பரபரப்புக்கு பெயர் போனவை புலனாய்வு
பத்திரிகைகள்.தலைப்பு எப்போதும் வாங்க வைக்கிற மாதிரிதான் வைக்க வேண்டும்.தமிழில்
அநேகமாக துக்ளக்தான் முன்னோடி என்று நினைக்கிறேன்.ஒரு கட்ட்த்தில் தராசு பரபரப்பாக
இருந்த்து.நக்கீரன் கோபால் தராசு பத்திரிகையில் பணியாற்றியவர்.
புலனாய்வு
பத்திரிகை நிருபர் என்றால் பேர்தான் பெத்த பேரு! அப்போது உள்ளுர் பத்திரிகை
ஒன்றும்,தொழில் சார்ந்த இதழ் ஒன்றும் ஆக இரண்டு இதழ்களில் பங்கேற்ற அனுபவம் எனக்கு
உண்டு.தேர்தலுக்காக ஒரு வெளியீடு கொண்டு வர முடிவு செய்தோம்.மாவட்டம் முழுக்க
அலைந்து சுற்றிய அனுபவம் உண்டு.
வேட்பாளர்களை பார்க்க வேண்டுமானால் இரவு பதினோரு
மணி.இல்லாவிட்டால் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கும்.அங்கே போக வேண்டும்.காலையில்
கிளம்பினால் வீடு வந்து சேர இரவு பன்னிரண்டு மணி ஆகும்.உடல் முழுக்க வலியில்
படுக்கையில் விழுந்தால் காலையில் யாராவது எழுப்பினால்தான் உண்டு.
இரண்டு கட்சிகள்
பிரிந்துவிட்ட்து என்பார்கள்.ஒரு கட்டுரை எழுதி முடித்தால் சேர்ந்து
விட்டிருக்கும்.உடனுக்குடன் ஆறிப்போய்விடும்.இப்போது பெரும்பாலும் வாரம் இரண்டு
என்று ஆகிவிட்ட்து.அச்சுக்கு போக வேண்டும்,உடனே கட்டுரை வேண்டும்.அதுவும்
முன்பெல்லாம் அவசரமாக்க் கிளம்பி சென்னை செல்ல வேண்டும்.
வலம்புரிஜான் ஒரு
புலனாய்வு பத்திரிகை ஆரம்பித்தார்.நான் ஒரு கட்டுரை அனுப்பினேன்.வெகு காலம்
பார்த்துவிட்டு அரசாங்கம் செய்யாமல் கிராம மக்களே பல கிலோமீட்டருக்கு சாலை அமைத்த
செய்தி அது.புகைப்படங்கள் இணைக்கவில்லை.”இரண்டு நாட்களுக்குள்
புகைப்படம் வேண்டும்.நேரில் எடுத்து வாருங்கள் பணம் தந்துவிடுகிறேன்” என்று
கடிதம் அனுப்பியிருந்தார்.
கடிதம் தபாலில்
கிடைக்க தாமதமாகிவிட்ட்து.போட்டோ எடுக்கப் போகலாம் என்று கிளம்பியபோது இதழ்
கடைகளில் விற்பனையில் இருந்த்து.நான் அனுப்பிய கட்டுரைக்கு படம் வரைந்து வெளியிட்டுவிட்டார்.கொஞ்சம்
தாமதம் கூட கஷ்டம்.பேருந்துகளில் கொடுத்துவிட்டு போன் செய்து
சொல்லவேண்டும்.இணையத்தில் செயல்படுகிற வசதி அப்போது இல்லை.
முக்கியமான
ஆட்களை செய்தி சம்பந்தமாக பார்க்கப் போனால் வீட்டுக்குள் இருந்தாலும் ஆள் இல்லை
என்று சொல்வார்கள்.அலைச்சல் மட்டும் மிச்சமிருக்கும்.மழை,வெயில் எல்லாம் பார்க்க
முடியாது.நல்ல நாள் கெட்ட நாள் இல்லை.சம்பளமும் சொல்லிக்கொள்கிற மாதிரி
இல்லை.காட்டுக்கு போக வேண்டுமென்றாலும் போய்த்தான் ஆக வேண்டும்.
இன்னொரு விஷயம்
தெரிந்த சங்கதிதான்.மிரட்டல்,வழக்கு,ஆட்டோ இதெல்லாம் சாதாரணம்.உச்சபட்சமாக
கொலைகளையும் தமிழ் பத்திரிகை உலகம் சந்தித்த நிகழ்வுகள் உண்டு.தராசு அலுவலகத்தில்
நடந்த கொலைகள் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.சில நேரங்களில் ஒளிந்து
வாழ்ந்தவர்கள் உண்டு.
புலனாய்வு
பத்திரிகைகள் வெளிக்கொண்டுவந்த ஊழல்கள் அதிகம்.உண்மைகள் நிறைய! கிரிமினல்களை
அடையாளம் காட்டி நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்திருக்கின்றன.ஊழல்வாதிகள்,கிரிமினல்கள்
கோபத்துக்கு ஆளானாலும் எத்தனையோ நன்மைகள் சமூகத்துக்கு கிடைக்கவே செய்தன.
29 comments:
///புலனாய்வு பத்திரிகைகள் வெளிக்கொண்டுவந்த ஊழல்கள் அதிகம்.///
உண்மை தான் நண்பரே
நண்பர்களே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க
பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?
@வைரை சதிஷ் said...
தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பா!
//ஊழல்வாதிகள்,கிரிமினல்கள் கோபத்துக்கு ஆளானாலும் எத்தனையோ நன்மைகள் சமூகத்துக்கு கிடைக்கவே செய்தன.//
உண்மைதான் .நல்ல பதிவு.
இப்போ கணணி, இணையம் என்று கைக்குள்ளே உலகம்... வீண் அலைச்சல்கள் இதன் மூலம் குறைக்கப்படும் ... அதோடு தொடர்பு ,செய்திப்பரிமாற்றம் இலகு ...
எனக்கு என்னவோ இப்பொழுது எல்லாம் ஊடகங்கள் வெளிக் கொண்டு வராத விஷயங்கள் தான் அதிகம் என்று தோன்றுகிறது...
@RAVICHANDRAN said...
//ஊழல்வாதிகள்,கிரிமினல்கள் கோபத்துக்கு ஆளானாலும் எத்தனையோ நன்மைகள் சமூகத்துக்கு கிடைக்கவே செய்தன.//
உண்மைதான் .நல்ல பதிவு.
நன்றி.
@கந்தசாமி. said...
இப்போ கணணி, இணையம் என்று கைக்குள்ளே உலகம்... வீண் அலைச்சல்கள் இதன் மூலம் குறைக்கப்படும் ... அதோடு தொடர்பு ,செய்திப்பரிமாற்றம் இலகு ...
செய்தியை ,புகைப்படத்தை அனுப்புவது லகு! செய்தி சேகரிக்க அலைந்துதானே ஆக வேண்டும்.நன்றி.
@suryajeeva said...
எனக்கு என்னவோ இப்பொழுது எல்லாம் ஊடகங்கள் வெளிக் கொண்டு வராத விஷயங்கள் தான் அதிகம் என்று தோன்றுகிறது...
ஏதாவதொரு வகையில் தகவல் சேர்ந்தால்தான் புலனாய்வு செய்யமுடியும்.நன்றி.
புலனாய்வு பத்திரிகைகள் வெளிக்கொண்டுவந்த ஊழல்கள் அதிகம்.உண்மைகள் நிறைய! கிரிமினல்களை அடையாளம் காட்டி நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்திருக்கின்றன.ஊழல்வாதிகள்,கிரிமினல்கள் கோபத்துக்கு ஆளானாலும் எத்தனையோ நன்மைகள் சமூகத்துக்கு கிடைக்கவே செய்தன.
உண்மையை உணர்த்திய பகிர்வு .வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு ............
ஒரு நல்ல பகிர்வு.சுவாரஸ்யமான தகவல்கள்!
The Alligator என்ற வெளிநாட்டு ஆங்கிலப் பத்திரிக்கை பெற்ற வெற்றியே இங்கு பல பத்திரிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.ஜூவி, தராசு போன்றவை.
அப்போதைய பத்திரிக்கைகளில் இருந்த ஒரு நேர்மையான பதிவு இப்போது இல்லையே. டிஜிட்டல் யுகத்தில் வேகம் பெற்றிருந்தாலும் மீடியாவின் நியாயமான பதிவுகளை காண முடிவதில்லையே.
''புலனாய்வு பத்திரிகைகள் வெளிக்கொண்டுவந்த ஊழல்கள் அதிகம்.உண்மைகள் நிறைய! ''
உண்மைதான்
இப்போதெல்லாம் இரண்டு கொலை , இரண்டு கொள்ளை , இரண்டு கற்பழிப்பு , சினிமா செய்திகள் என்று தான் பத்திரிகைகள் இருக்கிறது. மக்களுக்கு விழிப்புணர்வை ( உண்மையான மற்றும் தூய்மையான ) தூண்டும் பத்திரிகைகளை தேடி தான் பார்க்க வேண்டும்.
@ராஜன் said...
thanks sir
ஆமாம்.நீங்களும் பத்திரிக்கை சார்ந்தவர்.நன்றி.
@அம்பாளடியாள் said...
புலனாய்வு பத்திரிகைகள் வெளிக்கொண்டுவந்த ஊழல்கள் அதிகம்.உண்மைகள் நிறைய! கிரிமினல்களை அடையாளம் காட்டி நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்திருக்கின்றன.ஊழல்வாதிகள்,கிரிமினல்கள் கோபத்துக்கு ஆளானாலும் எத்தனையோ நன்மைகள் சமூகத்துக்கு கிடைக்கவே செய்தன.
உண்மையை உணர்த்திய பகிர்வு .வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு ............
தங்கள் கருத்துரைக்கு நன்றி.
@சென்னை பித்தன் said...
ஒரு நல்ல பகிர்வு.சுவாரஸ்யமான தகவல்கள்!
நன்றி அய்யா!
உண்மைதான் .. ரொம்ப கஷ்டமான வேலை
@சாகம்பரி said...
The Alligator என்ற வெளிநாட்டு ஆங்கிலப் பத்திரிக்கை பெற்ற வெற்றியே இங்கு பல பத்திரிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.ஜூவி, தராசு போன்றவை.
அப்போதைய பத்திரிக்கைகளில் இருந்த ஒரு நேர்மையான பதிவு இப்போது இல்லையே. டிஜிட்டல் யுகத்தில் வேகம் பெற்றிருந்தாலும் மீடியாவின் நியாயமான பதிவுகளை காண முடிவதில்லையே.
அப்படி பொதுவாக சொல்ல முடியுமாவென்று தெரியவில்லை.நன்றி.
@kobiraj said...
''புலனாய்வு பத்திரிகைகள் வெளிக்கொண்டுவந்த ஊழல்கள் அதிகம்.உண்மைகள் நிறைய! ''
உண்மைதான்
ஆமாம்.நன்றி நண்பரே!
எததனை வலிமிகுந்த பொறுப்பு!
இனிய இரவு வணக்கம் அண்ணாச்சி,
காலங் கடந்தாலும் ஞாலத்தில் நிலைத்து நிற்கும் புலனாய்வுப் பத்திரிகைகள் பற்றிய அன்றைய கால சுவையான வரலாற்றினை மீட்டிப் பார்த்து, எமக்கும் புலனாய்வுப் பத்திரிகைகளின் சிறப்பான பணியினைச் சொல்லி நிற்கிறது இக் கட்டுரை.
உண்மைதான்... நண்பரே...
பத்திர்க்கை துறை என்றாலே பல இன்னல்களுக்கு ஆளாகவேண்டி வரும்...ஆனாலே அவர்களின் தேடல் முற்றிலும் உண்மையானவை, மற்றும் உண்மையை நோக்கியே அமைந்திருக்கும்...
நல்ல ஒரு அருமையான அலசல்...
வணக்கம் அண்ணே!புலனாய்வு பத்திரிகைகள் பற்றி அருமையான விளக்கம் சொல்லியிருக்கீங்க! இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உங்களைப் பற்றியும் அறிய முடிகிறது!
நீங்க ரொம்ப பெரிய ஆள்தான் அண்ணே! வாழ்த்துக்கள்! இந்த விஷயம் பற்றி இன்னும் அதிகம் எழுதிட வேண்டுகிறேன்!
கடினப்பணியை சொல்லிக்கொண்டே...யதார்த்தய்யும் சொல்லி இருக்கீங்க நன்றி நண்பா!
உண்மைதான்.. புலனாய்வு பத்திரிக்கைப் பணி எத்தனை கடினமானது என அழகாக உணர்த்திவிட்டீர்கள்.
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
பத்திரிக்கையாளர் வேலை ஈஸி இல்லையே...
புலனாய்வுப் பத்திரிகைகள் எழுதும் சில விஷயங்கள் இரண்டு பேர் மட்டும் பேசிக் கொண்ட இடத்தில் பக்கத்தில் நின்று கேட்டது போல எல்லாம் எழுதும்போது அதன் நம்பகத் தன்மையில் சந்தேகம் வரும். பரபரப்புக்காக அங்கங்கே ஏதோ எழுதி, உண்மை பாதி கற்பனை கொஞ்சம், ஹேஷ்யம் கொஞ்சம் மீதி என்று நிரவி விடுகிறார்களோ என்றும் தோன்றும். ஆனாலும் படிக்க சுவாரஸ்யம்தான்!
அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
பகிர்வுக்கு நன்றி !
Who said this as poetry
Post a Comment