பிரமிடு என்றால் எகிப்தும்,அதன் வடிவமும் பலருக்கும் நினைவுக்கு வந்துவிடும்.கீழே உள்ள பரப்பு மேலே செல்லசெல்ல குறைந்து கொண்டேபொகும்..உணவு பிரமிடு(Food pyramid) என்று வைத்திருக்கிறார்கள்.அந்தந்த நாட்டு வேளாண் துறை வெளியிட்டு வரும் உணவு பிரமிடுதான் பரவலாக பயன்படுத்தப்படுவது.
உடல் ஆரோக்கியம் பேணுவதற்கும்,அன்றாட செயல்கள் தடையின்றி நடைபெற தேவையான ஆற்றலை பெறுவதற்கும் உணவை நம்பியே இருக்கிறோம்.உடலில் ஏற்படும் நோயை தடுக்கவும்,எதிர்ப்பாற்றலை வளர்க்கவும் சரிவிகித உணவு தேவை.ஒவ்வொருவர் உடல்நலத்திற்கும் தேவையானதை அறிந்து பின்பற்றவேண்டும்.
உணவு பிரமிடு என்பது பொதுவாக சராசரி மனிதனுக்கு வழங்கப்படுவது,நோயாளிகளுக்கு ஏற்றார்போல தயாரிப்பது என்றும் இருக்க வேண்டும்.பருமனில்லாத உயரத்திற்கேற்ற உடல் எடையை பெற்ற ஒருவர் உண்ணும் உணவும்,சர்க்கரை நோயாளிக்கான உணவும் அதற்கென உள்ள ஆலோசகர்களால் தயாரித்து வழங்கப்பட்டு அதை பின்பற்றவேண்டும்.
முதலில் சராசரி மனிதனுக்கு உள்ளதை பார்க்கலாம்.நாம் ஏற்கனவே கேள்விப்பட்ட்துதான்.பச்சை காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும் என்பார்கள்.ஆனால் உடல் செயல்பட ஆற்றல் தருவது காய்கறிகள் அல்ல! தானியங்கள்.அன்றாட வேலைகளுக்கு,உடல் உழைப்புக்கு சக்தி தரும் உணவே பிரதானம்.
அரிசி,கோதுமை,ராகி,சோளம்,உருளைக்கிழங்கு,வாழைப்பழம்,ரொட்டி போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கிறது.நாம் வேலை செய்ய தேவையான குளுக்கோஸை வழங்குவது இதுதான்.ஒருவர் செய்யும் உடல் பணிகளுக்கு ஏற்றவாறு இவற்றை அதிகம் உண்ண வேண்டும்.
பச்சை காய்கறிகளையும்,பழங்களையும்,உடல்நலத்தை பேணும் உணவுகள் என்று சொல்ல்லாம்.நோய் எதிர்ப்புத்திறனை அளிக்கவும்,சில குறைபாடுகள் வராமல் தடுக்கவும் தேவையான உயிர்ச்சத்துக்கள்(vitamins) இவற்றில் அதிகம் இருக்கின்றன.அடிக்கடி நோய்வாய் படுகிறவர்கள் உணவில் எப்போதும் சேர்க்கவேண்டும்.
அடுத்த்தாக உடலைக்கட்டும் உணவுகள்(Body building foods) .புரதம் நிறைந்த உணவுகள் இவை.பால் பொருட்கள்,மீன்,சிக்கன்,மட்டன் உள்ளிட்ட மாமிச உணவுகள்.பருப்புகள்,கொட்டைகள் உள்ளிட்ட உணவுகள் போதுமான அளவு சேர்க்கப்பட வேண்டும்.இது பிரமிடில் எல்லா இடங்களிலும் இடை நிலையில் இருக்கும்.உடலில் உள்ள நொதிகள் எல்லாம் புரதம்தான் என்னும்போது சீரான உடல் இயக்கத்துக்கு அவசியம்.
மிக்க் குறைவாக சாப்பிடக்கூடியது என்று பார்த்தால் சாக்லேட்,ஜாம்,எண்ணைய் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்தவை.ஆனால் எண்ணைய் முழுவதுமாக விலக்கிவிடக்கூடாது.மருத்துவ ஆலோசனை உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் பயன்படுத்தவேண்டும்.உயிர்ச்சத்து ஏ,டி,கே போன்ற விட்டமின்கள் கொழுப்பில்தான் கரையும்.வெண்ணை,மாமிச உணவுகள்,சாக்லேட் ஆகிய உணவுகளில் இருக்கிறது.
உணவு பிரமிடுகள் ஆலோசனை எல்லாம் பொதுவாக வழங்கப்படுபவையே! ஒருவர் இத்தனை கிராம் காய்கறி சாப்பிடவேண்டும் என்பது வளரும் நாடுகளில் ஆலோசனை சொல்வது கஷ்டம்.ஆனால் நமக்கு ,நம்பகுதிக்கு ஏற்றவாறு அதன் தன்மையை கண்டறிந்து உணவுகளை முடிவு செய்ய வேண்டும்.உதாரணமாக கிராமப்புறங்களில் நெல்லி எளிதாக கிடைக்கும்.இது உயிர்ச்சத்து சி அதிகம் கொண்ட்து.ஆரோக்கியத்திற்கு முக்கியமானதும்கூட.கொஞ்சம் முயற்சி செய்தால் நமக்கு தேவையான உணவுகளை தேர்ந்தெடுப்பது சுலபம்.
14 comments:
சோத்துக்கே கஷ்ட்டம்.காய்க்கு எங்க போறது...?
நாடாளுமன்ற அரசியல் முழுமையாக அறிய -நாடாளுமன்ற கலைக்களஞ்சியம் படியுங்கள்.www.suryapublications.tk
உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கு ஏற்றாற் போல உணவுப் பிரமிட் பற்றிய பயனுள்ள தகவலினைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி சகோ.
பச்சைக் காய்கறிகளை உண்பது தான் எமது சுகமான ஆயுளுக்கும் நல் வழியாக அமையும்.
@A.K.RASAN said...
சோத்துக்கே கஷ்ட்டம்.காய்க்கு எங்க போறது...?
இலவச அரிசி? நன்றி சார்
@நிரூபன் said...
உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கு ஏற்றாற் போல உணவுப் பிரமிட் பற்றிய பயனுள்ள தகவலினைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி சகோ.
பச்சைக் காய்கறிகளை உண்பது தான் எமது சுகமான ஆயுளுக்கும் நல் வழியாக அமையும்.
உங்களுக்கு நன்றி,நிரூபன்.
அருமையான பதிவு. இன்னும் கொஞ்சம் விபரங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றி.
http://anubhudhi.blogspot.com/
இங்கே நான் வாழும் நாட்டில் உணவுப் பழக்கவக்கம் என்பது மிகவும் அறிவுபூர்வமாக இருக்கும்!
ஆனால் நாமோ நாவுக்கு ருஷி என்று சொல்லி கண்டதையெல்லாம் சாப்பிடுகிறோம்!
இது சரியில்ல!
இப்போது மக்களுக்கு ஓரளவிற்கு உணவுக் கட்டுப்பாடு. கலோரிகள் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. இது போன்ற பதிவுகள்.தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
அனைவருக்கும் மிகத் தேவையானதொரு பதிவு .
@Sankar Gurusamy said...
அருமையான பதிவு. இன்னும் கொஞ்சம் விபரங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றி.
என்ன விபரம் என்று சொன்னால் தந்துவிட்டு போகிறேன்.நன்றி சங்கர்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நீ சொல்வது உண்மைதான் தம்பி.நம்மிடம் இன்னும் சில பழக்கங்கள் உருவாக வேண்டியிருக்கிறது.நன்றி
@சாகம்பரி said...
இப்போது மக்களுக்கு ஓரளவிற்கு உணவுக் கட்டுப்பாடு. கலோரிகள் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. இது போன்ற பதிவுகள்.தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
நன்றி சகோதரி
@இக்பால் செல்வன் said...
அனைவருக்கும் மிகத் தேவையானதொரு பதிவு .
நன்றி சகோ
பயனுள்ள பதிவு அண்ணா.
ஆனா, கடை பிடிக்கிறதுதான் கஷ்டமா இருக்கண்ணே.
Post a Comment