பசு இந்துக்களுக்கு லட்சுமி,கடவுள்.பசுவின் பாலுக்கு மகத்துவம் அதிகம்.கிராமங்களில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு தெரியும்.வீடு மெழுகவும்,வாசல் சுத்தம் செய்யவும் பசுவின் சாணத்தையே பயன்படுத்துவார்கள்.தாய்ப்பால் குறைந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரே பசுவின் பாலை கொடுப்பார்கள்.
கிராமத்தில் பலரும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பசுவை தேடிக்கொண்டிருப்பார்கள்.எப்படியாவது பசுவின் கோமியத்தை பிடித்து விடவேண்டும்.மாட்டுக்கொட்டகையில் போய் பாத்திரத்தை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருப்பார்கள்.கோமியத்தை வீட்டில் தெளித்தால்தான் நிம்மதி.
அன்று மதிய வேளை.திடீரென்று ஒரு பெண்ணின் அழுகுரல்.எங்கள் வீட்டுக்கு சில அடி தூரத்தில் உள்ள வீட்டிலிருந்து வந்த்தை அறிய முடிந்த்து.ஏதோ இறப்புதான் என்பது நிச்சயம்.அந்த வீட்டில் வயதானவர்களும் யாருமில்லை.அதிர்ச்சியில் வீட்டை நோக்கி போனோம்.அங்கே பசு ஒன்று இறந்து கிடந்த்து.
விவசாயிகள் தங்கள் குடும்பத்தில் உள்ள மாடும் தங்களில் ஒருவர்தான்.பலருக்கும் விற்பதற்கு மனசே வராது.கோயில் திருவிழாக்களுடன் நடக்கும் கால்நடை சந்தைகளில்தான் மாட்டை விற்பது,புதியதாக வாங்குவது எல்லாம் நடக்கும்.விற்பனைக்கு கொண்டு போகும்போது தண்ணீர் குடிக்க விடுவார்கள்.மாடு பொறுமையாக தண்ணீர் குடித்தால் விற்றுவிடும் என்று ஒரு நம்பிக்கை.
மாட்டை பெருமைப்படுத்துவதற்கு தமிழர் திருநாளில் ஒருநாள் ஒதுக்கி இருக்கிறார்கள்.அன்று மாட்டை குளிப்பாட்டி ,கொம்புகளுக்கு வர்ணம் பூசி பொங்கல் படைத்து வணங்குவார்கள்.பசு கன்று போட்டவுடன் முதலில் கிடைக்கும் சீம்பால் தேவாமிர்தம்.காய்ச்சி அருகில் உள்ள கோயிலில் படைத்துவிட்டு சுற்றி உள்ள வீடுகளுக்கு வழங்குவார்கள்.சில தின்ங்களுக்கு கிடைக்கும்.
தற்போது பெருமை மிக்க காங்கேயம் காளைகளே குறைந்து வருவதாக நாளிதழ்களில் படித்தேன்.மாட்டை வைத்து ஏர் பூட்டி உழவு செய்த்து போய் டிராக்டர்கள் வந்துவிட்டன.நாட்டு பசுக்கள் உழவுக்கு,பாலுக்கு இரண்டுக்கும் உதவும்.சீமைப்பசுக்கள் பாலுக்கு மட்டும்தான்.பசுக்களை பார்க்கவே முடிவதில்லை.
தமிழ் சினிமாக்களில் மாடு,குதிரை,யானை,குரங்கு,நாய்,பாம்பு என்று பல விலங்குகளும் கதாநாயகர்களுக்கு உதவும்.காப்பாற்றும்.அவையெல்லாம் கற்பனை.உண்மை கற்பனையை விட பயங்கரமானது என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள்.யாரென்று நினைவில்லை.அடுத்து வரும் உண்மை சம்பவத்தை படியுங்கள்.
கிருஷ்ணகிரி அருகே ஒரு கிராம்ம்.திடீரென்று வீடு தீப்பற்றிக்கொண்ட்து.அருகே கொட்டகையில் கட்டியிருந்த மாட்டுக்கும் தீக்காயம்.வீட்டில் எஜமானர் தூங்கிக்கொண்டிருப்பது.படபடப்பை தந்திருக்கவேண்டும் எப்படியோ மாடு கட்டை அவிழ்த்திக்கொண்டு அதே ஊரில் இருந்த பழைய முதலாளி வீட்டை நோக்கி ஓடியது.வீட்டு முன்னால் நின்று கத்தியது.குரல் அவருக்கு தெரியும்.மாடு கத்திய சத்தம் கேட்டு வெளியே வந்தார்.மாடு மீண்டும் ஓட்டம் பிடித்த்து.பழைய எஜமானரும் மாட்டின் பின்னாலேயே ஓடினார்.தீப்பிடித்த வீட்டின் முன்பு மாடு நின்றது.வீட்டில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டு விட்டார்கள்.
14 comments:
மாடுகள், பசுக்கள் பற்றி ஒரு அருமையான பதிவு...
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
பசுவின் முக்கியத்துவத்தினையும், பசுவினால் ஏற்பட்ட நன்மைகளையும் இப் பதிவில் பகிர்ந்திருக்கிறீங்க சகோ.
அருமையான பதிவு..
எங்களூரிலும் பசுவினைக் கடவுளாகத் மதித்து பட்டிப் பொங்கல் விழாவினைத் தை மாதத்தில் கொண்டாடி மகிழ்வார்கள்.
உழவனுக்கு சோறு போடுகிறது.ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது.பசு கடவுள் இல்லைஎன்று யார் சொல்வார்கள்? நல்ல பதிவு.
@Sankar Gurusamy said...
மாடுகள், பசுக்கள் பற்றி ஒரு அருமையான பதிவு...
பகிர்வுக்கு நன்றி..
நன்றி சங்கர்.
@நிரூபன் said...
பசுவின் முக்கியத்துவத்தினையும், பசுவினால் ஏற்பட்ட நன்மைகளையும் இப் பதிவில் பகிர்ந்திருக்கிறீங்க சகோ.
அருமையான பதிவு..
எங்களூரிலும் பசுவினைக் கடவுளாகத் மதித்து பட்டிப் பொங்கல் விழாவினைத் தை மாதத்தில் கொண்டாடி மகிழ்வார்கள்.
ஆம் சகோ !நன்றி.
@A.K.RASAN said...
உழவனுக்கு சோறு போடுகிறது.ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது.பசு கடவுள் இல்லைஎன்று யார் சொல்வார்கள்? நல்ல பதிவு.
நன்றி சார்
பதிவு பசுக்களுக்கு பெருமை சேர்த்துவிட்டது..கண்ணுக்கு தெரியும் கடவுளுன்னு சொல்லலாம்..
பசு இந்துக்களின் கடவுள் என்பதை விட மக்களின் வாழ்வியலுடன் ஒன்றித்து இருந்தது என்ற உள் விளக்கம் அருமை.
ஆ.. வீட்டில் இருந்தால் ஆபத்து இல்லை என்று பெரியவர்கள் சொல்வார்கள் இதனால்த்தானோ??
பசு வீட்டில் இருப்பது மிகவும் நல்லது. குழந்தைக்கு தாய் பாலுக்கு பதிலாக பசும்பால்தானே கொடுத்தோம். இப்போது, விருப்பம் இருந்தால்கூட இடவசதி, நேரமின்மை காரணமாக ப்சு வளர்ப்பு குறைந்துவிட்டது.
@தமிழரசி said...
பதிவு பசுக்களுக்கு பெருமை சேர்த்துவிட்டது..கண்ணுக்கு தெரியும் கடவுளுன்னு சொல்லலாம்..
தங்கள் கருத்துரைக்கு நன்றி.
@Jana said
பசு இந்துக்களின் கடவுள் என்பதை விட மக்களின் வாழ்வியலுடன் ஒன்றித்து இருந்தது என்ற உள் விளக்கம் அருமை.
ஆ.. வீட்டில் இருந்தால் ஆபத்து இல்லை என்று பெரியவர்கள் சொல்வார்கள் இதனால்த்தானோ??
ஆ...வீட்டில் இருந்தால் ஆபத்தில்லை.ஆமாம் ஜனா நன்றி.
@சாகம்பரி said...
பசு வீட்டில் இருப்பது மிகவும் நல்லது. குழந்தைக்கு தாய் பாலுக்கு பதிலாக பசும்பால்தானே கொடுத்தோம். இப்போது, விருப்பம் இருந்தால்கூட இடவசதி, நேரமின்மை காரணமாக ப்சு வளர்ப்பு குறைந்துவிட்டது.
தங்கள் கருத்துரைக்கு நன்றி.
எல்லாம் சரி பசுவை நமக்காக கொடுமைபடித்துவதை நினைத்தால்தான்
வருத்தமாய் இருக்கிறது....சகோ....
அருமை.
ஆனால் நகரங்களில் குப்பைத் தொட்டிக்குள் தலைவிட்டு உணவு தேடும் எலும்பும் தோலுமான பசுக்களைப் பார்த்தால் என் வயிற்றில் தீ:(
Post a Comment