Thursday, June 30, 2011

பணம் கொடுத்தால்தான் அரசு வேலை கிடைக்குமா?

                           அவன் அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறான்.அதற்காக புத்தகம் வாங்கி படித்துக்கொண்டிருந்தான்.இன்னும் தேர்வுக்கு ஒருமாதம் தான் இருக்கிறது.புத்தகத்தில் வாங்கிய கடையின் பெயர் அச்சிடப்பட்டிருந்த்தை பார்த்தவுடன் நண்பன் முகம் நினைவுக்கு வந்த்து.அவன் தான் இந்த புத்தகத்தை வாங்கச் சொன்னான்.அப்போது,பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும்டா! ‘என்று சொன்னதும் அவன் தான்.

                             அவன் புத்தகத்தை படிப்பதை நிறுத்திவிட்டு எதையோ உற்றுப்பார்த்தான்.அவனுக்கு அரசியல்வாதிகள் மீது வெறுப்பு ஏற்பட்ட்து.முகம் மாறியது.தனது தாய் தந்தை மீது வெறுப்பு வந்த்து.இவர்களுக்குப்போய் ஏன் மகனாக பிறக்கவேண்டும்.பிறகு தன் மீதும் ஆத்திரம்பன்னிரெண்டாம் வகுப்பில் இன்னும் கொஞ்சம் நன்றாக படித்திருந்தால் டாக்டராகவோ,ஒரு எஞ்சினியராகவோ ஆகியிருக்காலாம்.அவனுக்கு சிகரெட் புகைக்கவேண்டும் போல் தோன்றியது.எழுந்து கடைக்கு போனான்.

                              அவன் மறுபடியும் வந்து படிப்பானா,படிக்கமாட்டானா என்பது கிடக்கட்டும்.மேற்கண்ட இரண்டாவது பத்தியில் அவனுடய எண்ணங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தபோது அவனுக்குள் சில மாற்றங்கள் ஏற்பட்டன.வயிற்றில் அமிலம் அதிகரித்த்து,ரத்த அழுத்தம் அதிகமானது,ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்ட்து.நோய் எதிர்ப்பு நிலையிலும்,உணவு செரிமானத்திலும் விரும்பத்தகாத மாற்றம் ஏற்பட்ட்து.

                              மனதில் டென்ஷன்,புகைக்கவேண்டும் என்ற உணர்வு,கவலை,வெறுப்பு,கவனம் செலுத்த முடியாத நிலை,குற்ற உணர்வு,இன்னும் இன்னும் ...தொடர்கிறது.இது பின்னர் மன அழுத்தமாக தொடரலாம்.குடிப்பழக்கம் இருந்தால் குடிக்க வேண்டுமென்ற எண்ணம் வரலாம்.மனநிலை காரணமாக உடலில் சில நோய்களும் ஏற்படலாம்.பெற்றோருடன் சண்டை பிடிக்கலாம்.

                                அவனுக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத விளைவுகள் எதனால் ஏற்பட்ட்தென்று சிந்தியுங்கள்.பணம் கொடுத்தால்தான் வேலை என்ற ஒரு எண்ணம் அவனிடம் உருவாக்கிய மாற்றங்கள் நமக்கு முக்கியமான பாட்த்தை சொல்கிறது.பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்கள் இருப்பார்கள்.ஆனால்,பணம் கொடுக்காமல் கஷ்டப்பட்டு படித்து தேர்வெழுதி வேலைக்கு போனவர்களும் இருக்கிறார்கள்.இந்த விஷயத்தை யாரும் அவனுக்கு சொல்லவில்லை.

                                  நம்முடைய எண்ணங்களை உருவாக்குவது நம்மை சுற்றி உள்ளவர்களும்-சமூகம்-நாம் கற்றுக்கொண்ட விஷயங்களும்தான்.உண்மையில் நடப்பதை விடவும் நாம் நினைப்பதுதான் அதிக கஷ்டங்களைத்தருகிறது.பல சமயங்களில் நமது எண்ணங்கள் அறிவுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாமல்(irrational) இருக்கும்.மனிதனின் பெரும்பாலான கஷ்டங்கள் இதனால் ஏற்படுபவை.இதற்கு ஏராளமான உதாரணங்களைத்தர முடியும்.

                                  நீங்கள் நினைத்த்து போலவே எப்போதும் நடந்த்தில்லை என்பதை உணருங்கள்.எண்ணங்கள் தோன்றும்போதே இப்படித்தான் நடக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதையும் உணருங்கள்.அதையொட்டி ஆக்கப்பூர்வ எண்ணங்களை உருவாக்குங்கள்.ஒரு முறைக்கு இருமுறை யோசியுங்கள்,நான் நினைப்பது சரியா? என்று.நம்பிக்கையுடன் அணுகுங்கள்.

-

6 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

JesusJoseph said...

ஊழல் ஊழல் ஊழல், இது தான் இந்திய வல்லரசின் (?) தாரக மந்திரம்


நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

சக்தி கல்வி மையம் said...

good post.

Sankar Gurusamy said...

ஷண்முகவேல், அருமையான யோசனைகள். நானும் சில ஆண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட சிந்தனைகளால் அவதிப்பட்டதுண்டு.

என் சகோதரர், ஒரு பிரபல கல்லூரியில் சீட் வாங்க ரெகமெண்டேசன்/மதம் மட்டுமே வேண்டும் என வாதிட்டபோது, அவரை நன்றாக படித்தாலும் சீட் கிடைக்கும் என்ற சிந்தனையை விதைத்து அது செயலான அனுபவமும் உண்டு...

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

நிரூபன் said...

கட்டணக் கல்வி முறையால் ஒரு மனிதனுக்கு மன உளைச்சல் எவ்வாறு ஏற்படுகிறது என்பதனை அருமையாக விளக்கியிருக்கிறீங்க.

வெட்டிப்பேச்சு said...

உண்மையான செய்தி..

வாழ்த்துக்கள்.