தாய்ப்பால்
கொடுப்பது என்ன பெரிய விஷயம்? குழந்தை பிறந்தால் கொடுத்து விட்டு போகிறார்கள்
என்று நினைக்கத்தோன்றுகிறதா? ஆனால் உண்மை வேறுவிதம் என்கிறார்கள்
மருத்துவர்கள்.சரியாக தாய்ப்பால் கொடுக்கத் தெரியாமலேயே போதுமான அளவு பால் சுரப்பதில்லை
என்று மருத்துவமனை வருபவர்கள் உண்டு.சிலர் புட்டிப்பால் கொடுக்க
ஆரம்பித்துவிடுவார்கள்.இதெல்லாம் குழந்தை வளர்ச்சியில் பெரும் பாதிப்பை
ஏற்படுத்தக் கூடியது.தாய்ப்பாலுக்கு இணையாக வேறொரு உணவை கற்பனையில் கூட உருவாக்க
முடியாது என்பதே நிஜம்.
பால் கொடுக்கும்போது குழந்தையின்
தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்கு
நேராகவும்,அதன் முகம் மார்பக காம்புக்கு எதிர்புறமாகவும் இருக்கவேண்டும்.அடுத்து
குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்க வேண்டும்.குழந்தையின் கழுத்து
,தோள் மட்டுமில்லாமல் முழு உடலையும் தாயின் கை தாங்குவது போல் வைக்கப்படவேண்டும்.
தாய்ப்பால் கொடுக்க
முயற்சிக்கும்போது தாய் குழந்தையின்
உதடுகளால் மார்பக காம்பைத் தொடவைக்க வேண்டும்.குழந்தை வாய் திறக்கும் வரை
காத்திருந்து கீழ் உதடு மார்பக காம்பின் அடிப்பகுதியை நன்கு பிடித்துக்கொள்ளுமாறு
செய்யவேண்டும்.
குழந்தை
மார்பகத்தைநன்கு கவ்வியிருக்கிறதா சரியாக சப்பிக் குடிக்கிறதா என்பதை தாய் கவனிக்க
வேண்டும்.குழந்தையின் முகவாய்க்கட்டை மார்பகத்தை தொடவேண்டும்.வாய் நன்றாக
திறந்திருக்க வேண்டும்.கீழ் உதடு வெளியே பிதுங்கியிருக்க வேண்டும்.மார்பக காம்பின்
கீழ்பகுதி முழுவதும் குழந்தையின் வாயினால் மூடப்பட்டிருக்க வேண்டும்.
முதல் ஆறு
மாதங்களுக்கு தாய்ப்பால் தவிர குழந்தைக்கு வேறு எந்த திரவமும் தேவைப்படாது.கிரைப்
வாட்டர்,தண்ணீர் எல்லாம் அவசியமேயில்லை.தேவையான் தண்ணீர் தாய்ப்பாலில்
இருக்கிறது.ஒரு நாளில் எட்டு முறையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.குழந்தை
ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டாலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு மாட்டுப்பாலை
கொடுப்பதும்,சில நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பதும் பலர் செய்யும் தவறு.இது
குழந்தையின் ஜீரண மண்டலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.இன்றைய முறையற்ற
வணிகர்களால் சுத்தமான பால் கிடைப்பது எளிதல்ல! அதிக பாலுக்காக ஹார்மோன் ஊசி
போடுவதாலும் நிறைய பிரச்சினைகள்.
தாய்ப்பாலை விட பாதுகாப்பானது
வேறெதுவும் இல்லை.மருத்துவர் அறிவுரையின் பேரில் மாட்டுப்பால் கொடுத்தாலும் நிறைய
தண்ணீர் கலக்கவேண்டும்.அதுவும் சுத்தமான நீராக இருக்கவேண்டும்.கடையில் பவுடர்
வாங்கினாலும் காலாவதி தேதியை கவனிக்க வேண்டும்.பாலாடை அல்லது தேக்கரண்டி
பயன்படுத்துவதே சிறந்த்து.புட்டி பயன்படுத்தும்போது அழுக்கு சேர்ந்து நோய்த்தொற்றை
உருவாக்கலாம்.ஆறு மாதம் கழித்து பிறகு இணை உணவுகள் தர ஆரம்பிக்கலாம்.
(யுனிசெப் பிரசுரம் ஒன்றின் உதவியுடன்)
32 comments:
இனிய இரவு வணக்கம் அண்ணா,
நல்லதோர் பதிவு,
நான் புக் மார்க் பண்ணி வைக்கிறேன்.
கலியாணம் ஆகி குழந்தை பெறும் போது அவாவிற்கு காண்பிப்பதற்காக..
ஹே...ஹே....
நன்றி அண்ணா.
இனிய இரவு வணக்கம் அண்ணா,
நல்லதோர் பதிவு,
நான் புக் மார்க் பண்ணி வைக்கிறேன்.
கலியாணம் ஆகி குழந்தை பெறும் போது அவாவிற்கு காண்பிப்பதற்காக..
ஹே...ஹே....
நன்றி அண்ணா.
PALARUKKUM IPPADI THAAN KODUKKA VENDUM ENRU THERIVATHILLAAI... PAYANULLA THAKVAL...VAALTHTHUKKAL
PALARUKKUM IPPADI THAAN KODUKKA VENDUM ENRU THERIVATHILLAAI... PAYANULLA THAKVAL...VAALTHTHUKKAL
-ஆனால் எல்லோரும் குழந்தையை மடியில் படுக்க வைத்துதான் பால் கொடுக்கிறார்கள்... நேர்வாட்டில் கொடுப்பதென்பது சற்று கடினமாக இருக்குமே...
இதுதான் சரியான முறையா?
எனக்கு ஏற்ப்பட்ட சந்தேகம் ஆகயால் கேட்டேன்...
பலர் அறிந்துக் கொள்ளவேண்டிய பயனுள்ள தகவல்... நண்பரே...
@நிரூபன் said...
இனிய இரவு வணக்கம் அண்ணா,
நல்லதோர் பதிவு,
நான் புக் மார்க் பண்ணி வைக்கிறேன்.
கலியாணம் ஆகி குழந்தை பெறும் போது அவாவிற்கு காண்பிப்பதற்காக..
ஹே...ஹே....
நன்றி அண்ணா.
நம்பிக்கை இழக்காமல் இருக்கிறீர் சகோ! ஹிஹி வாழ்த்துக்கள்.நன்றி
@மதுரை சரவணன் said...
PALARUKKUM IPPADI THAAN KODUKKA VENDUM ENRU THERIVATHILLAAI... PAYANULLA THAKVAL...VAALTHTHUKKAL
நன்றி அய்யா!
@ராஜா MVS said...
-ஆனால் எல்லோரும் குழந்தையை மடியில் படுக்க வைத்துதான் பால் கொடுக்கிறார்கள்... நேர்வாட்டில் கொடுப்பதென்பது சற்று கடினமாக இருக்குமே...
இதுதான் சரியான முறையா?
எனக்கு ஏற்ப்பட்ட சந்தேகம் ஆகயால் கேட்டேன்...
பலர் அறிந்துக் கொள்ளவேண்டிய பயனுள்ள தகவல்... நண்பரே...
இங்கே குறிப்பிட்டுள்ளவைதான் சரியானமுறை நண்பரே! நன்றி
அனைவருக்கும் பயன்படும் தகவல்கள் நன்றி
//குழந்தைக்கு மாட்டுப்பாலை கொடுப்பதும்,சில நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பதும் பலர் செய்யும் தவறு.இது குழந்தையின் ஜீரண மண்டலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.இன்றைய முறையற்ற வணிகர்களால் சுத்தமான பால் கிடைப்பது எளிதல்ல! அதிக பாலுக்காக ஹார்மோன் ஊசி போடுவதாலும் நிறைய பிரச்சினைகள்.//
கருவுற்ற, குழந்தைபெற்ற ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது நண்பரே..
நன்றி நண்பரே நல்லதோர் பகிர்விற்க்கு..
நட்புடன்
சம்பத்குமார்
பதிவுகள் தொடரட்டும்..
இன்று முதல் நானும் தளத்தினை தொடர்கிறேன்
அன்புடன்
சம்பத்குமார்
ஈன்ற குழந்தைக்கு
அமுதூட்டும் முறை பற்றி அழகாய்
மருத்துவ விளக்கங்களுடன்
சொன்னது மிக அருமை.
இன்றைய இளைய தலைமுறை சகோதரிகளுக்கு
மிக மிக அவசியமான அறிவுறுத்தல்கள்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
@RAVICHANDRAN said...
அனைவருக்கும் பயன்படும் தகவல்கள் நன்றி
நன்றி நண்பரே!
@சம்பத்குமார் said...
//குழந்தைக்கு மாட்டுப்பாலை கொடுப்பதும்,சில நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பதும் பலர் செய்யும் தவறு.இது குழந்தையின் ஜீரண மண்டலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.இன்றைய முறையற்ற வணிகர்களால் சுத்தமான பால் கிடைப்பது எளிதல்ல! அதிக பாலுக்காக ஹார்மோன் ஊசி போடுவதாலும் நிறைய பிரச்சினைகள்.//
கருவுற்ற, குழந்தைபெற்ற ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது நண்பரே..
நன்றி நண்பரே நல்லதோர் பகிர்விற்க்கு..
நட்புடன்
சம்பத்குமார்
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
வணக்கம் அண்ணே! மிகவும் அவசியமான ஒரு பதிவு! அனைவருக்கும் பயன்படும்! வாழ்த்துக்கள்!
(யுனிசெப் பிரசுரம் ஒன்றின் உதவியுடன்)//////
எல்லோரும் கவனியுங்க! அண்ணன் காப்பி பேஸ்ட் பண்ணிட்டாரு! ஹி ஹி ஹி ஹி !!!
இனிய இரவு வணக்கம் அண்ணா,
நல்லதோர் பதிவு,
நான் புக் மார்க் பண்ணி வைக்கிறேன்.
கலியாணம் ஆகி குழந்தை பெறும் போது அவாவிற்கு காண்பிப்பதற்காக..///////
எந்த நேரம் பார்த்தாலும் ஒரே கலியாணம் கட்டுறதும் பிள்ளை பெறுறுறதும் தான் சிந்தனை போல!
மச்சி, நீ ஒண்டும் அவவுக்குக் காட்டத்தேவையில்லை! அவா எல்லாமே கற்றுக்கொண்டுதான் வருவா! ஹி ஹி ஹி !!
தேவையான ஒன்று, என்ன இதை மருத்துவம் படிப்பு சார்ந்த விஷயமாகவே பலர் பார்க்கின்றனர்... இதை நம் அன்றாட வாழ்வியலுடன் இணைத்து பார்க்கும் தன்மையை என்று கொண்டு வரப் போகிறார்களோ
@சம்பத்குமார் said...
பதிவுகள் தொடரட்டும்..
இன்று முதல் நானும் தளத்தினை தொடர்கிறேன்
அன்புடன்
சம்பத்குமார்
நன்றி சார்.
@மகேந்திரன் said...
ஈன்ற குழந்தைக்கு
அமுதூட்டும் முறை பற்றி அழகாய்
மருத்துவ விளக்கங்களுடன்
சொன்னது மிக அருமை.
இன்றைய இளைய தலைமுறை சகோதரிகளுக்கு
மிக மிக அவசியமான அறிவுறுத்தல்கள்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
கருத்துரைக்கு நன்றி நண்பரே!
useful post .thank you
இளம் தாய்களுக்கான பயனுள்ள பதிவு.
@Powder Star - Dr. ஐடியாமணி said...
வணக்கம் அண்ணே! மிகவும் அவசியமான ஒரு பதிவு! அனைவருக்கும் பயன்படும்! வாழ்த்துக்கள்!
நன்றி பிரதர்,
@Powder Star - Dr. ஐடியாமணி said...
(யுனிசெப் பிரசுரம் ஒன்றின் உதவியுடன்)//////
எல்லோரும் கவனியுங்க! அண்ணன் காப்பி பேஸ்ட் பண்ணிட்டாரு! ஹி ஹி ஹி ஹி !!!
படுபாவி! ஏன் இப்படி?
@Powder Star - Dr. ஐடியாமணி said...
இனிய இரவு வணக்கம் அண்ணா,
நல்லதோர் பதிவு,
நான் புக் மார்க் பண்ணி வைக்கிறேன்.
கலியாணம் ஆகி குழந்தை பெறும் போது அவாவிற்கு காண்பிப்பதற்காக..///////
எந்த நேரம் பார்த்தாலும் ஒரே கலியாணம் கட்டுறதும் பிள்ளை பெறுறுறதும் தான் சிந்தனை போல!
மச்சி, நீ ஒண்டும் அவவுக்குக் காட்டத்தேவையில்லை! அவா எல்லாமே கற்றுக்கொண்டுதான் வருவா! ஹி ஹி ஹி !!
அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு! கற்றுக்கொண்டு வந்தாலும் எச்சரிக்கையாக வைக்கட்டுமே! நன்றி
@suryajeeva said...
தேவையான ஒன்று, என்ன இதை மருத்துவம் படிப்பு சார்ந்த விஷயமாகவே பலர் பார்க்கின்றனர்... இதை நம் அன்றாட வாழ்வியலுடன் இணைத்து பார்க்கும் தன்மையை என்று கொண்டு வரப் போகிறார்களோ
உண்மைதான் அய்யா! நன்றி
@ஓசூர் ராஜன் said...
useful post .thank you
நன்றி சார்.
@சென்னை பித்தன் said...
இளம் தாய்களுக்கான பயனுள்ள பதிவு.
தாயாகப்போகிறவர்களும் தெரிந்து கொள்ளலாம் அய்யா,நன்றி
குழந்தையின் உடல் கொஞ்சம் தாழ்வாக இருக்கவேண்டும் 45 டிகிரி கோணம் சாய்வாக கொடுக்க வேண்டும் தலை மார்பகத்தை நோக்கியும் குழந்தையின் இடுப்பு கொஞ்சம் கிழேயும் இருக்க வேண்டும் அப்போது தான் குழந்தைக்கு பால் சரியாக சென்றடையும் இல்லேன்னா குடித்த பாலை குழந்தை கக்கும்னு இங்க பாட்டி சொன்னங்க தெரிஞ்ச ஒருத்தர்ட்ட.அருமையான பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .முடிந்தால் வாருங்கள் என் தளத்திற்கு .......
மிகவும் பயனுள்ள தகவல்...
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
One of the best BF video.
http://www.youtube.com/watch?v=Zln0LTkejIs
Numerous how-to videos are available in youtube.com
தனிப்பட்ட முறையில் இப்படங்களின் மூலம் (என் குழந்தைக்கு) பயனடைந்தவன்.
Post a Comment