Thursday, June 2, 2011

கணவனும் மனைவியும் அட்ஜஸ்ட் செய்து போவதுதான் சரியானதா?

ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க! நம்மதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்-இது பெண்களுக்கு வழங்கப்படும் ஆலோசனை அல்ல புத்திமதி? பெரும்பாலான இடங்களில் இதைக்கேட்க முடியும்.லேடீஸ்னா அப்படித்தான் சார்! விட்டுக்கொடுத்து போங்கஇது ஆண்களுக்கு சமூகம் வழங்குவது!

                                காலம்காலமாய் கற்பாந்த காலமாய் தொட்டுத்தொடர்ந்து வரும் விஷயம் இது.ஆனால் சரியானதா? குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வைத்தருமா? என்றால் தயவு செய்து மன்னிக்கவும்.உடலில் ஏற்பட்ட வலியை சிகிச்சை செய்து குணப்படுத்துவதற்கு பதிலாக வலியுடன் வாழ்க்கை முழுதும் வாழச்செய்யும் ஒரு தவறான அறிவுறுத்தல்.


                                 ஒரு வீட்டில் தம்பதிகள் இருவருக்கு எப்போதும் சண்டை.அண்டை அயலாரிடம்,நண்பர்களிடம் யாரிடம் போய் பேசினாலும் ஒட்டுமொத்தமாக தெரிவித்த வார்த்தைகள் விட்டுக்கொடுத்து போங்க என்றார்கள்.ஆனால் மனசு அப்படியெல்லாம் சமாதானம் ஆகிவிடுமா என்ன? ஒரு கட்ட்த்தில் திட்டமிட்டு வெளியூர் மாறுதல் வாங்கிப்போன கணவன் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு வருவதை தவிர்க்க ஆரம்பித்தார்.(அலுவலகத்தில் இப்போது வேலை அதிகமாகி விட்ட்து)

                                  பெண்ணாக இருந்தாலும் பாதிப்பை சரி செய்ய ஏதாவது வகையில் முயற்சி செய்து கொண்டுதான் இருப்பார்கள்.பெற்றோர்கள் பார்த்து செய்யும் திரும்ணத்தில் சில சாதகங்கள் இருப்பது போலவே,காதல் திருமணத்திலும் சாதகங்கள் இருக்கவே செய்கின்றன.நன்கு புரிந்து கொண்ட காதல்களும் உண்டு.இரண்டிலும் பல்வேறு நேரங்களில் பிரச்சினை தோன்றுவது இயல்பு.

                                    எந்த திருமணமாக இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து போவது முன்பு கூறியது போலவே தவறானதுதான்.கணவன்,மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவருக்குள்ள கோபத்தையும்,ஆத்திரத்தையும் அடக்கிவைத்து அடக்கி வைத்து வாழ்வது ஏதேனும் ஒரு நாள் பெரிய அளவில் வெடித்துவிடும்.

                                   குப்பைகளை வெளியே கொட்டாமல் பலகாலம் வீட்டு மூலையில் சேகரித்து வைத்தால் புழு,வண்டு துர்நாற்றம் எல்லாம் தோன்ற ஆரம்பித்துவிடும்.குழந்தைகளுக்காக வாழ்கிறேன்,என்ன செய்வது என் தலையெழுத்து என்று வாழ்கிறேன் என்பது மாதிரியான வாழ்க்கையில்தான் வேறு மணம் மீறிய உறவுகளும் சிலருக்கு வடிகாலாக போய்விடுகின்றன.

                                   அட்ஜஸ்ட் செய்து போகாமல் பிரச்சினை தீர என்னதான் வழி? வலியை குணப்படுத்துவதுதான்.உடல் வலிக்கு மருத்துவரிடம் போனால் என்ன செய்வார்? அந்த வலிக்கான காரணம் என்ன? எதனால் ஏற்பட்ட்தென்று சிகிச்சை அளிப்பார்.அவர் வலி தோன்றிய வித்த்தை ஆராய்கிறார்,தேவையென்றால் சில பரிசோதனைகள் செய்கிறார்.அப்புறம் மருந்து கொடுப்பார்.

                                   உதாரணமாக ஒரு குடும்பத்தில் கணவன் மதுவுக்கு அடிமையாகி இருந்தால் உரிய சிகிச்சை,ஆலோசனை மூலமே அதை தீர்க்க முடியும்.காலையில் எழுத்த்திலிருந்து திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தால் அவர் குடிப்பது அதிகரிக்கவே செய்யும்.ஒவ்வொருவருக்கும் அவர் சார்ந்து வந்த வாழ்க்கை மூலம் மதிப்பீடுகள் இருக்கின்றன.ஒரு சமுதாயத்தில் தவறாகப்படுவது இன்னொரு சமூகத்தில் சரி என்பார்கள்.

                                   கணவனும்,மனைவியும் சிறப்பான குடும்பம் நட்த்தும் வழி இதுதான்.பூசல் உருவாகும் சூழலை புரிந்து கொள்வது,பிறகு அதை தீர்ப்பது.ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவது சரியானது.கொஞ்சம் யோசிக்க முடிந்தால் முடிகிற காரியம்தான்.முடியாத நிலையில் சில இடங்களில் குடும்ப ஆலோசனை வழங்கும் இடங்கள் இருக்கின்றன.அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
-

8 comments:

Unknown said...

விட்டுக்கொடுப்பது ஆண் பெண் இருவருக்கும் பொது, சரியாக சொன்னீர்கள்..

Unknown said...

வாழ்க்கேல என்னென்ன ரகசியம் இருக்குன்னு இப்ப தான் தெரியுது மக்கா

shanmugavel said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு said...

விட்டுக்கொடுப்பது ஆண் பெண் இருவருக்கும் பொது, சரியாக சொன்னீர்கள்..

ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வது ரமேஷ்பாபு நன்றி

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

வாழ்க்கேல என்னென்ன ரகசியம் இருக்குன்னு இப்ப தான் தெரியுது மக்கா

நன்றி சிவா

நிரூபன் said...

கணவன் மனைவி மனம் விட்டுப் பேசித் தீர்வு காண்பது தான் சண்டைக்களைக் குறைக்கும் ஒரே வழி. மனம் விட்டுப் பேசும் நிலை எப்போது இரு உள்ளங்களுக்கும் இடையில் ஏற்படுகிறதோ, அப்போது அட்ஜஸ்ட் எனும் வார்த்தைக்கு அங்கே அர்த்தம் இல்லாமற் போய் விடும். ஆகவே இரு உள்ளங்களும் பேசிப் பிணக்குகளைத் தீர்ப்பது தான் வளமான வாழ்விற்கு வழி வகுக்கும்.

விட்டுக் கொடுத்துப் போவது பற்றியும், மனம் விட்டுப் பேசுவது பற்றியும் விரிவான விளக்கங்களை உங்கள் பதிவின் மூலம் தந்துள்ளீர்கள். நன்றிகள் சகோ.

இராஜராஜேஸ்வரி said...

.பூசல் உருவாகும் சூழலை புரிந்து கொள்வது,பிறகு அதை தீர்ப்பது.ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவது சரியானது.கொஞ்சம் யோசிக்க முடிந்தால் முடிகிற காரியம்தான்.

சக்தி கல்வி மையம் said...

கணவன் மனைவி மனம் விட்டுப் பேசித் தீர்வு காண்பது தான் சண்டைக்களைக் குறைக்கும் ஒரே வழி.

Sankar Gurusamy said...

விட்டுக் கொடுப்பதும் , கண்டிப்பதும் வெவ்வேறு விஷயங்கள் என்று எண்ணுகிறேன்.

எல்லாவற்றிலும் விட்டுக்கொடுப்பதும் தவறு. எல்லாவற்றையும் கண்டிப்பதும் தவறு.

விட்டுக் கொடுக்கும் விஷயத்தில் விட்டுக் கொடுத்து, கண்டிக்கும் விஷயத்தில் கண்டிப்பாக இருக்கும் தம்பதிகள் வாழ்வு இனிக்கும்.

அருமையான பகிர்வு

http://anubhudhi.blogspot.com/