Tuesday, February 8, 2011

சோதிடம்-சட்டம்-எனது அனுபவம்

ஆண்டி முதல் அரசன் வரை சோதிடம் பார்க்காத இந்தியர்கள் குறைவு.சோதிட்த்தை குலத்தொழிலாக கொண்ட சாதிகள் நம்மிடையே உண்டு.எல்லா நல்ல நிகழ்வுகளும் நல்ல நேரத்தை அறிந்தே செய்வது நமது வாழ்க்கை முறையாகவே மாறி விட்ட்து.சோதிடம் இல்லாத பத்திரிகைகள் குறைவு.

தற்போது மும்பை உயர்நீதிமன்றம் சோதிடம் விஞ்ஞான பூர்வமானதென்று தீர்ப்பளித்துள்ளது.உச்ச நீதி மன்ற தீர்ப்பும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.இனி சோதிடம் பற்றி இழிவாக பேசினால்,பொய்யென்று முழக்கமிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமா?யாரேனும் சட்டம் தெரிந்தவர்கள் விளக்கினால் நன்று.

பல பல்கலைக்கழகங்களில் சோதிடம் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் படிப்பு இருக்கிறது.நான் அதில் சேரவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.அதன் பின்னணியில் இருந்த்து என் தந்தை.ஒரு நாள் அவரது நண்பரிடம் கூறினார்.பொருள் வாங்கிப்போட்டு விட்டேன்.நஷ்ட்த்திற்கு விற்க வேண்டிய நிலை,அந்த ஜோதிடரிடம் போனேன்.கார்த்திகை மாத்த்திற்கு பிறகு விற்பனை செய்யுங்கள் என்றார்.அதே மாதிரி நல்ல விலைக்கு விற்றது.எனக்கு ஆர்வம் உண்டாகி விட்ட்து.

பல்கலைக் கழகத்தில் சேரவில்லை.ஆனால் புத்தகங்கள் பலவற்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்த்து.ரொம்ப நுணுக்கமான கணிதம் அது.எதைப் பற்றியாவது பலன் சொல்ல வேண்டுமானால் அதிகம் உழைக்கவேண்டும் என்று தோன்றியது.கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் எல்லாம் உண்டு.சோதிடம் தவறில்லை,சோதிடர் தவறலாம் என்பது உண்மையாக இருக்குமோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

வேத காலம் முதல் சோதிடம் இங்கே இருக்கிறது.எல்லாம் பாடல் வடிவில்.உன் பையன் கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஆவான் என்று அனுபவத்தில் சில சோதிடர்கள் சொல்வதாக தெரிகிறது.வேத காலத்தில் ஏது கம்ப்யூட்டர்?எனக்கு தெரிந்து குறிப்பிட்ட கிரகம் இன்னின்ன இடங்களில் நன்மை,திரவியம் என்று பொதுவாகத்தான் இருக்கிறது.

பெரும்பாலானோர் சோதிடரிடம் செல்வதில் உளவியல் சார்ந்த விஷயமும் உண்டு.தங்களது பிரச்சினையை மனம் விட்டு பேசுகிறார்கள்.கிட்ட்த்தட்ட கவுன்சலிங் செய்யும் சோதிடர்களும் உண்டு.சிலரது மன உளைச்சலுக்கு தீர்வாகவும் சோதிடம் இருக்கிறது..அப்போதைக்கு நேரம் சரியில்லை.பிறகு பார்த்துக் கொள்ளலாம்.என்பது ஒரு அணுகுமுறை.

மெய்ப்பொருள் காண்பதறிவு-என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஏராளமான பணம் கேட்கும் சோதிடர்களை நம்பவேண்டாம்.இன்று இணையத்தில் அதிக மோசடிகள் நடக்கின்றன.விழிப்புணர்வுடன் இருங்கள்.நல்ல நேரம்,ராகு காலம் எல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்.

-

4 comments:

ம.தி.சுதா said...

சிந்திக்க வைக்கிறது...

shanmugavel said...

தங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி

தெம்மாங்குப் பாட்டு....!! said...

Hello Sir,

can you tell me when the Mumbai court said Astrology is true? And what is the case?

thanks.

shanmugavel said...

http://m.timesofindia.com/india/Astrology-is-a-science-Bombay-HC/articleshow/7418795.cms
மேற்கண்ட சுட்டிக்கு செல்லவும்.நன்றி.நல்ல நேரம்,சதீஷ்குமார்.