இந்த ஏ.டி.எம் மெஷின் வராமல்
இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.ரொம்ப
வசதியான ஒன்றுதான்.2005 ஆம் ஆண்டில் கார்டு வாங்கி விட்டேன்.இந்தியன் வங்கி கார்டு.அப்போது
அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் பணம் தருவது முறையில் இல்லை.பின்னர்தான்
ஆரம்பித்தார்கள்.
இந்தியன் வங்கி
கார்டாக இருந்தாலும் பக்கத்தில் இருந்த்து ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்
தான்.பெரும்பாலும் காலியாக இருக்கும்.இவ்வளவு கூட்டமில்லை.வேல் வசந்தன் என்று
நண்பருக்கு ஒரு பழக்கம்.100 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க மாட்டார்.தீர்ந்து போனால்
மீண்டும் எடுப்பது.நான் அவ்வளவு மோசமில்லை,200 ரூபாய் எடுப்பேன்.ஒரு மாத்த்தில்
பலமுறை எடுப்போம்.
எங்களை மாதிரி
நிறைய இருந்திருப்பார்களோ என்னவோ வேறு வங்கியில் பணமெடுக்க கமிஷன் பிடிக்க
ஆரம்பித்து விட்டார்கள்.இப்போது 5 முறை கமிஷன் இல்லாமல் எடுக்கலாம்.நாங்களும்
கொஞ்சம் மாற்றிக்கொண்டு ஆயிரங்களாக எடுக்க ஆரம்பித்தோம்.
ஒரு முறை பணம்
எடுக்க போனேன்.வெளியே பத்து பேர் வரிசையில் நின்றிருந்தார்கள்.வெகு நேரம்
உள்ளேயிருந்து யாரும் வரவேயில்லை.எனக்கு பேருந்தை பிடிக்கும் அவசரம்.உள்ளே கதவு
திறந்து பார்த்தேன்.கணவன்,மனைவி,இரண்டு குழந்தைகள்.பெரிய பையன் “அப்பா,தம்பி’’
என்றான்.தம்பியை பட்டன் அழுத்தச்சொல்லுங்கள் என்று அர்த்தம்.
வெளியே பத்து
பேர் நின்று கொண்டிருக்க குழந்தைகளை மெஷினை இயக்கச்சொல்லி ரசித்துக்
கொண்டிருந்தார்கள்.நான் உள்ளே நுழைந்து முறைத்தவுடன் அவரது மனைவி கணவனின் முதுகை
தட்டினார்.அவரும் புரிந்து கொண்டு அவசரமாக பணம் எடுத்துக்கொண்டு திரும்ப,பையன்
கத்த ஆரம்பித்து விட்டான்.இன்னும் கொஞ்ச நேரம் விளையாட வேண்டுமாம்.பையனை
அழவைத்துக்கொண்டே ஒரு வழியாக வெளியேறினார்கள்.
இன்னொரு நாள்
நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு ஏ.டி.எம் காலியாக இருப்பதை
பார்த்தேன்.நல்லது,பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று போனேன்.உள்ளே ஒரு பாட்டி
இருந்தார்.ரொம்ப நேர்மாகியும் வெளியே வரவில்லை.உள்ளே போய் பார்த்தால் ஏதேதோ
பட்டன்களை மாற்றி மாற்றிஅழுத்திக் கொண்டிருந்தார்.பார்த்தால் ஏ.டி.எம்.பணி
செய்யவில்லை.” பாட்டி
ஏ.டி.எம். ரிப்பேர் என்றேன்.”போன
வாரம் எடுத்தேனே என்றார் பதிலுக்கு!
வேறொரு நாள்
திருவண்ணாமலையில் சாப்பிட போனேன்.ஸ்டார் ஹோட்டல் என்று அசைவத்துக்கு
பிரபலம்.சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதே ஒரு போன்.எனக்கு பார்சல் வாங்கி வர முடியுமா?
பணம் குறைவாக இருந்த்து.பக்கத்தில்தானே இந்தியன் வங்கி ஏ.டி.எம். பணம் எடுத்துக்
கொள்ளலாம் என்று பார்சல் வாங்கி விட்டேன்.
பணம்
எடுக்கப்போனால் திரையில் அறிவிப்பு வந்து விட்ட்து.மெஷின் வேலை செய்யவில்லை.ஸ்டேட்
வங்கி போய் பார்த்தால் unable to process என்று
வருகிறது.பக்கத்தில் ICICI ,அங்கும் இதே பதில்.பேருந்துக்கு
பணமில்லை.நண்பர் ஒருவருக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல,அவர் வந்து உதவினார்.அப்போது
முடிவு செய்தேன்.முழுக்க செலவு செய்துவிட்டு ஏ.டி.எம் இல் எடுக்கலாம் என்று
இருப்பது முட்டாள்தனம்.
படிக்காத பாமர மக்களுக்கும் ஏ.டி.எம்
கார்டு கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.யாரையாவது எதிர்பார்த்து காத்திருக்க
வேண்டும்.இல்லாவிட்டால் உள்ளே விளையாடுகிறார்கள்.சில வங்கி ஏ.டி.எம் களுக்கு
பாதுகாவலர் யாரும் இருப்பதில்லை.ஒவ்வொரு ஏ.டி.எம் க்கும் செக்யூரிட்டி
நியமிப்பதுடன்,தெரியாதவர்களுக்கு உதவியும் செய்தால் புண்ணியமாக இருக்கும்.
27 comments:
சென்டல் பேங்க் ஏ டி எம்மில் இப்படி ஒருமுறை மாட்டிக் கொண்ட அனுபவம் நினைவுக்கு வருகிறது. பெரிய தொகை தேவையாக இருந்தது என்று அமுக்கிய பின் பணம் வராத நிலையிலும் கொடுத்த மாதிரியே பிழைச் செய்தி வர, அதில் இரண்டு மூன்று முறை வேறு செக் செய்து, பிறகு பயந்து போய் என் பேங்க் அலுவலகம் சென்று என் கணக்கில் பணம் எதாவது கழிக்கப் பட்டிருக்கிறதா என்று சோதித்துத் திரும்பினேன். நல்லவேளை, இல்லை!
கரெக்ட் தான்...
உங்களுக்கு பரவாயில்லை
கார்டு மாட்டிக்கல..
பணம் எடுக்காமலே பணம் எடுத்ததா ரசீது வரல
பணம் திரும்பவும் உள்ளே போகல...
கள்ள நோட்டுக்கள் வரல..
வேற யாரும் உங்க பின் நம்பர் திருடி பணத்த ஆட்டைய போடல....
அப்படின்னு அடிக்கி கிட்டே போகலாம் போலிருக்கே
ஆனாலும் விளையாட்டு machine ... சூப்பர் நைனா
த.ம.2
நான் ஓய்வு பெற்ற வங்கியாளன்தான்.ஆனால் ஏ டி எம் பக்கமே போவதில்லை!
பிரச்சினைகளை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்.
சில இடங்களில் செக்யூரிட்டி இருந்தாலும் தெரியாதவர்கள் உபயோகிக்கும் முறையை செக்யூரிட்டியிடம் கேட்பதில்லை... பலருக்கு கூச்சம்...
சிலர் use பண்ணிதான் பாப்போமே கெட்டுபோனால் என்ன... நம்ம வூட்டுப்பொருளா என்ற எண்ணம் தான் சில இடங்களில் விளையாட்டு machineனாக மாறிவிடும் அவலம்...
surya jeeva solkira maathiri problem athigam
@ஸ்ரீராம். said...
சென்டல் பேங்க் ஏ டி எம்மில் இப்படி ஒருமுறை மாட்டிக் கொண்ட அனுபவம் நினைவுக்கு வருகிறது. பெரிய தொகை தேவையாக இருந்தது என்று அமுக்கிய பின் பணம் வராத நிலையிலும் கொடுத்த மாதிரியே பிழைச் செய்தி வர, அதில் இரண்டு மூன்று முறை வேறு செக் செய்து, பிறகு பயந்து போய் என் பேங்க் அலுவலகம் சென்று என் கணக்கில் பணம் எதாவது கழிக்கப் பட்டிருக்கிறதா என்று சோதித்துத் திரும்பினேன். நல்லவேளை, இல்லை!
நல்லவேளை,தப்பிச்சீங்க நன்றி சார்
@suryajeeva said...
கரெக்ட் தான்...
உங்களுக்கு பரவாயில்லை
கார்டு மாட்டிக்கல..
பணம் எடுக்காமலே பணம் எடுத்ததா ரசீது வரல
பணம் திரும்பவும் உள்ளே போகல...
கள்ள நோட்டுக்கள் வரல..
வேற யாரும் உங்க பின் நம்பர் திருடி பணத்த ஆட்டைய போடல....
அப்படின்னு அடிக்கி கிட்டே போகலாம் போலிருக்கே
ஆனாலும் விளையாட்டு machine ... சூப்பர் நைனா
நீங்கள் சொல்கிறமாதிரி எனக்கு ஏற்பட்டதில்லை சார்,ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன்.நன்றி
suryajeeva solvathu mathiri athigam
@சென்னை பித்தன் said...
த.ம.2
நான் ஓய்வு பெற்ற வங்கியாளன்தான்.ஆனால் ஏ டி எம் பக்கமே போவதில்லை!
பிரச்சினைகளை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்.
உங்களுக்கு பிரச்சினை இல்லை,இப்போது வங்கியில் பணப்பட்டுவாடாவே கிடையாது.ஏ.டி.எம் தான்.நன்றி
இன்னொரு பிரச்னையும் இருக்குங்க!
நாம பணம் எடுக்கும் போது நடுவில கரண்ட் கட் ஆகி ups-ம் வொர்க் ஆகலைன்னா ,நாம போயிட்டாலும் கரண்ட் வந்தப்பறம் பணத்த துப்பிடும் ஏ.,டி.எம்.எவ்வளவு நேரம் ஆனாலும் கரண்ட் வர வரைக்கும் அங்கயே பட்டறைய போட வேண்டியதுதான் வேற வழியில்லை!
//.ஒவ்வொரு ஏ.டி.எம் க்கும் செக்யூரிட்டி நியமிப்பதுடன்,தெரியாதவர்களுக்கு உதவியும் செய்தால் புண்ணியமாக இருக்கும்.//
அவசியம் செய்யவேண்டும்.
//நான் அவ்வளவு மோசமில்லை,200 ரூபாய் எடுப்பேன்.//???????
ஒருதடவை எனக்கு ATM-ல இருந்து பணம் கம்மியா வந்துச்சு..... ஆனா கரெக்ட் அமௌண்ட் டெபிட் ஆகிடுச்சு, அப்புறம் அந்த பேங் பிரான்ச்ல போய் சொல்லி, என் பேங்குல போய் சொல்லி, அந்த மிச்சத்தை வாங்குறதுக்குள்ள போதும் போதுனு ஆக்கிட்டானுங்க....
சில நேரம் பேலன்ஸ் பார்க்கும்போது முன்னுக்கு பின்னா காண்பித்து அதிர்ச்சியை கொடுக்கும் நண்பா வெள்ளி, சனி கிழமைகளில்.. திங்கள் கிழமை பார்த்தால் சரியாக இருக்கும்.. ஹய்யோ.. ஹய்யோ. பகிர்வுக்கு நன்றி நண்பா
@ராஜா MVS said...
சில இடங்களில் செக்யூரிட்டி இருந்தாலும் தெரியாதவர்கள் உபயோகிக்கும் முறையை செக்யூரிட்டியிடம் கேட்பதில்லை... பலருக்கு கூச்சம்...
சிலர் use பண்ணிதான் பாப்போமே கெட்டுபோனால் என்ன... நம்ம வூட்டுப்பொருளா என்ற எண்ணம் தான் சில இடங்களில் விளையாட்டு machineனாக மாறிவிடும் அவலம்...
உண்மைதான்.ஆனால் செக்யூரிட்டி இருந்தால் சிக்கலான நேரத்தில் சாட்சியாகவாவது இருக்கும்.நன்றி சார்
@ராஜன் said...
suryajeeva solvathu mathiri athigam
நன்றி சார்
@கோகுல் said...
இன்னொரு பிரச்னையும் இருக்குங்க!
நாம பணம் எடுக்கும் போது நடுவில கரண்ட் கட் ஆகி ups-ம் வொர்க் ஆகலைன்னா ,நாம போயிட்டாலும் கரண்ட் வந்தப்பறம் பணத்த துப்பிடும் ஏ.,டி.எம்.எவ்வளவு நேரம் ஆனாலும் கரண்ட் வர வரைக்கும் அங்கயே பட்டறைய போட வேண்டியதுதான் வேற வழியில்லை!
இது பெரும் கொடுமை சார்,வெளியூரா இருந்தா இன்னும் சிக்கல்.நன்றி
@RAVICHANDRAN said...
//.ஒவ்வொரு ஏ.டி.எம் க்கும் செக்யூரிட்டி நியமிப்பதுடன்,தெரியாதவர்களுக்கு உதவியும் செய்தால் புண்ணியமாக இருக்கும்.//
அவசியம் செய்யவேண்டும்.
நன்றி அய்யா!
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஒருதடவை எனக்கு ATM-ல இருந்து பணம் கம்மியா வந்துச்சு..... ஆனா கரெக்ட் அமௌண்ட் டெபிட் ஆகிடுச்சு, அப்புறம் அந்த பேங் பிரான்ச்ல போய் சொல்லி, என் பேங்குல போய் சொல்லி, அந்த மிச்சத்தை வாங்குறதுக்குள்ள போதும் போதுனு ஆக்கிட்டானுங்க....
நம்ம பேங்க் ஆளுங்க கடன் கேட்க வந்த மாதிரியே பேசுவாங்க! நன்றி சார்
@மாய உலகம் said...
சில நேரம் பேலன்ஸ் பார்க்கும்போது முன்னுக்கு பின்னா காண்பித்து அதிர்ச்சியை கொடுக்கும் நண்பா வெள்ளி, சனி கிழமைகளில்.. திங்கள் கிழமை பார்த்தால் சரியாக இருக்கும்.. ஹய்யோ.. ஹய்யோ. பகிர்வுக்கு நன்றி நண்பா
நம்ம நண்பர் ஒருத்தர் பதறியது நினைவுக்கு வருகிறது,நன்றி
இப்போது அடிக்கடி எஸ்.பி.ஐ ஏடிஎம் வேலை செய்ய மறுக்கிறது. எலெக்ட்ரானிக் மணி பாதுகாப்பு என்று கார்டை நம்பி வெளியூர் சென்றால் மாட்டிக் கொள்ளவேண்டியதுதான். கடந்த 5 நாட்களாக பிரச்சினைதான். ஆமாம், எஸ்.பி.ஐ சர்வர் அடிக்கடி ஹாக் செய்யப்படுகிறதாமே, உண்மையா?
உண்மைதான் நண்பரே..
இன்னும் சிலர் உள்ளே சென்று கதவு தானியங்கியாக மூடிக் கொண்டால் வெளியே வரத் தெரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டதான் இருக்கிறார்கள்..
இன்னும் சிலர் அதில் இரசீது வராவிட்டால் தம் கடவுச் சொல்லை யாராவது அறிந்துகொள்வார்களோ என்று அஞ்சிக் கொள்வர்கள்..
எனக்குத் தெரிந்த ஒருவர் உள்ளே சென்று கடவுச் சொல் கொடுத்து எவ்வளவு பணம் என்பதையும் கொடுத்துவிட்டு உள்ளேயே அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்..
இயந்திரத்தில் ஒரு சில மணித்துளிகளில் பணம் வந்தது..
இவர் எடுக்காமல் இன்னும் பேசிக்கொண்டிருந்தார்...
அதை அவமானமாகக் கருதிய பணம் மீண்டும் உள்ளேயே போய்விட்டது..
அருகே இருந்த வங்கி உதவியாளரை அழைத்துச் சொன்னபின்..
வங்கி மேளாலரைப் பார்த்து ஒரு வழியாக உள்ளே போன பணத்தை மீண்டும் பெற்றார் அவர்...
அனைவருக்கும் உள்ள முக்கியமான பிரச்சினை இது...
பலருடைய அனுபவங்களின் தொகுப்பாக உள்ளது.
இதைப் படிச்சுட்டு யாரும் இப்படி சொல்ல மாட்டங்க!
எல்லாம் எனக்குத் தெரியும், உன் வேலையைப் பார்!
நன்றி.
இனிய இரவு வணக்கம் அண்ணாச்சி,
வங்கி ஊழியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய விடயத்தினைப் பதிவாக்கியிருக்கிறீங்க.
எம் நாடுகளில் ஏ.டி.எம் பாவனை பற்றியும் மக்களுக்கு அம் மெசின்களை உபயோகிப்பது பற்றியும் சரியான விளக்கம் கொடுத்தால் தான் நல்ல பலனை அடைய முடியும் என்பதனை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீங்க.
நல்ல கருத்துக்கள் பாஸ்.
பேசாம உள்ளே ஒரு ஆளை உட்கார வச்சுரலாமோ...
Post a Comment