Wednesday, June 22, 2011

மற்றவரை குற்றம் சாட்டுவதே பெண்களின் குணமா?

                                 பாலிடெக்னிக் ஒன்றில் விழாவுக்கு போயிருந்தேன்.பார்வையாளராகத்தான்.நண்பர் அக்கல்லூரியின் முதல்வர் என்பதால் அழைத்திருந்தார்.ஒரு பெரிய மனிதர் பேசிக்கொண்டிருந்தார்.எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறை சொல்லிக்கொண்டிருக்க்க்கூடாது! பெண்கள் தான் அப்படி இருப்பார்கள்.’’மாணவர்களுக்கு அறிவுரைகள் தந்தவாறு இருந்தார்.

                                  பெண்கள்தான் மற்றவரை குற்றம் சாட்டுவார்களா? ஆண்கள் குற்றம் சாட்டமாட்டார்களா? தனது தவறுகளுக்கும்,தோல்விக்கும் தன்னை விடுத்து இன்னொருவர் மீது பழி போடுவது மனிதர்களுக்கு பழக்கமான விஷயம்தான்.தான் மிகச்சிறந்தவன்,அதி புத்திசாலி ,எந்த தவறும் செய்ய வாய்ப்பில்லை! அடுத்தவர்கள்தான் காரணம் என்பவர்களை பார்த்திருக்கிறோம்.



                                  ஒரு பெண் தீவிரமாக காதலித்து வந்தார்.பையன் வெளியூரில் இருந்தான்.அடிக்கடி ஏதோ ஒரு பிளாக்மெயில்.இந்த மாத்த்துக்குள் கல்யாணம் செய்யாவிட்டால் எனக்கு வேறொருவருடன் நிச்சயமாகிவிடும் என்பார்.தோழி ஒருவரை விட்டு அவளுக்கு உன்னை பிடிக்கவில்லையாம் மறந்து விடுங்கள் என்றிருக்கிறார்.அப்புறம் அந்த காதல் தோல்வியடைந்து விட்ட்து.அப்பெண் தோழியை பார்த்து சொன்னது “எல்லாம் உன்னால்தான்!

                              இருத்தைந்து வயது பையனுக்கும் நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்ணுக்கும் கள்ளக்காதல்.பெண்ணின் மகனுக்கு விஷயம் தெரியவே வீட்டில் சண்டை.கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் விஷம் குடித்து,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.மருத்துவமனைக்கு சென்று காதலன் பார்த்தவுடன் அப்பெண் சொன்னதுஎல்லாம் உன்னால்தான்

                             கல்யாணமான பின்னர் கணவன் புதியதாக தொழில் தொடங்கினார்.கொஞ்சமாக குடிக்கும் பழக்கம்.ஒவ்வொரு ஆர்டருக்கும் நண்பர்களுக்கு பார்ட்டி.சந்தோஷத்தை கொண்டாட வேண்டுமில்லையா? சில மாதங்களிலேயே தொழில் படுத்துவிட்ட்து.கணவன் மனைவியை பார்த்து சொன்னதுஎல்லாம் உன்னால்தான்!

                              ஏராளமான உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம்.தோல்வியோ தவறோ நிகழ்ந்து விட்டால் மனம் தப்பித்துக்கொள்கிறது.என்னால் இல்லை.அடுத்தவர்தான் காரணம் என்று.முதலில் காதலில் தோற்ற பெண்ணின் மோசமான அணுகுமுறையே தோல்விக்கு காரணம்.அவர் சொல்லித்தான் தோழி போன் செய்தார்.

                              இரண்டாவதான கள்ளக்காதலில் பையனை குறை சொல்வதற்கு எந்த நியாயமும் இல்லை.அப்பெண்ணுக்கு திருமணமான மகன் இருக்கிறான்.கணவனின் தொழில் நஷ்டமடைய காரணம் திறமையின்மையும்,முறையற்ற பழக்கங்களும்தான்.இன்னும் சிலர் நீ வந்த நேரம்தான் இப்படி ஆகிவிட்ட்து என்பார்கள்.இதைப்போல மனித்த் தன்மையற்ற செயல் வேறில்லை.

                               ஒழுக்கம் சாராத ஆளுமை(personality) கொண்டவர்கள் அடுத்தவர்கள் மீது பழிபோட்டு தப்பித்துக்கொள்வது அதிகம்.குடிக்கு அடிமையானவனை கேட்டுப்பாருங்கள்.தவறு செய்பவனை கேட்டுப்பாருங்கள்.எதையாவது,யாரையாவது குறை சொல்வார்கள்.இப்படிப்பட்டவர்கள் முன்னேறுவது கஷ்டம் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

                                  இன்னொருவரை குற்றம் சாட்டுவது ஒரு தோல்விக்குள்ள நிஜமான காரணத்தை கண்டறியும் முயற்சியில் தடை உண்டாக்கும்.நாம் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறோம்.சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனால் மீண்டும் மீண்டும் ஏற்படும் தவறுகளை தவிர்க்க முடியாது.

                                  முதல் பத்திக்கு வருவோம்.அந்த பெரிய மனிதர் ஏன் அப்படி சொன்னார்? அவர் காலத்தில் நாற்பதாண்டுகளுக்கு முன்பு பெண்கள் அதிகம் வெளி விவகாரங்களீல் ஈடுபடுவதில்லை.இப்போதும் குறைவுதான்.சம்பாதிப்பது,முடிவெடுப்பது எல்லாமும் ஆணிடம் இருந்தன.அவர்கள் ஆண்களை குற்றம் சொல்லாமல் யாரை சொல்வார்கள். அவருடைய அனுபவத்தில் இருந்து பேசியிருக்கவேண்டும்.உண்மையில் இது ஆண்,பெண் இருவருக்கும் பொதுவாக இருக்கும் ஒன்றுதான்.
-

20 comments:

A.K.RASAN said...

good post.thanks

A.K.RASAN said...

//நாம் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறோம்.சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனால் மீண்டும் மீண்டும் ஏற்படும் தவறுகளை தவிர்க்க முடியாது.//

excellent

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல பதிவு...


அடுத்தவர் மீதே பழியைபோட்டு தப்பித்துக்கொள்கிறது இரு பாலினமும்...


புரிந்து நடந்துக்கொள்ள வேண்டும்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நிறைய பெரிய மனுஷர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

100 பளோயர்ஸ் பெற்றதற்க்கு வாழ்த்துக்கள்..

Unknown said...

சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள், தன்னுடைய தோல்விக்கு அடுத்தவரை குற்றம் சாட்டுவது மனிதர்களுக்கு இடையே உள்ளதுதான், எனினும் தோல்வியை ஏற்று கொண்டவன் மட்டும்தான் அதிலிருந்து மீளவும், வெற்றி பெறவும் முடியும், பகிர்வுக்கு நன்றி

shanmugavel said...

@A.K.RASAN said...

good post.thanks

உங்களுக்கும் நன்றி சார்

shanmugavel said...

@# கவிதை வீதி # சௌந்தர் said...

நல்ல பதிவு...


அடுத்தவர் மீதே பழியைபோட்டு தப்பித்துக்கொள்கிறது இரு பாலினமும்...


புரிந்து நடந்துக்கொள்ள வேண்டும்..

ஆம்,சார் நன்றி

shanmugavel said...

@# கவிதை வீதி # சௌந்தர் said...

நிறைய பெரிய மனுஷர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்..

யார சொல்றீங்க?

shanmugavel said...

@# கவிதை வீதி # சௌந்தர் said...

100 பளோயர்ஸ் பெற்றதற்க்கு வாழ்த்துக்கள்..

நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

shanmugavel said...

@இரவு வானம் said...

சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள், தன்னுடைய தோல்விக்கு அடுத்தவரை குற்றம் சாட்டுவது மனிதர்களுக்கு இடையே உள்ளதுதான், எனினும் தோல்வியை ஏற்று கொண்டவன் மட்டும்தான் அதிலிருந்து மீளவும், வெற்றி பெறவும் முடியும், பகிர்வுக்கு நன்றி

தங்கள் கருத்துரைக்கு நன்றி

நிலாமகள் said...

ச‌ரியான‌ அல‌ச‌ல். ந‌ல்ல‌ ப‌திவு.

Anonymous said...

சாரு - தமிழச்சி மேட்டரை வைத்து எழுதிய பதிவா இது.. பல இடங்களில் பொருந்திப் போகுதே !!! ஹிஹி .. நன்று

Unknown said...

நூறு போலோவர் வாழ்த்துக்கள் பாஸ்

Unknown said...

கள்ளக்காதலும் கருமாந்தரமும் பாஸ்..இவனுகள...

நிரூபன் said...

தம்மிடம் உள்ள தவறிற்கான காரணத்தினைக் கண்டறியாது அடுத்தவர்களைக் குறை கூறுவோருக்குச் சாட்டையால் அடிக்கும் வண்ணம் ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.

நானும் அலுவலகத்தில் சில நேரங்களில் என் பக்கத் தவறினை உணர்ந்தும், பிறர் மேல் பழி போட்டுப் பேசியிருக்கிறேன்,

என் போன்றவர்கள் உணர்ந்து திருந்துவதற்கு இப் பதிவு ஓர் தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

எண்ணங்கள் 13189034291840215795 said...

இது ஆண்,பெண் இருவருக்கும் பொதுவாக இருக்கும் ஒன்றுதான்.//

சரியே.

சில நேரம் பழிகள் உண்மையுமே..

இருப்பினும் , பழிகளை தாண்டியும் யோசிக்க பழகணும்..

சில செயல்கள் எதிர்வினையாக நடைபெறுவதுண்டுதான்..

ஆனால் பொறுப்பெடுக்க பழகியவர்கள் முன்னேறுவார்கள்..

Sankar Gurusamy said...

அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

Anonymous said...

தலைப்பைப்பார்த்து வந்தேன் ரொம்ப அனலைஸ் பண்ணியிருப்பீர்கள் எனநினைத்து. அப்படியொன்றுமில்லாமல் சிம்ப்ளாக முடித்து விட்டீர்கள்.

Blame game s common to both genders. But that s not the point. The point s: Do the genders differ in such game ? Yes, they do.

Women r more interested in the human side of life. They hav the uncanny insight into how they r perceived to b by men. There s not a single woman in the world who has not fathomed the mind of her husband. Test with ur wife and u will know. She knows u better than u know urself.  So, cheating her s well nigh impossible.

Companies prefer women for certain managerial posts; where men can’t successfully perform as such posts demand involve human side. There s a thinking in Government of India to make one IIM exclusively to produce women managers. The suggestion has already been made to make IIM Kozhikode to b one such. Already, the said IIM is reserving more than 60 % seats for girls.

Women pretend to be fair-minded; but they adjudge persons more personally than men. For most women, a man s good or bad at the first sight itself. She knows when u lower ur sight and zero in on her bosom. She s quick to pull her sari over them; if not she s a prostitute.

Men delay such judgment taking more time and so, their decisions r well rooted in reasoning and realities.

Babies r born only out of mutual sexual activity on bed, rn’t they ? But go to labor ward in a govt hospital, u will see the pregnant women shouting: "டே...உன்னாலத்தாண்டா இப்படி வேதனைபட்டுச்சாவ்றேன்…..நீ நாசமாப்போக.." இன்னும் அசிங்கமாகத் திட்டுவார்கள். இந்த 'டே' அவளின் கணவந்தான்.

This ‘dee’ is their husbands who r not present on the spot. The blame for her labor pains go to her husband only. Labor pains r unbearable. Because the baby mercilessly kicks its mother on all sides; and taking all efforts to wriggle out of her, tearing her vagina. Is he responsible for the baby’s mischief? Yes, according to her. After the child s born, she takes the whole credit for getting the child healthy. பார்த்தீங்களா எவ்வளவு அழகாகச்சிரிக்கிறான். நான் பெத்த செல்வம்”

When a thing goes well, she takes the credit. When ill, she passes the blame to her husband.
All said and done, there s a disclaimer. Men and women r not born completely different from one another in mental makeup. There s much overlapping of feminine and masculine elements in the genders. V can come across men thinking like women and women thinking and acting like men. Although the fact is that it s not possible to completely uproot the feminine element from women unless the estrogens r just a few and she becomes almost a he.

Finally, v ought to accept Freud’s discovery, I think. The jealousy factor s consistently present in her. She s jealous of male body and dissatisfies with her own. Freud says it starts right from her childhood when she sees her little brother possessing an organ extended from the body, whereas her own buried inside her. Such a jealousy should b transformed and sublimated in later life when she grows out of childhood in accepting the body she s born with. Suppose she s unable to sublimate it: then there will b born Thamizachis and Leena Menimekalais, the incomplete women who r jealous of male bodies and its advantages denied to them.
According to many psyhchologists, the jealousy factor is a great catalyst to create a strong feminism.

Jana said...

இன்னொருவரை குற்றம் சாட்டுவது ஒரு தோல்விக்குள்ள நிஜமான காரணத்தை கண்டறியும் முயற்சியில் தடை உண்டாக்கும்.நாம் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறோம்.சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனால் மீண்டும் மீண்டும் ஏற்படும் தவறுகளை தவிர்க்க முடியாது.

யதார்தம் தேவையான பதிவு கூட