ஈரோடு
ஆட்சியராக இருந்த டாக்டர் ஆனந்தகுமார் I A S தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த போது
நண்பன் கூறியது,”இதுதான் உண்மையான சமச்சீர் கல்வி.வசதி
படைத்தவர்களும்,அதிகாரிகளும் தமது குழந்தைகளை அரசுப்பள்ளியில் படிக்க வைக்கும்
அளவுக்கு பள்ளிகளின் தரம் இருக்க வேண்டும்.”
உச்ச நீதிமன்ற
தீர்ப்பின் மூலம் பாட்த்திட்டங்களில் பிரச்சினை தீர்ந்து விட்ட்து.முதுகு வளைந்து
புத்தகம் சுமக்கும் குழந்தைகள் இனி இருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.அது ஒரு
சந்தோஷம்.இப்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான் விதவிதமான யோசனையில்
இருக்கின்றன.வியாபாரம் படுத்துவிடுமோ என்ற கவலை அவர்களை தொற்றிக்கொண்டிருக்கிறது.
ஊருக்கு ஊர் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்
புற்றீசல் போல முளைக்க நமது பெற்றோர்களே காரணமாக இருந்தார்கள்.பலரும் சுய தொழிலாக
எங்கே பார்த்தாலும் ஒரு கொட்டகை போட்டு பள்ளிகளை திறந்தார்கள்.கிராமப்புற மக்கள்
அவர்களுக்கு பெரும் வரவேற்பு அளித்தார்கள்.ஆங்கிலத்தில் படித்தால் தனது மகன் பெரிய
ஆளாக வந்துவிடுவான் என்ற எண்ணம்.
இருபது
வருடங்களுக்கு மேலாக எனது நண்பர் ஒருவர் மெட்ர்குலேஷன் பள்ளி நட்த்தி
வருகிறார்.ஆரம்பத்தில் பள்ளி வீட்டில் நடைபெற்று வந்த்து.கிட்ட்த்தட்ட
கிராம்ம்.பெற்றோர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு ஆங்கிலப்பள்ளீக்கு அனுப்பினார்கள்.கட்டணம்
கட்டுவதற்கு பலருக்கு வசதியில்லை.கூலித்தொழிலாளர்கள்.பல குழந்தைகளுக்கு கட்டண பாக்கி
இருக்கும்.நண்பர் வீடுவீடாக் சென்று வசூல் செய்வார்.நூறு ரூபாய்
இருக்கிறது.மிச்சத்தை அடுத்த மாதம் தருகிறேன் என்பார்கள்.
மெட்ரிகுலேஷன் பள்ளியில் பாடங்களும் பல வகையாக இருந்தன.மிக்க் குறைந்த
கட்டணம் வாங்கும் கிராமப்புற பள்ளிகளுக்கு சில பதிப்பகங்கள்,நகர்ப்புற
பள்ளிகளுக்கு சில பதிப்பகங்கள் என்று பலவிதம்.ஒவ்வொரு பள்ளீயிலும் வேறுவேறு
புத்தகங்கள்.பாட்த்திட்டங்கள்.பணம் கொழிக்கும்வியாபாரம்.
சமச்சீர்
கல்வி பற்றிய அவசியத்தை தூண்டியது மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான்.ஓரியண்டல்,ஆங்கிலோ
இந்தியன் பள்ளிகள் வழக்கம்போல இருந்தன.ஆனால் இந்த பள்ளிகள் வளர காரணமாக இருந்த்து
மக்களின் மனோபாவம்தான்.முன்பே சொன்னது போல தனது மகன் அல்லது மகள் பெரிய படிப்பு
படிப்பதாக அவர்களது எண்ணம்.சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு
மூன்று வயது குழந்தையை பஸ் ஏற்றி அனுப்பினார்கள்.
அரசுப் பள்ளியில் படித்து,வசதி
இல்லாத வீட்டு குழந்தைகளும் மருத்துவர் ஆகத்தான் செய்தார்கள்.இருந்தும் பல்வேறு
மனித உரிமை மீறல்களை செய்து கொண்டிருக்கும் பள்ளிகளில் லட்சக்கணக்கில் செலவு
செய்து படிக்க வைக்கிறார்கள்.பெற்றோர்கள் குழந்தைகள் மன நிலையையோ,மகிழ்ச்சியையோ
பொருட்படுத்துவதே இல்லை.
கல்வியில்
கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் சமச்சீர் கல்வியோடு முடிவுக்கு வந்து விடாது.இது
துவக்கம்தான்.வேலை பெறுவதற்காக மட்டுமே கல்வி என்ற நிலை மாறி தனி
மனிதனையும்,தேசத்தையும் வலுப்படுத்த,வளரச்செய்ய கல்வி என்ற நிலைக்கு வரவேண்டும்.இன்னும்
கடக்க வேண்டிய தூரம் அதிகம்.
படிக்காதவர்களுக்காக
முந்தைய பதிவு.
16 comments:
அருமையா அலசி இருக்கீங்க ..
பாராட்டுகள்..
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அருமையா அலசி இருக்கீங்க ..
பாராட்டுகள்.
thanks karun
@அருள் said...
சமச்சீர் கல்வி: முதல்வரை ஏமாற்றியது பத்திரிகைகளா? பார்ப்பனக் கூட்டமா?
thanks sir
//வேலை பெறுவதற்காக மட்டுமே கல்வி என்ற நிலை மாறி தனி மனிதனையும்,தேசத்தையும் வலுப்படுத்த,வளரச்செய்ய கல்வி என்ற நிலைக்கு வரவேண்டும். //
அற்புதமான சிந்தனை.. எப்போது என்பதுதான் கேள்விக்குறி...
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
samcheeer kalvi is not only the syllabus..Also the way of teaching.
Means the standard of teaching in government schools must be same as the matriculation schools.if this happens, this is the original samacheer kalvi.
~*~வேலை பெறுவதற்காக மட்டுமே கல்வி என்ற நிலை மாறி தனி மனிதனையும்,தேசத்தையும் வலுப்படுத்த,வளரச்செய்ய கல்வி என்ற நிலைக்கு வரவேண்டும்.~*~
நல்ல பகிர்வு.. நல்ல கருத்து..,
வாழ்த்துகள் நண்பரே..,
நன்றி..,
அருமையான அலசல் வாழ்த்துக்கள் நண்பா
@Sankar Gurusamy said...
//வேலை பெறுவதற்காக மட்டுமே கல்வி என்ற நிலை மாறி தனி மனிதனையும்,தேசத்தையும் வலுப்படுத்த,வளரச்செய்ய கல்வி என்ற நிலைக்கு வரவேண்டும். //
அற்புதமான சிந்தனை.. எப்போது என்பதுதான் கேள்விக்குறி...
பகிர்வுக்கு நன்றி..
நன்றி சங்கர் குருசாமி
@subbiah said...
samcheeer kalvi is not only the syllabus..Also the way of teaching.
Means the standard of teaching in government schools must be same as the matriculation schools.if this happens, this is the original samacheer kalvi.
yes sir thank you
@ராஜா MVS said...
~*~வேலை பெறுவதற்காக மட்டுமே கல்வி என்ற நிலை மாறி தனி மனிதனையும்,தேசத்தையும் வலுப்படுத்த,வளரச்செய்ய கல்வி என்ற நிலைக்கு வரவேண்டும்.~*~
நல்ல பகிர்வு.. நல்ல கருத்து..,
வாழ்த்துகள் நண்பரே..,
நன்றி..,
நன்றி நண்பரே!
@மாய உலகம் said...
அருமையான அலசல் வாழ்த்துக்கள் நண்பா
நன்றி நண்பரே!
நல்ல கட்டுரை..பிள்ளை பிடிப்பது போல குழந்தைகளை அள்ளிக்கொண்டு செல்கின்றனர்..தற்போது தங்கள் மெட்ரிகுலேசன் பள்ளிக்குள்ளேயே சில வகுப்பறைகளைப்பிரித்து, தனியாகக்காட்டி சி.பி.எஸ்.சி பள்ளிக்கு தமிழகரசிடம் என்.ஓ.சி க்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கப்பம் கட்டிவிட்டு, கல்வி வியாபாரத்தை கன ஜோராக நடத்துகிறார்கள்.
சமச்சீர் கல்வி பற்றிய தொலை நோக்குப் பார்வையோடு பதிவினை எழுதியிருக்கிறீங்க. பொறுத்திருந்து பார்ப்போம்....எவ்வாறான திட்டங்களை ஜெ...அரசு மக்களுக்குக் கொடுக்கப் போகின்றது என்று?
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறை, மனிதனான ஆசிரியரை மெத்தனப் போக்கை கடைபிடிக்க வைக்கிறது.. எண்ணற்ற ஆட்கள் ஆசிரிய பணியிடங்கள் நிரப்பப் படுமா என்று ஏக்கத்தில் காத்திருக்கின்றனர்.. ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் நிரப்பப் படும் பொழுது தான் சரியான சமச்சீர் கிடைக்கும்... அது வரை சமச்சீர் கல்வி என்பது கானல் நீர் தான்..
சமச்சீர் பாடதிட்டத்திற்க்கு காரணம் பெற்றோர்தான் என்பதை தெளிவு படுத்தி விட்டீர்கள். மெட்ரிக் பள்ளிகள் அரசு உதவி பெறுவதில்லை என்பதை ஏனோ மற ந்து வி்ட்டீர்கள். அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு அரசஉதவி பெறும் பள்ளிகள் போல் சமச்சீரு் சம்ப ளம் தர வேண்டும் என்பது பற்றி யாரும் வாய் தி றக் க மனமில்லை. கல்வி கட்டணம் அனைவருக்கும் பி ரச்சினை ஆனால் இது வாத தியார்கள் பிரச்சினை மட்டுமே. வளர்க நேர்மை! இந்த வாழ்க நீதி!!
நல்ல பதிவு.
Post a Comment