Sunday, June 12, 2011

சாப்ட்வேர் இளைஞர்களை குறி வைத்து ஹை-டெக் விபச்சாரம்.

  எப்போது தீர்க்கப்பட முடியாத ,காலம்காலமாய் இருந்துவரும் சமூக பிரச்சினைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது பாலியல் தொழில்.முதலாவது மது.காலத்திற்கேற்றவாறு புதுப்புது அவதாரம் எடுக்கும்.தொழில் நுட்பம் வளர்ந்தால் அதையும் பயன்படுத்திக்கொள்ளும்.இ-மெயில் ,இணையதளம் என்று பெருகிவிட்ட பின்னர் அதை பயன்படுத்தி வளர்ந்து கொண்டிருக்கிறது.

                                                                                         விபச்சாரம் என்றழைப்பது சரியல்ல என்று(அவர்களும் மனிதர்கள்தான்) பாலியல் தொழில் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.பிறகு அது ஆண் பாலியல் தொழிலாளர்கள்,பெண் பாலியல் தொழிலாளர்கள் என்று பிரித்து பேசியும்,எழுதியும் வருகிறோம்.ஆனால் ஹைடெக்  விபச்சாரத்தை யாரும் பரிதாபத்துடன் பார்க்கவில்லை.ஏனெனில் இது திட்டமிட்டு  அதிக பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக்கொண்டு நடத்தப்படும் தொழில்.



                                                                                          சமீபத்தில் வட இந்தியாவில் எம்.பி.ஏ  பட்டதாரி ஒருவர் இணையதளம் மூலம் பாலியல் தொழில் நடத்தியதாக கைது செய்யப்பட்டார்.வெளிநாட்டில் நல்ல வேலையில் இருந்தவர் சொந்த ஊருக்கு வந்தபோது பாலியல் பெண் ஒருவருடன் ஏற்பட்ட நட்பால் இணையதள விபச்சாரத்தில் இறங்கினார்.வெளி நாட்டு வேலையை விட நல்ல வருமானம் இருந்ததால் முழுமூச்சாக இறங்கி புகழ்பெறத் தொடங்கிய பிறகு மாட்டிக்கொண்டார்.

                                                                                       இந்த ஹைடெக் விபச்சாரத்தை பொறுத்தவரை அவர்களது நோக்கம் சாப்ட்வேர் இளைஞர்களும்,பெரும் பணக்காரர்களும்தான் என்பதை அவர் கூறியது.மிக இளம் வயதில் பெரும்பான்மையாக தனிமையும்,கையில் புழங்கும் பணமும் சபலத்துக்கு உள்ளாக்கும் ஒரு தூண்டுகோல்.இணையதளத்தில் நேரம் செலவழிப்பதும் அதிகம்.இதில் மாட்டிக்கொள்ளும் ஆசாமிகளுக்கு இழப்பு அதிகம் இருக்கும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்!



                                                                                          ஆபாச இணையதளம் மூலம் சாட் செய்ய வைப்பது ,இ மெயில் மூலம் வேண்டுகோள் விடுப்பது என்ற அணுகுமுறையில்தான் சபலிஷ்டுகளை வளைக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் அவர்கள் கட்டளையை கேட்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள்.போதைக்கு அடிமையாக்குவது,அவர்களை வைத்தே ஆபாச படம் எடுப்பது ,பிளாக் மெயில் போன்றவையும் நடக்கலாம்.

                                                                                             விழிப்புணர்வு,விழிப்பில்லாத உணர்வுக்கெல்லாம் பெரிய அளவு முக்கியத்துவம் இல்லை.மண்டை ஓடு படம் போட்டாலும் சிகரெட் குடிப்பவர்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டுதான் இருக்கும்.சூழ்நிலைதான் வலிமை வாய்ந்தது.முடிந்தவரை பெற்றோர்கள் உடனிருக்க முயற்சி செய்யலாம்.இளமையில் தனிமை நல்லதல்ல! 



                                                                                          ஹைடெக் விபச்சாரத்தில் ஆண் விபச்சாரமும்  உண்டு.இணைய தளம் மூலம்தான் ஆண் விபச்சாரம் முக்கிய இடத்தைப் பிடித்தது.சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது,பெண்களுக்கான இணையதளம் என்று ஆரம்பித்து சாட்டிங்,இ மெயில் மூலம் தொழிலை நடத்துவதாக சொல்கிறார்கள்.பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் முன்பு சில அடையாளங்களுடன் இருப்பதுமுண்டு.
-

7 comments:

A.K.RASAN said...

இதை ஒழிக்கவே முடியாதுன்னு பலர் சொல்கிறார்கள்.நல்ல அலசல்.

Unknown said...

அலெர்ட் அலெர்ட் பசங்களா...
ஆப்பிட்டிட்டு அழாதீங்க...ஹிஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆண் விபச்சாரம் எனப்து இங்கெல்லாம் சர்வ சாதாரணம்! அது அங்கும் ஆரம்பித்துவிட்டதா?

ஆச்சரியமா இருக்கண்ணே!

நிரூபன் said...

பாஸ்...அப்போ நாம எல்லாம் இனிமே ஜாக்கிரதையா இருக்கனும். ஏன்னா நானும் இந்த துறையில் தான் இருக்கேன்...

விழிப்புணர்வோடு, கூடவே தற் பாதுகாப்பினையும் தரும் பதிவு இது..
இணையத் தளம் மூலம் ப்ளாக் மெயில் எல்லாம் இப்போ சாதரணமாகி விட்டது சகோ.

யார் யார் எப்படி வந்து மிரட்டுகிறார்கள் என்பதே புரியாத புதிராகி விட்டது பாஸ்.

சக்தி கல்வி மையம் said...

ஆண் விபச்சாரம் - அடப்பாவமே?

எல் கே said...

இப்பதான் விஷயம் வெளியில் வருதா ? இதெல்லாம் எனக்குத் தெரிந்து யாகூ சாட் பிரபலம் ஆக ஆரம்பிச்சப்பவே ஸ்டார்ட் ஆகிடுச்சே

Sankar Gurusamy said...

திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று சொல்வது இதற்குதான் சரியாக பொருந்தும்.

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/