வழியில் கிடைத்த எதாவதொன்றை விழுங்கி விட்டு பறக்கும் இன்றைய அவசர
யுகத்தில் இழந்தவற்றுள் முக்கியமானது நமது உடல்நலம்.ஆம்.சுவர்
இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்.உணவுக் குழாய் சுவர்களை அரிக்கும்
ஒரு உடல் நலக்கோளாறு நெஞ்செரிச்சல்.உணவு செல்லும் பாதையில் அமிலம் பொங்கும்
அவஸ்தை.
வயிற்றில் உற்பத்தியாகும் அமிலம்
உணவுப்பாதையில் நெஞ்சு வரை பயணித்து இதயத்தில் பிரச்சனையா என்று
கவலைப்படும் அளவுக்கு வாட்டும்.உண்மையில் நெஞ்சுக்கும் இதற்கும்
சம்பந்தமில்லை.அப்பகுதியில் எரிச்சலும்,அரிக்கும் உணர்வு ஏற்படும் அவ்வளவே.
வழக்கமாக செரிமானம் ஆகாத உணவுகள்,-இவை பெரும்பாலும் மசாலா,துரித
உணவுகள்-இக்கோளாறை உருவாக்கும்.புகை பிடித்தல்,மது,அளவுக்கதிகமான
உணவு,கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள்,அதிக எடை போன்றவையும்
காரணம்.சிலருக்கு ஒத்துக்கொள்ளாத உண்வுகளை உண்பதாலும் ஏற்படும்.
பொதுவாக, தொண்டை,நெஞ்சு பகுதியில் எரிச்சல்,வயிற்றின் உணவு நுழையும்
பகுதியில் வலி,வாந்தி,குமட்டல்,இருமல்,உடலின் பின் பகுதியில் கூட
சிலருக்கு வலி இருக்கலாம்.இத்தகைய அறிகுறிகள் இருக்குமானால் உடனே கவனிக்க
வேண்டும்.
நெஞ்செரிச்சலில் இருந்து காத்துக்கொள்ள
• புகை பிடித்தல்,மதுவை தவிர்ப்பது(ஒட்டு மொத்த உடல் நலத்திற்கும்)
• போதுமான அளவுக்கு நீர் அருந்துங்கள்.
• துரித உணவுகளை தவிர்க்கவும்
• அமிலம் சேர்க்கப்பட்ட குளிர்பான்ங்களை தவிர்த்து பழச்சாறுகளை தேர்ந்தெடுக்கவும்.
• வறுக்கப்பட்ட உணவு,எரித்த இறைச்சி போன்றவை செரிமானத்தின் எதிரி.
• காபி அதிக அமிலத்தை உற்பத்தி செய்யும்.
வயிற்றில் ஒரு பங்கு உணவு,ஒருபங்கு நீர்,ஒரு பங்கு காலியாக இருப்பது என்று தீர்மானித்துக்கொண்டால் அதிகம் தின்பதை தவிர்க்கலாம்.
சிலருக்கு குறிப்பிட்ட சில உணவுகள் ஒவ்வாமையை உருவாக்கலாம்.இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.அத்தகைய உணவுகளை தவிர்ப்பதன் மூலம் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபடலாம்.(தலைப்பு மாற்றப்பட்ட மீள்பதிவு)
24 comments:
நானும் இந்த அதிக அமில சுரப்பினால் பலகாலம் அவஸ்த்தைப்பட்டிருக்கிறேன். உபயோகமான பதிவு நண்பரே!
நல்ல விசயம் நன்றி நண்பா
நல்ல பதிவு. வயிற்றைக் காயப் போடாமல் குறித்த நேரத்தில் சாப்பிட வேண்டும், அதிகமாக இல்லாமல் அளவாக சாப்பிட வேண்டும், காரம், புளி, எண்ணெய் தவிர்க்க வேண்டும்.
@அம்பலத்தார் said...
நானும் இந்த அதிக அமில சுரப்பினால் பலகாலம் அவஸ்த்தைப்பட்டிருக்கிறேன். உபயோகமான பதிவு நண்பரே!
நன்றி நண்பரே!
@மாய உலகம் said...
நல்ல விசயம் நன்றி நண்பா
THANKS
@ஸ்ரீராம். said...
நல்ல பதிவு. வயிற்றைக் காயப் போடாமல் குறித்த நேரத்தில் சாப்பிட வேண்டும், அதிகமாக இல்லாமல் அளவாக சாப்பிட வேண்டும், காரம், புளி, எண்ணெய் தவிர்க்க வேண்டும்.
ஆமாம் அய்யா! நன்றி
உபயோகமான பதிவுக்கு நன்றி
நன்றாக பசியெடுத்தபின்னால் சாப்பிட்டாலே இந்த பிரச்சினை வராது,
எனது உடலுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினை இதுதான் ...இதயத்தில் ஏதேனும் பாதிப்பு இருக்குமோ என்றுகூட பயப்பட்டேன் ...ஆனால் மருத்துவர் அப்படி ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார்
மாப்ள முக்கியமான மற்றும் உபயோகமான பதிவுக்கு நன்றி!
//வயிற்றில் ஒரு பங்கு உணவு,ஒருபங்கு நீர்,ஒரு பங்கு காலியாக இருப்பது என்று தீர்மானித்துக்கொண்டால் அதிகம் தின்பதை தவிர்க்கலாம்.//
இதை எப்படி கண்டுபிடிப்பது என விளக்கினால் நலம்.
இந்த சந்தடியில் குறைவாக சாப்பிட்டு வேறு விதமான பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.
முடிந்த அளவு நம் மனதுக்கு வயிறு நிரம்பிவிட்டது என்ற உணர்வு ஏற்படும் வரை சாப்பிடலாம் என நினைக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
வணக்கம்!நெஞ்செரிச்சலும் அதனால் ஏற்பட்ட தொல்லைகளும் எனக்கு வந்துள்ள இந்த நேரத்தில் சொல்லி வைத்தாற் போல தங்கள் வலைப் பதிவும் வந்துள்ளது.ஆலோசனைக்கு நன்றி!
என்னிக்காவது ரொட்டி,பன்னீர் சப்ஜி என்று சாப்பிட்டு விட்டு வந்தால் இந்தப் பிரச்சினை கூடவே வருகிறது!
பகிர்வுக்கு நன்றி.
நல்ல தகவல்கள். இந்த பிரச்சனையால் அவதிப்பட்டவன் என்ற முறையில் சொல்கிறேன். நேரத்துக்கு சாப்பிடுவதும் மிக முக்கியம்.
நல்ல பயனுள்ள தகவல்... நண்பரே...
பயனுள்ள தகவல்.. பகிர்வுக்கு நன்றி
மணத்தக்காளி கீரை இந்த பிரச்சினையை சரி செய்யும் என்று எங்கோ படித்த நினைவு தோழரே
நேரத்திற்கு உணவு, இரவில் தூங்க செல்ல 2 மணி நேரத்திற்கு முன் உணவு... டென்சன் குறைத்தல், காபி/டீ/கோலாக்கள் தவிர்த்தல், எண்ணை, காரம் குறைத்தல் கட்டாயம் தேவை...!
உணவுப் பிரச்சனையினால் பெரும்பாலானோருக்கு உண்டாகும்
உபாதையை அருமையா சொல்லியிருகீங்க நண்பரே.
அவசர யுகத்தில் இது மிகவும் தேவையான பதிவு. எலுமிச்சை சாறும் இஞ்சி சாறும் பலன் தரும்
நல்ல தகவல தந்துருக்கீங்க
உங்களின் ஒவ்வொரு பதிவும் மிக முக்கியமான தகவல் சார் மிக்க நன்றி....
வணக்கம் அண்ணே,
நலமா?
நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
டைம்மிற்கு சாப்பிடவில்லை என்றால் எனக்கும் வயிறு கட புட கட புட எனச் சத்தம் போடத் தொடங்கிடும்,
அத்தோடு வயிற்றில் கோளாறு என்றால் வாய்வும் சத்தமாகப் போகும்,
நேரத்திற்கு உணவினை உட்கொள்வதும்,
உறைப்பான உணவுகளைத் தவிர்ப்பதும், எண்ணெய்த் தன்மையுள்ள உணவுகளைத் தவிர்ப்பதும், குளிர்ந்த பசுப்பாலினை குடிப்பதும் தான் இந்த அமிலப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும்.
நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
குடலில் புற்று இருந்ததால், வெட்டி அகற்றப் பட்டு, சிகிச்சையின் தொடர்ச்சியாக குடலின் ஒரு பகுதி வயிற்றுக்கு வெளியே வைத்து தைக்கப் பட்டிருக்கும் நண்பனை காண நேற்று மருத்துவமனை சென்றேன். வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் குடலை சுற்றி நெருப்பால் வெந்தது போன்ற ரணம். ஏன் இப்படி எனக் கேட்ட போது, அவன் தாய் தன் புறங்கையை காட்டினார்கள். அவர்கள் கையிலும் நெருப்பு பட்ட கொப்புளங்கள். குடலிலிருந்து வரும் அமிலம் (அவனை சுத்தம் செய்கையில்) பட்டு வெந்ததாக சொன்னார்கள். உடலை மதிக்காமல், நாக்கை மதிக்கும் நண்பர்களுக்கு புரிய வேண்டும் என்பதால் பகிர்ந்து கொண்டேன்.
Post a Comment