Thursday, November 24, 2011

குடிப்பவர்களை அடித்துத் திருத்த முடியுமா??


அன்னா ஹசாரே சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் பாவம்.குடிப்பவர்களை மூன்றுமுறை எச்சரிக்க வேண்டுமாம்.அப்புறம் கடவுள் முன்னால் சத்தியம் வாங்க வேண்டுமாம்.திருந்தாவிட்டால் கம்பத்தில் கட்டிவைத்து பிரம்பால் அடிக்கவேண்டும் என்கிறார்.ஏராளமான கண்டன்ங்கள்.தலீபான் தீவிரவாதிகள் ஸ்டைல் தண்டனை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி சொன்னார்.
                               ஹசாரே சொல்கிற மாதிரி திருத்த முடிந்துவிட்டால் சமூகத்தில் பல பிரச்சினைகளை சரி செய்து விடலாம்.இப்படி அவர் வயதில் இருக்கும் விஷயம் தெரியாதவர்கள் நினைக்க வாய்ப்பிருக்கிறது.மதுவில்,போதை மருந்துகளில் எப்போதாவது பயன்படுத்துபவர் முதல் அடிமையானவர்கள் வரை வித்தியாசங்கள் உண்டு.

                               என்னுடைய அனுபவத்தில் பல குடும்பங்களில் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்துவிட்டார்கள்.மனைவி பிறந்த வீட்டுக்கு போய் குடும்பம் நட்த்த வரமாட்டேன் என்பது முதல் சத்தியம் வாங்குவது வரை ஏராளமான முயற்சிகள்.ஆனால் பெரிய வெற்றியை அடைந்தவர்கள் யாருமில்லை.
                                நண்பன் ஒருவனின் தந்தை மதுவுக்கு அடிமையாகிவிட்டார் என்று தோன்றியது.வீட்டில் ஒரு பொருளைக் கூட வைக்க முடியாது.கண்ணில் பட்டால் எடுத்துப்போய் விற்று குடித்துவிட்டு வந்து விடுவார்.அவருக்கு ஒரே பையன்.மிகுந்த பாசம்.பையன் வீட்டை விட்டு ஓடிப்போவேன் என்று மிரட்டிய பிறகு குடிப்பதை நிறுத்திவிட்டார்.பலருக்கு மிகப்பெரிய ஆச்சர்யம்.

                                 இன்னொருவர் கல்லூரிப் படிப்பு வரை படித்திருந்தார்.குடித்துவிட்டால் ஊரில் பல பிரச்சினைகள்.கெட்ட வார்த்தைகள்,சண்டை என்று போய்க்கொண்டிருந்த்து.பல முறை நிறுத்தி விடுவதாக சத்தியம் செய்தும் நிறுத்த முடியவில்லை.உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு போனால் மருத்துவர் நிறுத்தியாக வேண்டும் என்று சொல்லிவிட்டார்.ஆனாலும் முடியவில்லை.
                                  மருத்துவரிடம் “ நான் நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் முடியவில்லை,என்று சொன்னார்.அவருக்கு நிஜமாகவே எண்ணம் இருக்கிறது.ஆனால் விட முடியவில்லை.சென்னையில் உள்ள TTK  மையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.ஒரு மாதம் தங்கி ஆலோசனையும்,சிகிச்சையும் பெற வேண்டும்.
                                  மது அடிமைகளுக்கு கவுன்சலிங் முதல் சிகிச்சை வரை ஆளுக்குத்தகுந்த மாதிரி மீட்கும் வழிமுறைகள் உண்டு.சிலர் நல்ல ஆலோசனையிலேயே நிறுத்திவிடுவதும் உண்டு.குறிப்பிட்ட காலவரையறை வைத்துக்கொண்டு படிப்படியாக நிறுத்தவேண்டும்.இப்படி விட்டுவிட்டவர்களும் இருக்கிறார்கள்.சிலருக்கு மருந்துகளும்,ஆதரவுக்குழு ஆலோசனைகளும் தேவைப்படும்.

                                  சென்னையில் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்றவர் குடியிலிருந்து மீண்டுவிட்டார்.அதற்குப் பின் குடிப்பவர்கள் பக்கத்தில் இருந்தாலும் அவருக்கு அந்த எண்ணம் ஏற்படுவதில்லை என்று சொன்னார்.TTK  மையம் பலருக்கு இப்படி மறுவாழ்வு அளித்து வாழ வைத்திருக்கிறது.ஹசாரே முறை கடைப் பிடித்தால் மறுவாழ்வு மையங்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.
                                   நாம் பழகிவிட்ட எந்த பழக்கத்தையும் அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது.விதிவிலக்காக சிலர் நினைத்தவுடன் நிறுத்திவிடுவதும் சாத்தியம்தான்.இங்கே உள்ளம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.அடித்து,சத்தியம் வாங்கியெல்லாம் திருத்தி விட முடியாது.தினமும் இரவில் அல்லது விழாக்களில் மட்டும் மது அருந்தி பிரச்சினை இல்லாமல் இருப்பவர்கள் உண்டு.பணத்தைக் கரைத்து,பிரச்சினை ஆகி,வாழ்க்கையை பாதிக்கும் நிலைக்கு போவது சிக்கல்.இதை ஹசாரே சொல்கிற மாதிரி சாத்தியமில்லை.
-

21 comments:

சென்னை பித்தன் said...

எனக்குத்தெரிந்து TTK மையத்தில் சேர்ந்து குணமடைந்த இரு நண்பர்கள் உள்ளனர்.
நல்ல பகிர்வு.

கார்த்தி கேயனி said...

நல்ல தீர்வு

rufina rajkumar said...

டாஸ்மாக் வைச்சு அரசு சம்பாதிப்பதில் உள்ள நியாயம் என் சிற்றறிவுக்கு எட்டவே மாட்டேன் என்கிறது

மகேந்திரன் said...
This comment has been removed by the author.
மகேந்திரன் said...

நானும் இந்த மையம் பற்றி கேல்பிப்பட்டிருக்கிறேன் நண்பரே..
ஆனால் என்னளவில் நான் சிந்திப்பது..
சொல்லித் திருந்துவதில்லை
சொல்லாமல் அதன் தீயவைகளை உணர்ந்து
நாமாக நம்மை அடக்கி ஆண்டுகொள்வதே நன்று ...
ஆக்கமிகு விழிப்புணர்வு பதிவுகளுக்கு நன்றி நண்பரே...

ஸ்ரீராம். said...

ஹசாரே சொல்வது போலச் செய்ய கம்பங்கள் போதாது! டி அடிக்ஷன் சென்டரில் சேர்க்கப் பட்டு திருந்தியவர்களையும் பார்த்திருக்கிறேன். திருந்தாத சிலரையும் பார்த்திருக்கிறேன். எப்படி அது இவர்களை அடிமையாக்குகிறது என்பது ஆச்சர்யம்.

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

எனக்குத்தெரிந்து TTK மையத்தில் சேர்ந்து குணமடைந்த இரு நண்பர்கள் உள்ளனர்.
நல்ல பகிர்வு.

TTK சேவை நன்றாகவே இருக்கிறது அய்யா! நன்றி

shanmugavel said...

@கார்த்தி கேயனி said...

நல்ல தீர்வு

நன்றி

shanmugavel said...

@rufina rajkumar said...

டாஸ்மாக் வைச்சு அரசு சம்பாதிப்பதில் உள்ள நியாயம் என் சிற்றறிவுக்கு எட்டவே மாட்டேன் என்கிறது

எனக்கும் எட்டவில்லை,நன்றி

shanmugavel said...

@மகேந்திரன் said...

நானும் இந்த மையம் பற்றி கேல்பிப்பட்டிருக்கிறேன் நண்பரே..
ஆனால் என்னளவில் நான் சிந்திப்பது..
சொல்லித் திருந்துவதில்லை
சொல்லாமல் அதன் தீயவைகளை உணர்ந்து
நாமாக நம்மை அடக்கி ஆண்டுகொள்வதே நன்று ...
ஆக்கமிகு விழிப்புணர்வு பதிவுகளுக்கு நன்றி நண்பரே...

இது நோயும் கூட! ஆலோசனையும்,சிகிச்சையும் தேவை.நன்றி நண்பரே!

shanmugavel said...

@ஸ்ரீராம். said...

ஹசாரே சொல்வது போலச் செய்ய கம்பங்கள் போதாது! டி அடிக்ஷன் சென்டரில் சேர்க்கப் பட்டு திருந்தியவர்களையும் பார்த்திருக்கிறேன். திருந்தாத சிலரையும் பார்த்திருக்கிறேன். எப்படி அது இவர்களை அடிமையாக்குகிறது என்பது ஆச்சர்யம்.

குடிப்பவருக்கும் திருந்த வேண்டும் என்றஎண்ணம் இருக்கவேண்டும்,நன்றி சார்

பாலா said...

பாவம் வயசானவரு தப்பா சொல்லிட்டாரு விட்டிருங்க....

குடிப்பவர்கள் மனது வைத்தால் ஒழிய குடியை நிறுத்த முடியாது.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் நண்பரே! உங்கள் தளத்தை தொடர்ந்து படிக்கும் நண்பர்களில் நானும் ஒருவன். ஒரு மாதத்திற்கு முன்பு தான் நானும் ஒரு தளத்தை ஆரம்பித்து உள்ளேன். (இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.) நேற்று "மனித வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்ன?" என்கிற தலைப்பில் எழுதி உள்ளேன். பாருங்கள். அதற்கு ஒரு சின்ன பொறி... உங்களின் பழைய பதிவுகள் தான். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

சத்ரியன் said...

//உள்ளம்தான் முக்கியபங்கு வகிக்கிறது..//

உண்மை.

Sankar Gurusamy said...

ஏதோ ஹசாரே அவருக்கு தெரிஞ்ச / கடைபிடிக்கிற ஒரு வழியை சொல்லி இருக்கிறார். இருந்தாலும் குடி என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஒரு வழக்கம் என்பதும், அதை முற்றிலும் இந்த உலகில் இருந்து அப்புறப்படுத்த முடியும் என்பதும் முடியாது.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

suryajeeva said...

ஒரு சிலர், தான் கடை பிடிக்கும் விஷயம் என்பதால் அதை சரி என்று நினைத்துக் கொண்டு அதை செய்ய வேண்டும் என்கிறார்கள்... எது சரியாக இருக்கிறதோ அது சரியாக இருக்கும் பொழுதே சரியாக இருப்பதில்லை என்று ஒருவர் சொல்வார்... அதன் படி தீர ஆய்வு செய்தால் தான் எது சரி எது தவறு என்று முடிவுக்கு வர முடியும்... நீங்கள் சொல்வது தான் சரி என்று நானும் சொல்வேன்...

ராஜா MVS said...

தண்டனைகள் ஒருவனை மாற்றிவிடும் என்றால் இரண்டாவது முறை ஒருவரும் தவறு செய்திருக்க மாட்டார்கள்...

சசிகுமார் said...

திருந்துவாங்களோ எனக்கு கொஞ்சம் டவுட் தான் சார்...

சசிகுமார் said...

தமிழ்மணம் 5

மதுரன் said...

குடிப்பவர்களை அடித்து திருத்தலாம் என்பது முட்டாள்தனமான கருத்து

ஓசூர் ராஜன் said...

நாட்டுடமை ஆக்கப் பட்ட குடியைப் பற்றி,காந்தி தேசத்தில் கவலைப் படும் நீங்க ரொம்ப நல்லவரா தெரியுறீங்க!