மனிதனின் அடிப்படைத் தேவைகளில்
முதன்மையானது உணவு.பேராசையும்,சுயநலமும் அதிகமாகிவிட்ட இன்றைய நிலையில் முறையற்ற
வணிக நடைமுறைகள் அதிகரித்துவிட்ட்து.ஆயுள் தண்டனை வரை சட்டங்கள்
கடுமையாக்கப்பட்டுள்ளன.பத்தாண்டுகளுக்கு முன்பு நுகர்வோர் இயக்கத்தில் அதிக
ஆர்வமாக பங்கெடுத்த காலம்.உணவு பாதுகாப்பு குறித்து பல்வேறு விழ்ப்புணர்வு
நிகழ்ச்சிகளை நட்த்திய அனுபவம் எனக்கு உண்டு.
கலப்படம்,தரமற்ற
உணவுப்பொருட்கள் இன்றைய சமூகத்துக்கு மிகப்பெரிய சவால்.குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை நோய்களுக்கும்,உயிரிழப்புக்கும் காரணமாக
இருக்கின்றன.இவை இதயமற்ற மனித மிருகங்களால் நேரும் தவறுகள்.நோய்கள் என்பது தனிமனித
பிரச்சினை மட்டுமல்ல! நாட்டின் சமூகப்பிரச்சினையும்,பொருளாதர பிரச்சினையும் கூட! ஒருவர்
நோயுற்றால் அவரை கவனித்துக்கொள்பவர்கள் உள்பட இரண்டு வேலை நாட்களை இழக்க
வேண்டியிருக்கிறது.
உணவு பாதுகாப்பு
சட்டப்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இருக்கிறார்கள்.இவ் வலைப்பதிவில் உணவு
குறித்த இடுகைகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன்.ஹோட்டலில் சாப்பிடுவீங்களா? என்ற
பதிவு பெருவெற்றி பெற்ற பதிவு.பெரும்பாலானவர்கள் படித்திருக்கலாம்.படிக்காதவர்கள்
படிக்கவும்.http://counselforany.blogspot.com/2011/05/blog-post_29.htmlஇப்பதிவை படித்துவிட்டு நாகப்பட்டினத்திலிருந்து உணவு பாதுகாப்பு
அலுவலர்திரு.அன்பழகன் மெயில் அனுப்பியிருந்தார்.சரியான தகவல் என்று
பாராட்டியிருந்தார்.இமெயில் மூலம் இவ்வலைப்பதிவின் இடுகைகளை வாசிக்கும் பெருமைமிகு
வாசகர்.
இன்னொரு மெயிலில்
கீழ்கண்ட வரிகள் இருந்தன
DEAR SIR.
ALL YOUR PRESENTATIONS ARE VERY MUCH
USEFUL TO EVERY PERSONS.
SOME OF THEM ARE NOT ACCEPTABLE TO
ME.
BUT YOUR MAILS ARE ALWAYS WELCOMED
BY ME.
THANK YOU VERY MUCH SIR.
-A.T.ANBAZHAGAN,
FOOD SAFETY OFFICER
அறிவியல்
தகவல்களை பொருத்தவரை ஒன்றுக்கு இரண்டுமுறை உறுதி செய்த பிறகே வழங்குகிறேன்.ஆனால்
என்னுடைய சிந்தனைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பது
சாத்தியமல்ல.ஒவ்வொருவருக்கும்,வளர்ந்து வந்த சமூகம்,படித்த புத்தகங்கள்,ஆளுமைகள்
போன்றவை மதிப்பீடுகளை தருகின்றன.இவை மனிதருக்கு மனிதர் வேறுபடலாம்.பெரிய பெரிய
மனிதர்களும்கூட ஒரே கருத்து கொண்டிருப்பதில்லை.இது இயல்பானது.
உணவு
பாதுகாப்பு அலுவலர்களின் பணியின் முக்கியத்துவம் தெரிந்த விஷயம்தான்.தங்கள்
கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றினால் இவர்களை விடவும் தேசத்திற்கு தொண்டு
செய்பவர்கள் யாருமில்லை.இன்றைய மெயிலில் அவரது பணி தொடர்பான நாளிதழ் செய்திகளை
பகிர்ந்து கொண்டிருக்கிறார்.அவரது பணி சிறக்க வாழ்த்துவோம்.
22 comments:
இதில் பெரிய சிக்கல்கள் இருக்கின்றன, முறையான ரசீது கிடையாது.. அந்த கடைக்கு அந்த நிறுவனம் பொருள் விற்ற கணக்கு வழக்கே இருக்காது.. சிக்குபவர் இடைத் தரகரான கடைக்காரரே... மொத்த வியாபாரிகள் கொடுக்கும் ரசீது பெரும்பாலும் கணக்கு வழக்கில் வருவதில்லை.. வூட்வர்ட்ஸ் gripe வாட்டர் புட்டியில் சிறு துகள்கள் மிதப்பதை கண்டு அந்த மொத்த விற்பனையாளரிடம் பேசிய பொழுது, உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் ரசீதுகளில் அந்த batch எண்கள் இல்லாததும் கண்டு அதிர்ந்து.. மேலும் விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்தன.. அவற்றில் ஒன்று, கடைகளுக்கு முறையான ரசீது இல்லாததும்.. மாறாக புகார் தெரிவித்தால் கடைக்காரர்களே போலி பொருட்கள் விற்றதாக கைதாகும் நிலையும் உண்டு... தேவை முறையான அரசு இயந்திரம்...
தேவையான பகிர்வு தான்
உணவு பாதுகாப்பு அலுவலர்களின் பணி முக்கியம்.கடமையை சரியாக ஒவ்வொருவரும் செய்தால் நமக்கெல்லாம் நல்லது.
அலுவலரின் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள்.
குழந்தைகளுக்க்த் தவறான உணவுப்பழக்கம் கற்றுத்தரப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆபத்தான இந்த வழக்கம் மாறவேண்டும்.
சிறப்பாக பணியாற்றும் அலுவலருக்கு வாழ்த்துக்கள்.
//நோய்கள் என்பது தனிமனித பிரச்சினை மட்டுமல்ல! நாட்டின் சமூகப்பிரச்சினையும்,பொருளாதர பிரச்சினையும் கூட! ஒருவர் நோயுற்றால் அவரை கவனித்துக்கொள்பவர்கள் உள்பட இரண்டு வேலை நாட்களை இழக்க வேண்டியிருக்கிறது.//
அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
நல்ல பயனுள்ள பதிவு.
எல்லோருக்கும் சமூக பொறுப்புணர்ச்சி, அக்கறை வரவேண்டும்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_15.html
நல்ல பயனுள்ள பகிர்வு...
வாழ்த்துகள்...
@suryajeeva said...
நீங்கள் சொல்வது உண்மைதான்.இனி நடவடிக்கைகள் கடுமையாக இருந்தால் ஓரளவு குறையலாம்.நன்றி.
@வைரை சதிஷ் said...
தேவையான பகிர்வு தான்
thanks sir
@RAVICHANDRAN said...
உணவு பாதுகாப்பு அலுவலர்களின் பணி முக்கியம்.கடமையை சரியாக ஒவ்வொருவரும் செய்தால் நமக்கெல்லாம் நல்லது.
தங்கள் கருத்துரைக்கு நன்றி.
@எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...
குழந்தைகளுக்க்த் தவறான உணவுப்பழக்கம் கற்றுத்தரப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆபத்தான இந்த வழக்கம் மாறவேண்டும்.
ஆமாம் அய்யா! பெற்றோர்கள் செய்யவேண்டியது.நன்றி.
@ஓசூர் ராஜன் said...
சிறப்பாக பணியாற்றும் அலுவலருக்கு வாழ்த்துக்க
தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி.
@Rathnavel said...
நல்ல பயனுள்ள பதிவு.
எல்லோருக்கும் சமூக பொறுப்புணர்ச்சி, அக்கறை வரவேண்டும்.
வாழ்த்துக்கள்.
தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி.அய்யா!
@ராஜா MVS said...
நல்ல பயனுள்ள பகிர்வு...
வாழ்த்துகள்...
thanks sir
வணக்கம் அண்ணாச்சி,
நலமா?
வீக்கெண்ட் எப்படி?
வீக்கெண்ட் முடிந்து இப்போது தான் வீட்டிற்கு வந்திருக்கேன்.
ஆரோக்கியமான மக்களின் வாழ்விற்காக அல்லும் பகலும் பாடுபடும் உணவுப் பாதுகாப்பு ஊழியர்களுக்கு என் சல்யூட் பாஸ்..
நல்லதோர் பதிவு.
நாளிதழில் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக பகிர்ந்து வரும் தோழருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாராட்டுகள்.வாழ்த்துகள்.
உணவுப் பாதுகாப்பு மிக மிக முக்கியமான விஷயம்.
அதை சரிவரச் செய்யும் அலுவலர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
செய்தொழிலை சிறப்பாக செய்யவேண்டும், அதுவும் இதுபோல
உயிர்காக்கும் தோழிகளில் ஈடுபடுவோர், முழு ஈடுபாட்டுடன் செயல் பட்டால் தான்
நல்லது.
அருமையான விழிப்புணர்ச்சி கட்டுரை நண்பரே.
பகிர்வுக்கு நன்றி.
gudnews thx
சிறப்பாக பணியாற்றும் இவரைப்போன்ற சில அரசு ஊழியர்களை ஊக்குவிப்பது நம் அனைவரின் கடமை...
அன்னாரது சேவைக்கு கோடானுகோடி நன்றிகள்...
பகிர்வுக்கு மிக்க நன்றி...
http://anubhudhi.blogspot.com/
Post a Comment