சமூக வலைத்தளங்கள் மூலம் கள்ளக்காதல்கள் அதிகரித்து வருவதாக சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் படித்தேன்.இது ஆச்சர்யமான ஒன்றல்ல என்று நிபுணர்கள் தெரிவித்திருந்தார்கள்.சாட்டிங் மூலம்.மெயில் வழியாக நட்பு தோன்றி வேறுவடிவம் பெறுவது இப்போது சாதாரணமாக ஒன்றாகியிருக்கிறது.
இங்கே தடைகள் எதுவுமில்லை.எப்படியும் பேசலாம்.ஆபாச சொற்களை பயன்படுத்தி திருப்தி அடைவது பற்றி( corprolalia) உளவியல் கோட்பாடுகள் இருக்கின்றன.ஆபாச சொற்களை எழுதுவதிலும்,பேசுவதிலும் நாட்டம் கொள்பவர்கள் இவர்கள்.சில வகை மன நோயாளிகளிடம் இந்த போக்கு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு இணையம் ஒரு முக்கிய வரப்பிரசாதமாக இருந்த்து.சாட்டிங் போன்றவற்றில்,சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆர்வத்தை தீர்த்துக்கொண்டார்கள்.கணினி தெரிந்தவர்கள் ஆண்,பெண் என்றில்லாமல் ஃபேஸ்புக்,ஆர்குட்,ட்விட்டர் போன்றவற்றில் ஒரு பொழுதுபோக்குக்காக ஈடுபாடு காட்டி இன்று பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது.
சமீத்திய நிகழ்வு இந்த வக்கிரங்களுக்கு ஆத்திரத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.தங்களது ஆபாச சொற்களையோ,பாலியல் அணுகுமுறையையோ யாரேனும் திட்டமிட்டு ஸ்கிரீன் ஷாட் எடுத்து சிக்கவைத்துவிட்டால்? என்பது அவர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இது பெரும் குழப்பம்.இன்னும் சிலருக்கு நம்மையும் யாராவது இப்படி வலை விரித்திருப்பார்களோ என்ற பயமும் இருக்கலாம்.
மன அழுத்தம் எப்போதுமில்லாத அளவு அதிகரித்துவருவதாக பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன.சகோதரி சாகம்பரி தனது பதிவில் இது பற்றி குறித்துள்ளார்.ஒருவரது மனநிலைக்கும்,பாலியல் குற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.மேலே கண்டவாறு ஆபாச சொற்களை பயன்படுத்துபவர்கள் சிலரில் மனநோயாளிகளும் உண்டு என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.மனாழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க பாலியல் குற்றங்களும் அதிகரிக்கவே செய்யும்.
மனநோயாகட்டும்,வறுமை ஆகட்டும்,குடிப்பழக்கம்,எய்ட்ஸ் என்று எந்த சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் அதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்களும் குழந்தைகளும்தான்.சிறு குழந்தை என்றும் பார்க்காமல் தங்கள் வக்கிரத்தை தீர்த்துக்கொள்பவர்களை நாம் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
குற்றங்களை குறைக்கவும்,தடுக்கவும் ஏற்பட்ட்துதான் சட்டம்,தண்டனை போன்றவை.ஆனால் இந்திய சூழலில் பாலியல் சார்ந்த குற்றங்கள் பதிவாவது குறைவு.இதற்குக் காரணம் பெண்களிடம் விழிப்புணர்வு இல்லாத நிலைதான்.மேலும் இங்கே வெளியில் சொன்னால் அவள் நல்ல பெண்ணே இல்லை என்கிறார்கள்.
பாலியல் தொல்லைக்கு,ஆபாச சொற்களை எதிர்கொள்ளும் பெண் யாரிடமும் சொல்லாமல் ஓடிப்போய் வீட்டில் ஒளிந்து கொள்ளவேண்டும்.அதுதானே இத்தகைய ஆண்களின் எதிர்பார்ப்பு.வக்கிரங்களுக்கு பாதுகாப்பும் இதுவே. நாங்கள் அப்படித்தான் இருப்போம்,விருப்பமிருந்தால் பழகு,இல்லாவிட்டால் வெளியில் யாரிடமும் சொல்லாதே! வெளியில் சொன்னால் கெட்ட பெண்.
பாலியல் தொல்லைகள்,கற்பழிப்புகள் உள்ளிட்ட பெண்கள்,குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.பலரும் அய்ய்ய்யோ நம் மீதே திருப்புவார்களோ,உனக்கு எங்கே போச்சு புத்தி என்பார்களோ, கண்,காது மூக்கு வைத்து பேசுவார்களோ என்று பயந்து புகார் தெரிவிப்பது குறைவாக இருந்த்து.இப்போது விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.திட்டமிட்டு கவிழ்க்கிறார்கள்.இனி வக்கிரங்களுக்கு கஷ்டகாலம்தான்.
16 comments:
மனாழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க பாலியல் குற்றங்களும் அதிகரிக்கவே செய்யும்.//
True..
Even falling in love is due to stress says some studies.
நாங்கள் அப்படித்தான் இருப்போம்,விருப்பமிருந்தால் பழகு,இல்லாவிட்டால் வெளியில் யாரிடமும் சொல்லாதே! வெளியில் சொன்னால் கெட்ட பெண்//
இப்ப் துணிவா வர ஆரம்பிச்சாச்சுட்டடங்க பெண்கள்..
ஹிஹி நீங்க சாருவை குத்தி காட்டலை என்று எனக்கு தெரியும் பாஸ்!!
ஹிஹி நீங்க சாருவை குத்தி காட்டலை என்று எனக்கு தெரியும் பாஸ்!!
நல்ல பதிவு , முடிந்தால் உங்கள் பதிவை இங்கேயும் இணையுங்கள்
www.tamil10.com
நன்றி
சபாஷ் சகோ,
இனிமேல் வக்கிரச் செயல்களில் ஈடுபடுவோர் ஒரு கணம் சிந்திதுத் தான் செயற்படுவார்கள் என்பதற்குச் சான்றாக சமீபத்தைய நிகழ்வுகள் உள்ளன.
இணையத் தளம் மூலமான பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய ஒரு பார்வையினைத் தந்திருக்கிறீங்க.
காலத்திற்கேற்ற காத்திரமான கட்டுரைத் தொகுப்பு சகோ.
@எண்ணங்கள் 13189034291840215795 said...
தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி
@மைந்தன் சிவா said...
ஹிஹி நீங்க சாருவை குத்தி காட்டலை என்று எனக்கு தெரியும் பாஸ்!!
ஹிஹி நன்றி சிவா
@தமிழினி said...
நல்ல பதிவு , முடிந்தால் உங்கள் பதிவை இங்கேயும் இணையுங்கள்
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.டெம்ப்ளேட் மாற்றிய பிறகு என் சோம்பேறித்தனத்தால் விடுபட்டுவிட்டது.இணைத்துவிடுகிறேன்,நன்றி
@நிரூபன் said...
சபாஷ் சகோ,
இனிமேல் வக்கிரச் செயல்களில் ஈடுபடுவோர் ஒரு கணம் சிந்திதுத் தான் செயற்படுவார்கள் என்பதற்குச் சான்றாக சமீபத்தைய நிகழ்வுகள் உள்ளன.
இணையத் தளம் மூலமான பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய ஒரு பார்வையினைத் தந்திருக்கிறீங்க.
காலத்திற்கேற்ற காத்திரமான கட்டுரைத் தொகுப்பு சகோ
நன்றி சகோ
இவைகளிலிருந்து விலகி இருப்பதே புத்திசாலித்தனம். தேவையில்லாமல் சபலத்தை தூண்டும் இவை தவிர்க்கப்பட வேண்டியதே...
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
உண்மையான பதிவு..
உண்மையான வார்த்தைகள்..
நல்ல பதிவு சார்
இது சாருவைப் பற்றியில்லை என நம்புகிறேன்.
கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.
தேவைக்கேற்ற நேர்மையான பதிவு.
Post a Comment