Sunday, September 11, 2011

உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?

   உணர்ச்சிகள் எண்பது கூரான கத்தி.முறையாக பயன்படுத்தினால் நன்மையைத் தரும்.இல்லாவிட்டால் வாழ்வில் நாசத்தை ஏற்படுத்தும்.உணர்ச்சிகள் தூண்டப்படும்போது நம் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன? நகைச்சுவை உணர்ச்சி மிகுந்திருக்கும்போது மனம் லேசாகி பார்ப்பவைஎல்லாம் அழகாகத் தெரியும்.உடலில் செரிமான சக்தி அதிகரிக்கும்.அன்பு,கருணை போன்ற உணர்ச்சிகளிலும் நன்மைதான்.கோபம் ,பொறாமை போன்ற உணர்ச்சிகளின் நிலையை சிந்தித்துப்பாருங்கள்.அப்போது நடப்பது எதுவும் நல்ல விளைவுகளை தருவதில்லை.

                                                                                                                    கோபம் தற்காலிக பைத்தியம் என்று சொன்னார்கள்.உண்மையில் பைத்தியத்தில் மற்றவர்கள் பரிதாபமாவது கிடைக்கும்.கோபத்தில் ஒட்டுமொத்த வாழ்வும் நாசமாகி விடும் வாய்ப்புகள் உண்டு.அதைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.பொறாமை பற்றி ஒரு பதிவும் தந்திருக்கிறேன்.பதிவரை பற்றி இ மெயில் அனுப்பியவரிடம் நான் கேட்டேன்"என்ன உணர்ச்சியை தூண்டுவதற்காக மெயில் அனுப்பப்பட்டது?'' உண்மையில் என்னிடம் வெறுப்பு தூண்டப்பட வேண்டும்.

                                                                                                                     பயம்,கோபம் ,பொறாமை,வெறுப்பு ,குற்ற உணர்வு,கலக்கம் போன்றவை பசியின்மையிலிருந்து தூக்கத்தை கெடுப்பது வரை மோசமான மனநிலைக்கும் உடல்நிலைக்கும் இட்டுச்செல்லும்.நாடித்துடிப்பு,(pulse rate) ரத்த அழுத்தம் (blood pressure) அதிகரிக்கும்.உணர்ச்சிகள் மேலாண்மை (Emotional intelligence)பற்றி இப்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.வாழ்க்கையை நல்லவண்ணம் வாழ்வதற்காக மட்டுமல்லாது நல்ல வேலையைப் பெறவும் முக்கியம்.வேலைக்கான நேர்முகத்தேர்வுகளில் அதிகம் கவனிக்கப்படும் விஷயம்,ஒருவர் உணர்ச்சிகளை கையாளும் திறன் தான்.
                                                                                                                       பாரதியார் உணர்ச்சிகளைப்பற்றி குறிப்பிடும்போது கோபம்,தாபம்,கவலை,அச்சம் போன்றவற்றை வென்று விட்டால் சாவையும் வெல்லலாம் என்கிறார்.
நாடியிலே  அதிர்ச்சி ஏற்பட்டு மரணம் ஏற்படுவதாக ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறியதை மேற்கோள் காட்டி ,கோபம் முதலான உணர்ச்சிகள் நாடியில் அதிர்ச்சி ஏற்படுத்தும் ,அதனால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் சாவை வெல்வது சாத்தியமாகும் என்கிறார்.உணர்ச்சிகளின் விளைவுகளை உணர்வதும் ,சிந்திப்பதும்தான் முதல் படி.பாரதியாரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் பொருட்டு ஒரு சில வரிகள் உங்கள் சிந்தனைக்காக கீழே !   
          
                     ஜகதீச சந்த்ரவஸு கூறுகின்றான்

               (ஞானானு பவத்திலிது முடிவாம் கண்டீர்!)

              “நாடியிலே  அதிர்ச்சியினால் மரணம்என்றான்

                கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;

               கொடுங்கோபம் பேரதிர்ச்சி;சிறிய கோபம்

               ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும்;

               அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;

               தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;

               கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;

               கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்

               கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே.

-

25 comments:

suryajeeva said...

ரௌத்திரம் பழகு...
கோபத்தை தவிர்க்க சொல்லவில்லை எட்டையபுரத்தான், அதை கையாளும் திறமையை வளர்த்துக் கொள்ளவே சொல்லியிருக்கிறான்.. கோபத்தில் நிதானம் பழக வேண்டும்.. சுயநல கோபம், பொது நல கோபம் என்று பிரித்துக் கொள்ளலாமோ..

அரசியல்வாதி said...

அரசியல் சம்பந்தப்பட்ட உங்களின் கேள்விக்கான பதில்கள் சொல்ல ஒரு புதிய தளம் ஆரம்பித்துள்ளோம். இன்றைய ஸ்பெஷல்:
இந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)

ஒருமுறை வாருங்களேன் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

shanmugavel said...

@suryajeeva said...

கோபத்தை நாம் தவிர்க்க முடியாது.உணர்ச்சிகள் இயல்பானது.சமாளிக்கப் பழக வேண்டும்.நன்றி

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா சார்? இருங்க படிச்சுட்டு வர்ரேன்!

shanmugavel said...

@அரசியல்வாதி said...

அரசியல் சம்பந்தப்பட்ட உங்களின் கேள்விக்கான பதில்கள் சொல்ல ஒரு புதிய தளம் ஆரம்பித்துள்ளோம். இன்றைய ஸ்பெஷல்:
இந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)

ஒருமுறை வாருங்களேன் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

வருகிறேன் சார் நன்றி

shanmugavel said...

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா சார்? இருங்க படிச்சுட்டு வர்ரேன்!

வணக்கம் சார்,பொறுமையா படிச்சுட்டு வாங்க! வருகைக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

வேலைக்கான நேர்முகத்தேர்வுகளில் அதிகம் கவனிக்கப்படும் விஷயம்,ஒருவர் உணர்ச்சிகளை கையாளும் திறன் தான்./

பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

வேலைக்கான நேர்முகத்தேர்வுகளில் அதிகம் கவனிக்கப்படும் விஷயம்,ஒருவர் உணர்ச்சிகளை கையாளும் திறன் தான்./

பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

தங்கள் பாராட்டுக்கு நன்றி

RAVICHANDRAN said...

இன்று பாரதி பற்றிய பதிவை உங்களிடம் எதிர்பார்த்தேன்.நன்றி

RAVICHANDRAN said...

@suryajeeva said...
ரௌத்திரம் பழகு...
கோபத்தை தவிர்க்க சொல்லவில்லை எட்டையபுரத்தான், அதை கையாளும் திறமையை வளர்த்துக் கொள்ளவே சொல்லியிருக்கிறான்.. கோபத்தில் நிதானம் பழக வேண்டும்.. சுயநல கோபம், பொது நல கோபம் என்று பிரித்துக் கொள்ளலாமோ..

கோபமூட்டும்போது ஒருவர் எப்படி ரியாக்ட் செய்கிறார் என்பதை பொருத்து அவருடைய பர்சனாலிட்டியை முடிவு செய்யலாம்.

shanmugavel said...

@RAVICHANDRAN said...

இன்று பாரதி பற்றிய பதிவை உங்களிடம் எதிர்பார்த்தேன்.நன்றி

சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க நன்றி சார்.

shanmugavel said...

@RAVICHANDRAN said...

@suryajeeva said...
ரௌத்திரம் பழகு...
கோபத்தை தவிர்க்க சொல்லவில்லை எட்டையபுரத்தான், அதை கையாளும் திறமையை வளர்த்துக் கொள்ளவே சொல்லியிருக்கிறான்.. கோபத்தில் நிதானம் பழக வேண்டும்.. சுயநல கோபம், பொது நல கோபம் என்று பிரித்துக் கொள்ளலாமோ..

கோபமூட்டும்போது ஒருவர் எப்படி ரியாக்ட் செய்கிறார் என்பதை பொருத்து அவருடைய பர்சனாலிட்டியை முடிவு செய்யலாம்.

உண்மைதான் நன்றி

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,
மனித உணர்ச்சிகளைப் பற்றிய காத்திரமான + விரிவான பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.

நன்றி அண்ணாச்சி,

முனைவர்.இரா.குணசீலன் said...

உணர்ச்சிகரமான பதிவு.

பல உளவியல் கூறுகளைத் தெளிவுபடுத்துகிறது.

மாய உலகம் said...

பாரதியார் உணர்ச்சிகளைப்பற்றி குறிப்பிடும்போது கோபம்,தாபம்,கவலை,அச்சம் போன்றவற்றை வென்று விட்டால் சாவையும் வெல்லலாம் என்கிறார்.//

அருமை நண்பா....பாரதியின் வரிகளை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Sankar Gurusamy said...

உணர்ச்சிகளை செம்மையாக கையாளத் தெரிந்தாலே வாழ்க்கை சுகமாகும்.

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

ராஜன் said...

உணர்ச்சிகளை மேலாண்மை செய்யத்தெரிந்தால் வாழ்க்கை வளமாகும்.நன்றி.

shanmugavel said...

@நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,
மனித உணர்ச்சிகளைப் பற்றிய காத்திரமான + விரிவான பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.

நன்றி அண்ணாச்சி,

நன்றி நிரூபன்.

shanmugavel said...

@முனைவர்.இரா.குணசீலன் said...

உணர்ச்சிகரமான பதிவு.

பல உளவியல் கூறுகளைத் தெளிவுபடுத்துகிறது.

நன்றி அய்யா!

shanmugavel said...

@மாய உலகம் said...

பாரதியார் உணர்ச்சிகளைப்பற்றி குறிப்பிடும்போது கோபம்,தாபம்,கவலை,அச்சம் போன்றவற்றை வென்று விட்டால் சாவையும் வெல்லலாம் என்கிறார்.//

அருமை நண்பா....பாரதியின் வரிகளை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

பாரதியின் நினைவை போற்றுவதற்காக நண்பா! நன்றி.

shanmugavel said...

@Sankar Gurusamy said...

உணர்ச்சிகளை செம்மையாக கையாளத் தெரிந்தாலே வாழ்க்கை சுகமாகும்.

பகிர்வுக்கு நன்றி..

ஆமாம் சங்கர் நன்றி.

shanmugavel said...

@ராஜன் said...

உணர்ச்சிகளை மேலாண்மை செய்யத்தெரிந்தால் வாழ்க்கை வளமாகும்.நன்றி.

thanks sir

ஆதிரா said...

“மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு”

என்று கூறும் பாரதியின் அடிகளில் அவர் கட்டுக்கடங்காத் உணர்ச்சி வெள்ளமாக இருந்தது தெரிகிறது. அதன் விளைவே அவர் தனிமையைத் தேடி சரணடைந்தது.

உணர்ச்சிகளை மேலாண்மை என்பது நாகரிக வாழ்வின் அடையாளம்.

உண்மையும் அழகும் நிறைந்த சிந்திக்கத் தூண்டிய பதிவு. நன்றி

shanmugavel said...

@ஆதிரா said...

“மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு”

என்று கூறும் பாரதியின் அடிகளில் அவர் கட்டுக்கடங்காத் உணர்ச்சி வெள்ளமாக இருந்தது தெரிகிறது. அதன் விளைவே அவர் தனிமையைத் தேடி சரணடைந்தது.

உணர்ச்சிகளை மேலாண்மை என்பது நாகரிக வாழ்வின் அடையாளம்.

உண்மையும் அழகும் நிறைந்த சிந்திக்கத் தூண்டிய பதிவு. நன்றி

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

மாங்கனி நகர குழந்தை said...

அருமை..நீங்கள் 7வது கேள்வி கேட்டு உள்ளீர்கள்...அதில் அரசு வேலை என்பது வேறு ஏதேனும் ஊரில் இருக்க வேண்டும்....அந்த ஊரில் தான் என்று குறிப்பிட படவில்லை...