அந்த ஹோட்டலில் சாப்பிடப்போவது
வழக்கம்.ஒரு சப்பாத்தி,அளவு சாதம்,கூட்டு,பொரியல் என்று நன்றாகவே இருக்கும்.வெகு
நாட்கள் கழித்து அங்கே மீண்டும் போனபோது சாதம் அன்லிமிடெட் ஆக
மாற்றிவிட்டிருந்தார்கள்.பக்கத்தில் அன்லிமிடெட் ஹோட்டல் இருப்பாதால் இங்கே மதிய
சாப்பாடு அவ்வளவாக போகவில்லை சார் என்றார்கள்.
இப்படிப்பட்ட
நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன்.’’பணம்
தரலையா சார்?’’ வயிறு
நிறைய சாப்பிடலாமே! எவ்வளவுதான் சாப்பிட முடியும்? இலவசமாக,அதிகமாக கிடைத்தால்
விட்டுவிடாத மனோபாவம் என்றுதான் தோன்றுகிறது.இத்தனைக்கும் அதிகம் உழைக்கும்
ஆசாமிகள் இல்லை.உடல் உழைப்பில்லாதவர்கள்தான்.
”இப்போ
இருபது முப்பது வருஷமாகத்தான் சார் அரிசிசாப்பாடெல்லாம்! அதனால்தான் ஜன்ங்க
ஹாஸ்பிடல்லயும்,மாத்திரை கடையிலையும் அலையிறாங்க! என்றார் ஒரு பெரியவர்.சத்தியமான
வார்த்தைதான்.கிராமத்து விவசாயிகளுக்கு நெல் விளையும் சில இடங்கள் தவிர
சோளம்,கம்பு,கேழ்வரகு,சாமை போன்றவையே முக்கிய உணவு.
அரிசி
உணவுகளில்,குறிப்பாக சாதம் சாப்பிடும்போது அதிகம் சாப்பிடுகிறோம் என்பதுதான் நமது
பிரச்சினை.அதனுடன் பொரியல் போன்ற உப பொருட்கள் அதிகம் இருப்பதால் சாதம் கொஞ்சம்,கூட்டு,அப்பளம்
என்று உண்ண ஆரம்பிக்கும்போது ஒரு கட்டு கட்டி விடுகிறார்கள்.தென்னிந்தியாவில் உடல்
உழைப்பில்லாதவர்கள் சாப்பிடும் மதிய உணவு மிக அதிகம்.
மருத்துவர்கள்
சர்க்கரை நோயாளிகளை சோற்றுக்கு பதிலாக சப்பாத்தி சாப்பிடுமாறு
கூறுகிறார்கள்.சப்பாத்தி நீரிழிவு நோய்க்கு உகந்த உணவு என்பதற்காக அல்ல! சப்பாத்தி
சாப்பிடும்போது மிக குறைவான அளவு சாப்பிடுவீர்கள் என்பதால்தான்.கூட பாயாசம்,தயிர்
ஸ்வீட் என்று சேர்மான்ங்களும் இருக்காது.
அரிசி
உணவுகள் கார்போஹைட்ரேட் நிறைந்தவை.அவை சக்தி தரும்.உடலால்
உழைப்பவர்கள்,கூலித்தொழிலாளிகள் சாப்பிடும்போது கலோரிகள் எரிக்கப்பட்டு
விடுகின்றன.மற்றவர்களுக்கு அப்படியல்ல! இந்த உணவுகள் தொப்பைக்கு
மட்டுமல்ல,இந்தியாவை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நீரிழிவு நோய்க்கும் அடிப்படையாக
இருக்கிறது.
வட
இந்தியாவை ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகரித்து
வருகிறார்கள்.அரிசி நுகர்வு தென்னிந்தியாவில் அதிகம் இருப்பதும் காரணம்.தவிர விவசாய
தொழில்நுட்ப கருவிகள் வந்த பின் கிராமங்களிலும் உடல் உழைப்பு குறைந்து
விட்ட்து.அதிகமான கலோரிகள் உடலில் சேமிக்கப்படுவதே தொப்பை போன்றவற்றுக்கு முக்கிய
காரணம்.
ஃபுல்
மீல்ஸ்,அன்லிமிடெட் மீல்ஸ் என்பதை விடுத்து எளிமையான மதிய உணவுகளை உண்பதும்,(லெமன்
சாதம்,சாம்பார் சாதம் எனும்போது குறவான நுகர்வு இருக்கும்.)ஜன்க் ஃபுட் எனப்படும்
குப்பை உணவுகளையும் தவிர்ப்பதும் அவசியமானவை.நம்மை மாற்றிக்கொள்ள முடிந்தால்
மாத்திரைக்கடைகளுக்கும்,மருத்துவமனைகளுக்கும் அலைவது குறையும்.
48 comments:
நீங்கள் சொல்கிற மாதிரி வெரைட்டி ரைஸ் சாப்பிட்டால் குறைவாகவே சாப்பிடுவார்கள்.
நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
சாப்பாடு அன்லிமிட்-ன்னு சொல்லும் போது ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கோணும் . அதில காஸ்டிக் சோடா அதிகம் இருக்கும் . சாப்பாடும் ரொம்பவும் வெள்ளையா இருக்கும் . எல்லோராலும் நிறைய சாப்பிட முடியாது .
பயனுள்ள அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
nalla pakirvu
அப்படியானால் அரிசியை குறைக்கவேண்டுமா
@RAVICHANDRAN said...
நீங்கள் சொல்கிற மாதிரி வெரைட்டி ரைஸ் சாப்பிட்டால் குறைவாகவே சாப்பிடுவார்கள்.
அதேதான் சார்,நன்றி
@ஜெய்லானி said...
சாப்பாடு அன்லிமிட்-ன்னு சொல்லும் போது ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கோணும் . அதில காஸ்டிக் சோடா அதிகம் இருக்கும் . சாப்பாடும் ரொம்பவும் வெள்ளையா இருக்கும் . எல்லோராலும் நிறைய சாப்பிட முடியாது .
இதுவும் நிறைய இடங்களில் உண்டு.நன்றி சார்
@இராஜராஜேஸ்வரி said...
பயனுள்ள அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
தங்கள் பாராட்டுக்கு நன்றி
@வைரை சதிஷ் said...
nalla pakirvu
நன்றி நண்பா!
@மதுரன் said...
அப்படியானால் அரிசியை குறைக்கவேண்டுமா
ஆமாம்,அய்யா! அவசியம்.நன்றி
யாருடைய கமெண்டோ சரியாக சேவ் ஆகவில்லை.டாஷ்போர்டில் ஒன்று அதிகமாகக் காட்டுகிறது.
பொதுவாகவே அரிசி உணவுகள் எல்லாம் அதிகப்படியான கார்போஹைட்ரேட்ஸ் உள்ளதால் தொப்பை வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
தேவையானதை அளவாக நேரத்துக்கு சாப்பிட்டு வந்தாலே உடல்நலத்தை நன்கு பேணலாம்.
பதிவு நல்ல உபயோகமா இருக்கு நண்பரே.
பகிர்வுக்கு நன்றி.
உபயோகமான பதிவு நன்றி
அரிசி உணவுகள் இன்று நம் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கம் விளைவித்து வருவது உண்மையே. அதுபோல மைதாவும் பிரச்சனை உருவாக்க கூடியது...
வணக்கம் பாஸ்,
நலமா?
விவாத மேடையில் ரணகளமாகி இன்று தான் மீண்டேன்.
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.
ஆரோக்கிய வாழ்விற்குத் தீங்கு விளைவிக்கும் காபோஹைதரேட் அதிகமுள்ள அரிசி உணவுகள் பற்றியும், ஜங் பூட்டை அதிகம் உண்பதால் ஏற்படும் விளையுகளையும் அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.
உண்மைதான் நல்ல பகிர்வு.
ஒருநாளைக்கு ஒருவேளை மட்டும் அரிசியை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது...அதற்காக மற்ற வேளைகளில்...இட்லி, தோசை, பொங்கல், போன்றவை அதிகமாக எடுப்பதும் தவறு...அவையும் அரிசியை சேர்ந்த உணவுகளே....கேழ்வரகு, கம்பு, சோளம், மற்றும் கோதுமை உணவுகளை மற்ற வேளைகளில் எடுப்பது மிகவும் நல்லது...எதுவாயினும்....உடற்பயிற்சியுடன் சேர்ந்த உணவே உத்தமம்...ஓட்ஸ் என்பதும் கூட அவ்வளவு நல்லதல்ல....
அவசியமான பதிவு...அனைவரும் பின்பற்றுவோம்....
@மகேந்திரன் said...
பொதுவாகவே அரிசி உணவுகள் எல்லாம் அதிகப்படியான கார்போஹைட்ரேட்ஸ் உள்ளதால் தொப்பை வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
தேவையானதை அளவாக நேரத்துக்கு சாப்பிட்டு வந்தாலே உடல்நலத்தை நன்கு பேணலாம்.
பதிவு நல்ல உபயோகமா இருக்கு நண்பரே.
பகிர்வுக்கு நன்றி.
உண்மையே நண்பரே! நன்றி
@ஷைலஜா said...
உபயோகமான பதிவு நன்றி
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
அரிசி உணவுகள் இன்று நம் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கம் விளைவித்து வருவது உண்மையே. அதுபோல மைதாவும் பிரச்சனை உருவாக்க கூடியது...
உண்மைதான் சார்,மைதா நீரிழிவைத் தூண்டக்கூடியது.நன்றி
@நிரூபன் said...
வணக்கம் பாஸ்,
நலமா?
விவாத மேடையில் ரணகளமாகி இன்று தான் மீண்டேன்.
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.
நன்றி நிரூபன்.
@ஸ்ரீராம். said...
உண்மைதான் நல்ல பகிர்வு.
நன்றி சார்.
@செவிலியன் said...
ஒருநாளைக்கு ஒருவேளை மட்டும் அரிசியை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது...அதற்காக மற்ற வேளைகளில்...இட்லி, தோசை, பொங்கல், போன்றவை அதிகமாக எடுப்பதும் தவறு...அவையும் அரிசியை சேர்ந்த உணவுகளே....கேழ்வரகு, கம்பு, சோளம், மற்றும் கோதுமை உணவுகளை மற்ற வேளைகளில் எடுப்பது மிகவும் நல்லது...எதுவாயினும்....உடற்பயிற்சியுடன் சேர்ந்த உணவே உத்தமம்...ஓட்ஸ் என்பதும் கூட அவ்வளவு நல்லதல்ல....
அவசியமான பதிவு...அனைவரும் பின்பற்றுவோம்....
ஓட்ஸ் நல்லதுதான் நண்பரே! நன்றி
எந்த உணவானாலும் அளவாக சாப்பிட்டால் பிரச்சினை இல்லை என எண்ணுகிறேன்.
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
வைரமுத்துவின் வரிகள் நினைவு வருகிறது
தட்டில் மிச்சம் வைக்காதே
வயிற்றில் மிச்சம் வை...
நல்ல பகிர்வு
நல்லதை சொல்லியிருக்கீங்க நண்பரே!நன்றி.
உண்மைதான் இருந்தாலும் அரிசியை விடமுடியுது இல்லை தொப்பையையும் குறைக்க முடியவில்லை!
ஸலாம் சகோ.ஷண்முகவேல்,
சரியாக சொன்னீர்கள். உண்மைதான்...!அரிசி, கோதுமை, கம்பு, சோளம், கேழ்விறகு, காய்கறி, பழங்கள், மீன், இறைச்சி, முட்டை, பால்.. என சரிவிகித உணவு உண்ணவேண்டிய நாம்... அரிசியை மட்டும் அதிகமாக உட்கொள்கிறோம். அவசியமான பதிவு சகோ. நன்றி.
அருமையான பதிவுங்க சண்முகம் அண்ணே!
பகிர்வுக்கு நன்றி நண்பரே
http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_03.html
http://valaiyukam.blogspot.com/2011/10/2.html
ஆபத்தான உணவு முறையும் உடல் உழைப்பும்
ஆபத்தான உணவு முறையும் உடல் உழைப்பும்(பாகம்-2)
இவை என்னுடைய பதிவுகள் முடிந்தால் இதையும் பாருங்கள்
நன்றி நண்பரே
@Sankar Gurusamy said...
எந்த உணவானாலும் அளவாக சாப்பிட்டால் பிரச்சினை இல்லை என எண்ணுகிறேன்.
பகிர்வுக்கு நன்றி..
நன்றி சங்கர்
@suryajeeva said...
வைரமுத்துவின் வரிகள் நினைவு வருகிறது
தட்டில் மிச்சம் வைக்காதே
வயிற்றில் மிச்சம் வை...
ஆமாம் சார் .நன்றி
@விக்கியுலகம் said...
நல்ல பகிர்வு
thanks sir
@ஓசூர் ராஜன் said...
நல்லதை சொல்லியிருக்கீங்க நண்பரே!நன்றி.
thanks sir
@தனிமரம் said...
உண்மைதான் இருந்தாலும் அரிசியை விடமுடியுது இல்லை தொப்பையையும் குறைக்க முடியவில்லை!
முழுக்க விடாவிட்டாலும் வெரைட்டி ரைஸ் மாதிரி மாற்றிப்பாருங்கள்.நன்றி.
@~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...
ஸலாம் சகோ.ஷண்முகவேல்,
சரியாக சொன்னீர்கள். உண்மைதான்...!அரிசி, கோதுமை, கம்பு, சோளம், கேழ்விறகு, காய்கறி, பழங்கள், மீன், இறைச்சி, முட்டை, பால்.. என சரிவிகித உணவு உண்ணவேண்டிய நாம்... அரிசியை மட்டும் அதிகமாக உட்கொள்கிறோம். அவசியமான பதிவு சகோ. நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ!
@சத்ரியன் said...
அருமையான பதிவுங்க சண்முகம் அண்ணே!
நன்றி,சத்ரியன்
முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்... நண்பரே...
சர்க்கரை என்பது நோய் அல்ல, அது ஒரு குறைபாடு... நாம் சாப்பிடுகிற உணவிலுள்ள சர்க்கரையை இரத்த்த்தில் சமநிலைப்படுத்தி எதுத்துக்கொள்ளக் கூடிய ஒருவகையான திரவப்பொருள் சிலருக்கு சுரக்கல.., சிலருக்கு போதுமான அளவு சுரக்கல.., ஒருசிலருக்கு சுரக்குது இந்த திரவத்துக்கு எதிர்ப்புசக்தி அதிகமாக இருக்கு அவர்கள் உடம்பில்.., அப்புறம் பலருக்கு பரம்பரை பரம்பரையாகவே அதன் தன்மை பாதிக்கப் பட்டதால ஈடுகொடுக்க முடியல.., நிறையபேர் இது ஒரு நோய் என்றே நினைக்கிறார்கள்.... ஆனால் அது தவறு... சர்க்கரை என்பது ஒரு குறைபாடு
@ஹைதர் அலி said...
பகிர்வுக்கு நன்றி நண்பரே
http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_03.html
http://valaiyukam.blogspot.com/2011/10/2.html
ஆபத்தான உணவு முறையும் உடல் உழைப்பும்
ஆபத்தான உணவு முறையும் உடல் உழைப்பும்(பாகம்-2)
இவை என்னுடைய பதிவுகள் முடிந்தால் இதையும் பாருங்கள்
நன்றி நண்பரே
படித்தேன் நண்பரே! பயனுள்ள முயற்சிக்கு பாராட்டுக்கள்.நானும் உணவை கலோரிகளில் கணக்கிட்டு சாப்பிடுவது எப்படி என்ற பதிவை சில மாதங்களுக்கு முன்பு தந்துள்ளேன்.தங்கள் வருகைக்கும் ,கருத்துரைக்கும் நன்றி
@ராஜா MVS said...
முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்... நண்பரே...
சர்க்கரை என்பது நோய் அல்ல, அது ஒரு குறைபாடு... நாம் சாப்பிடுகிற உணவிலுள்ள சர்க்கரையை இரத்த்த்தில் சமநிலைப்படுத்தி எதுத்துக்கொள்ளக் கூடிய ஒருவகையான திரவப்பொருள் சிலருக்கு சுரக்கல.., சிலருக்கு போதுமான அளவு சுரக்கல.., ஒருசிலருக்கு சுரக்குது இந்த திரவத்துக்கு எதிர்ப்புசக்தி அதிகமாக இருக்கு அவர்கள் உடம்பில்.., அப்புறம் பலருக்கு பரம்பரை பரம்பரையாகவே அதன் தன்மை பாதிக்கப் பட்டதால ஈடுகொடுக்க முடியல.., நிறையபேர் இது ஒரு நோய் என்றே நினைக்கிறார்கள்.... ஆனால் அது தவறு... சர்க்கரை என்பது ஒரு குறைபாடு
ஆமாம் ,இன்சுலின் விஷயம்தான்.வழக்கத்தில் உடல் கோளாறுகள் நோயாகவே கருதப்படுகிறது.உணவுப் பழக்கமும்,வாழ்க்கைமுறையும் நீரிழிவை கொண்டு வரும்.நன்றி
உணவை செறிக்க செறிக்க சாப்பிட்டாலே போதுமானது... ஒரு அடியாக வயிற்றில் கட்டுவதுதான் பிரச்சனையே...
@ராஜா MVS said...
உணவை செறிக்க செறிக்க சாப்பிட்டாலே போதுமானது... ஒரு அடியாக வயிற்றில் கட்டுவதுதான் பிரச்சனையே...
உண்மைதான் நண்பா! நாம் நேரத்துக்கு சாப்பிடுகிறோம்,பசிஎடுத்தபின் அல்ல!வள்ளுவர் அப்போதே சொல்லிவிட்டார்.நன்றி.
இன்றைய இளைஞர்கள் குப்பை உணவைத்தான் விரும்பி உண்கிறார்கள். அவர்கள் எதிர்கால ஆரோகியம்?
தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
உங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..
http://cpedelive.blogspot.com
நல்ல தகவல்கள்.
அரிசி உணவுகள் அவ்வளவு மோசமனவைகளாக அறிய முடிவில்லை.
Hamburger,Bigmac மாதிரி மோசமான தீமையானது அல்லை அரிசி என்றே அறிய முடிகிறது.
//உணவுகளில் குறிப்பாக சாதம் சாப்பிடும்போது அதிகம் சாப்பிடுகிறோம் என்பதுதான் நமது பிரச்சினை.அதனுடன் பொரியல் போன்ற உப பொருட்கள் அதிகம் இருப்பதால் சாதம் கொஞ்சம் கூட்டு அப்பளம் என்று உண்ண ஆரம்பிக்கும்போது ஒரு கட்டு கட்டி விடுகிறார்கள்//
இது உண்மை. தவிடு நீக்கபடாத அரிசி சிறந்த உணவாகவே ஆரோக்கியம் சம்பந்த பட்டவர்களால் பரிந்துரைக்கபடுகிறது.
Post a Comment