.
காதலர்கள் ஜோடியாக ஆபாச இணைய தளங்களை பார்ப்பது அதிகரித்து வருகிறது என்றார் சென்னையில் உள்ள நெட் செண்டர் உரிமையாளர் ஒருவர்.அத்தகைய தளங்களை முடக்கி வைத்தால் காத்து வாங்க ஆரம்பித்து விடுகிறது.இப்போது இணைய தள வசதிகள் இளைய தலைமுறையின் அத்தியாவசிய பொருளாக கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது.இணைப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
மலையாள படங்களில் ஆபாசத்தை செருகி நடந்து வந்த சினிமா வியாபாரம் காலாவதியாகி விட்ட்து.ஊரில் நான்கு தியேட்டர்கள் இருந்தால் ஒன்றில் A படம் ஓடிக் கொண்டிருக்கும்.இம்மாதிரி விஷயங்களில் ஆர்வம் அதிகமாக உள்ள வளரிளம் பருவத்தினர் நிரம்புவார்கள்.இப்போது இணைய தளங்கள் அவர்களுக்கு எளிதாக இருக்கின்றன.
எப்போதும் கையில் லேப்-டாப் சகிதம் இருக்கும் இளைஞர்கள் இன்று அதிகம்.பெரும்பாலானோர் குடும்பத்தை விட்டு தனிமையில் இருப்பவர்களும் கூட.அல்லது தன்னையொத்த வயதில் இருப்பவர்களுடன் தங்கியிருப்பார்கள்.துவக்கத்தில் ஆர்வத்தில் ஆரம்பித்து பின்னர் அதுவே வழக்கமாகி விடுகிறது.
ஆபாச இணைய தளங்கள் தாம்பத்ய வாழ்வைக் கெடுக்கும் என்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.கணினியில் காட்சிகளை பார்க்கும்போது மட்டுமே அவர்களது உணர்வுகள் தூண்டப்படும் அளவுக்கு அடிமையாகி விடுவதால் மனைவியின் மீது ஈர்ப்பில்லாமல் போய்விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.ஒரு மனநோயாக மாறி குடும்பத்தை கூறுபோட வழி வகுத்துவிடும்.
மன நலம் மட்டுமன்றி உடல் நலத்துக்கும் இவை கேடு விளைவிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.அஜீரணம்,தலைவலி,உள்ளிட்ட உடல் நலக்கோளாறுகளை தோற்றுவிப்பதோடு முறையான உடல் இயக்கத்தையும் கெடுத்துவிடுகிறது.தவிர புகைப்பழ்க்கம்,மது அருந்துதல் ஆகியவை இதனால் அதிகரிக்கும்.இதுவே எல்லா உடல்,மன நல கோளாறுகளையும் கொண்டு வந்து விடும்.சாத்தியமான வரையில் பெற்றோர்கள் இளைஞர்களை தம் கண்காணிப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.
-
17 comments:
நல்லதொரு விஷயம் சொல்லியிருக்கீங்க அண்ணே!
மிக்க நன்றி, தம்பி
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....
எதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம் தெரியவில்லை..
உண்மையை சொல்லப்போனால், செக்ஸ் என்பது வாழ்க்கை என்ற உணவு உண்ணலில் ஒரு ஊறுகாய்போன்றதே..அனால் சிலர் ஊறுகாயையே உணவாக எடுத்துக்கொள்ள முயல்கின்றார்கள். அதன் விளைவுகள் கண்டிப்பாக மோசமானதாகவே இருக்கும். ஆனால் உலகலாவிய ரீதியில் ஆபாச இணையங்களின் பார்வை வீதம் இப்போது குறைந்துள்ளதாக அண்மையில் தகவல் ஒன்றை படித்தேன்.
காமம் என்பது இனப்பெருக்கத்திற்கு தொடக்கத்தில் உதவியது. இன்று காசாக்க, மற்றவர்களை மிரட்டி வழிக்கு கொண்டு வர, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற, மனிதர்களின் பலவீனங்களை பயன்படுத்திக் கொள்ள தற்போதை இந்த காம கலாச்சாரம் உதவிக் கொண்டிருக்கிறது.
ரொம்ப அநியாயம் பண்றானுக சார்
மிக்க நன்றி,கருன்
தமிழரசி said...
எதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம் தெரியவில்லை..
இதெல்லாம் கொஞ்ச காலத்துக்கு,நல்லது வரும்.மிக்க நன்றி
நல்ல தகவல் ஜனா,நன்றி
ஆம்.ஜோதிஜி மனிதனுக்கு மட்டும் காமம் எல்லாமுமாகிவிட்டது.மிக்க நன்றி,ஜோதிஜி
தங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி,சதீஷ்குமார்.
//மலையாள படங்களில் ஆபாசத்தை செருகி நடந்து வந்த சினிமா வியாபாரம் காலாவதியாகி விட்ட்து.ஊரில் நான்கு தியேட்டர்கள் இருந்தால் ஒன்றில் A படம் ஓடிக் கொண்டிருக்கும்.//
இதுவும் ஒருகாலத்தில் காலவதியாகிவிடும் என நம்புவதுதான் இப்போது இருக்கும் ஒரே வழி என நினைக்கிறேன்.
ஆம்.வசந்தா நடேசன் அவர்களே,நம்பிக்கைதானே வாழ்க்கை
Very Much Required topic for today's fast changing world.
Nice Article. Keep posting such articles.
http://anubhudhi.blogspot.com/
மிக்க நன்றி,சங்கர் குருசாமி
சென்ற வருடம் சைனா கூகிள் இணையதளத்தை தனது நாட்டில் இருந்து வெளியேற்றியது..உடனே நமது நாட்டில் இருந்த அனைத்து முதலாளித்துவ பத்திரிக்கைகளும் கூப்பாடு போட்டன..சைனாவில் கருத்துச்சுதந்திரம் இல்லையாம்..சைனா கூகிளை ஏன் முடக்கியது? அதில் கொட்டிக்கிடக்கும் ஆபாசக்கதைகளும், வீடியோ படக்காட்சிகளும் தான். கூகிள் தமிழில் போய் ஒரு எழுத்தை அடித்தவுடனே பல்வேறு ஆபாசக்கதைகள் ஆயிரக்கணக்கில் வருகிறது. அந்தமான் பற்றி அறிய A என அடித்தால் அம்மா முதல் அக்கா வரையான தகாத உறவுக்கதைகள் தான் வருகிறது. ஒரு ஆர்வம் காரணமாக இதைப்படிக்கும் இளைய தலைமுறை தனது மனதை மாசுபடுத்திக்கொள்கிறது.. நீர் மாசு, காற்று மாசு, நில மாசு போல இணையதளத்தினால் மனமும் மாசுபட்டுக்கொண்டுள்ளது..இதை இந்திய அரசு கட்டுப்படுத்தவேண்டும்.
ஆ.ஈசுவரன்/திருப்பூர்.
Post a Comment