நமக்கு பழக்கமில்லாத எதையாவது
செய்யவேண்டிய நிலை வந்தால் பலருக்கு படபடக்கும்.சில நேரங்களில் நான்கு பேர்
முன்னால் பேசுவது கூட நெஞ்சு அடித்துக்கொள்ளும்.நேர்முகத்தேர்வுக்கு செல்வது
போன்றவற்றைக்கூட உதாரணமாக சொல்ல்லாம்.மனதில் இறுக்கம் ஏற்பட்டு உடலிலும் விளைவுகள்
தெரியும்.சிலருக்கு கை நடுங்கும்.மனசு போராடும்.குறிப்பிட்ட நேரத்தில் சில
சரியாகப்போய்விடும்.ஒரு கூட்ட்த்தில் பேச வேண்டும் என்றால் அறைகுறையாக பேசிவிட்ட
கொஞ்ச நேரத்தில் பிரச்சினை தீர்ந்துவிடும்.
தொடர்ந்து சில
காலங்கள் மனமும் உடலும் பாதிக்கப்படும் சூழ்நிலைகளும் உண்டு.சில விஷயத்தை மீண்டும்
மீண்டும் செய்ய பழகிவிடும்.நம்மை மிரட்டும் விஷயத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டால்
மனம் அமைதியாகிவிடும்.கிராமத்தில் படித்த பலருக்கு ஆங்கிலம் பேசுவது ஒரு பெரிய
பிரச்சினை.அது ஒரு பெரிய அறிவாளியை காட்டுவது போல நினைத்துக் கொள்பவர்கள் உண்டு.
இன்றும் அரசாங்க
கடிதங்கள் பலவும் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.சிலர் நிறுவனத்தில் சேர்ந்து
படிப்பார்கள்.வீட்டில் புத்தகம் வாங்கி படிப்பார்கள்.ஆனால் எப்போதும் பேசவே
மாட்டார்கள்.ஆனால் வேறுவழியே இல்லை.ஒருவருடன் உரையாட வேண்டும்,அவருக்கு ஆங்கிலம்
மட்டும்தான் தெரியும்.இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தானாக வார்த்தைகள் வந்து
விழும்.பெரும்பாலும் சரியாகவும் இருக்கும்.அந்த மொழியிலேயே சிந்திப்பது எளிதாக
இருக்கும்.
இம்மாதிரி
சூழ்நிலைகளில் மனதில் ஏற்படும் இறுக்கமான நிலைதான் பிரச்சினை.சரியாக செய்யத்
தெரிந்தாலும் முடியாமல் போய்விடுகிறது.தவறாக போய்விட்டால் நாலுபேர் என்ன
நினைப்பார்கள் என்ற எண்ணத்திலேயே ஒட்டு மொத்தமாக வாய்ப்புகளை தவற விடுபவர்கள்
அதிகம்.சமாளிக்கும் திறன் மனதுக்கே இருந்தாலும் சிலரால் முடியாமல்
போய்விடுகிறது.தன்னம்பிக்கை குறைவும் ஒரு காரணம்.
எப்போதும்
எல்லோராலும் உயர்வாகவே கருதப்படவேண்டும்.அத்தனை பேரும் தன்னை பெருமையாக
நினைக்கவேண்டும் என்பதுதான் நிஜ பிரச்சினை.அதிகம் அடிபடாதவர்களுக்கு மனதில்
இறுக்கம் அதிகமாகும்.வெளியே தலைகாட்டாமல் உள்ளே இழுத்துக்கொள்ளவே
விரும்புவார்கள்.ஆனால் ஆசையும் இருக்கும்.ஆங்கிலம் பேசும் ஆசை இருக்கிறது.ஆனால்
முடியவில்லை.
தேவை
தன்னம்பிக்கைதான்.அது மட்டுமில்லாமல் நல்ல எண்ணங்களும்கூட! பொறாமை,வெறுப்பு,பழி
வாங்கும் எண்ணம் போன்றவை மனதில் இருந்தால் மனம் இயல்பாகவே
பாழ்பட்டுவிடுகிறது.இவர்களுக்கு எப்போதும் இறுக்கம் அதிகமாகவே
இருக்கும்.உளவியலாளர்கள் பலரும் இதை உறுதி செய்கிறார்கள்.நல்ல எண்ணங்களுடன்
இருக்கும்போது நமக்கே நம் மீது மதிப்பும் இருக்கும்.
சுய மதிப்பு
இருக்கும்போது நாம் செயல்களை செய்ய தயங்குவதில்லை.தயக்கத்தை விட்டுவிட்டாலே நமக்கு
வெற்றி எளிது.ஆங்கிலம் என்ன எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம்.பேசலாம்.அறிவு
பெறலாம்.வாழ்க்கையின் வெற்றிகளுக்கும் இவை முக்கியமானவை.தயக்கமும்,கலக்கமும்தான்
நம்மை தோற்கடிக்கின்றன.
33 comments:
அருமையான பகிர்வு... திக்கு வாய் தோழர்களும் அப்படி தான்... என் நண்பன் senthil nathan சரியான திக்கு வாய்... ஆனால் இன்று ஒரு மருந்து விற்பனை துறையில் மேலாளர்.. அதாவது மருத்துவரிடம் ஓயாமல் பேசும் திறமை கொண்டவர்... தன்னம்பிக்கை கொண்டார், திக்கு வாயை வென்றார்...
உண்மை தான் சகோ!முடிந்தால் முடியாதது எதுவுமில்லை!
To improve Public speaking in English, try joining in Toastmasters Club. My blog post on this :-
http://simulationpadaippugal.blogspot.com/2010/06/blog-post_14.html
ஒன்னு சொல்லட்டுமா மாம்ஸ்...
நாம இங்க்லீஷ் பெசனுமுனா அத கேட்க ஒருத்தனாச்சம் வேணும்,
என் கூட இருக்கிறதெல்லாம் டுபாகூருங்க..
தப்பி தவறி ஏதாவது இங்க்லீஷ்-ல பேசுனா, ஏன்டா கெட்ட வார்த்தைல திட்டுரனு கேட்குரானுங்க,,,,
தனியா பேசி கத்துக்கலாம்னு பேசி பாத்தாலும், கம்ப்யுட்டர நிறைய நேரம் பக்காதேனு சொன்னேன் கேட்க மாட்டேன்னு சொன்னான் இப்ப பைத்தியம் புடிச்சு போய் தனியா பேசுறான்னு எங்கம்மா சொல்லும் இதெல்லாம் தேவையா......
நான் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சொல்லுவார் , " நீ பேசும்போது முன்னால் இருப்பது எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துகொள் " என்று . தன்னபிக்கையை வளர்க்க இப்படி ஒரு வழியா என்று நான் நினைத்த நாட்கள் உண்டு
தெலுங்கோ, கன்னடமோ நமக்குத் தெரியவில்லை என்றால் அதற்க்கு தாழ்வு மனப்பான்மை உண்டாவதில்லை, அம்மொழிகளைப் பேசுபவர்களையும் அறிவாளிகளாகப் பார்ப்பதில்லை. ஆனால் ஆங்கிலத்தின் விஷயத்தில் மட்டும் ஏன் இவை நடக்கின்றன? ஆங்கிலமும் ஒரு மொழிதான் என்ற எண்ணம் நமக்கு ஏன் வரமறுக்கிறது? அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ பிறந்திருந்தால் மாடு மேய்ப்பவன் கூட இந்தியாவில் பிறந்த எந்த ஒருத்தரையும் விட சிறப்பான ஆங்கிலம் பேச முடியுமே! மொழி என்பது நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பேச அதை நாம் கேட்டு, பின்னர் நாமும் பேச முயற்சிக்கும் போது வருவது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் இது குழந்தைகளாக இருக்கும் போதே நடந்து விடுகிறது. அங்கு குழந்தைகள் ஆனா, ஆவன்னா [I mean, A, B, C....!!] எழுதும் முன்னரே சரளமாக ஆங்கிலம் பேசுகின்றன. நாம் இங்கு தலை கீழாய் நின்று ஆங்கிலம் கற்றாலும் திரு.சண்முகம் சொன்ன மாதிரி யாருகிட்ட போய் பேசுறது?
தன்னம்பிக்கை தான் பல இடங்களில் சறுக்கிவிடுகிறது.....
எதையும் முதலில் பிரமிப்பாக பார்ப்பதை முதலில் தவிற்க்கனும்...
நம்மாலும் முடியும் என்று முழுமையாக நம்பணும்...
பகிர்வுக்கு நன்றி... நண்பரே...
தப்பாயிடுமோ தப்பாயிடுமோன்னு தப்பு தப்பா யோசிச்சே மொத்த வாழ்க்கையும் தப்பாயிடுது! நல்ல பதிவு.
//பொறாமை,வெறுப்பு,பழி வாங்கும் எண்ணம் போன்றவை மனதில் இருந்தால் மனம் இயல்பாகவே பாழ்பட்டுவிடுகிறது.இவர்களுக்கு எப்போதும் இறுக்கம் அதிகமாகவே இருக்கும்.//
அருமை.
@suryajeeva said...
அருமையான பகிர்வு... திக்கு வாய் தோழர்களும் அப்படி தான்... என் நண்பன் senthil nathan சரியான திக்கு வாய்... ஆனால் இன்று ஒரு மருந்து விற்பனை துறையில் மேலாளர்.. அதாவது மருத்துவரிடம் ஓயாமல் பேசும் திறமை கொண்டவர்... தன்னம்பிக்கை கொண்டார், திக்கு வாயை வென்றார்...
நன்றி ஜீவா சார்,முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு தங்கள் நண்பர் நல்ல உதாரணம்.
@மைந்தன் சிவா said...
உண்மை தான் சகோ!முடிந்தால் முடியாதது எதுவுமில்லை!
ஆம் சிவா,நன்றி
@Simulation said...
To improve Public speaking in English, try joining in Toastmasters Club. My blog post on this :-
படித்தேன்.நல்ல பதிவு.நன்றி
@சண்முகம் said...
ஒன்னு சொல்லட்டுமா மாம்ஸ்...
நாம இங்க்லீஷ் பெசனுமுனா அத கேட்க ஒருத்தனாச்சம் வேணும்,
என் கூட இருக்கிறதெல்லாம் டுபாகூருங்க..
கஷ்டம்தான் சூழ்நிலைகள் முக்கியம்.நண்பர்கள் கூட்டு ஆர்வம் இருக்கவேண்டும்.நன்றி
அருமையான படைப்பு நண்பரே,
தயக்கத்தை விட்டொழித்தாலே
பழமொழி பயிலலாம் என்ற கருத்து
மிகச் சரியான உண்மை.
முதலில் சில பல தவறுகள் வந்தாலும்
தயக்கமின்றி பேசினால்
தீட்டதீட்ட கூராகும் கத்தியைப் போல
நாக்கு பிறழ ஆரம்பிக்கும்.
@உங்கள் நண்பன் said...
நான் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சொல்லுவார் , " நீ பேசும்போது முன்னால் இருப்பது எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துகொள் " என்று . தன்னபிக்கையை வளர்க்க இப்படி ஒரு வழியா என்று நான் நினைத்த நாட்கள் உண்டு
இது நல்ல வழிதான்.பல நேரங்களில் உண்மையாகவும் இருக்கும்.நன்றி
@Jayadev Das said...
தெலுங்கோ, கன்னடமோ நமக்குத் தெரியவில்லை என்றால் அதற்க்கு தாழ்வு மனப்பான்மை உண்டாவதில்லை, அம்மொழிகளைப் பேசுபவர்களையும் அறிவாளிகளாகப் பார்ப்பதில்லை. ஆனால் ஆங்கிலத்தின் விஷயத்தில் மட்டும் ஏன் இவை நடக்கின்றன? ஆங்கிலமும் ஒரு மொழிதான்
உண்மைதான்.ஆங்கிலம் உலகமொழி என்பதும்,நமது அண்டை மாநிலத்தாருடன் தொடர்பு கொள்ள ஆங்கிலமே வழி!ஆங்கிலம் பேச சூழ்நிலைகளும் வேண்டும்.நன்றி
@கந்தசாமி. said...
தன்னம்பிக்கை தான் பல இடங்களில் சறுக்கிவிடுகிறது.....
உண்மைதான்,நன்றி
@ராஜா MVS said...
எதையும் முதலில் பிரமிப்பாக பார்ப்பதை முதலில் தவிற்க்கனும்...
நம்மாலும் முடியும் என்று முழுமையாக நம்பணும்...
பகிர்வுக்கு நன்றி... நண்பரே...
உண்மைதான் அய்யா நன்றி
@RAVICHANDRAN said...
தப்பாயிடுமோ தப்பாயிடுமோன்னு தப்பு தப்பா யோசிச்சே மொத்த வாழ்க்கையும் தப்பாயிடுது! நல்ல பதிவு.
ஹாஹா இது நல்லாருக்கே! நன்றி
@RAVICHANDRAN said...
//பொறாமை,வெறுப்பு,பழி வாங்கும் எண்ணம் போன்றவை மனதில் இருந்தால் மனம் இயல்பாகவே பாழ்பட்டுவிடுகிறது.இவர்களுக்கு எப்போதும் இறுக்கம் அதிகமாகவே இருக்கும்.//
அருமை.
நன்றி அய்யா!
@மகேந்திரன் said...
அருமையான படைப்பு நண்பரே,
தயக்கத்தை விட்டொழித்தாலே
பழமொழி பயிலலாம் என்ற கருத்து
மிகச் சரியான உண்மை.
முதலில் சில பல தவறுகள் வந்தாலும்
தயக்கமின்றி பேசினால்
தீட்டதீட்ட கூராகும் கத்தியைப் போல
நாக்கு பிறழ ஆரம்பிக்கும்.
உண்மைதான் நண்பரே,நன்றி
நம் நாக்கு ஆங்கிலத்திற்கு பழகாததும் காரணம். திடீரென்று பேச ஆரம்பிக்கும்போது ஸ்,ஷ் எல்லாம் மாறி கேட்பதை நாமே உணர முடியும். ஆங்கில நாவல்களில் வரும் வசனங்களை உரக்க படிப்பதும், இந்திய தொலைக்காட்சிகளின் ஆங்கில செய்திகளை கேட்பதும் பழகுவதற்கு எளிதாக இருக்கும்.
நல்லதொரு அலசல். தயக்கங்களை உதற வேண்டுமே முதலில்....நான் கூட தயக்க வாதிதான். கண்கள் கூட கலங்கி விடும்! இதெல்லாம் முன்னாடியே பழகியிருக்கணும் என்று நினைத்துக் கொள்வேன்
எந்தப் புது மொழியுமே பேசப்பேசத்தான் சரளமாக வரும்.பயந்துகொண்டு பேசத்தயங்கினால்,அம்மொழியில் எவ்வளவு படித்தாலும் இயல்பாகப் பேச முடியாது.
நல்ல பகிர்வு.
எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் உங்கள் பதிவு. நன்றி நண்பா.
தன்னம்பிக்கையே தாரக மந்திரம் அல்லவா?
பயனுள்ள பகிர்வை படைத்தமைக்கு மிக்க நன்றி பாராட்டுதல்கள்..!!
நல்ல பதிவு தோழரே...
correct
இதுவும் ஒரு காரணம்!
நல்ல ஆலோசனைகள் ..
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதனை உதாரண விளக்கங்களோடு அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.
Post a Comment