சிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது? அதுவும் இந்தியா போன்ற நாட்டில்! அழகும் அங்கீகாரமும் சிவப்புக்குத்தான் இருக்கிறது.மற்ற திறமையால் சிலர் பெயர் பெற்றிருக்கலாம்.கலர் அப்படியில்லாமல் இருப்பவர்கள் தாழ்வு மனப்பானமையால் பொசுங்கிப் போய்விடுகிறார்கள்.
நானும் கொஞ்சம்(?!) கலர் குறைவுதான்.எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? ஆஹா! அது மட்டும் நடந்து விட்டால்,குறைந்தபட்சம் முகம் மட்டுமாவது சிவப்பாகிவிட்டால்? நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.மீசை அரும்பிக்கொண்டிருக்கிறது.அப்போதுதான் அந்த விளம்பரத்தைப்பார்த்தேன்.
ஆறே வாரங்களில் சிவப்பழகு.மனசுக்குள் மத்தாப்பு.எப்படியாவது வாங்கி விட வேண்டும்.விலையும் அதிகமில்லை.கிராமத்தில் கூட எல்லா கடையிலும் கிடைக்கிறது.அது ஒரு பெரிய விஷயமில்லை.வாங்கிவிட்டேன்.உடனே பயன்படுத்தவில்லை.நாளை காலை முதல்தான் அந்த அதிசயம் நடக்கப்போகிறது.
குளித்துவிட்டு முகத்தை சுத்தமாக துடைத்தேன்.அந்த பொக்கிஷத்தை எடுத்து முதன்முதலாக நெற்றியில் கொஞ்சமாக தடவினேன்.அப்போதே எனக்கு நம்பிக்கை வந்துவிட்ட்து.அப்புறம் முகம் முழுக்க தேய்த்து கண்ணாடியில் பார்த்தபோது சந்தோஷமாக இருந்த்து.இவ்வளவு அழகாகவா இருக்கிறோம் நாம்?
தெருவில் நடந்து போகும்போது என்னையே உற்று பார்ப்பதுபோல ஒரு உணர்வு.சந்தோஷம்,தன்னம்பிக்கை எல்லாம் வந்து விட்ட்து.மாலை வந்து கண்ணாடி பார்த்தால் பழைய முகமாக இருந்த்து.ஒரே நாளில் மாறிப்போகுமா என்ன? நான் எப்போதும் வாழ்க்கையில் நம்பிக்கையை மட்டும் இழந்த்தில்லை.தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன்.
இரண்டு வாரமாகியிருந்த்து.சில நாட்களாகவே முகத்தில் ஏதோ மாற்றம் வந்து கொண்டிருப்பதுபோல உணர்ந்தேன்.அன்று ஞாயிற்றுக்கிழமை.முடி வெட்டுமளவுக்கு வளர்ந்துவிட்ட்து.கடைக்கு போய் முடிவெட்டி ஷேவிங்கும் செய்தாயிற்று! வழக்கத்துக்கு மாறாக எரிச்சல்.சிவப்பாகும்போது அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்.
முகத்தை கண்ணாடியில் உற்று பார்த்தபோது என் முகத்தில் அவ்வளவு சிவப்பு! இவ்வளவு விரைவாக அதுவும் ரத்தச்சிவப்பு! ஆஹா! என் முகம் சிவப்பாகிவிட்ட்து.கை வைத்து பார்த்தபோது பிசுபிசுவென்று ஒட்டியது.உண்மையில் ரத்தம்தான்.கடிக்காரனை முறைத்தேன்.”முகத்தில் சிறுசிறு கொப்புளம் இருந்திருக்கிறது,நான் என்ன செய்ய முடியும்? பார்த்தால் தெரியவில்லை.”
கடையில் இருந்தவர் விளக்கம் கேட்டார்.” ஏதாவது ஒத்துக்கொள்ளாத உணவு சாப்பிட்டீங்களா?” நான் அழகு க்ரீம் பற்றி கூறினேன்.” அது சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது.உங்களுக்கு அப்படித்தான் என்று நினைக்கிறேன்.இனிமேல் பூசாதீர்கள்’’ என்றார்.எனக்கு சப்பென்று ஆகிவிட்ட்து.இனி நான் சிவப்பாக மாற வழியே இல்லையா?
பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன சிவப்பழகு க்ரீம்கள். பெட்டிக்கடைகள் தோறும் கிடைக்கிறது.ஆனால்,அதை பயன்படுத்தி யாராவது கலர் மாறியிருக்கிறார்களா? அப்போதைக்கு கொஞ்சம் மெழுகு பூசினாற்போல தெரியும் வித்தைக்கு இருக்கும் வரவேற்பை என்ன சொல்வது?
எனக்கு ஏற்பட்ட்து போல ஒவ்வாமை மட்டுமன்றி ,தோல் புற்றுநோய்க்கும் கூட வழி வகுக்கும் என்கிறார்கள்.ப்ளீச்சிங்,வேதிப்பொருட்களை உள்ளடக்கியவைதான் பெரும்பான்மையான க்ரீம்களும்.தோலுக்கும் உடலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதே நிஜம்.எந்த தோல்நோய் நிபுணரும் இவற்றை பரிந்துரைப்பதில்லை மஞ்சள்,சந்தனம்,தேன்,ப்ப்பாளி,தயிர் போன்ற இயற்கைப்பொருட்கள் முகத்துக்கு பொலிவு தருபவை.இயற்கைக்கு நிகர் வேறில்லை.
19 comments:
இயற்க்கைக்கு நிகரான அழகு பொருட்கள் இல்லை...
இயற்கைப்பொருட்கள் முகத்துக்கு பொலிவு தருபவை.இயற்கைக்கு நிகர் வேறில்லை//
விழிப்புணர்வூட்டும் அருமையான பகிர்வுக்கு நன்றி.
-
//பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன சிவப்பழகு க்ரீம்கள். பெட்டிக்கடைகள் தோறும் கிடைக்கிறது.ஆனால்,அதை பயன்படுத்தி யாராவது கலர் மாறியிருக்கிறார்களா? //
பவுடர் போடற மாதிரிதான்.
நல்ல விளம்பரத்தால் எதை வேண்டுமானாலும் விற்கமுடியும்.நாம்தான் இயற்கை பொருளை தேர்வு செய்ய வேண்டும்.
@# கவிதை வீதி # சௌந்தர் said...
இயற்க்கைக்கு நிகரான அழகு பொருட்கள் இல்லை...
ஆமாம்.சௌந்தர் நன்றி
@இராஜராஜேஸ்வரி said...
இயற்கைப்பொருட்கள் முகத்துக்கு பொலிவு தருபவை.இயற்கைக்கு நிகர் வேறில்லை//
விழிப்புணர்வூட்டும் அருமையான பகிர்வுக்கு நன்றி.
-
நன்றி ராஜராஜேஸ்வரி
@A.K.RASAN said...
பவுடர் போடற மாதிரிதான்.
ஆனால்,பவுடர் மாதிரி இல்லாமல் உடல்நல பிரச்சினைகளும் இருக்கின்றன.நன்றி
@A.K.RASAN said...
நல்ல விளம்பரத்தால் எதை வேண்டுமானாலும் விற்கமுடியும்.நாம்தான் இயற்கை பொருளை தேர்வு செய்ய வேண்டும்.
உண்மைதான் நண்பரே நன்றி
உங்களிற்கு நிகழ்ந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, விளம்பரங்களின் மூலம் செயற்கை அழகை நாடுவோருக்கான விழிப்புணர்வுப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
நான் அறிந்த வரை, இந்த ஆறே நாளில் சிகப்பாகும் விளம்பரத்தைப் பலர் பலவருடங்களாகவும் பின்பற்றிப் பணத்தினை விரயமாக்குகிறார்கள். ஆனால் பலன் ஏதும் இல்லை...
இயற்கை உணவுகளுக்கும் இயற்கை மருந்துகளுக்கும் இணையாக செயற்கை ஒருபோதும் வர முடியாது ...
உண்மையான மன அமைதியும் நேர்மையும், தைரியமுமே முகத்துக்கு அழகு கூட்டும். இந்த மாதிரி கிரீம் எல்லாம் வேஸ்ட்..
இருந்தாலும் நிறைய பேர் இத யூஸ் பண்ணுராங்க... ஒரு நம்பிக்கைதான்.
அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
ரைட்டு..
அரிசியை பாலிஷ் செய்யாமல் உண்ணுவது தான் உடலுக்கு நல்லது, ஆனால், அது வெண்மையாக இருக்காது, அதற்காக அதை பாலிஷ் செய்து அதிலுள்ள உடலுக்குத் தேவையான சத்துக்கள் எல்லாவற்றையும் நீக்கி, பின்னர் சாதமாக வடிக்கும் போது இன்னமும் வெண்மை வர வேண்டுமென்று சுண்ணாம்பு போட்டு [ஹோட்டல்களில்] வேக வைத்து தின்று, வயிற்றையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம். அதே மாதிரி, வெள்ளைச் சர்க்கரை மாதிரி உடலுக்கு கேடான ஒரு பொருள் வேறெதுவுமே இல்லை. கரும்பு வெல்லத்தில் உள்ள விட்டமின்கள், மினரல்கள் எல்லாம் நீக்கப் பட்டு சரிவிகிதமற்ற ஒன்று தான் சர்க்கரை. உண்மையில் இனிப்பிற்கு வெல்லமே சிறந்தது, எந்த கேடும் விளைவிக்காது. ஆனால், நமக்கு நிறம் முக்கியமாயிற்றே, சர்க்கரையைத் தின்று உடல் உறுப்புகள் அத்தனையையும் நாசப் படுத்துகிறோம். கடைகளில் விற்கப்படும் இனிப்புகள் அத்தனையிலும், கண்களைக் கவரவேண்டும் என்பதற்காகவே நிறைய வண்ணங்களைச் சேர்க்கிறார்கள். அவற்றில் பல கெடுதலானவை. இதே வகையில் வருவது தான் சிவப்புத் தோல் வேண்டுமென்று அலைவது. உண்மையில் தோலின் நிறம் கருப்பு, வெள்ளைத் தோல், கறுப்புத் தோல் என்பது தோலில் உள்ள மெலனின் பற்றாக் குறையால், நிறம் கருமையடையாமல், வெண்மையாகவே இருப்பது, இது ஒரு குறைபாடு. வெள்ளையர்கள், வெய்யிலில் படுத்து தங்களது நிறத்தை டோனிங் செய்து கருமையாக்கப் படாத பாடு படுகிறார்கள், நாம் அதற்க்கு நேர் மாறாக வெண்மையாக முயற்சிக்கிறோம், இக்கரைக்கு அக்கறை பச்சை!!
நிறம் பற்றிய நினைப்பெல்லாம் கடந்தாகி விட்டது:)
தயிர்,தேன் என்ற பதார்த்த பதங்கள் புதியதாக இருந்தாலும் மஞ்சள் தேய்ப்பது தமிழகத்தின் பாரம்பரிய பழக்கம்.பெண்கள் அதனைக் கூட விட்டு விட்டு முகப்பூச்சுக்களுக்கு தாண்டிட்டாங்க.
மஞ்சள்,சந்தனம்,தேன்,ப்ப்பாளி,தயிர் போன்ற இயற்கைப்பொருட்கள் முகத்துக்கு பொலிவு தருபவை.இயற்கைக்கு நிகர் வேறில்லை.
அருமையான தகவல் தந்தீர்கள் பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துக்கள்......
ஆஹா... இந்த மயக்கத்திற்கு நீங்கள் கூட விதிவிலக்காகவில்லையா? இப்போது இங்கே சீனத்தயாரிப்பாக ஒரு கிரீம் விற்கப்படுகின்றது விலை அதிகம்தான், ஆனால் நான் கண்ணாலேயே பலர் சிவப்பானதை பார்த்திருக்கின்றேன். பெண்கள் மட்டும் இன்றி ஆண்களும் அதை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
சவப்பழகு என்று சொல்லியே பெரிய பிஸ்னஸ் செய்யலாம்போலதான் இருக்கு..
அது சரி, மஞ்சள் எல்லாம் சரி, தேன் பூசினால் மீசை நரைத்துவிடாதா என்ன?
@Jana said...
ஆம்.ஜனா நானும் டீனேஜில் அப்படியிருந்தேன்.சீனத்தயாரிப்பை எனக்கு அனுப்ப முடியுமா?தேன் பூசினால் மீசை நரைக்கும் என்று அறிவியல் சொல்லவில்லையே! நன்றி.
கருத்துரையிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
அருமையான பகிர்வு
Post a Comment