Saturday, August 6, 2011

நட்பு-வாழ்வின் வளர்ச்சியும் தளர்ச்சியும்

  ஒருவரது வாழ்வின் வளர்ச்சியும்,தளர்ச்சியும்  நிர்ணயிக்கப்படுவது எப்படி? தனி மனிதன் ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகள் தான் அதை தீர்மானிக்கின்றன.ஒருவருக்கு குடும்பத்தில் உள்ள உறவுகளுக்கு அடுத்து மிக நெருக்கமாக உணர்வது நட்பு.தாய்,தந்தை ,கணவன் ,மனைவியிடம் பேச முடியாத விஷயங்களையும் சில நேரம் நட்பு மட்டுமே அறியும்.


                                                              என்னுடைய பல நண்பர்களும் யாரிடமும் கொட்ட முடியாத பல உணர்வுகளை என்னோடு பகிர்ந்து கொண்டவர்களே! ஆனால் வெறும் பழக்கம் நட்பென்று சொல்லப்படுவதில்லை.சிலர் கேட்டார்கள்.இவர் உங்களுக்கு நெருங்கிய நண்பரா? எனக்கு ஆச்சர்யம்.அதிகம் ஒருவரோடு பேசுவதை வைத்து நெருங்கிய நண்பர் என்று சொல்லமுடியுமா?

                                                                உடன் பணியாற்றும் ஒருவரை சந்திக்கப் போவதுண்டு.அவர் வெளியூர்க்காரர்.பக்கத்து வீட்டில் இருந்தவர் திறமையான மருத்துவர்.அவர் கேட்டார்,"இவர் உங்கள் நண்பரா?" கொஞ்சம் கேலி செய்தது போல தொனி.அவர் சொல்ல வந்தது இதுதான் ,உங்களுடைய ஆர்வத்துக்கும் ,அவருடைய ஆர்வத்துக்கும் சம்பந்தமே இல்லை.எப்படி நண்பராக இருக்க முடியும் என்பதே!



                                                                 ஒரே மாதிரியான ஆர்வம் உள்ளவர்கள் நண்பர்களாக இருப்பதுதான் பொருத்தமானது.நீடித்திருப்பதும் அதுதான்.சிலரை மது நண்பர்களாக்கிவிடுகிறது.சிலருக்கு புகை,சிலருக்கு பணிச்சூழல் .பேனா நட்பு இன்று இருக்கிறதா தெரியவில்லை.பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன்.

                                                                   வளர்ச்சியும் தளர்ச்சியும் என்றேன்.குறிப்பிட்ட வயதுகளில் ஏற்படும் நட்பே வாழ்வின் அத்தனை நல்லது கெட்டதுகளையும் உருவாக்கித்தருகிறது.சகவாச தோஷம் என்பார்கள்.நட்பு வாழ்கையை உருவாகித் தந்திருக்கிறது.வாழ்க்கையை தொலைக்கவும் காரணமாக இருந்திருக்கிறது.பெரும்பாலான பழக்க வழக்கங்கள் நண்பர்கள் மூலமாகவே ஏற்படுகின்றன.



                                                                    என்னுடைய நண்பர்களை பலர் முன்னிலையில் திட்டியிருக்கிறேன்.ஆனால் யாரும் கோபித்துக் கொண்டதில்லை.தவறான முடிவெடுக்கும்போதும்,திசை மாறும்போதும் கண்டிக்க பலருக்கு மனம் வருவதில்லை.உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள்.இதெல்லாம் நிஜமான நட்பாகாது.நண்பன் நம்மைப பற்றி என்ன நினைப்பான் என்பதை விட அவனுடைய நன்மையே முக்கியமானது.

                                                                      என்னுடைய நல்ல நண்பர்கள் என் கிராமத்தை சார்ந்தவர்கள்.விஜய பாலாஜி என்று அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியர்,பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக இருக்கும் உதயகுமார்,சென்னை தனியார்  கம்பெனியில் பணிபுரியும் கிருஷ்ணகுமார் நாங்கள் நால்வரும் எப்போதும் ஒன்றாக இருப்போம்.நான்கு பேருக்கும் ஒரு குறிப்பிட்ட பழக்கம் கிடையாது.



                                                                      கிராமத்தை தாண்டி பல நண்பர்கள்.ஏலகிரி மலையில் விநாயக மூர்த்தி,திருச்சியில் கணேஷ்,திருவண்ணாமலையில் அன்சர் அலி ,முருகன்,மதுரையில் வேல்வசந்த்,சேலத்தில் முருகன்,கோவையில் கிருஷ்ணமுர்த்தி என்று பலர்.இடம்போதாது.நட்பை விட முக்கியமானது எது? என்று என்னைக்கேட்டால் பதில் :நட்புதான்.

                                                                    
-

12 comments:

Rathnavel Natarajan said...

ஒரே மாதிரியான ஆர்வம் உள்ளவர்கள் நண்பர்களாக இருப்பதுதான் பொருத்தமானது.நீடித்திருப்பதும் அதுதான்

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

சாகம்பரி said...

//நண்பன் நம்மைப பற்றி என்ன நினைப்பான் என்பதை விட அவனுடைய நன்மையே முக்கியமானது.
//உண்மைதான். ஆனால் நண்பர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இருப்பார்கள். நல்ல விளக்கம்

Anonymous said...

முடிவில் அழகாக சொல்லியுள்ளீர்கள் ....

மாய உலகம் said...

ஒரே சிந்தனை என்ற ஒரு புள்ளியில் நன்மையும் விளையும் நட்பு அரிது... இருந்தால் தக்க வைப்பது சிறப்பு

கூடல் பாலா said...

நட்பு பற்றி அழகான பதிவு

சக்தி கல்வி மையம் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

M.R said...

ஒரே மாதிரியான ஆர்வம் உள்ளவர்கள் நண்பர்களாக இருப்பதுதான் பொருத்தமானது.நீடித்திருப்பதும் அதுதான்.

உண்மையான வரிகள்

ஷண்முக வேல் நண்பருக்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நிரூபன் said...

நட்புப் பற்றிய பகிர்வினை, உங்கள் வாழ்வின் அனுபவ வெளிப்பாடாய்ப் பகிர்ந்துள்ளீர்கள்.
நண்பர்கள் தினத்திற்கு முத்தாய்ப்பாய் உங்க்ள் பதிவு வந்திருக்கிறது.

என் உளம் நிறைந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும்.

நிலாமகள் said...

நட்பை விட முக்கியமானது எது? என்று என்னைக்கேட்டால் பதில் :நட்புதான்.//

வாழ்த்துக‌ளும், ந‌ன்றியும்!

Sankar Gurusamy said...

தங்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

அருமையான கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

Unknown said...

நட்பு வாழ்க்கை உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி இருந்து நட்பு சில மிகவும் சுவாரஸ்யமான காட்சிகள் இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

Bala said...

விட்டுக்கொடுக்காத பாசமே நட்பு