Friday, June 24, 2011

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

ரெண்டு நாளா காய்ச்சல் டாக்டர்கிட்ட போனேன் .ஒண்ணுமே கேட்கல! அதான் வேற டாக்டர பார்க்கலாம்னு இருக்கேன்-இது நிறைய இடங்களில் இருக்கிறது.காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன.சொன்னவுடன் இந்த வகைதான் என்று சிகிச்சை அழிப்பது சாத்தியமல்ல .உதாரணமாக டைபாய்டு இருக்கிறதா என்று காய்ச்சல் கண்ட முதல் தினமே பரிசோதனை செய்வதில்லை.ரத்தப்பரிசோதனை முடிவு தவறாக வர வாய்ப்புண்டு .அதனால் இரண்டு ,மூன்று தினம் கழித்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.

                            மருத்துவரிடம் போனவுடன் இரண்டு நாட்களுக்கு மாத்திரை,மருந்துகள் கொடுத்து அனுப்புவார்கள்.சாதாரண மருந்துகளாக இருக்கும்.இரண்டு நாள் கழித்து மீண்டும் போகும்போது தான் அப்படியே இருந்தால் ரத்தப்பரிசோதனைகள் செய்ய அனுப்புவார்கள்.ஆனால் நம்மவர்கள் குறையவேயில்லை என்று இன்னொரு டாக்டரை பார்க்க போய்விடுவார்கள்.

                             காய்ச்சல் என்பது உடலின் சாதாரண வெப்பநிலையை விட அதிகரிக்கும் நிலைதான்.சாதாரணமாக 98 லிருந்து 100  பாரன்ஹீட் வரை இருக்கலாம்.ஃப்ளு ,டைபாய்டு,நிமோனியா,போன்றவற்றில் காய்ச்சல் தொடர்ந்தது இருக்கும்.மலேரியாவில் உடல் நடுக்கத்துடன் விட்டுவிட்டு காய்ச்சல் இருக்கும்.

                             பாக்டீரியா,பூஞ்சை,வைரஸ் போன்ற கிருமிகளால் உடலில் நோய்த்தொற்று ஏற்படும்போது,உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் இயங்க ஆரம்பிக்கும்,கிருமிகளை கொல்வதற்காக ரத்த்த்தில் உள்ள வெள்ளையணுக்கள்  புரத்த்தை உற்பத்தி செய்து போராடவைக்கிறது.அப்போது உடலின் வெப்பநிலை இயல்பான அளவை விட உயரும்.105 பாரன்ஹீட் வரை பரவாயில்லை.சுமார் 108 என்பது உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக இருக்கும்.

                               புற்று நோய்,எய்ட்ஸ் உள்ளிட்ட வியாதிகளுக்கும் அறிகுறி காய்ச்சல்தான்.அதனால் உரிய காரணத்தை கண்டறிய போதுமான பரிசோதனைகள் அவசியம்.அதே சமயம் முன்பு கூறியது போன்று ஆத்திரப்படவும் கூடாது.உடனடியாக நோயை கண்டறிவது அவ்வளவு எளிதல்ல!நமது தவறும் நேர வாய்ப்பிருக்கிறது.

                                 பிரபலமான மருத்துவர்கள் சிலரிடம் கூட்டம் அதிகம் இருக்கும்.ஒவ்வொருவருக்கும் அதிக நேரம் செலவிடுவது கஷ்டம்.நாமும் அறிகுறிகளை முழுமையாக சொல்ல வேண்டும்.காய்ச்சல் என்று ஒற்றை வார்த்தை மட்டும் சொல்லாமல் உடன் இருக்கும்,பசியினமை,இருமல் இப்படி ஏதாவது இருந்தாலும் விடாமல் கூறவேண்டும்.இது நோயை முழுமையாக கணிக்க உதவும்.

                                 காச நோய் போன்ற நோய்களில் மாலையில் காய்ச்சல் இருக்கும்.சில வைரஸ் தொற்றுக்களில் தொடர்ந்து நாட்கணக்கில் இருப்பதுண்டு.முழுமையான ஓய்வும்,எளிதில் செரிக்கும் மிதமான உணவுகளும் தேவை.எந்த நோயானாலும் ஒரே மாத்திரையில் குணமாகிவிடவேண்டும் என்ற மனப்போக்கு அதிகம் இருக்கிறது.இது நல்லதல்ல.

                                 அதேபோல பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக உட்கொள்ளவேண்டும்.சில தொற்றுக்களுக்கு இவ்வளவு மாத்திரைகள் எடுக்கவேண்டும் என்று இருக்கிறது.நாம் கொஞ்சம் தணிந்தவுடன் மாத்திரையை தூக்கிபோட்டு விடுவோம்.கிருமிகள் முழுமையாக அழிந்திருக்காது.சரியாகிவிட்ட்து என்ற எண்ணம் வந்து விட்டாலும் வாங்கி வந்த மருந்தை முழுமையாக சாப்பிட வேண்டும்.
-

18 comments:

A.K.RASAN said...

நானும் இதுவரை முழுசாக எழுதும் மருந்து எல்லாம் சாப்பிட்டதில்லை.நல்ல பகிர்வு.

சாகம்பரி said...

நல்ல பதிவு. பொதுவாகவே மருந்து சாப்பிட்டபின் கொஞ்சம் கவனம் தேவை. சில காய்ச்சல் மருந்துகள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. பக்க விளைவுகள் வரலாம். மருத்துவரிடம் உடனேயே செல்ல வெண்டும்.

shanmugavel said...

@A.K.RASAN said...

நானும் இதுவரை முழுசாக எழுதும் மருந்து எல்லாம் சாப்பிட்டதில்லை.நல்ல பகிர்வு.

நன்றி நண்பரே !

Unknown said...

தேவையான தகவல்..நானும் முழுதாக மருந்து சாப்பிட்டதில்லை

shanmugavel said...

சாகம்பரி said...

நல்ல பதிவு. பொதுவாகவே மருந்து சாப்பிட்டபின் கொஞ்சம் கவனம் தேவை. சில காய்ச்சல் மருந்துகள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. பக்க விளைவுகள் வரலாம். மருத்துவரிடம் உடனேயே செல்ல வெண்டும்.

உண்மையே சகோதரி நன்றி

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

தேவையான தகவல்..நானும் முழுதாக மருந்து சாப்பிட்டதில்லை

நன்றி சிவா

அம்பாளடியாள் said...

பயனுள்ள நல்ல தகவல்.நானும் ஒருபோதும் மருந்தை முழுமையாகக் குடித்து முடித்தது கிடையாது. தகவலுக்கு மிக்க நன்றி...

நிரூபன் said...

விழிப்புணர்வோடு கூடிய அருமையான பதிவினைத் தந்திருக்கிறீங்க.
இது வரை நாளும் காய்ச்சல் வந்ததும், பனடோலைப் போட்டு விட்டு, வேலைக்குச் சென்று விடுவேன்,
இப்போது உங்கள் பதிவினைப் படித்த பின்னர் தான் புரிகிறது,
மருத்துவப் பரிசோதனையுன் முக்கியத்துவம்,
காய்ச்சல் தொடர்பாக கவலையீனமாக இருப்பதால் ஏற்படும் விளைவுகளும்...

ப.கந்தசாமி said...

நல்ல அறிவுரை.

shanmugavel said...

@அம்பாளடியாள் said...

பயனுள்ள நல்ல தகவல்.நானும் ஒருபோதும் மருந்தை முழுமையாகக் குடித்து முடித்தது கிடையாது. தகவலுக்கு மிக்க நன்றி...

தங்களுக்கும் நன்றி

shanmugavel said...

@DrPKandaswamyPhD said...

நல்ல அறிவுரை.

நன்றி சார்

shanmugavel said...

@நிரூபன் said...

விழிப்புணர்வோடு கூடிய அருமையான பதிவினைத் தந்திருக்கிறீங்க.
இது வரை நாளும் காய்ச்சல் வந்ததும், பனடோலைப் போட்டு விட்டு, வேலைக்குச் சென்று விடுவேன்,
இப்போது உங்கள் பதிவினைப் படித்த பின்னர் தான் புரிகிறது,
மருத்துவப் பரிசோதனையுன் முக்கியத்துவம்,
காய்ச்சல் தொடர்பாக கவலையீனமாக இருப்பதால் ஏற்படும் விளைவுகளும்...

நன்றி நிரூபன்.

Anonymous said...

விழிப்புணர்வு பதிவு நிருபன் எனக்கும் பயன்படும்..மூனு வேளை சாப்பிட்டும் காய்ச்சல் குறையலையே என தவிக்கிற ரகம் நான்.. நன்றிங்க..

curesure Mohamad said...

காய்ச்சல் வந்தால் முதலில் பட்டினி கிடக்கணும்..
இதை தான் லங்கணம் பரம ஔசதம் என்பார்கள் ..
காய்ச்சல் என்ற லேபில் எனது தளத்தில் நிறைய தெரிந்து கொள்ளலாம் ..
உங்கள் தளம் நன்றாக உள்ளது

சத்ரியன் said...

மருந்துகளை முழுமையாக எடுப்பதில் எல்லோரும் தவறு செய்கிறோம் என்பது என் கருத்து. இந்த பதிவின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு.

நன்றிங்க சண்முகவேல்.

shanmugavel said...

@தமிழரசி said...

விழிப்புணர்வு பதிவு நிருபன் எனக்கும் பயன்படும்..மூனு வேளை சாப்பிட்டும் காய்ச்சல் குறையலையே என தவிக்கிற ரகம் நான்.. நன்றிங்க..

உங்களுக்கும் நன்றி

shanmugavel said...

@curesure4u said...

காய்ச்சல் வந்தால் முதலில் பட்டினி கிடக்கணும்..
இதை தான் லங்கணம் பரம ஔசதம் என்பார்கள் ..
காய்ச்சல் என்ற லேபில் எனது தளத்தில் நிறைய தெரிந்து கொள்ளலாம் ..
உங்கள் தளம் நன்றாக உள்ளது

தங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்.

shanmugavel said...

@சத்ரியன் said...

மருந்துகளை முழுமையாக எடுப்பதில் எல்லோரும் தவறு செய்கிறோம் என்பது என் கருத்து. இந்த பதிவின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு.

நன்றிங்க சண்முகவேல்.

நன்றி சத்ரியன்.