Monday, October 24, 2011

தும்மல் வந்தால் ஆயுசு நூறா?

மூக்கில் ஏதேனும் வெளிப்பொருட்கள் உள்ளே நுழைந்தால் தும்மல் வரும்.அலர்ஜி காரணமாகவும்,வைரஸ் போன்ற நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டாலும்,சைனஸ் பிரச்சினையாலும் தும்மல் வரும்.இந்த சமயங்களில் ஹிஸ்டமின் தூண்டப்ப்ட்டு மூளைக்கு தகவல் போய் அச் என்று சத்தம்.அதுவும் ஒவ்வொருவருக்கும் தனி சத்தம் இருப்பது போல் தோன்றுகிறது.அப்புறம் ஏதோ இழந்த்தை திரும்ப பெற்றது போல ஒரு உணர்வு.
                                நான் சிறுவனாக இருந்தபோது வெடித்த பட்டாசுகளைவிட இப்போதைய சிறுவர்கள் வெடிப்பது குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.ஒரு சரத்தை பிரித்து சட்டை பாக்கெட்டில்,டிராயர் பாக்கெட்டில் நிரப்பிக்கொள்வோம்.ஊதுபத்தியை கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு வெடியாக வெடித்து,ஆஹா ஆனந்தம்! என் நண்பனுக்கு சட்டை பாக்கெட் இருந்த வெடிகள் வெடிக்க ஆரம்பித்து காயம் ஆன சம்பவமும் உண்டு.கரும்புகை கிளம்பும்.

                                விஜய்காந்த் பிரச்சாரக் கூட்ட்த்தில் வெடித்த பட்டாசு என்று ஒரு பதிவு தந்திருக்கிறேன்.(இப்போது அந்த இட்த்தில் “ பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதுஎன்று காவல்துறை பேனர் கட்டியிருக்கிறது)அப்போது ஒருவர்(பெண்)நடந்து போய்க்கொண்டிருந்தார்.கையில் குழந்தை.பட்டாசு வெடித்த கரும்புகையில் குழந்தை தும்மியது.அவர் சொன்னது “நூறு ஆயுசு!
                                குழந்தைக்கு ஏற்பட்ட்து புகையால் வந்த தும்மல் என்று பாவம் அவருக்கு புரிந்திருக்காது.குறைந்த பட்சம் குழந்தைகளையாவது புகை பக்கம் எடுத்துப்போகாமல் இருக்கலாம்.சில மத்தாப்புகள் புகை அதிகமாகத் தரும்.குழந்தைகளுக்கு அருகில் சிகரெட் பிடிப்பவர்களை பார்த்தாலும் மனசு வலிக்கிறது.

                                 தும்முவதன் மூலம் நோய்களும் பரவலாம்.சில வைரஸ் தொற்றுகளும்,காசநோயும் இப்படி பரவும்.பொது இடங்களில் தும்முபவர்கள் ஏதாவது கைக்குட்டை பிடித்து தும்மினால் சமுதாயத்துக்கு நல்லது.ஆனால் இதெல்லாம் குழந்தையிலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும்.திடீரென்று ஒரு பழக்கத்தை ஏற்படுத்துவது கஷ்டம்.
                               சிறு வயதில் பள்ளிக்கு போகும்போது ஒரு செடி இருக்கும்.அதன் இலையை கிள்ளி முகர்ந்தால் ஓயாத தும்மல் வரும்.விளையாட்டாக தும்மிக் கொண்டிருப்போம்.யுனானியில் ஒரு பொடி இருக்கிறது.புகையிலை சேர்க்கப்பட்ட்தல்ல! நோயாளிகளுக்கு தருவதை பார்த்திருக்கிறேன்.சோர்வு,தலைவலி எல்லாம் போய்விடும் என்று போட்டிருப்பார்கள்.கொஞ்சம் போட்டுப்பாருங்கள் என்று தம்பி ஒருவன் கொடுத்தான்.நான் வேண்டாமென்று சொல்லிவிட்டேன்.
                                தும்மலை சகுனமாக பார்ப்பது இன்னமும்  இருந்து வருகிறது.பஞ்சாங்கங்கத்திலும் இடம் பெற்றிருக்கிறது.பெண்ணுக்கு ஆண் தும்மினால்,ஆணுக்கு பெண் தும்மினால் நல்லது என்று எங்கள் பகுதியில் சொல்வார்கள்.இன்றைய தலைமுறை இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.தும்மலுக்கான காரணத்தை அறிவியல் ரீதியாக பார்ப்பதுதான் அதிகம்.
                                 தலைப்புக்கு வருவோம்.யாராவது வீட்டில் தும்மினால் ஆயுள் நூறு என்று வீட்டில் சொல்வார்கள்.சிலர் தும்மினால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு ஆயுள் குறையவும் வாய்ப்பு உண்டு.
         இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
-

22 comments:

கோகுல் said...

அச்!அசத்தலான பதிவு!

தீப ஒளி(ஒலி)த்திருநாள் வாழ்த்துக்கள்!

shanmugavel said...

@கோகுல் said...

அச்!அசத்தலான பதிவு!

தீப ஒளி(ஒலி)த்திருநாள் வாழ்த்துக்கள்!

நன்றி கோகுல்.

RAVICHANDRAN said...

நல்ல பதிவு.தீபாவளி வாழ்த்துக்கள்.

shanmugavel said...

@RAVICHANDRAN said...

நல்ல பதிவு.தீபாவளி வாழ்த்துக்கள்.

நன்றி வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணே,
நலமா?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

மகேந்திரன் said...

தும்மல் பற்றிய செய்திகள்
அருமை நண்பரே.

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

தும்மல் பற்றிய அதே நம்பிக்கை எங்கள் ஊரிலும் இருக்கிறது.

நாம் தும்மும் போது பெரியவர்கள் நூறு, நூற்றாண்டு எனச் சொல்லுவார்கள்....


அருமையான பதிவு..

கூடவே மலரும் நினைவுகளை மீட்டியிருப்பது இன்னும் அசத்தல்.

நிரூபன் said...

தும்மல் பதிவினூடே, தீபாவளி நினைவுகளையும் மீட்டியிருக்கிறீங்க

கூடல் பாலா said...

கடைசியில் சொன்னதுதான் உண்மை ! தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

முனைவர் இரா.குணசீலன் said...

.சிலர் தும்மினால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு ஆயுள் குறையவும் வாய்ப்பு உண்டு.

நான்

சற்றும் எதிர்பாராத பார்வை..

பயனுள்ள இடுகை..

Sankar Gurusamy said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

தும்மல் பற்றிய தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

காந்தி பனங்கூர் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

சசிகுமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பதாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

சக்தி கல்வி மையம் said...

Thanks 4 sharing.,

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

SURYAJEEVA said...

வண்டி ஓட்டி கொண்டிருக்கும் பொழுது தும்மல் வந்தால் சில வினாடிகள் நீங்கள் கண்ணை மூடியபடி தான் வண்டி ஓட்ட வேண்டி இருக்கும்... ஆகையால் தும்மல் வரும் என்று தெரிந்தால், வண்டியை ஓரம் கட்டி தும்முங்கள்... அல்லது ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்த்து விட்டு தும்முங்கள்

rajamelaiyur said...

//
.யாராவது வீட்டில் தும்மினால் ஆயுள் நூறு என்று வீட்டில் சொல்வார்கள்.சிலர் தும்மினால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு ஆயுள் குறையவும் வாய்ப்பு உண்டு.
//

100% true

சென்னை பித்தன் said...

அந்த யுனானி பொடியை முன்பு ஒருமுறை வேலூரில் போடுப் பார்த்துப் பின் தும்ம ஆரம்பித்தேன் பாருங்கள்!!
நல்ல பகிர்வு.
தீபாவளி வாழ்த்துகள்.

ராஜா MVS said...

தும்மலின் போது நமது உடலில் இருந்து வெளியேறும் காற்றின் வேகம் 40மைல் என்று எங்கோ படித்த ஞாபகம்... நண்பரே...

பகிர்வுக்கு நன்றி...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பா...

ஓசூர் ராஜன் said...

மலரும் நினைவுகளை நல்லாவே தும்மி இருக்கீங்க,சரி தும்மலைத் தடுப்பது பற்றியும் சொல்லிடுங்க.பலருக்கு நூறு ஆயுள் கிடைக்கட்டும்!

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

shanmugavel said...

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.