Saturday, September 17, 2011

இவர்களெல்லாம் எதற்காக பதிவு எழுத வேண்டும்?


ஆனந்த விகடனில் வலைப்பதிவுகளில் எழுதிக்குவிப்பதைப் பற்றி அசோகமித்திரனிடம் கேட்டார்கள்.அவரது பதிலில் ஒரு கேள்வி,’’ஏன் எழுத்தாளராக வேண்டும்? வேறு ஏதாவது ஆகலாமே!’’ அவருக்கு பதில் தெரியாமல் இல்லை.அங்கீகாரம் பெறவே எழுதுவதாக சொல்கிறார்கள்.எழுதினால்தான் சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்குமா? அப்புறம் ஏன் பலரும் முகத்தை மறைத்துக்கொள்கிறார்கள்?


                              மனிதனுக்கு எல்லாவற்றையும் விட தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ளத்தான் பெரிதும் ஆசை.இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நாமே நம்மை அறிவாளியாக நினைத்துக் கொள்ளலாம்.உன்னிடம் வசதியில்லை என்று சொன்னால் ஒப்புக்கொள்வார்கள்,கார் இல்லை,பங்களா இல்லை,ஏன் வீரம் இல்லை என்று சொன்னால் கூட ஒப்புக்கொள்வார்கள்.யாரையாவது உனக்கு அறிவில்லை என்று சொல்லிப்பாருங்கள்,அப்புறம் இருக்கிறது உங்களுக்கு!

                              அறிவுக்குறைவை மட்டும் உண்மையாக இருந்தாலும் ஒருவன் ஏற்றுக்கொள்வதில்லை.இதில் உள்ள இன்னொரு சிக்கல் பலர் யாரிடமும் தெரியாத்தை கேட்க்க் கூட மாட்டார்கள்.இதுகூட தெரியாதா என்று கேட்டுவிடுவார்கள் என்ற பயம்.தன்னை விட ஒன்றும் தெரியாதவனிடம் கேட்பார்கள்.அவனும் எல்லாம் தெரிந்த மாதிரி எதையாவது சொல்வான்.

                               ஒரு நல்ல தீர்வாக இணையம் வந்து சேர்ந்த்து.தேடினால் பெரும்பாலும் அதைப்பற்றி கிடைத்து விடுகிறது.கூகுள் புண்ணியத்தில் இப்போது பதிவுகள்.கல்லூரியில் கையெழுத்துப் பத்திரிகைகளை பார்க்க முடியும்.ஸ்கெட்ச்சில் அழகாக படம் வரைபவர்கள் வரைவார்கள்,கவிதை எழுதுவார்கள்,கதை,கட்டுரை எல்லாம் இருக்கும்.மாணவர்கள் மட்டும் மாற்றி மாற்றி படிப்பார்கள்.இதையெல்லாம் எதற்காக செய்கிறார்கள்?

                               ஏன் எழுதிகிறேன் என்பதற்கு பிச்சமூர்த்தி சொன்ன பதில் எனக்கு மிகவும் பிடித்துப்போனது.முழுமையான வார்த்தைகள் எனக்கு நினைவில் இல்லை.ஒரு பூண்டு செடி எதற்காக இருக்கிறது? இயற்கையின் படைப்பில் விஷச் செடியும் இருக்கிறது.பயனுள்ள கீரையும்,மரங்களும் இருக்கிறது.எந்த ஒன்றும் இன்ன காரணத்திற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?

                               ’’உள்ளே வார்த்தைகள் நிரம்பியிருக்கிறது,வெளிப்படுத்தி ஆக வேண்டும்மக்சீம் கார்க்கி சொன்னது என்று நினைக்கிறேன்.இப்படியும் இருப்பதுண்டு.சில நேரங்களில் இதை எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றிவிடுகிறது.அது டைரியாக கூட இருக்கலாம்.ட்வீட்டுகளில் கொட்டுவது,ஃபேஸ்புக்கில் பகிர்வது எத்தனையோ வசதி வந்து விட்ட்து.

                                 எல்லாவற்றுக்கும் மேலாக அங்கீகாரம் என்பது ஒரு முக்கிய விஷயம்தான்.பலர் இதற்காக கஷ்டப்பட்டு எதையாவது செய்கிறார்கள்.இவையல்லாமல் ஓட்டு,கமெண்ட்,ஹிட்ஸ் என்று கவலையின்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.அவர்கள் அங்கீகாரம் பற்றி நினைக்க மாட்டார்களா? நினைப்பார்கள்.இது மனிதனுக்கு பொதுவானது.ஆனால் எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்பதைவிட யார் பாராட்டுகிறார்கள் என்பது முக்கியம்.நிஜமான அங்கீகாரமும் அதுதான்.

-

40 comments:

கார்த்தி கேயனி said...

நல்லா சொன்னீங்க

Anonymous said...

'மனிதனுக்கு எல்லாவற்றையும் விட தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ளத்தான் பெரிதும் ஆசை' - யதார்த்தமான உண்மை

உள்ளே வார்த்தைகள் நிரம்பியிருக்கிறது,வெளிப்படுத்தி ஆக வேண்டும்' என்று தோன்றியது, பாராட்டுகிறேன்! நல்ல சுருக்கமான பதிவும் அவற்றுள் சில உண்மைகளும்! வாழ்த்துக்கள்!

Lakshmi said...

நல்ல அலச்ல். நீங்க சொல்வது எல்லாமே உண்மைதான். நம்ம எழுத்துக்கு அங்கீகாரத்தை எதிபார்க்கத்தான் தோனுது. எங்கபோனாலும் இதைப்பத்தி எழுதலாமேன்னுதான் தோனுது.

kobiraj said...

உங்கள் அலசல் உண்மையானது .நன்றாக சொல்லி யுள்ளீர்கள்

ராஜா MVS said...

உண்மைதான் நண்பரே..
எழுதுவதன் மூலமே ஒருவர் தன்னை வெளிப்பதுத்தவும் வாய்ப்பு இருக்கு, திருத்திக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கு..
அருமையான அலசல் நண்பரே..

விஜயன் said...

//’உள்ளே வார்த்தைகள் நிரம்பியிருக்கிறது,வெளிப்படுத்தி ஆக வேண்டும்”//
அருமையாக குறிப்பிட்டு உள்ளீர்கள்.தீர்க்கமான சிந்தனை.எதார்த்தமான உண்மை

RAVICHANDRAN said...

அத்தனையும் உண்மை,வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

எழுத்து தன் வடிவத்தையும் இணைத்து
எழுதுபவருக்கும் ஒரு வடிவத்தை கொடுக்க முயல்கிறது...

நம் எழுத்துக்களுக்காய் அங்கீகாரம் எதிர்பார்ப்பது
தவிர்க்கமுடியாத ஒன்று தான் ..
இதை சரியாக விளக்கியிருக்கிறீர்கள்

கொட்டுபட்டாலும் மோதிரக்கையால்
கொட்டுபடவேண்டும்......

காவ்யா said...

Trade Union bloggers (Raman of LIC from Vellore and Madhava Raj of Pandian Grama Bank). Educational bloggers like Madurai Saravanan. Govt officers blogs like the one Ananda Kr, IAS; lawyers, engineers, doctors like Bruno; caste bloggers like Thanian Pandian for Thevar, dalit bloggers like Madhimaran Anti-brahmin bloggers like Tamil ovia, pro-Brahmin bloggers like Dondu, Mayavaraththaan, Mugamuudi, Pagutharivu, Political bloggers like Ilaikaaran (AIADMK), Zha garam for DMK, anti DMK blogger like Idli vadai; religious bloggers like the Muslims like Asiq and Hindus like KRR. Geetha sambasivam, Nadaraja Dikshitar.Madurai Kumaran, Christian like Chiism, Communal harmony bloggers like Thiruchikkaaran and Jain bloggers like Padra Kr in Tamil, sex blogs i.e blogs on sexual issues like Chithoor Murugesan and blogs from popular Tamil writers like Jeyamohan, Ramakrishan, Para, and some unclubbale blogges like Badri, and many more categories.

Each category writes with a singular purpose/motive or motives and the style and substance vary vastly between them.

Some write just to kill time; some to entertain, some to share silly things among their like minded ppl ;some to share passionate political and social issues and some just to rub some ppl on the side of ppl like I do my blog.

Thus, the blogosphere is awash with bewildering variety and to paint all with the same brush, as u have done here, is immature.

Ashoka Mithran is a good fiction writer; but not a mature commentator. He thinks blogs can be put inside a single box and labelled ‘silly’!

Don't go to fiction writers for wisdom.

Anonymous said...

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நோக்கத்தை கொண்டு எழுதுகிறார்கள் ...'பொதுவாக' தன்னையும் அறிவாளியாக காட்டிக்கொள்ள ))))))

Nesan said...

மனதில் படுவதை வார்த்தைகள் ஆக்கனும் என்பதே பலரின் ஆசை கனவுக்கு உயிர் கொடுப்பது பதிவு!

DrPKandaswamyPhD said...

எப்படியோ ஒரு பதிவ தேத்தீட்டிங்க!

hamaragana said...

dear friend
WELL SAID.(WRITTEN)

suryajeeva said...

என்னை பொறுத்தவரை அனைவரும் எழுதுவது இறந்த பின்பும் வாழ்வதற்கே

காவ்யா சொல்வது கருக்கள் பற்றி, நீங்கள் கூறுவது கரு உதிக்கும் மனநிலை பற்றி, யார் எதற்க்காக எழுதினாலும் அவர்கள் எண்ண மனநிலை நான் இறந்த பிறகு என் புகழ் பரவ வேண்டும் என்றே... பல பதிவர்கள் தாங்கள் எழுதும் பதிவுகளில் இருந்து அவர்கள் எழுதும் பின்னூட்டங்களில் கருத்து வேறுபடுகிறார்கள், இது ஏன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் சண்முகவேல்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்பச் சரியான வார்த்தைகள்!

ஆளுங்க (AALUNGA) said...

அப்புறம், அசோகமித்திரன் எதுக்காக எழுதுறாராம்? வேற ஏதாவது செய்ய வேண்டியது தானே!!

Jana said...

ம்ம்ம்.... பல யதார்த்தங்கள். எழுதும் ஒருவர் பலரும் தன் படைப்புக்களை பார்க்கவேண்டும் என்ற ஆதங்கத்துடன்தான் எழுதுகின்றார். இதில் தப்பேதும் இல்லை, அனால் தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள முற்படும் ஒருவர் அதன் பின்னராவது தேடல்கள் மூலம் அறிவாளியாகவேண்டும், பலர் அகின்றனர் என்பதற்கு சில காத்திரமான தேவையான பதிவுகளே சாட்சி. அறியாத விடயங்கள் ஒருவரால் பகிரப்படும்போது அது எல்லோருக்கும் பயனுடையதாக அமையும்.

காவ்யா said...

சூர்ய ஜீவா!

டாக்டர்கள் எதற்காக எழுதுகிறார்கள் நோய்களைப் பற்றி ? டாக்டர் முருகானந்தம், டாக்டர் புருனோ டயாபட்டீசைப்பற்றியோ, இதயனோயைப்பற்றியோ எழுதுகிறார்கள். அவர்கள் தாங்கள் இறந்த பின் புகழைப்பெறுவதற்காகவா ? நல்ல நகைச்சுவை. யாமறிந்தவற்றைச்சொன்னால் பிறர் பயன்பெறலாமே என்ற நன்னோக்கில் இருக்க்க்கூடாதா ? வக்கீல்கள், சாப்ஃட்வேர் எஞ்சினியர்கள் எழுதவில்லையா ? அவர்கள் கொடுக்கும் அறிவுரைகளையும் டிப்சுகளும் உங்களுக்குப் பயன்படவில்லையா ? அவர்கள் என்ன தாங்கள் இறந்த பின் தங்கள் புகழை உலகம் பாடவேண்டுமென்றா எழுதுகிறார்கள்.
எழுத்துக்கள் எல்லாமே ஒரு வகையல்ல. எல்லா பதிவாளர்களும் அங்கீகாரத்துக்கும் புகழுக்கும் எழுதவில்லை. தமிழ்மணத்திரட்டியில் இல்லாப் பதிவுகள் லட்சக்கணக்கில். பல கல்லூரி, பல்கழைக்கழக பேராசிரியர்களெல்லாம் பதிவு வைத்திருக்கிறார்கள். மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க. விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், சமூகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள், என்.ஜி.ஓக்கள் எல்லாரும் வைத்திருக்கிறார்கள். அனைவரும் புகழுக்காக என்றில்லை. பொதுநலச்சேவைக்காகவும் உண்டு.
நான் இங்கே எழுதுகிறேன். எங்கெல்லாம் எனக்கு சிலரின் கருத்துக்கள் மற்றவர்களைத் தவறான வழிக்கு இழுத்துச்செல்லும் எனத்தெரிந்தால் எச்சரிக்கை செய்யவே எழுதுகிறேன். இங்கு கூட, ஒட்டுமொத்த பதிவாளர்களுக்கும் ஒரே நோக்கமே என்னும் தவறான கருத்தைச்சொன்ன அசோக மித்திரனைக்கண்டிக்கவே. நான் செத்தவுடன் நீங்கள் என்னைப்புகழ அல்ல. இருக்கும் போது உங்கள் அங்கீகாரத்துக்கும் அல்ல. சிறுமை கண்டு பொங்க மட்டுமே என் வலைபதிவு.

But u can write for the purpose u like, in the style u want and comfortable with.

RAVICHANDRAN said...

இங்கே எழுத்தை மட்டும் நம்பி வாழ்வது முடியாது.அந்த பொருளில் அவர் சொல்லியிருக்கிறார்.பதிவுகளை விமர்சிப்பது அவர் நோக்கம் இல்லை.

ஆகாயமனிதன்.. said...

good post !

காவ்யா said...

மனிதனுக்கு எல்லாவற்றையும் விட தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ளத்தான் பெரிதும் ஆசை.இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நாமே நம்மை அறிவாளியாக நினைத்துக் கொள்ளலாம்.உன்னிடம் வசதியில்லை என்று சொன்னால் ஒப்புக்கொள்வார்கள்,கார் இல்லை,பங்களா இல்லை,ஏன் வீரம் இல்லை என்று சொன்னால் கூட ஒப்புக்கொள்வார்கள்.யாரையாவது உனக்கு அறிவில்லை என்று சொல்லிப்பாருங்கள்,அப்புறம் இருக்கிறது உங்களுக்கு!//

Such comments cant be made against all blogs. It s my point. He shd make somewhere in the post that he does not mean all.

ராஜன் said...

காவ்யா அவர்களே! பெரியவர்கள் சொன்னால் யோசிக்க வேண்டும்.அசோகமித்திரன் கேட்ட கேள்வி முக்கியம்.பதிவர்கள் என்னுடைய நோக்கம் என்ன? எதற்காக எழுதுகிறோம் என்று எண்ணி தெளிவு பெற வேண்டும்.என் எழுத்தாளர் ஆக வேண்டும் என்று ஒவ்வொருவரும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.இந்த பதிவு பொதுவாக இருக்கிறது.விதிவிலக்கு இருக்கலாம்.விதிவிலக்குகள் விதிகள் ஆகாது.நீங்கள் விதிவிலக்கு என்று வைத்துக்கொள்ளுங்கள்.நானும் சிறுமை கண்டு பொங்குபவன்.எம்.எல்.ஏ க்களுக்கு சம்பளம் ஏற்றியதை பொங்கி எழுதியிருக்கிறேன் .வந்து படியுங்கள்.நான் சோழ சுடரொளி குந்தவை என்று வரலாற்று ஆய்வு நூல் எழுதினேன்.இதனால் யாருக்கு லாபம் என்று கேட்டார்கள்.

www.generationneeds.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்பதைவிட யார் பாராட்டுகிறார்கள் என்பது முக்கியம்.நிஜமான அங்கீகாரமும் அதுதான்./

நிதர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்,,

சென்னை பித்தன் said...

நன்று சொன்னீர்கள்!

அம்பாளடியாள் said...

எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்பதைவிட யார் பாராட்டுகிறார்கள் என்பது முக்கியம்.நிஜமான அங்கீகாரமும் அதுதான்.

இந்த அங்கீரம் அதிகம் கிடைக்கும்போதுதான் படைப்பாளியும் சோர்வின்றித்தன் ஆக்கத்தைத் துணிந்து வெளியிட ஏதுவாக இருக்கின்றது .தாங்கள்
எடுத்துக்கொண்ட தலைப்பும் அதில் கூறப்பட்ட விடயமும் வரவேற்கத் தக்கது .மிக்க நன்றி பகிர்வுக்கு .............

முனைவர்.இரா.குணசீலன் said...

எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்பதைவிட யார் பாராட்டுகிறார்கள் என்பது முக்கியம்

உண்மைதான் அழகான கோட்பாடை தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்.

“எழுதுவதெல்லாம் எழுத்தல்ல“

என்று நானும் அறிவேன்..

எழுத்துக்கான நானறிந்த இலக்கணத்தைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_17.html

உங்கள் நண்பன் said...

நல்ல ஒரு கருத்து. இப்போதெல்லாம் ஓட்டுகளின் எண்ணிக்கையை கொண்டு பதிவுகள் தரம் பிரிக்கபடுகிறது. பாராட்டுபவர்களை விட விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு . இந்த நிலை மாறவேண்டும்

IlayaDhasan said...

சரியாக சொன்னீங்க ... வலை பதிவு ஆரம்பித்ததே அதுக்குதான்னு நான் கண்டிப்பா நம்புறேன்.

மிஸ்டர் பீன் புதிய படம் விமர்சனம்

shanmugavel said...

கிராமத்தில் ஒரு இறுதிச்சடங்குக்கு சென்று திரும்ப தாமதமாகிவிட்டது,அனைவருக்கும் நன்றி

சேட்டைக்காரன் said...

இலக்கியவாதிகளாய் தங்களுக்கென்று ஒரு அங்கீகாரத்தைப் பெற்ற பல எழுத்தாளர்களுக்கு வலையுலகு பற்றி பெரிதாக ஒரு புரிதல் கிடையாதோ என்ற எனது நெடுநாளைய சந்தேகத்தை அசோகமித்திரன் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார்.

நல்ல எழுத்தாளர்களெல்லாம் சிறந்த சிந்தனையாளர்களாய் இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லது தம்மைத் தாண்டி மற்றவர்களின் வெளிப்பாடுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை என்பதில் ஏதோ ஒன்று அசோகமித்திரனுக்குப் பொருந்தலாம்.

shanmugavel said...

@சேட்டைக்காரன் said...

இலக்கியவாதிகளாய் தங்களுக்கென்று ஒரு அங்கீகாரத்தைப் பெற்ற பல எழுத்தாளர்களுக்கு வலையுலகு பற்றி பெரிதாக ஒரு புரிதல் கிடையாதோ என்ற எனது நெடுநாளைய சந்தேகத்தை அசோகமித்திரன் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார்.

வலையுலகு பற்றிய புரிதல் இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு என்பது உண்மையாகவே இருக்கலாம்.ஆனால் அவர் சொன்னது அவரது அனுபவத்திலிருந்து!இன்றைய நிலையில் ஆங்கில மொழியில் பதிவு எழுதி விளம்பரம் கிடைத்து வரும் வருமானம் கூட பல தமிழ் எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை.எழுத்தை மட்டும் வாழ்க்கையாக யாரும் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக சொல்லியிருக்கலாம்.தவிர அவர் கேட்டது போல நான் ஏன் எழுதுகிறேன் என்று நம்மையே கேட்டுக் கொண்டால் புரிதல்கள் உருவாகும்.(தொடர்பதிவு எழுதினால் என்ன?) தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

காவ்யா said...

ராஜன் !

என் கருத்தைப் புரிய வைக்க முடியவில்லை. இருந்தாலும் சொல்லி முடிக்கிறேன்.

1. பதிவாளர்கள் என்றால் தமிழ்மணம் திரட்டியில் வருபவர்கள் மட்டுமல்ல.
2. பதிவாளர்கள் என்றால் எல்லாரும் எழுத்தாளர்களாக ஆக வேண்டுமென பதிவை பிரயோகம் செய்பவர்களல்ல.
3. இவ்விரண்டுவகை பதிவாளர்களுக்கு மட்டுமே அசோக மித்திரன் மற்றும் இப்பதிவாளர் சொன்னது பொருத்தமாகும்.
4. இன்று கூட ஒரு வக்கீல் பதிவு தமிழ்மணத்தில் போட்டிருக்கிறார். அது அவரின் ஒரு கசப்பான அனுபவத்தைப் பற்றி. எப்படி ஒரு அரசு பேருந்து நடத்துனர் பயணிகளை ஏமாற்றிப் பிழைக்கிறார்.

நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: இவர் என்ன தன் எழுத்தை எல்லாரும் படித்து தன்னை அறிவாளி எனச் சொல்லவேண்டுமென விரும்பி எழுதினாரா ? இல்லை பின்னாளின் தான் மெருகூட்டிய தமிழுலகம் புகழும் எழுத்தாளர் ஆகவேண்டுமனெ விழைந்து எழுதுகிறாரா? இல்லை பொழுதுபோக்குக்காக எழுதுகிறாரா? கண்டிப்பாக இல்லை. இவர் ஏன் எழுதினார்? நம் தமிழ்கத்தில் மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் அரசு ஊழியர்களால் என்பதை தான் நேரடியாகக் கண்ட கசப்பான அனுபவத்தைச் சொல்லி தெரிவிக்கிறார். இது அவர் உண்ர்கிறார். அவ்வுணர்வை நம்முடன் பகிர்கிறார். ஒரு விழிப்புணர்வை அதன் மூலம் செய்கிறார். நாளை ஒரு அன்னா ஹசாரே இப்படிப்பட்ட விழிப்புணர்வுகளால் தமிழகத்தில் உருவாகலாம் என்பதே நோக்கம்.

அசோக மித்திரன் சொன்னது, இப்பதிவாளர் சொல்வதெல்லாம் இங்கு பொருந்தாது. இதைப்போல பல பதிவாளர் லட்சக்க்கணக்கில் உள்ளார்க்ள். உடனே எல்லாரும் சிறுமை கண்டு பொங்க வேண்டுமென நான் சொன்னதாக என்னிடம் திருப்பிச்சொல்லாதீர்கள். எப்படியும் எழுதலாம். ஆனால் அனைவரையும் ஒரே சாணியால் அடிப்பது தவறென்பது என்பதே என் வாதம். புரிந்தால் சரி.

If u dont understand me, hav nothing more to say.

♔ம.தி.சுதா♔ said...

///// எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்பதைவிட யார் பாராட்டுகிறார்கள் என்பது முக்கியம்.நிஜமான அங்கீகாரமும் அதுதான்.////

பாராடறதுக்கு ஆள் இருக்கோ இல்லையோ எதையாவது சாக்கதக வச்சு திட்டுறதுக்கு தாராளமா ஆட்கள் இருக்காங்க சகோதரம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

shanmugavel said...

காவ்யா,நீங்கள் நல்ல வாசகர் என்பது தெரிகிறது.உங்கள் கருத்து புரியாமல் இல்லை,நீங்கள் அசோகமித்ரன் சொன்னதை மட்டும் பார்க்காமல் பதிவை முழுமையாக படிக்கவும்.மக்சீம் கார்க்கி சொன்ன விஷயமும் இருக்கிறது.அது பகிர்வாகவும் இருக்கலாம்.ஃபேஸ்புக்,ட்வீட் பற்றியும் சொல்லியிருக்கிறேன்.நீங்களே சொல்வது போல எழுத்தாளனாக விரும்பும் பதிவருக்கு பொருந்தும்.நான் ஆனந்த விகடனில் வந்த ஒரு வரியை ஒரு அலசலுக்காக எடுத்துக்கொண்டேன்.ஏன் பிச்சமூர்த்தி சொன்ன விஷயமும் குறிபிட்டிருக்கிறேன்.அது தத்துவார்த்த விஷயம்.அதுவும் எழுத்து பற்றிதான்.அனுபவ பகிர்வுக்கோ,செய்திகளுக்கோ இது பொருந்தாது.தங்கள் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி

shanmugavel said...

@♔ம.தி.சுதா♔ said...

///// எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்பதைவிட யார் பாராட்டுகிறார்கள் என்பது முக்கியம்.நிஜமான அங்கீகாரமும் அதுதான்.////

பாராடறதுக்கு ஆள் இருக்கோ இல்லையோ எதையாவது சாக்கதக வச்சு திட்டுறதுக்கு தாராளமா ஆட்கள் இருக்காங்க சகோதரம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா

அவர்களும் நண்பர்கள்தானே!நன்றி சகோ

சேட்டைக்காரன் said...

//தவிர அவர் கேட்டது போல நான் ஏன் எழுதுகிறேன் என்று நம்மையே கேட்டுக் கொண்டால் புரிதல்கள் உருவாகும்.(தொடர்பதிவு எழுதினால் என்ன?) தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி//

நண்பரே, ’நான் ஏன் எழுதுகிறேன்,’ என்ற தன்னிலை விளக்கத்தோடு வாசிப்பவர்களுக்கு ஒரு இடுகை போட்டுப் புரிய வைப்பது தோல்வி மனப்பான்மை அல்லது தமது எழுத்துக் குறித்து சந்தேகம் ஏற்பட்டிருப்பதன் ஒப்புதல் என்று நான் கருதுகிறேன். வாசிப்பவர்களிடம் எழுதுபவர்களின் குறிக்கோள், திறமை, அணுகுமுறை குறித்த அனுமானங்களை விட்டு விடுவதே நல்லது.

முதல்முறையாக கருத்திட்டிருந்தபோதிலும், பொறுமையாக பதில் எழுதியமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துகள்!

Sankar Gurusamy said...

//எல்லாவற்றுக்கும் மேலாக அங்கீகாரம் என்பது ஒரு முக்கிய விஷயம்தான்.பலர் இதற்காக கஷ்டப்பட்டு எதையாவது செய்கிறார்கள்.இவையல்லாமல் ஓட்டு,கமெண்ட்,ஹிட்ஸ் என்று கவலையின்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.அவர்கள் அங்கீகாரம் பற்றி நினைக்க மாட்டார்களா? நினைப்பார்கள்.இது மனிதனுக்கு பொதுவானது.ஆனால் எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்பதைவிட யார் பாராட்டுகிறார்கள் என்பது முக்கியம்.நிஜமான அங்கீகாரமும் அதுதான்.//

நிஜமான வார்த்தைகள்... அப்படியே வழிமொழிகிறேன்.

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

thalir said...

நல்ல அலசல்! என்னை பொறுத்தவரை த்னக்குத் தோன்றியதை மற்றவருக்கு வெளிப்படுத்தி பாராட்டு பெறவே எழுத்தாளன் விரும்புகிறான்!

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி
பலருக்கு உறைக்கும் படி சொல்லியிருக்கிறீங்க.

அத்தோடு,
பாராட்டுகள் கிடைக்கும் போது..எத்தகைய பாராட்டுக்கள் ஒரு படைப்பாளியின் வளர்ச்சிக்கு உதவும் என்பதனையும் அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

avainaayagan said...

காவ்யா said...

//"...ராஜன் எல்லாரும் படித்து தன்னை அறிவாளி எனச் சொல்லவேண்டுமென விரும்பி எழுதினாரா ? இல்லை பின்னாளின் தான் மெருகூட்டிய தமிழுலகம் புகழும் எழுத்தாளர் ஆகவேண்டுமனெ விழைந்து எழுதுகிறாரா? இல்லை பொழுதுபோக்குக்காக எழுதுகிறாரா? கண்டிப்பாக இல்லை. இவர் ஏன் எழுதினார்? நம் தமிழ்கத்தில் மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் அரசு ஊழியர்களால் என்பதை தான் நேரடியாகக் கண்ட கசப்பான அனுபவத்தைச் சொல்லி தெரிவிக்கிறார். இது அவர் உண்ர்கிறார். அவ்வுணர்வை நம்முடன் பகிர்கிறார்...."//
என மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறார். ஒருவர் மனதில் பட்டதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று நினைப்பதால் எழுதுகிறார்கள் அவ்வளவே!