Monday, October 17, 2011

உணர்ச்சி நிலையில் எடுக்கப்படும் முடிவுகள்.

                                                             அழகான பெண்ணைப்பார்த்தவுடன் அவனுக்கு பிடித்துப்போய்விட்டது.எதைப்பற்றியும் விசாரிக்கவில்லை.திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்துவிட்டான்.நிச்சயதார்த்தம் முடிந்த பின்னால் அந்த திருமணம் நின்று போனது.சரியாக அவர்கள் குடும்பம் பற்றி தெரியவில்லை.இரண்டு பக்கத்திலும் நஷ்டம்.

                                                                    இரண்டு நண்பர்கள்.கிட்டத்தட்ட உயிர் நண்பர்கள்.ஒரு சண்டையில் வார்த்தை தடித்துவிட்டது.இரண்டு வீட்டிலும் அவர்களுடைய நட்பின் ஆழம் தெரியும்.இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டார்கள்.ஆனால் கொஞ்ச நாள்தான் .நண்பன் விபத்தொன்றில் சிக்கி மருத்துவமனையில் சேர்ந்த செய்தி கேட்டு ,உடனே ஓடிப்போய் கண்ணீருடன் முன்னே நின்றான்.கல்யாணம் செய்து கொள்ளவோ,நண்பனுடன் பேசாமல்  இருக்கவோ எடுத்த முடிவு உணர்ச்சியின் தூண்டுதலால் எடுக்கப்பட்டது.

                                                                       சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல! கோபம்,ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளால் உந்தப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் நிலையானவை அல்ல!கணவன் ,மனைவி,பெற்றோர்கள் போன்றவர்களுடன் ஏற்படும் பிணக்குகள் பெரும்பாலும் நீடித்திருப்பதில்லை.நாட்கள் செல்ல செல்ல  கோபம் போன்ற உணர்ச்சிகள் குறைந்த பின்பு வருந்துவதும் ,ஒன்று சேர்வதும் நடக்கும்.

                                                                    கொஞ்ச நாள் பேசாமலிருந்து பிறகு ஒன்று சேர்ந்து விடும் பல உறவுகளை நீங்கள் பார்த்திருக்க முடியும்.இதெல்லாம் அப்போதிருக்கும் ஆத்திரத்தால் அந்த நிமிடத்தில் முடிவு செய்வதுதான்.பின்னர் நமக்கே ஒரு மாதிரியாக இருக்கும்.எப்போது அவர்களுடன் பேசலாம் என்றும் தோன்றும்.

                                                                       ஆத்திரத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளிலும் அர்த்தமற்ற உளறல்களே இருக்கும்பிறர் சொல்லும்போது இதையெல்லாம் நாம் பேசினோமா என்று தோன்றும்..சிந்தித்து எடுக்கப்படும் முடிவுகள் வேறு வகையானவை.நீடித்திருக்கும் தன்மை அதற்கு உண்டு.

                                                                  கணவன் ,மனைவியாக இருந்தாலும் கூட  நன்மையையும்,தீமையையும் சீர்தூக்கிப் பார்த்து எடுக்கப்படும் முடிவு நிலையானதாக இருக்கும்.முடிவெடுத்தல் ஒரு நல்ல தகுதியும்கூட! நல்லதோ ,கெட்டதோ சிலர் உடனே முடிவு செய்து விடுகிறார்கள்.சிலர் யாரையாவது யோசனை கேட்டுப் போவார்கள்.

சில நேரங்களில் முடிவெடுக்கத் தயங்கினால் வாய்ப்பு பறிபோகும் நிலையம் ஏற்படும்.மனித நேயமும்,சக மனிதன் மீது அக்கறையும் உள்ளவர்கள் எடுக்கும் முடிவு எப்போதும் சரியானதாக இருக்கும்.ஒரு முடிவை மேற்கொள்ளும்போது நான் ஆத்திரத்தில் முடிவெடுக்கிறேனா என்று சிந்திப்பது சரியானது.


-

23 comments:

சென்னை பித்தன் said...

உண்மை.முடிவெடுக்கும்போது ஆற அமர யோசித்து முடிவெடுப்பதே சிறந்தது.

ராஜா MVS said...

உண்மைதான்... நண்பரே...

நாம் முடிவெடுக்கும் பட்சத்தில் நமது நலனில் உண்மையான அக்கரையுள்ளவர்களிடம் கூட ஆலோசனை கேட்ப்பது தவறில்லை...

SURYAJEEVA said...

இதுல உள்குத்து எதுவும் இல்லையே தோழர்

shanmugavel said...

@suryajeeva said...

இதுல உள்குத்து எதுவும் இல்லையே தோழர்

இல்லை அய்யா!decision making பற்றி எப்போதோ எழுதி வைத்தது.தேர்தலில் வேண்டியவர் ஒருவர் வேட்பாளரானதால் புதியதாக எழுதவில்லை.இம்மாதம் அதிகம் எழுத முடியவில்லை.தொடர்ந்து முடிவெடுப்பது எப்படி என்ற இடுகையும் வரும்.நன்றி

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

உண்மை.முடிவெடுக்கும்போது ஆற அமர யோசித்து முடிவெடுப்பதே சிறந்தது.

தங்கள் கருத்துரைக்கு நன்றி அய்யா!

shanmugavel said...

@ராஜா MVS said...

உண்மைதான்... நண்பரே...

நாம் முடிவெடுக்கும் பட்சத்தில் நமது நலனில் உண்மையான அக்கரையுள்ளவர்களிடம் கூட ஆலோசனை கேட்ப்பது தவறில்லை...

ஆமாம்,நண்பா! நன்றி

Unknown said...

உண்மை

நல்ல அருமையான பகிர்வு

shanmugavel said...

@வைரை சதிஷ் said...

உண்மை

நல்ல அருமையான பகிர்வு

தங்கள் கருத்துரைக்கு நன்றி

RAVICHANDRAN said...

அருமையான கருத்துக்கள்.

RAVICHANDRAN said...

எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தனை செய்து முடிவு எடுக்க வேண்டும்.உணர்ச்சிவசப்பட்டு எடுக்கக்கூடாது.நன்றி

மகேந்திரன் said...

சிந்தித்து செயல்படல் நலமே...

shanmugavel said...

@RAVICHANDRAN said...

அருமையான கருத்துக்கள்.

நன்றி அய்யா!

shanmugavel said...

@RAVICHANDRAN said...

எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தனை செய்து முடிவு எடுக்க வேண்டும்.உணர்ச்சிவசப்பட்டு எடுக்கக்கூடாது.நன்றி

உண்மையே அய்யா! நன்றி

shanmugavel said...

@மகேந்திரன் said...

சிந்தித்து செயல்படல் நலமே...

நன்றி மகேந்திரன்.

நிலாமகள் said...

ஒரு முடிவை மேற்கொள்ளும்போது நான் ஆத்திரத்தில் முடிவெடுக்கிறேனா என்று சிந்திப்பது சரியானது.//

ச‌ரியாச் சொன்னீங்க‌!

சத்ரியன் said...

அனைவருக்குமான பதிவு.

Sankar Gurusamy said...

முடிவெடுக்குக்குரதுல இவ்வளவு இருக்கா???

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

ஓசூர் ராஜன் said...

good post

சசிகுமார் said...

நன்றி.....

கூடல் பாலா said...

நல்ல அறிவுரை !

தனிமரம் said...

ஐயா நல்ல அறிவுரை இதில் உள்குத்து இல்லையே?????

சாகம்பரி said...

இது ஈகோதான். நண்பர்கள், மற்ற உறவுகளிடம் ஏதாவது பழைய கதைகளை எடுத்து சொல்லி இணைக்க முடிகிறது, விட்டு கொடுக்கும் பாலிஸி செயல்படுகிறது. இன்றைய கணவன் மனைவிகளின் பிரச்சினை இருக்கிறதே -- பக்கத்தில் நின்று தூபம் போட இருவர் பக்கமும் ஆட்கள் இருக்கின்றனர். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எடுத்த முடிவு தவறு என்று ஒப்புக் கொள்ள ஏதோ தடுக்கிறது.

நிரூபன் said...

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மத்திமம் என்று சொல்லுவார்கள்.
அதே போல நாம் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் தொடர்பில் பரிசீலனை செய்து பார்க்கையில்
ஏண்டா இதனைப் பண்ணினோம் என எம்மை நாமே நொந்து
சில இடங்களில் திருந்திக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன,

நல்லதோர் பதிவு அண்ணா.