Sunday, June 5, 2011

பெண்கள் சிரித்தால் என்ன அர்த்தம்?


பெண் சிரித்தால் என்னதான் அர்த்தம்? இதில் என்ன பொருள் வேண்டிக்கிடக்கிறது,ஏதாவது நகைச்சுவை படித்திருப்பார்கள்,அல்லது யாராவது ஜோக் சொல்லியிருப்பார்கள்,இல்லாவிட்டால் மட்த்தனமாக நடந்துகொள்வதைபார்த்திருப்பார்கள்.வேறு என்ன அர்த்தம் இருக்கப்போகிறது?

                                  அப்படியானால் பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரித்தால் போச்சுஎன்று சொல்கிறார்களே ஏன்? புகையிலையை விற்பவர்கள் காற்று புகாமல் மூடி வைப்பார்கள்.திறந்து வைத்தால் அதன் மணமும்,காரமும் போய்விடும்.வாங்குபவர்கள் மீண்டும் கடைக்கு வரமாட்டார்கள்.

                                 பெண் சிரித்தால் அப்படி தகுதி போய்விடுமா? நகைச்சுவை என்பதே மனிதனுக்கு மட்டும் உள்ள விஷயம்.மிருகத்தை மனிதனாக்குவது நகைச்சுவைதான்.ஆனால்,பெண் மட்டும் சிரிக்க்க்கூடாதா? ஒரு பெண் சிரித்துவிட்டாலே குணக்கேடுள்ள பெண் என்று அர்த்தமாகுமா?

                                 ஒரு பெண் வீதியில் நடந்து போய்க்கொண்டிருக்கிறார்.வாலிபர்கள் சிலர் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களை கடக்கும்போதோ அல்லது சற்று தூரம் சென்று திரும்பிப்பார்த்தோ அப்பெண் ஒருவனை பார்த்து சிரித்துவிட்டு போனால் அவன் என்ன நினைப்பான்? ஆமாம் அவன் பெண் தன்னை விரும்புகிறாள் என்று நினைத்து காதலுக்கு பிள்ளையார் சுழி போடுவான்.

                                   ஆண்களும்,பெண்களும் இருக்கும் இட்த்தில் கொஞ்சம் ஆபாசமாக பேச ஆரம்பிக்கிறான் ஒருவன்,செக்ஸ் ஜோக் சொல்ல ஆரம்பிக்கிறான்.அப்போது பெண் ஜோக் சொன்னவனை பார்த்து சிரித்தால் அவன் என்ன நினைப்பான்? ஆண்கள் ஆபாசமாக பேச ஆரம்பித்துத்தான் பெண்களின் மனநிலையை கணிக்கிறார்கள் என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.இந்த மாதிரி நேரங்களில் ஒரு பெண் இறுக்கமாக இருக்கவேண்டும் என்பதைத்தான் சிரிச்சா போச்சு என்றார்களோ?

                                   சீறிவரும் பெண்ணை நம்பு ,சிரிக்கும் பெண்ணை நம்பாதே!ஆட்டோவில் இருக்கும் பொன்மொழி.இதென்ன சமாச்சாரம்? ஆட்டோவில் போகும்போது அவன் பார்வையும்,நடவடிக்கையும் கொஞ்சம் சிரிப்பது போல் இருந்திருக்கும்.சிரித்துவிட்ட்தே என்று இவன் சந்தோஷப்பட்டு ஏதாவது சொல்ல,செருப்பு வந்து விழுந்திருக்கும்.அதனால் பொன்மொழி வந்து விட்ட்து.

                                    அவர்களூடைய தாயும்,சகோதரிகளும் சிரிக்கவே மாட்டார்களா? வீட்டில் தடை போட்டிருந்தாலும் போட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.இன்னொரு சிரிப்பு இருக்கிறது.ஒரு பெண் அலுவலகத்துக்கு வராமலே இன்னொருவரை வருகைப்பதிவேட்டில் கையொப்பம் போடச்சொல்லிவிட்டார்.தாமதமாக வருவதற்காக! அதிகாரிக்கு தெரிந்து விட்ட்து.

                                      பெண்ணை அழைத்து விசாரித்தபோது பெண் அதிகாரியை பார்த்து சிரித்தார்.அதிகாரி என்ன நினைத்தாலும் பெண்ணின் நோக்கம் சிநேக பாவம்தான்.எதிரே ஒரு பெண் சிரிக்கும்போது கோபம் மட்டுப்படும் என்று நினைப்பதுதான்.ஒருவேளை இதுதான் கள்ளச்சிரிப்பா? அதிகாரி கொஞ்சம் நல்ல டைப்பாகவும் இருக்கவேண்டும்.

                                       பெண்கள் சந்தோஷமாக சிரிக்கும் வீடே தெய்வம் வாழும் வீடு என்று எனக்கு தோன்றும்.அத்தகைய குடும்பத்தில்தான் குழந்தைகள் நல்ல நிலைக்கு வருவார்கள்.முன்னேற்றமும் இருக்கும்.சிரிப்பு மனதில் உள்ள எல்லா குப்பைகளையும் அடித்துச்செல்லும் பெருவெள்ளம்.
-

17 comments:

சக்தி கல்வி மையம் said...

இதுல இவ்ளோ அர்த்தம் இருக்கா..

Unknown said...

செல்லாது செல்லாது..பொண்ணுங்க அனுதாபம் தேடுறார் அண்ணே,,,

இராஜராஜேஸ்வரி said...

சிரிப்பு மனதில் உள்ள எல்லா குப்பைகளையும் அடித்துச்செல்லும் பெருவெள்ளம்.
-

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இதுல இவ்ளோ அர்த்தம் இருக்கா..

ஆமா வாத்யாரே எனக்கு தெரிஞ்சது!நன்றி

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இதுல இவ்ளோ அர்த்தம் இருக்கா..

ஆமா வாத்யாரே எனக்கு தெரிஞ்சது!நன்றி

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

செல்லாது செல்லாது..பொண்ணுங்க அனுதாபம் தேடுறார் அண்ணே,,,

no,never,இப்படி எழுதச்சொன்னவர் மைந்தன் சிவாதான் யுவர் ஆனர்.விசாரணையில் ஆதாரங்களை காட்ட தயாராக இருக்கிறேன்.நன்றி

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

சிரிப்பு மனதில் உள்ள எல்லா குப்பைகளையும் அடித்துச்செல்லும் பெருவெள்ளம்.

ஆம்,சகோதரி நன்றி

A.K.RASAN said...

Good post

Ashwin-WIN said...

பொண்ணுங்களை யாருய்யா சிரிக்கவேனாம்னு சொன்னது. அவன் மட்டும் கையில கேடச்சான்.. அவனவன் பொண்ணுங்க சிரிக்குதில்லையே எண்டு கடுப்பில இருக்கான்..

பெண் புரட்சி வாழ்க.

Ashwin Win
விபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)

நிரூபன் said...

பெண்களின் சிரிப்பிற்கான அர்த்தங்களை இலகுவில் புரிந்து கொள்ள முடியாது என்பதனை அருமையாக விளக்கியுள்ளீர்கள்...

எமது சமுதாயத்தில் தான் பெண்கள் சிரித்தவுடன், அதனைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை இன்றும் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்...

ஒரு சிரிப்பைப் பற்றி பல கோணங்களில் அலசியுள்ளீர்கள்..

ஹி...

shanmugavel said...

@A.K.RASAN said...

Good post

Thanks sir

shanmugavel said...

@Ashwin-WIN said...

கூல் சார் டென்ஷன் ஆகாதீங்க!நன்றி

shanmugavel said...

@நிரூபன் said...

பெண்களின் சிரிப்பிற்கான அர்த்தங்களை இலகுவில் புரிந்து கொள்ள முடியாது என்பதனை அருமையாக விளக்கியுள்ளீர்கள்...

எமது சமுதாயத்தில் தான் பெண்கள் சிரித்தவுடன், அதனைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை இன்றும் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்...

ஒரு சிரிப்பைப் பற்றி பல கோணங்களில் அலசியுள்ளீர்கள்..

ஹி...

நன்றி நிரூபன்.

Sankar Gurusamy said...

பெண்கள் சிரிப்பதைப்பற்றிய இந்த பழமொழி, தற்காலத்துக்கு கொஞ்சமும் ஒத்துவராது. அதுவும் நகரவாழ்க்கை ஓட்டத்தில், சிரிக்காத பெண்கள்தான் ஒதுக்கித் தள்ளப்படுவார்கள்.


http://anubhudhi.blogspot.com/

shanmugavel said...

Sankar Gurusamy said...


உண்மையே சங்கர் .நன்றி

Jana said...

எனக்கும் கனநாள் கேள்வியாக இது இரந்தது பெண் சிரித்தால் அப்படி என்ன கொடுமையா? மஹாபாரதத்தில் இந்திரப்பிரஷ்தம் வந்த துரியோதனன் பளிங்கு பதித்த தரையினை தண்ணீர் என நினைத்து வேட்டியை தூக்கியபோது திரௌபதி சரித்ததால்த்தான் பாராதப்போரே வந்ததாம்!
என்று பழயவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன்.
எனக்கும் அதில் உடன்பாடு கிடையாது.

இந்த பதிவை பார்த்தவுடன் எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வர்றது..

'சரிப்பின் உண்டாகும் இராகத்திலே என்ற பாடல்...
அதில் பெண்ணின் சிரிப்பொலிகளை ரி.எம்.எஸ் எப்படி ஸ்வரங்களாக பாடியிருப்பார் இல்லை :)

Anonymous said...

இப்படி பட்ட நிலை இன்றளவில் உள்ளது வருந்தத்தக்கதே..கடைசி பத்தி மிகச் சரியா சொன்னீங்க..