Wednesday, November 30, 2011

எய்ட்ஸ்-பாலியல் தொழிலாளி முதல் குடும்பத்துப் பெண் வரை.


கண்ணிவெடியைப்போலத்தான் ஆகிவிட்ட்து.தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது என்று சொல்வார்கள்.கலாச்சாரத்தில் பெருமை கொள்ளும் இந்தியாவின் நிலை பல விஷயத்திற்கு பொருந்தும்.அதில் எய்ட்ஸ் முக்கியமானது.1986 ல் சென்னையில் ஆறு பாலியல் தொழிலாலார்களிடம் முதன்முதலாக எய்ட்ஸ் கண்டறியப்பட்ட்து.
                             நாம் யோசிக்க ஆரம்பித்த்து அதற்குப்பிறகுதான்.ஆனால் உலகம் 1981 ஆம் ஆண்டிலிருந்தே விழித்துக்கொண்ட்து.நம்முடைய கலாச்சாரத்திற்கு எய்ட்ஸ் அச்சுறுத்தலாக இருக்காது என்று பலரும் நினைத்தார்கள்.அப்புறம் உலகம் இந்தியாவை தெரிந்துகொள்ள அதிக காலம் தேவைப்படவில்லை.
                              இப்போது எச்.அய்.வி தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் நிற்கிறது.ஆண்,பெண்,குழந்தைகள் என்று எல்லாமும் இதில் அடக்கம்.துவக்கத்தில் நகர்ப்புறத்திலும்,பாலியல் தொழிலாளர்களிடமும் அதிக பரவல் காணப்பட்ட்து.ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல கிராமப்புறத்திலும்,குடும்ப பெண்களிடமும் தொற்றுக்கள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்ட்து.
                              எச்.அய்.வி. என்பது இந்த மாதிரி ஆட்களிடம்தான் இருக்கும் என்று சுட்டிக்காட்டுவது இன்று சாத்தியமல்ல! துவக்கத்தில் பாலியல் தொழிலாளர்,ஓரினச்சேர்க்கையாளர்கள்,போதை ஊசி பயன்படுத்துவோருக்குதான் இருக்கும் என்று கருதப்பட்ட்து.பிறகு வாகன ஓட்டுனர்கள்,இடப்பெயர்வு போன்றவை கவனத்துக்குள்ளாயின.
                               இவர்களுக்குத்தான் இருக்கும் என்ற அடையாளம் மாறிப்போய்விட்ட்து.2000 த்துக்குப் பிறகு குடும்ப பெண்களும்,அவர்களுடைய குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது புள்ளிவிபரம் சொல்லியது.இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது கணவர்களால் தொற்றை சுமக்கும் அப்பாவிகள்.சிலர் கள்ளக்காதல் பேர்வழிகள்.விதவைகள்,பெற்றோர் இல்லாத அநாதைக்குழந்தைகள் அதிகரித்தார்கள்.நகரங்களைவிட கிராமங்களில் அதிகம் பரவியிருந்த்து.
                              இன்று கண்ணிவெடி போல எல்லா இட்த்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.தமிழ்நாடு அதிக தொற்றுள்ள மாநிலங்களில் ஒன்று.ஒவ்வொரு கிராமத்திலும் ஓரிருவராவது எச்.அய்.வி தொற்றுள்ளவர்களாக இருக்க வாய்ப்புண்டு.ஆனால் அவர்கள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை.தொடுவதாலோ,பழகுவதாலோ ஒட்டிக்கொள்ளாது என்ற போதிலும் ஒதுக்குவதும் கறைப்படுத்துதலும் தொடர்கின்றன.
                               ஆரம்பத்தில் இருந்தே எய்ட்ஸ் உயிர்க்கொல்லி என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றிவிட்ட்து.ஊடகங்களில் எலும்பும் தோலுமாக நோயாளிகள் அச்சுறுத்தினார்கள்.இன்று எச்.அய்.வி கொல்லும் நோயல்ல!(not a killer disease) சர்க்கரை,ரத்த கொதிப்பு போல தொடர் நலக்குறைவுதான்.வாழ்நாள் முழுக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.மற்ற மனிதர்கள் போல இயல்பாக வாழமுடியும்.
                                மக்களின் மனோபாவம் மாறவில்லை.எனக்கு நீரிழிவு நோய் என்று சொல்வதைப்போல எய்ட்ஸ் என்று சொல்லமுடியாது.மோசமான நடவடிக்கை கொண்டவர்களாகவே பார்க்கிறார்கள்.உயிர்க்கொல்லி என்று அஞ்சுகிறார்கள்.ஒதுக்குவது மனித்த் தன்மையற்ற செயல் என்பதோடு நோயைக் கட்டுப்படுத்துவதிலும் பின்னடைவு ஏற்படும்.
                                 இன்று இந்தியா பல்வேறு நிதியுதவிகளுடன் பரிசோதனை,சிகிச்சை,விழிப்புணர்வு போன்றவற்றை செய்து வருகிறது.எத்தனை காலத்துக்கு நிதியுதவி இருக்கும் என்று சொல்லமுடியாது.அவை நிறுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான கோடிகளை இப்பணிகளுக்காக ஒதுக்கவேண்டியிருக்கும்.அந்த சுமை ஒவ்வொரு இந்தியனின் தலை மீதும் ஏறும்.எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு,கட்டுப்பாடு போன்றவற்றில் நம் ஒவ்வொருவருடைய பங்கேற்பும் அவசியம்.
தொடர்புள்ள எனது பதிவு:   
             எய்ட்ஸ் -தெரிந்ததும் தெரியாததும்      
டிசம்பர்-1 உலக எய்ட்ஸ்தினத்திற்கான பதிவு.
-

23 comments:

மகேந்திரன் said...

ஆம் நண்பரே,
தொடுதலினால் பரவாத இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு இன்னும் வரவேண்டும், தகாத உடலுறவினால் மட்டுமல்லாது இரத்த பரிமாற்றத்திலும் இந்த நோய் பரவுகிறது என்ற கருத்துக்கள் எல்லோருக்கும் போய் சேரவேண்டும்...
இன்றைய சூழலில் பொதுவாக எல்லோருக்கும் விழிப்புணர்வு இருந்தாலும் இந்த நோயை வெளியே சொல்லமுடியாமல் சில மறைப்பதும். நோய் இருப்பவர்களை தள்ளிவைத்து பார்ப்பதும் இன்னும் தொடர்வது வேதனைக்குரியதே...
அருமையான விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி நண்பரே...

ஸ்ரீராம். said...

தேவையான அவசியமான பதிவு. இது பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்களே அதிகம். ஒரு கட்டத்தில் மருத்துவத் துறையிலேயே தொட்டால் பரவும் என்ற எண்ணம் இருந்தது. இப்பவும் கூட எத்தனை பேருக்கு முழு விவரம் தெரிந்திருக்கும்?

சென்னை பித்தன் said...

அரசு விளம்பரங்கள் பல செய்தும் தேவையான அளவு விழிப்புணர்வு பரவவில்லைதான்.
நல்ல பதிவு.
த.ம.3

shanmugavel said...

@மகேந்திரன் said...

ஆம் நண்பரே,
தொடுதலினால் பரவாத இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு இன்னும் வரவேண்டும், தகாத உடலுறவினால் மட்டுமல்லாது இரத்த பரிமாற்றத்திலும் இந்த நோய் பரவுகிறது என்ற கருத்துக்கள் எல்லோருக்கும் போய் சேரவேண்டும்...

உண்மை நண்பரே நன்றி

shanmugavel said...

@ஸ்ரீராம். said...

தேவையான அவசியமான பதிவு. இது பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்களே அதிகம். ஒரு கட்டத்தில் மருத்துவத் துறையிலேயே தொட்டால் பரவும் என்ற எண்ணம் இருந்தது. இப்பவும் கூட எத்தனை பேருக்கு முழு விவரம் தெரிந்திருக்கும்?

இப்போது விழிப்புணர்வு வந்திருக்கிறது.ஆனாலும் இன்னும் முழுமையாக தேவை.நன்றி

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

அரசு விளம்பரங்கள் பல செய்தும் தேவையான அளவு விழிப்புணர்வு பரவவில்லைதான்.
நல்ல பதிவு.

நன்றி அய்யா!

Kousalya said...

விழிப்புணர்வு கொடுப்பது இன்னும் தீவிரமாக்க பட வேண்டும்...

பெற்றோர்கள் செய்யும் தவறுகளால் அவர்களுக்கு பிறக்கும் ஒன்றுமறியாத குழந்தைகள் வேறு பாதிக்கபடுகிறார்கள்.

இன்றைய தினத்திற்கு தேவையான விழிப்புணர்வு பதிவு. நன்றிகள்.

ராஜா MVS said...

விழிப்புணர்வு ஒருபுறம் கொடுத்தாலும்.
நோய் தாக்கப்பட்ட நபர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. பிறகு பழி வாங்குகிறேன் என்று மறைமுகமாக சில பேர் கிளப்புகிறார்கள்(மும்பையில் ஒரு பெண் பற்றி செய்தி படித்திருப்பிர்கள்) இதுவே அவர்கள் உடலில் உள்ள நோய் மற்றவர்களுக்கு பரவ ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது... இதுபோன்றவர்கள் மேல் தவறு இல்லை, அது ஒருவித மனஅழுத்தமே அவர்கள் அப்படிச் செய்ய காரணம். முதலில் இவர்களுக்கு தான் முறையான கவுன்சிலிங் தேவை.

ராஜா MVS said...

நல்ல ஆக்கப்பூர்வமான பகிர்வு... நண்பரே...

தனிமரம் said...

விழிப்புணர்வுப் பதிவை பொருத்தமான நேரத்தில் தந்துள்ளீர்கள் ஐயா!

PUTHIYATHENRAL said...

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

shanmugavel said...

@Kousalya said...

விழிப்புணர்வு கொடுப்பது இன்னும் தீவிரமாக்க பட வேண்டும்...

பெற்றோர்கள் செய்யும் தவறுகளால் அவர்களுக்கு பிறக்கும் ஒன்றுமறியாத குழந்தைகள் வேறு பாதிக்கபடுகிறார்கள்.

இன்றைய தினத்திற்கு தேவையான விழிப்புணர்வு பதிவு. நன்றிகள்.

தங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி

shanmugavel said...

@ராஜா MVS said...

விழிப்புணர்வு ஒருபுறம் கொடுத்தாலும்.
நோய் தாக்கப்பட்ட நபர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. பிறகு பழி வாங்குகிறேன் என்று மறைமுகமாக சில பேர் கிளப்புகிறார்கள்(மும்பையில் ஒரு பெண் பற்றி செய்தி படித்திருப்பிர்கள்) இதுவே அவர்கள் உடலில் உள்ள நோய் மற்றவர்களுக்கு பரவ ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது... இதுபோன்றவர்கள் மேல் தவறு இல்லை, அது ஒருவித மனஅழுத்தமே அவர்கள் அப்படிச் செய்ய காரணம். முதலில் இவர்களுக்கு தான் முறையான கவுன்சிலிங் தேவை.

அவர்களையும் மனிதர்களாகநினைத்து நடத்தினாலே பாதி பிரச்சினை குறைந்து விடும்,நன்றி

shanmugavel said...

@தனிமரம் said...

விழிப்புணர்வுப் பதிவை பொருத்தமான நேரத்தில் தந்துள்ளீர்கள் ஐயா!

நன்றி சார்.

RAVICHANDRAN said...

நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.

Sankar Gurusamy said...

மிக அவசியமான விழிப்புணர்வுப்பதிவு..

நோயால் சாவதைவிட அதன் பயத்தால் சாகிறவர்கள்தான் அதிகம் என கேள்விப்பட்டிருகிறேன்..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

சசிகுமார் said...

விழிப்புணர்வு பதிவு சார்... tm 7

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான நேரத்தில் சரியான பதிவு.
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி நண்பரே!

நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

சத்ரியன் said...

ஒவ்வொருவரும் அவரவரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் எண்ணம் வந்தாலே, இந்நோயை வேரறுத்து விடலாம். சிறப்பான பகிர்வுங்க.

துஷ்யந்தன் said...

பொருத்தமான நேரத்தில் மிக அவசியமான பதிவை தந்து இருக்கீங்க பாஸ்.... நல்ல விழிப்புணர்வு பதிவு..... நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டேன்.... நன்றி

shanmugavel said...

@Sankar Gurusamy said...

மிக அவசியமான விழிப்புணர்வுப்பதிவு..

நோயால் சாவதைவிட அதன் பயத்தால் சாகிறவர்கள்தான் அதிகம் என கேள்விப்பட்டிருகிறேன்..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

ஆமாம் ஆரம்பத்தில் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள்.நன்றி

shanmugavel said...

@ சசிகுமார்
@ரவிச்சந்திரன்
@ திண்டுக்கல் தனபாலன்,
@ துஷ்யந்தன்
@சத்ரியன்

அனைவருக்கும் நன்றி

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,

எயிட்ஸ் தினத்திற்கேற்ற சிறப்பான ஓர் பதிவினைத் த்ந்திருக்கிறீங்க.

இன்றைய இந்தியாவில் எயிட்ஸ் நோயின் பரவல், தொற்றுக்கு ஆளாகிய மக்கள் பிரிவினர் என விளக்கிக் கூறியிருக்கிறீங்க.

நல்லதோர் பதிவு அண்ணா.