Sunday, February 13, 2011

ஆசிரியருக்கு திட்டுவது அடிப்பது தவிர வழியில்லையா?


சரியாக படிக்காத மாணவனை திட்டாமல் அடிக்காமல் என்னதான் செய்வதென்று கேட்கிறார்கள்.திட்டியதானாலேயே மாணவனோ,மாணவியோ பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் உண்டு.ஆசிரியர்களால் பாதிக்கப்பட்டு மாணவ,மாணவிகள் தற்கொலை செய்வது பற்றி தனி பதிவு எழுதும் எண்ணம் இருப்பதால் திட்டுவது,அடிப்பது பற்றி மட்டும் பார்ப்போம்.

துவக்கப்பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி பள்ளி முடிந்து வழியில் அழுதுகொண்டே சென்று கொண்டிருந்தாள்.உங்களை மாதிரியே நானும் ஆசிரியர் திட்டியிருப்பார்,அடித்திருப்பார் என்றுதான் நினைத்தேன்.விசாரித்தபோது தெரிந்த விஷயம் அவளுடைய வகுப்பு ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப் பட்டு விட்டார்.மேலும் கூறினாள்,’’எங்க க்ளாஸ்ல எல்லாரும் அழுதாங்க

நான் பனிரெண்டாம் வகுப்பு படித்தபோது நடந்த்து.தேர்வுக்கு முன் பள்ளி இறுதிநாள்.நான் கணிதப் பிரிவில் படித்தேன்.வரலாறு பிரிவில் உள்ள நண்பணுடன் சேர்ந்துதான் வீட்டுக்கு செல்வது வழக்கம்.அவனை அழைக்க போனேன்.’’எங்க சார் கிட்ட சொல்லிட்டு வரணும்,வா’’ என்றான்.

குறிப்பிட்ட ஆசிரியர் ஒருவரிடம் விடைபெறுவதற்காக மாணவர்கள் மட்டும் சென்றார்கள்.’’போய் வருகிறோம் சார்’’ என்றபோது பலர் கண்ணைக் கசக்கினார்கள்.ஆசிரியருக்கும் கண்ணில் நீர் கசிந்த்து.பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் அழுவதை பார்த்திருக்கிறேன்.ஆசிரியர் ஒருவர் அழுவதை அப்போதுதான் பார்த்தேன்.அவர் வகுப்பில் பெரும்பாலும் யாரும் தோல்வியடைந்த்தில்லை.

மனிதனை மாற்றும் ஆற்றல் அன்புக்கு மட்டுமே உண்டு.பிறந்த குழந்தையும் கொஞ்ச நேரம் யாரும் கவனிக்காவிட்டால் அழ ஆரம்பித்துவிடுகிறது.இன்றைய ஆசிரியர்களுக்கு தேவை அன்பு கொண்ட நெஞ்சம் தான்.வேறு வகையில் அவர் பாடம் சொல்லித் தருவது மனித்த் தன்மையற்ற செயல்.

சரியாக படிக்காத மாணவனை என்னதான் செய்வது?அன்பாலும் திருந்தாத மாணவனாக இருந்தால்?அவன் காலையில் சாப்பிடாமல் இருக்கலாம்,நோயாளியாக இருக்கலாம்,போதுமான அளவு கிரகிக்கும் தன்மை இல்லாமல் இருக்கலாம்,வயிற்றுவலியாக இருக்கலாம்.அவர்களது பிரச்சனையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.வீட்டில் உள்ள கோபத்தை மாணவன் மீது காட்டவேண்டாம்.

-

12 comments:

Yoga.s.FR said...

நல்ல பதிவு!

shanmugavel said...

தங்கள் கருத்துரைக்கு நன்றி

Anonymous said...

நல்ல பகிர்வு

Sankar Gurusamy said...

Teachers are also HUMAN Beings. In today's contest, even parents have to resort to such activities to Gain attention of the Kids. TV Shows, Cartoons, High Exposure are making these buds to blossom very early and their behaviors are not controllable in conventional ways any more. Also people have high sensitivity today towards all the issues. EGO is flying high from very tender ages. We should give Psychiatric Training for handling stress to our KIDS from early ages.

This is two way traffic. We cannot blame only Teachers for this. Parents and the Students have greater role in this menace.

http://anubhudhi.blogspot.com/

மாத்தி யோசி said...

நண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )

shanmugavel said...

தமிழரசி,சங்கர் குருசாமி,மாத்தியோசி உங்கள் அனைவருக்கும் நன்றி .மாத்தியோசி நானும் உங்களைப்போலவே!

சத்ரியன் said...

உண்மை தான் சண்முகவேல்.

shanmugavel said...

நன்றி,சத்ரியன்

Samy said...

purinthu kondaen.Nanri iyaa.Samy

shanmugavel said...

உங்களுக்கும் நன்றி

Sadiq said...

அண்மையில் பார்க்க நேர்ந்த ஒரு தொலைக்காட்சி தெருவோர வினாடி வினா நிகழ்ச்சியில் ஒரு ஆசிரியையிடம் கேட்கப்பட்ட கேள்வி "சத்திய சோதனை" யாரால் எழுதப்பட்டது. விடை தெரியாத அந்த ஆசிரியை, தான் ஒரு கணக்கு ஆசிரியை என்றும் இனிமேல்தான் பொது அறிவு புத்தகம் வாங்கி தந்து அறிவை வளர்த்துக்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். பணம் பண்ணவே படித்து ஆசிரியர் வேலைக்கு வரும் அதிகமான ஆசிரியர்களால் எவ்வாறு அன்பையும் அறிவையும் மாணவர்களுக்கு போதிக்க முடியும்?

shanmugavel said...

உண்மை சாதிக்,ஆனால் திறமையான ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.தங்கள் கருத்துரைக்கு நன்றி.