஹி!!எப்பிடி பாஸ் தமிழ்மணம் செட் ஆகுது உடன!!

எங்கே பாஸ் ரொம்ப நாளா ஆளே காணோம்? தமிழ்மணம் விவகாரம் ஹாஹா! நல்லவங்களுக்கு சீக்கிரமா கதவு தொறக்குமாம்! நேத்து நிரூ பதிவைகூட நான் தான் இணைச்சேன்.நன்றி சிவா!

shanmugavel said...

@kavithai said...

மிக அருமையான பதிவு. ஆனால் யார் இதைக் கடைப்பிடிக்கிறார்கள் ?. உலகே மிகக் கெட்டதாக மாறிவிட்டது. ஆனால் சொல்ல வேண்டியதை எப்போதும் கூற வேண்டியது தான். புத்தியுள்ளவர்கள் கேட்பார்கள்.வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

ஆமாம்,நமக்கு தெரிந்த விஷய்த்தை சொல்வது நமது கடமை.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

Mahan.Thamesh said...

பயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றி அண்ணா

நிகழ்வுகள் said...

ம்ம் நாம எல்லாம் இரவு நேரத்தில தானே புல்லா வயிற்ற நிரப்புறது...

சிநேகிதி said...

மிகவும் பயனுள்ள அருமையான பகிர்வு.. உங்களின் இந்த பகிர்வுக்கு நன்றி

மாய உலகம் said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

நன்றிங்கோ!

Powder Star - Dr. ஐடியாமணி said...

சார்! இனி நீங்க சொன்ன மாதிரியே சாப்புடுறேன்!

shanmugavel said...

@Mahan.Thamesh said...

பயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றி அண்ணா

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பிரதர்.

shanmugavel said...

@நிகழ்வுகள் said...

ம்ம் நாம எல்லாம் இரவு நேரத்தில தானே புல்லா வயிற்ற நிரப்புறது...

ஆமாம் சார்,அதுக்குத்தானே இந்தப்பதிவு.நன்றி அய்யா!

shanmugavel said...

@சிநேகிதி said...

மிகவும் பயனுள்ள அருமையான பகிர்வு.. உங்களின் இந்த பகிர்வுக்கு நன்றி

தங்களுக்கும் நன்றி

shanmugavel said...

@மாய உலகம் said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே

நன்றி நண்பா!

shanmugavel said...

@விக்கியுலகம் said...

நன்றிங்கோ!

SAME TO YOU

RAVICHANDRAN said...

பயனுள்ள பதிவு.

shanmugavel said...

@Powder Star - Dr. ஐடியாமணி said...

சார்! இனி நீங்க சொன்ன மாதிரியே சாப்புடுறேன்!

thanks sir

• » мσнαη « • said...

நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே .....

முயற்சிக்கிறோம் !!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

எம் உடல் எடையினைப் பேணிடவும்,
இரவு வேளையில் உடற் சேமிப்பாட்டினைப் மெயிண்டேன் பண்ணிடவும் ஏற்ற அருமையான பதிவு.

இராஜராஜேஸ்வரி said...

தூக்கம் பாதிக்கப்பட்டாலே உடலில் நோய்களுக்கான வாசல் திறக்கப்பட்டு விட்ட்து என்று அர்த்தம்./

விழிப்பணர்வுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

விளைவுகளை உணர்ந்து திருத்திக் கொள்பவர்கள் பாக்கியவான்கள்,அவர்கள் நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள்.

உணரும் வகையில் அருமையான பகிர்வு.

மோகன் குமார் said...

மிக பயனுள்ள பகிர்வு. பலரும் இரவு தான் அதிகம் சாப்பிடுகிறோம் இது தவறு தான்

IlayaDhasan said...

அருமையான பாயிண்டுகள் ...ஆறு மணிக்குள்ளாற சாப்டா , ஆரோக்கியம் உங்களோட தான் எப்போதும்

ஆண்களே ,பெண்களே : நீங்கள் "அந்த" விசயத்தில் கில்லாடி ஆகணுமா?

suryajeeva said...

அருமை...

மதுரன் said...

அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு தேவையான பயனுள்ள பதிவு நண்பரே..

stalin said...

நல்ல தகவல் சகோ.........


பகிர்வுக்கு நன்றி ...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Very useful information

ராஜன் said...

good post

தமிழ்நுட்பம் said...

பயனுள்ள அருமையான தகவல்

Without Investment Data Entry Jobs !

http://bestaffiliatejobs.blogspot.com

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள் சார்... !

shanmugavel said...

@RAVICHANDRAN said...

பயனுள்ள பதிவு.

நன்றி அய்யா!

shanmugavel said...

@• » мσнαη « • said...

நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே .....

முயற்சிக்கிறோம் !!

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

shanmugavel said...

@நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

எம் உடல் எடையினைப் பேணிடவும்,
இரவு வேளையில் உடற் சேமிப்பாட்டினைப் மெயிண்டேன் பண்ணிடவும் ஏற்ற அருமையான பதிவு.

வணக்கம் நன்றி நிரூபன்,

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

தூக்கம் பாதிக்கப்பட்டாலே உடலில் நோய்களுக்கான வாசல் திறக்கப்பட்டு விட்ட்து என்று அர்த்தம்./

விழிப்பணர்வுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி

shanmugavel said...

@மோகன் குமார் said...

மிக பயனுள்ள பகிர்வு. பலரும் இரவு தான் அதிகம் சாப்பிடுகிறோம் இது தவறு தான்

ஆமாம் சார்,நன்றி

shanmugavel said...

@IlayaDhasan said...

அருமையான பாயிண்டுகள் ...ஆறு மணிக்குள்ளாற சாப்டா , ஆரோக்கியம் உங்களோட தான் எப்போதும்

ஆனா முடியுமா? சார்.வீடு வந்து சேரவே லேட்டாயிடுது!நன்றி

shanmugavel said...

தங்கள் கருத்துரைக்கு நன்றி
@சூர்ய ஜீவா
@மதுரன்
@கருன்
@ஸ்டாலின்
@’’என் ராஜபாட்டை’’ ராஜா
@ராஜன்
@பன்னிக்குட்டி ராமசாமி
@தமிழ்நுட்பம்.

காந்தி பனங்கூர் said...

ஆரோக்கியமாக வாழ்வதற்க்காண அறிவுரைகளுக்கு நன்றி நண்பா

Jana said...

தாமதமான வரவுக்க மன்னிக்கவும், இரவு உணவு பற்றிய தேவை தேவையானதே... நன்றி

மாலதி said...

மிக அருமையான பதிவு

இராஜராஜேஸ்வரி said...

மிக அருமையான பதிவு.

ராஜா MVS said...

நல்ல பதிவு நண்ரே...

Sankar Gurusamy said...

இன்றைய அலுவலக சூழலில் இரவு உணவைத்தான் சற்று ஆர அமர சாப்பிடுகிறார்கள். அதற்கும் ஆப்பா???

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

சாகம்பரி said...

சரியான பதிவு. நிறைய பேரிடம் இரவு உணவை கட்டுப்படுத்தும் பழக்கமே இல்லை. அதிலும் இந்த ஆம்லெட் ஆவது வேண்டுமாம்.

raji said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்


http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_19.html