நம்பிக்கைகள் தான் நமக்கு கஷ்ட்த்தை கொண்டுவருகிறது.அது மூட
நம்பிக்கையாக இருக்கலாம்.போதுமான அறிவைப் பெறாமல் நாமே உருவாக்கிக் கொள்ளும் தவறான
நம்பிக்கையாக இருக்கலாம்.கலக்கம்,பயம்,காம்ம் போன்ற எதிர்
உணர்ச்சிகள் மிகும் நேரங்களில் நம்மிடையே உருவாகும் எண்ணங்கள் அவை சார்ந்த
நம்பிக்கைகள் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது.உண்மையில் நடக்கும்
நிகழ்ச்சிகளை விட அதைப் பற்றிய நமது எண்ணங்கள் நமக்கு பெரும் துன்பத்தை தருகிறது.
திருச்சியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காக வாடகை காரில் பயணத்தை
தொடங்கினோம்.இரவு முழுக்க பயணம்.காரை பாபு என்ற டிரைவர்
ஓட்டி வந்தார்.பழகுவதற்கு இனிமையாகவும்,கலகலப்பாகவும்
இருந்தார்.அரசியல் நையாண்டி,கொஞ்சம் நகைச்சுவை
என்று இனிமையான பயணம்.
சேலத்தை தாண்டி அரை மணி நேரம் சென்றிருக்கும்.இரவு பன்னிரெண்டு
மணிக்கு மேலாகிவிட்ட்து.திடீரென்று ஒரு பூனை காருக்கு குறுக்கே ஓடியது.டிரைவர்
வண்டியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றார்.பூனை அடிபடும் சத்தம்
எங்களுக்கு தெளிவாக கேட்ட்து.உடனே டிரைவர் காரை நிறுத்தி விட்டார்.அடிபட்ட இட்த்தை
நோக்கி ஓடினார்.நாங்களும் உடன் சென்றோம்.
ஆறு பேர் நாங்கள்.எங்களுடைய அனைத்து செல்போன்களின் வெளிச்சத்தில் பூனை
கண்ணை மூடிமூடி திறந்த்து.உயிருடன் இருப்பது எங்களுக்கு நிம்மதியாக
இருந்த்து.வலியும் இருக்க்க் கூடும்.எந்தளவு அடிபட்டிருக்கும் என்பது கணிக்க
முடியவில்லை.டிரைவர் காருக்கு ஓடிச்சென்று குடிநீர் இருந்த பாட்டிலை எடுத்து
வந்தார்.பூனை வாயில் ஊற்றினார்.தடவிக்கொடுத்தார்.அங்கிருந்து கிளம்பினோம்.டிரைவர்
திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தார்.
அந்த சகோதர்ரிடம் இருந்த
கலகலப்பு,நகைச்சுவை எல்லாம் முற்றிலும் காணாமல்
போயிருந்த்து.எங்களில் ஒருவர் பூனை வலமிருந்து இடம் போனால் நல்லதுதான்
என்றார்.பூனைக்கு நல்லதாக இருக்கவில்லையே என்றேன்.காரின் வேகம் மிகவும்
குறைந்துபோயிருந்த்து.நாமக்கல் தாண்டிப்போனால் சாலையும் மிக மோசம்.
காலையில் எதிர்பார்த்த்தைவிட மிக தாமதமாகவே திருச்சியை
அடைந்தோம்.டிரைவர் வீட்டுக்கு போன் செய்து மனைவியையும்,குழந்தைகளையும்
விசாரித்தார்.குழந்தைகளை எழுப்ப சொல்லி பேசினார்.அவர் சரியாக
சாப்பிடவுமில்லை.சோர்வாகவே காணப்பட்டார்.
எங்களுடைய நிகழ்ச்சிகள் நன்றாகவே முடிந்த்து.ஊருக்கு திரும்பினோம்.என்னுடன்
வந்தவர்கள் தூங்க ஆரம்பித்தார்கள்.எப்போது இருப்பிட்த்தை அடைவோம் என்று
இருந்த்து.சில மணி நேரங்களில் வந்து சேர்ந்து விட்டோம்.காரிலிருந்து இறங்கியவுடன்
டிரைவருக்கு நன்றி கூறினேன்.அவர் முகத்தில் புன்னகை. எனக்கு நிம்மதி.(சற்றே
மாற்றம் செய்யப்பட்ட மீள்பதிவு)
20 comments:
பாராட்டுகள்..
ஹிஹி இதற்க்கான பதில் பேஸ் புக்கிலேயே போட்டு விட்டேன் ஹிஹி
ஆமா எதுக்கு பாராட்டுராறு வேடந்தாங்கல்??
தமிழ்மணத்துல இணைச்சா புது இடுகைகள் காணப்படவில்லைன்னு வருது.மீள்பதிவுன்னு கண்டுபுடிச்சிடிச்சோ!
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பாராட்டுகள்..
thanks sir
pala peridam intha muda nambikkai mudavuttai erpaduththi vidukirathu.. vaalththukkal
என்ன தான் மூடநம்பிக்கை என்று சொன்னாலும்.... நன்றாக கவனியுங்கள் இயற்கையிலயே.... நாம் போகும்போது பூனை குறுக்கால ஓடுவது இயல்பாகவே இருக்கிறது... பூனைக்கு ஏன் அந்த எண்ணம் திடிரென் தோன்றுகிறது... நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன்..அது வரை காம்பவுண்ட் சுவரின் மீது அமர்ந்திருக்கும் பூனை திடிரென் குறுக்கால் பாய்ந்து ஓடும்... ஏன் என இது வரை தெரியவில்லை... அடி பட்ட பூனையை தண்ணீர் கொடுத்து தடவிக்கொடுத்த டிரைவரை பாராட்டாலாம்... பகிர்வுக்கு நன்றி
பூனை குறுக்கே வந்ததால் பூனைக்குத்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது ........
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பாராட்டுகள்..
thanks sir
@மைந்தன் சிவா said...
ஹிஹி இதற்க்கான பதில் பேஸ் புக்கிலேயே போட்டு விட்டேன் ஹிஹி
நன்றி சிவா
@மைந்தன் சிவா said...
ஆமா எதுக்கு பாராட்டுராறு வேடந்தாங்கல்??
ஹாஹா அதான் எனக்கும் புரியல!
@மதுரை சரவணன் said...
pala peridam intha muda nambikkai mudavuttai erpaduththi vidukirathu.. vaalththukkal
நன்றி சரவணன்.
@மாய உலகம் said...
என்ன தான் மூடநம்பிக்கை என்று சொன்னாலும்.... நன்றாக கவனியுங்கள் இயற்கையிலயே.... நாம் போகும்போது பூனை குறுக்கால ஓடுவது இயல்பாகவே இருக்கிறது... பூனைக்கு ஏன் அந்த எண்ணம் திடிரென் தோன்றுகிறது... நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன்..அது வரை காம்பவுண்ட் சுவரின் மீது அமர்ந்திருக்கும் பூனை திடிரென் குறுக்கால் பாய்ந்து ஓடும்... ஏன் என இது வரை தெரியவில்லை... அடி பட்ட பூனையை தண்ணீர் கொடுத்து தடவிக்கொடுத்த டிரைவரை பாராட்டாலாம்... பகிர்வுக்கு நன்றி
பூனைக்கு அந்தப்பக்கமா ஏதாவது வேலை இருக்கும் நண்பா! ஹிஹி நன்றி
@koodal bala said...
பூனை குறுக்கே வந்ததால் பூனைக்குத்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது ........
ஆமாம் சார் நன்றி
பக்கத்துல சண்டையோ அசம்பாவிதமான செயல்களோ நடக்கும் போது பூனைகள் பயந்து ஓடுமாம். அதுனால தான் பெரியவங்க சன்டை நடக்குது அதுனால பூனை குருக்கே போனா காலம் தாமதித்து போக வேன்டும்னு சொல்றாங்க. எங்கோ எதிலோ படித்தது. உண்ஐயான்னு தெரியல.........
தேவையில்லாத விஷயங்களுக்கு குழம்புவது மனித இயல்பு.. அதில் ஒன்றுதான் இந்த பூனை... மற்றபடி இதில் நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை.. எல்லாம் அவரவர் கர்மா படிதான் நடக்கும்..
காரை நிறுத்தி பூனையை பார்க்க ஓடிய ஓட்டுனர் பாராட்டப்பட வேண்டியவர்.மனிதனை அடித்துவிட்டு வேகமாக போய்விடுகிறார்கள்.
சமூகத்தில் மூட நம்பிக்கைகளைச் சமயோசிதமாக இல்லாதொழிக்கலாம் என்பதற்கு பூனை மீதான அக்சிடெண்டிற்குப் பின்னர் நீங்கள் அட்வைஸ் சொல்லி வண்டியை ஓட்டச் சொல்லி ஓட்டுனருக்கு மனவுறுதி கொடுத்து வீடு வந்து சேர்ந்த செயலினைக் கூறலாம் பாஸ்.
பகிர்விற்கு நன்றி.
எப்பிடியோ, உங்க கார் குறுக்க வந்ததால பூனைக்கு கெட்ட நேரம் வந்துருச்சு.. இனி பூனை கார் ஏதாவது வந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கும்.
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
உண்மையில் நடக்கும் நிகழ்ச்சிகளை விட அதைப் பற்றிய நமது எண்ணங்கள் நமக்கு பெரும் துன்பத்தை தருகிறது.//
உங்கள் கணிப்பை ஆமோதிக்கிறேன். இச்சம்பவம் உணர்த்தும் உண்மையாக இவ்வரிகளை நான் பார்க்கிறேன்.
Post a Comment