Sunday, June 19, 2011

கற்பழிப்புகள் -ஒரு சமூக பார்வை.

அணுகுண்டை விட வலிமையான ஆயுதமாக எதிரிகள் கருதுவது கற்பழிப்பு.பெண்ணுக்கும் அவளை சார்ந்தவர்களுக்கும்,தேசத்திற்கும் மிகப்பெரும் அவமானம் என்பதால்!மானம் உயிரினும் மேலானதுஎன்பதால்!பெண்களின் மீது நடத்தப்படும் வன்முறைகளில் உச்சமானது கற்பழிப்பும் அதன் விளைவான கொலையும்.தொடர்ந்து இணங்காமல் போராடும்போது கொலைசெய்யும் வாய்ப்பு அதிகரிக்கிறது.


ஒரு பெண் மீதான தீவிர,கீழ்த்தரமான ஆசைக்கு அப்பெண் மசியாதபோது கற்பழிப்புகள் நடக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.இவற்றில் பெரும்பாலானவை திட்டமிட்டு உறவினர்களால் ,நண்பர்களால் நடத்தப்படுபவை.திடீரென்று திட்டமிடாமல் நடக்கும் கற்பழிப்புகள் குறைவு.மன நோயாளிகளால் நடப்பவையும் உண்டு.மனதிற்கும் பால் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.ஏதுமறியாத சிறுமிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.


கற்பழிப்பு குற்றங்களுக்கு சட்டத்தில் கடுமையான தண்டனைகளுக்கு இடமிருந்தாலும் புகார் செய்யப்படுவது குறைவு என்று சொல்லப்படுகிறது.சமூகத்திற்கு அஞ்சி மறைக்கப்படுவதால் குற்றவாளிகள் பெருகும் வாய்ப்பு அதிகம்.குற்றத்தை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனைகள்,காவல்,சட்ட நடைமுறைகளை தாண்டவேண்டும்.இயல்பு வாழ்க்கையை தொலைக்கவேண்டும்.மகளிர் அமைப்புகள் சில வழக்குகளுக்கு சிறப்பான பணியாற்றியிருக்கின்றன.


கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்படும் போது வழியில் அவனை சந்தித்தேன்.காவல்துறையை சேர்ந்த நண்பர் என்னிடம் "ரேப் பண்ணியிருக்கான் ,இவனபார்த்தா எப்படியிருக்கு பார் ?"எனக்கும் ஆச்சரியாமாகத்தான் இருந்தது.ஒரு வீரனைப்போல அவன் முகம் காட்டினான்.குற்றம் சுமத்தப்பட்டவன் என்று அவனிடம் கவலையோ,குற்ற உணர்வோ இல்லை.விளையாட்டு வீரர்கள் தாங்கள் பெற்ற கோப்பையை உயர்த்தி காட்டும் மலர்ச்சியை நான் பார்த்தேன்.யாராலும் செய்யமுடியாத காரியமா?நண்பருக்கு என்னைப்பற்றி தெரியுமாதலால் அவனை அருகில் அழைத்து பேசினேன்.


அவனது வார்த்தைகளில் சில...................................


இதுக்கு மேல யார் சார் கல்யாணம் பண்ணிக்குவான் அவள,நான் எதுவும் பண்ணல!நான் வேணும்னா பலதடவ கல்யாணம் பண்ணிக்கலாம்,லவ் பண்ணலாம்னு சொன்னேன் .அவ எதுவும் பேசல! கோவத்துல சண்ட புடிச்சப்ப அவ சொந்தக்காரன் ஒருத்தன் பார்த்துட்டான்.அதனால வூட்ல போயி சொல்லிட்டா.அவளுக்குத்தான் அசிங்கம்.எவன் வருவான்?அப்படி ஆத்தரமா இருந்தா ரோட்ல,வீதில எத்தனையோ பேர் இருக்காங்க!நான் தண்ணியடிச்சா அந்த மாதிரி பழக்கமுண்டு.ராத்திரில செகண்ட்ஷோ சினிமா போய்ட்டு வந்து அந்தமாதிரி பொம்பளைங்ககிட்ட பழகியிருக்கிரன்.இதுக்கு மேல யார் கல்யாணம் பண்ணிக்குவான்னு பார்க்கிறேன்(திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான்).அன்னக்கி நான் ஒண்ணும் தண்ணியிலகூட இல்ல!நான் ஒரே பையன்,கெடச்ச கூலிக்கு போவேன்.தப்புபண்ணமாட்டேன்.எங்கப்பன் குடிச்சி குடிச்சி காச கரைக்காம இருந்திருந்தா நான் எப்படியோ இருந்திருப்பேன்.நானும் படிச்சிருப்பேன்.இவள மாதிரி ஆளுங்கல்லாம் கால் தூசு (சற்று மாறுதல் செய்யப்பட மீள்பதிவு)
-

11 comments:

RAVICHANDRAN said...

சரியான பார்வைதான்.

Unknown said...

இவனுகளுக்கு கட் பண்ணி அனுப்பனும் சார்

சிந்திக்க உண்மைகள். said...

CLICK THE LIN AND READ.


>>> பெண்ணடிமையா? பெண்ணுரிமையா? இந்தியாவில் நடந்த பெண் (வன்)கொடுமைகள்.

இந்தியாவில் வளர்வது பெண் அடிமைத்தனத்தனமா?
பெண் உரிமையா?

இந்தியாவில் 2009ல் நடந்த பெண் (வன்)கொடுமைகள்


...

Sankar Gurusamy said...

இதுக்கு ஏதாவது மனநல காரணம் / சிகிச்சை இருக்கா???

கடுமையான தண்டனைகளே இந்த மாதிரி குற்றங்கள் குறைய உதவும்.

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

Jana said...

என்னைப்பொறுத்தவரையில் கற்பழிப்பு என்பது தன்னிலை மறந்த மருகத்தனமான செயற்பாடுதான்.
அதேபோல சில இனமோதல்களில் கற்பழிப்பினை ஆயுதமாகவும் பயன்படுத்துகின்றனர்.
மிருகத்தனமான செயலுக்கு உச்சக்கட்டமான தண்டனைகளே ஏற்புடையாதாக இருக்கும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
அவற்றின்மூலம் சில மருகங்களை பயப்படுத்தவாவது முடியும்.

shanmugavel said...

@RAVICHANDRAN said...

சரியான பார்வைதான்.

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

இவனுகளுக்கு கட் பண்ணி அனுப்பனும் சார்


தலயதானே சிவா நன்றி.

shanmugavel said...

@சிந்திக்க உண்மைகள். said...

CLICK THE LIN AND READ.

நன்று.தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

shanmugavel said...

@Sankar Gurusamy said...

இதுக்கு ஏதாவது மனநல காரணம் / சிகிச்சை இருக்கா???

தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம்.நன்றி சங்கர்

shanmugavel said...

@Jana said...

என்னைப்பொறுத்தவரையில் கற்பழிப்பு என்பது தன்னிலை மறந்த மருகத்தனமான செயற்பாடுதான்.
அதேபோல சில இனமோதல்களில் கற்பழிப்பினை ஆயுதமாகவும் பயன்படுத்துகின்றனர்.
மிருகத்தனமான செயலுக்கு உச்சக்கட்டமான தண்டனைகளே ஏற்புடையாதாக இருக்கும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
அவற்றின்மூலம் சில மருகங்களை பயப்படுத்தவாவது முடியும்.

உண்மைதான் ஜனா .அதிக பட்ச தண்டனைகள் தேவையே!

நிரூபன் said...

கற்பழிப்பு பற்றிய அலசலினை, விளக்கக் குறிப்புக்களோடு தந்திருக்கிறீங்க.

ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு, வக்கிர புத்தியின் உச்சக் கட்டமும் தான் இந்தக் கற்பழிப்பிற்கான காரணங்கள்.

பாலியல் கல்வி மூலம் இத்தகைய செயற்பாடுகளை நிறுத்த முடியாது. இதற்கான காரணம் மேலை நாடுகளிலும் கற்பழிப்பு சகஜமாக உள்ளது.

இவ்வாறான துஷ்பிரயோகச செயற்பாடுகளை நீக்குவதற்கு ஒரே வழி...உசசபட்சத் தண்டனையே ஆகும்.