Thursday, September 15, 2011

உள்ளாடைகளை அயர்ன் செய்து அணிய வேண்டுமா?

என் நண்பனுக்கு ஒரு பழக்கம் உண்டு.உள்ளாடைகளை அயர்ன்  செய்யாமல் அணிய மாட்டான்.அதற்குத் தகுந்தாற்போல துணிகளையும் தேர்ந்தெடுத்து வாங்குவான்.அனுபவம் தந்த பாடமாக இருக்க வேண்டும்.ஈரமான துணிகளை அணிவதன் பிரச்சினைகள் அனைவருக்கும் தெரியும்.ஆனால் உள்ளாடைகள் காய்ந்து போனால் என்ன பிரச்சினை வரப்போகிறது?அயர்ன் செய்தே ஆக வேண்டுமா? பலருக்கும் சட்டை,பேண்ட் அப்படி போட்டுத்தான் பழக்கம்.பனியன்,ஜட்டி போன்றவற்றை அவசியம் இல்லை என்று நினைப்பார்கள்.

                              இப்போது மழைக்காலம் துவங்கி விட்ட்து.வாழ்த்தி வரவேற்க வேண்டிய விஷயம்.மழையைப் பாடாத கவிஞர்கள் இல்லை.போற்றாத புலவர்கள் இல்லை.தமிழ்நாட்டைப் பொருத்தவரை மழைக்கு வட கிழக்கு பருவமழை முக்கியமானது.செப்டம்பரில் துவங்கி நவம்பரில் கொஞ்ச நாள் வரை இருக்கும்.ஓரளவேணும் நிலத்தடி நீர்மட்டம் உயர வகை செய்யும் மழையும் இதுதான்.ஏரிகள் நிரம்புவதும்,கிணறுகள் வழிவதும் இப்போதுதான் சாத்தியம்.

                              உள்ளாடை விஷயத்துக்கு வருவோம்.இவற்றை நல்ல வெயிலில் உலர்த்த வேண்டும்.மழைக்காலங்களில் இது கொஞ்சம் சிரம்ம்.நிழலில் உலர்த்த வேண்டிய கட்டாயம்.ஈரப்பதம் அதிகம் இருப்பதால் எளிதில் காயாது.எடுத்து தொட்டுப்பார்த்தால் காய்ந்து விட்ட்து போலத் தெரியும்.ஓரங்களில் ஈரம் அப்படியே இருக்க வாய்ப்புண்டு.மழைக்காலத்தை பூஞ்சைகளின் முழு வளர்ச்சி காலம் என்றும் சொல்ல்லாம்.தங்கியுள்ள ஈரம் தோல் நோய்களை வரவழைக்கும்.அயர்ன் செய்து விட்டால் சூட்டில் பூஞ்சைகள் மடிந்து போகும்.அரிப்பு,நமைச்சல் போன்றவற்றை தவிர்க்க இதுதான் வழி.

                                 அடுத்த்து மழைக்கால நோய்கள்.மழை கழிவுகளையும்,அதனோடு நோய்க்கிருமிகளையும் குடிநீரில் கொண்டு வந்து கலக்கும் வாய்ப்பு அதிகம்.திறந்த வெளியில் கழிக்கப்படும் கழிவுகள் மழையால் அடித்துச்செல்லப்பட்டு கிணறு,குளங்களில் சேர்க்கப்படுகிறது.மஞ்சள் காமாலை, டைபாய்டு,சில வகை காய்ச்சல்,வாந்தி,பேதி போன்றவற்றுக்கான விழிப்புணர்வு அவசியம்.

                                  தண்ணீர் தேங்குவதால் ஏற்படும் கொசுப் பெருக்கத்தின் விளைவுகள் தெரிந்த் விஷயம்தான்.மலேரியா,யானைக்கால்,டெங்கு,சிக்கன் குனியா என்று ஒட்டுமொத்த சமூகத்தை பதம் பார்க்கும்.வீட்டில் தேவையில்லாத நீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்துவது நல்லது.வெளியிலும் கவனிக்க வேண்டும்.

                                 மற்றதெல்லாம் வழக்கமாக சொல்லப்படும் விஷயங்கள்தான்.ஃப்ரெஷ் ஆன உணவு,சுத்தமான குடிநீர்,சத்தான் உணவு போன்றவை.மழைக்காலங்களில் பலரும் வழக்கமான உணவை விட்டு நொறுக்குத் தீனிகளுக்கும்,எண்ணெய்யால் தயாரிக்கப்பட்ட தின் பண்டங்களுக்கும் முக்கியத்துவம் தருவதாக சொல்லப்படுகிறது.இதனாலேயே நிறைய  பேருக்கு உடல் நலம் கெடும்.

                                 அடுத்து வரும் காலங்கள் மருத்துவமனைகளின் சீஸன் என்று சொல்வார்கள்.அதனுடைய பொருள் நமக்கு புரிந்தால் நல்லது.விழிப்புணர்வுடன் இருந்து வான்மழையை வரவேற்போம்.
-

26 comments:

suryajeeva said...

correct..

வைரை சதிஷ் said...

சரியா சொன்னீங்க

இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

நிரூபன் said...

அண்ணே,
வெட்கத்தை விட்டுச் சொல்றேன்..

இது எனக்குப் புதிய தகவல்.
மிக்க நன்றி அண்ணா.
இனிமேல் இவ்வாறு அயன் பண்னிப் போடுறேன்.

நிரூபன் said...

தமிழ் மணத்தில் ஓட்டுக் குத்த முடியலை.
அப்புறமா வாரேன்.

shanmugavel said...

@suryajeeva said...

correct..
THANKS SIR

மதுரை சரவணன் said...

i too think so... vaalththukkal

நிரூபன் said...

பாஸ்,
தமிழ்மணம் போட்டாச்சு.

shanmugavel said...

@வைரை சதிஷ் said...

சரியா சொன்னீங்க

நன்றி.

shanmugavel said...

@நிரூபன் said...

அண்ணே,
வெட்கத்தை விட்டுச் சொல்றேன்..

இது எனக்குப் புதிய தகவல்.
மிக்க நன்றி அண்ணா.
இனிமேல் இவ்வாறு அயன் பண்னிப் போடுறேன்.

உங்களுக்குத் தெரியாது என்பதால்தானே பதிவு.ஹாஹா நன்றி

shanmugavel said...

@மதுரை சரவணன் said...

i too think so... vaalththukkal

நன்றி அய்யா!

shanmugavel said...

@நிரூபன் said...

பாஸ்,
தமிழ்மணம் போட்டாச்சு.

நன்றி நிரூபன்.

RAVICHANDRAN said...

பயனுள்ள பதிவு நன்றி சார்

ஸ்ரீராம். said...

இதை எல்லாம் அயன் பண்ணிப் போடுவாங்களா என்னன்னு நினைச்சேன். படித்ததும் தப்பில்லைன்னு தோன்றியது.

shanmugavel said...

@RAVICHANDRAN said...

பயனுள்ள பதிவு நன்றி சார்

தங்கள் கருத்துரைக்கு நன்றி அய்யா!

shanmugavel said...

@ஸ்ரீராம். said...

இதை எல்லாம் அயன் பண்ணிப் போடுவாங்களா என்னன்னு நினைச்சேன். படித்ததும் தப்பில்லைன்னு தோன்றியது.

அவசியம் அய்யா நன்றி

ராஜன் said...

useful post.enakkum theriyathu

சத்ரியன் said...

எப்பவும் போல் சண்முகவேல் அண்ணனின் சமூக விழிப்புணர்வு பதிவு.

நன்றிண்ணே.

கோகுல் said...

ஆஹா! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!இனி உஷாரா இருப்போம்!பகிர்வுக்கு நன்றி!

Sankar Gurusamy said...

மழைக்காலத்துக்கு நல்ல ஆலோசனைகள்...

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

Jana said...

உங்கள் நண்பர் கட்சிதான் நானும்

shanmugavel said...

@ராஜன் said...

useful post.enakkum theriyathu

thank you sir

shanmugavel said...

@சத்ரியன் said...

எப்பவும் போல் சண்முகவேல் அண்ணனின் சமூக விழிப்புணர்வு பதிவு.

நன்றிண்ணே.

நன்றி சத்ரியன்.

shanmugavel said...

@கோகுல் said...

ஆஹா! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!இனி உஷாரா இருப்போம்!பகிர்வுக்கு நன்றி!

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா!

shanmugavel said...

@Sankar Gurusamy said...

மழைக்காலத்துக்கு நல்ல ஆலோசனைகள்...

பகிர்வுக்கு நன்றி..

நன்றி சங்கர்

shanmugavel said...

@Jana said...

உங்கள் நண்பர் கட்சிதான் நானும்

நீங்க எப்பவும் உஷாராச்சே! நன்றி சார்

உங்கள் நண்பன் said...

மிக நல்ல பகிர்வு . வாழ்த்துகள்