ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டும்போது மனம் சிலருக்கு படபடக்கும்.மீசையில்
ஒரு முடி நரைத்தால் அதை வெட்டியாக வேண்டும்.அதிகமானால் சாயம் பூச
வேண்டும்.பார்ப்பவர்கள் கண்ணுக்கு இளமையாய் தெரிந்தே ஆகவேண்டும்.ஆனால் உடல்
மூப்படைவதை யாரால் தடுக்க முடியும்? அப்படி நினைத்துக்கொள்வதுதான்.எனக்குத் தெரிந்த நண்பர் ஒரு அரசு அலுவலர்.இன்னும் ஒன்றரை ஆண்டுகளில்
ஒய்வு பெற இருக்கிறார்.அவர் நரைமுடியுடன் காணப்பட்டாலும் என் கண்களுக்கு
இளமையாகவே காட்சி தருகிறார்.பாடகராக ,கவிஞராக,நாடக நடிகராக ,எழுத்தாளனாக
வலம் வந்து கொண்டிருக்கிறார்.அவர் சொன்ன கவிதையைக் கேட்டு அவரது மகன் சொன்னது"என்னப்பா காலேஜ் பையன் மாதிரி கவிதை சொல்றீங்கன்னு
!எனக்கும் அவர் இளமையாக இருப்பது போல
தோன்றியது.
கிராமத்தில் வயதான பல இளைஞர்களை பார்த்திருக்கிறேன்.எப்போதும் குறும்பும் சிரிப்புமாய் ! பழுத்த கிழங்கள் தான்.ஆனால் அவர்களிடம் இளமை ததும்பும்.இளமை மனதில் இருக்கிறதா? உடலிலா? முகத்தில் தோன்றும் அமைதியும் ,குழப்பமும் மனதைத்தானே காட்டுகிறது.இளமை மனதில் தான் இருக்கிறது.வாலி எப்படி இத்தனை வயதிலும் அப்படி எழுதுகிறார்? வயதானாலும் பாடுபவர்களின் குரலில் இளமை கொஞ்சுகிறதே எப்படி? பல உதாரணங்கள் இருக்கின்றன.
எழுத்தோ,இசையோ,ஓவியமோ ,நாடகமோ கலைஞர்களுக்கு மூப்பில்லை என்று தோன்றுகிறது.உடலை இளமையாய் பராமரிக்க சத்துணவும்,வாயைக்கட்டுவதும் அவசியம்.நெடிய காலம் முறுக்குடன் வாழும் பலரும் வாயைக்கட்டி வாழ்பவர்களே!புகையிலையை,குடியை அவர்கள் விரும்பியதில்லை.மனதிற்கும் இது பொருந்தும்.மனதிற்கு ஆரோக்கியமானதை கொடுத்தால் இளமையாகவே இருக்கும்.உடலுக்கு ஆரோக்கியமான உணவுகள் என்று பலர் பரிந்துரைக்கிறார்கள்.ஆனால் மனதிற்கு ?
கலைஞர்களிடம் புதிதாக ஏதாவது உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறது.தினமும் ஏதேனும் ஒன்றை புதிதாக கற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.மனம் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.ஓடியாடி வேலை செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்தானே! மனமும் அப்படித்தான்! கற்றுக்கொண்டும்,அதன் வழியாக சிந்தித்துக் கொண்டும் இருக்கும்போது மனம் ஆரோக்கியமாக இருக்கிறது.இப்படி இருக்கும்போது கெட்ட எண்ணங்கள் உருவாவதும் இருக்காது.பிறரைப் பற்றி வம்பு பேசுவதற்கும் அவசியம் இருக்காது.பதிவுலகிலும் என்றும் இளமையே வேண்டப்படுகிறது.
தமிழ்மணம் நிர்வாகிகளின் பேட்டியில் படித்ததை என் வார்த்தைகளில் தருகிறேன்.பதிவுகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் படிக்கத் தக்கவையாக இருக்க வேண்டும்.பரபரப்பு அரசியலுக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று நீங்கள் முடிவு செய்ய முடியும்.அரசு அலுவலர் சொன்ன கவிதை கீழே தருகிறேன்.
ஒரு சிறுகதை தொகுதி வெளியிட்டிருக்கிறார்.கவிதை தொகுப்பு அச்சில் இருக்கிறது.மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை கண்டிருக்கிறார்.மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையில் வாசம்.அரசு அலுவலராக பணி கிருஷ்ணகிரியில்!அவர் வரைந்த ஓவியம் கீழே!
இன்னொரு விஷயம்.அவர் பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்று ஆரம்பித்து விட்டார்.தனது அனுபவங்களையும்,அரசியலையும் அவர் எழுத வாய்ப்பிருக்கிறது.அவரது வலைப்பக்கம் செல்ல:http://koodalguna.blogspot.com
-

31 comments:
உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள் அண்ணே! அவருக்கு எல்லாத்திறமைகளும் இருக்கும் போல!
ஓவியமும் கவிதையும் சூப்பர்!
உங்களை மாதிரியே அவரும், ஓட்டும் கமெண்டும் தவறாமல் போடுவாரா?
பதிவுலக அரசியலும் கொஞ்சம் கத்துக் குடுங்கண்ணே அவருக்கு!
@Powder Star - Dr. ஐடியாமணி said...
உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள் அண்ணே! அவருக்கு எல்லாத்திறமைகளும் இருக்கும் போல!
ஓவியமும் கவிதையும் சூப்பர்!
உங்களை மாதிரியே அவரும், ஓட்டும் கமெண்டும் தவறாமல் போடுவாரா?
பதிவுலக அரசியலும் கொஞ்சம் கத்துக் குடுங்கண்ணே அவருக்கு!
உள்ளே வந்த பிறகு அரசியல நம்ம என்ன கத்துக்குடுக்குறது.அவரே தெரிஞ்சிக்கப்போறாரு!நன்றி
உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி நண்பா...
தங்கள் நண்பருக்கு வாழ்த்துகள்... நண்பரே...
புதியவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி...
@மாய உலகம் said...
உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி நண்பா...
நன்றி நண்பா!
@ராஜா MVS said...
தங்கள் நண்பருக்கு வாழ்த்துகள்... நண்பரே...
புதியவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி...
தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பரே!
கற்றுக்கொண்டும்,அதன் வழியாக சிந்தித்துக் கொண்டும் இருக்கும்போது மனம் ஆரோக்கியமாக இருக்கிறது./
அருமையான பயனுள்ள பகிர்வு.
@இராஜராஜேஸ்வரி said...
கற்றுக்கொண்டும்,அதன் வழியாக சிந்தித்துக் கொண்டும் இருக்கும்போது மனம் ஆரோக்கியமாக இருக்கிறது./
அருமையான பயனுள்ள பகிர்வு.
தங்கள் கருத்துரைக்கு நன்றி
//மனதிற்கு ஆரோக்கியமானதை கொடுத்தால் இளமையாகவே இருக்கும்//.
பகிர்வுக்கு நன்றி
புதிய பதிவருக்கு வாழ்த்துக்கள்.
பன்முகத் திறமை படைத்த
உங்கள் நண்பருக்கு
மனம்கனிந்த வாழ்த்துக்கள்.
இனி என்றும் இளமைதான்!
அருமையான பயனுள்ள பகிர்வு...பகிர்வுக்கு நன்றி!
நண்பருக்கு வாழ்த்துகள். இளமையும் முதுமையும் மனதில்தான். உடல் எனும் இந்தக் கூட்டை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் சொல்வது போலக்கட்டுப் பாடு அவசியம். தேவ் ஆனந்த் பார்த்தீர்களா...அவர் வயதுக்கு அவர் தலைமுடியில் சாயம் ஏற்றியிருக்கிறார்தான்...அதே சமயம் இப்போதும் ஒரு படத்தில் நடிக்கிறார். சுஜாதா எழுத்தின் மாறா இளமையையும் ரசித்திருக்கிறோம்!
@RAVICHANDRAN said...
//மனதிற்கு ஆரோக்கியமானதை கொடுத்தால் இளமையாகவே இருக்கும்//.
பகிர்வுக்கு நன்றி
தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி
@மகேந்திரன் said...
பன்முகத் திறமை படைத்த
உங்கள் நண்பருக்கு
மனம்கனிந்த வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே!
@கோகுல் said...
இனி என்றும் இளமைதான்!
நன்றி
@விக்கியுலகம் said...
அருமையான பயனுள்ள பகிர்வு...பகிர்வுக்கு நன்றி!
கருத்துரைக்கு நன்றி நண்பா!
@ஸ்ரீராம். said...
நண்பருக்கு வாழ்த்துகள். இளமையும் முதுமையும் மனதில்தான். உடல் எனும் இந்தக் கூட்டை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் சொல்வது போலக்கட்டுப் பாடு அவசியம். தேவ் ஆனந்த் பார்த்தீர்களா...அவர் வயதுக்கு அவர் தலைமுடியில் சாயம் ஏற்றியிருக்கிறார்தான்...அதே சமயம் இப்போதும் ஒரு படத்தில் நடிக்கிறார். சுஜாதா எழுத்தின் மாறா இளமையையும் ரசித்திருக்கிறோம்!
நன்றி அய்யா! நிறைய உதாரணங்கள்
மனது இளமையாக இருந்தால் என்றும் இளமைதான் ....குணா பக்கங்கள் அருமை !

இளமை என்றும் மனதில்தான்...
பகிர்வுக்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/
பர பரப்பு அரசியல் வயதானாலும் வரலாறு என்ற இடம் பிடித்து விடுகிறது, மற்றபடி சிலவை களஞ்சியமாக இளமை மாறாமலே இருக்கிறது...
தங்கள் நண்பருக்கு வாழ்த்துகள்... நண்பரே...
புதியவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி...
@koodal bala said...
மனது இளமையாக இருந்தால் என்றும் இளமைதான் ....குணா பக்கங்கள் அருமை !
thanks bala
@Sankar Gurusamy said...
இளமை என்றும் மனதில்தான்...
பகிர்வுக்கு நன்றி...
thanks sir
@suryajeeva said...
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
இருவருக்கும் நன்றி.
என்னில் ஒரு பகுதியை அவரிடம் பார்க்கிறேன்.நான் சொல்வது”என் உடலுக்கு வயது 66;உள்ளத்துக்கு 26!”
ungkal nanbarukku vazththukal
வணக்கம் அண்ணே
ஒரு படைப்பாளியின் பன்முகப்பட்ட திறமையினை ஆரோக்கிய வாழ்விற்கேற்ற குறிப்புக்களோடு அலசி நிற்கும் பதிவு!
கூடல் குணா அவர்களினை வாழ்த்தி,
பதிவுலக உள்ளங்கள் சார்பில் வரவேற்பதையிட்டு மகிழ்கின்றேன்.
நண்பருக்கு வாழ்த்துக்கள்
Post a Comment