Tuesday, June 14, 2011

பொய் பேசினால் இப்படியும் கண்டுபிடிக்கிறார்கள்!

                                     திருட்டு,கொலை,கொள்ளை என்று எத்தனையோ குற்றச்செயல்கள்.புலனாய்வு செய்பவர்கள் வழக்குகளீல் பயன்படுத்தும் பரிசோதனைகளே உண்மை கண்டறியும் பரிசோதனைகள்.

                                     கிராமங்களில் உள்ள வழக்கம் நினைவுக்கு வருகிறது.ஏதாவது திருடு போய்விட்டால் சந்தேகப்படும் ஆட்கள் அனைவரையும் அழைத்துவந்து கோவில் முன்பு நிற்க வைப்பார்கள்.அவர்களது வாயில் மாவு திணிக்கப்படும்.அநேகமாக ராகி மாவு.அதை மெல்ல வேண்டும்.யாருடைய வாயில் மாவு உமிழ்நீருடன் கலந்து கெட்டியாகவில்லையோ அவர்தான் குற்றவாளி.இதில் முக்கியமான விஷயம் இருக்கிறது.அதை பிறகு பார்க்கலாம்.

                                   ஓரிரு வருடங்களுக்கு முன்பு காவல்துறை தொடர்புடைய வழக்கில் “நார்கோ அனாலிஸிஸ் “ என்ற வார்த்தை அடிக்கடி நாளிதழ்களில் அடிபட்ட்து நினைவிருக்கலாம்.சோடியம் பெண்ட்தால் அல்லது சோடியம் அமித்தால் ஆகிய மருந்துகளை பயன்படுத்தி உண்மையை கண்டறியும் முறை இது.கிட்ட்த்தட்ட அரைத்தூக்க நிலையில் ஒருவர் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிடுவார் என்கிறார்கள்.

                                   இன்னொன்று பாலிகிராப் என்ற கருவி.பொய்யை கண்டுபிடித்துவிடும் என்று சொல்கிறார்கள்.ஒருவர் பொய் சொல்லும்போது உடலில் ஏற்படும் மாற்றத்தை வைத்து இந்த கருவி செயல்படுகிறது.தொடர்ந்து சில கேள்விகள் கேட்கப்படும்போது பெரும்பாலான ஆமாம் வகை வினாக்கள் இருக்கும்.சுமார் முப்பது கேள்வி என்றால் நீங்கள் இந்த குற்றத்தை செய்தீர்களா? என்பதை நடுவில் நுழைத்துவிடுவார்கள்.

                                   குற்றம் புரிந்தவர் அந்த முக்கியமான கேள்விக்கு பதில் அளிக்கும்போது அவர் குற்றவாளி என்றால் உடலில் வேதிமாற்றம் உண்டாகும்.இதுதான் அடிப்படை.இவை தவிர மூளையை படம் எடுத்து பார்க்கும் BEOS (Brain Electrical Oscillaations Signature) முறை,மூளையில் பதிந்திருக்கும் தகவல்களை அடிப்படையாக்க்கொண்டு “பிரைன் மேப்பிங் முறைபோன்றவையும் உண்டு.

                                   மேற்கண்ட உண்மை கண்டறியும் முறையெல்லாம் மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கின்றன.இதை மட்டும் வைத்து ஒருவரை குற்றவாளி என்று தீர்மானிப்பது கஷ்டம்.ஏதேனும் துப்பு கிடைக்கும் என்று பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

                                  மேற்கண்ட உண்மை கண்டறியும் பரிசோதனையில் உள்ள பொது விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.கிராமத்தில் நடக்கும் முறையை கவனியுங்கள்.குற்றம் புரிந்தவருக்கு மாவு அப்படியே இருக்கும் என்று எதைவைத்து சொல்கிறார்கள்? தவறு செய்தவருக்கு பயத்திலும்,படபடப்பிலும் உமிழ்நீர் சுரக்காது.உமிழ்நீர் இல்லாவிட்டால் மாவு அப்படியே இருக்கும்.

                                  புலனாய்வு அமைப்புகளின் உண்மை கண்டறியும் சோதனையிலும் பொதுவான விஷயம்.நாம் பொய் சொல்லும்போது,தவறை மறைக்கும்போது நமது உடலில் வேதிமாற்றம் நிகழ்கிறது என்பதுதான்.உடல்மொழி கைவரப்பெற்றவர்கள் கூட பொய்யை கண்டுபிடித்துவிடுவார்கள்.நமது உடல் உறுப்புகளும் சில மாற்றங்களுக்கு உள்ளாகிறது
.
                  உண்மை அறியும் பரிசோதனைகள் நமக்கு உணர்த்துவது முக்கியமானது.பொய் பேசும்போது,தவறுகளை மறைக்கும்போது நம் உடலில் வேதி மாற்றங்கள் நிகழ்கிறது என்பதே! இந்த வேதிமாற்றம் உடல்நலனுக்கோ,மன நலனுக்கோ நல்லது செய்யாது.இதைப்பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.


                                 
-

11 comments:

மைந்தன் சிவா said...

ஹிஹி என்ன கொடுமை சார் இது"?நாட்டில பொய் கூடவா சொல்ல முடியாது??மிஷின் மாட்டுறாங்களே!

மைந்தன் சிவா said...

ஹிஹி என்ன கொடுமை சார் இது"?நாட்டில பொய் கூடவா சொல்ல முடியாது??மிஷின் மாட்டுறாங்களே!

மைந்தன் சிவா said...

நம்ம ஏரியா'ல ஓட்டவடையோட ஒரு சண்டை....

Anonymous said...

ஆஹா ! பீதியைக் கிளப்பிறீங்களே பாஸ் !!!? பொய் என்றாலே நெஞ்சு படபடக்குது ? எங்கே மாட்டிக்குவேனோனு .. குற்றமே செய்யாட்டியும் சிம்படம்ஸ் மட்டும் வந்துடுது .. :)

Sankar Gurusamy said...

இந்த உலகில் உண்மை மட்டுமே பேச முடியாது. சில பொய்களும் காலத்தின் கட்டாயம்.

இதில் நான் வள்ளுவர் கட்சி...

யாருக்கும் தீங்கு தராத சொல் / செயல்களையே வாய்மை என்கிறார் வள்ளுவர்.

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தெரியாத விஷயம் தந்ததற்கு நன்றி..

சாகம்பரி said...

இதே போல கொதிக்கும் நெய் வைத்தும் ஏதோ செய்வார்கள். தன்னேஞ்சறிந்து பொய் சொன்னால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

அம்பாளடியாள் said...

ஒ இப்படியும் ஒருவழி இருக்கா!..கடவுள்மாதிரி
இப்படி ஒரு மிசின் தரமானதாய் கிடைத்துவிட்டால்
உலகத்தில் எந்தநாட்டிலும் வன்முறைகளை அடியோடு
அழித்துவிடலாமே...ஆனா இத யாரும் அங்கீகரிக்க
மாட்டார்களே!....
நல்ல தகவல் தந்தீர்கள் நன்றி....

நிரூபன் said...

யாருடைய வாயில் மாவு உமிழ்நீருடன் கலந்து கெட்டியாகவில்லையோ அவர்தான் குற்றவாளி.இதில் முக்கியமான விஷயம் இருக்கிறது.//

பாஸ்...இந்த விடயத்தினால் பல அப்பாவிகளும் மாட்டியிருப்பார்கள் என நினைக்கிறேன். காரணம் உமிழ் நீரில் சுரக்கும் திரவம் அவர்களின் உணவின் அடிப்படையில் வேறுபட்டு மா கட்டி ஆகினால்... நிருபராதியும் குற்றவாளி தான்..
ஹி...ஹி...

நிரூபன் said...

பாலி கிராப் கருவி பற்றிய விடயங்களை உங்கள் பதிவின் மூலமாக அறிந்தேன் சகோ. பகிர்விற்கு நன்றி சகோ.

shanmugavel said...

அனைத்து நட்புக்களுக்கும் நன்றி.