சமீபத்தில் தமிழக அரசு பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் தொடர்பாக உத்தரவிட்டது.உச்சநீதிமன்றத்தின்
வழிகாட்டுதல்படி அரசு,பொதுத்துறை ,தனியார் துறை உள்ளிட்ட இடங்களில்
விசாரணை அமைப்புகள் அமைக்கப்படவேண்டும்.பணியாளர் தரும் புகார்களை பெற்று
விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.உயர் அதிகாரி என்றால் நேரடியாக அரசுக்கு அனுப்பவேண்டும்.எனது ஆரம்ப கால பதிவொன்றில் இருந்து சில பத்திகளை தருகிறேன்.
பெண்கள் பணிபுரியும் இடங்களில் உடன் இருப்பவர்களால்,அலுவலர்களால் தரப்படும் பாலியல் தொல்லைகள் அமிலம் போல அவர்களது உள்ளத்தை சிதைக்கிறது.இரண்டு நிகழ்வுகளையும் அதன் எதிர்வினையையும் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரி.அந்நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தான் .அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த பெண்ணிடம் தொடர்ந்து தனது முறையற்ற பாலியல் வேட்கையை வெளிப்படுத்தியவாறு இருந்தான்.அந்தப்பெண் திருமணமானவர்.முடியாமல் போகவேஅந்த பெண்ணைப்பற்றி தலைமை அலுவலகத்துக்கு ஒரு மொட்டைக்கடிதம் எழுதினான் ."ஒழுங்காக பணிபுரிவதில்லை.நேரத்துக்கு வேலையில்இருப்பதில்லை.அலுவலகத்தில் ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார்."
மத்திய அரசு திட்டமொன்றின் மேலாளராக சமூக சேவை செய்ய வந்தவன் அவன்.திருமணமாகாத ஒரு பணியாளர் மீது வெறி கொண்டான்.அவனுக்கு மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.அவனிடம் பணிபுரியும் பணியாளன் ஒருவனும் சேர்ந்து அந்தப்பெண் உடன் பணிபுரியும் பணியாளருடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து செல்வதை செல்போன் கேமராவில் படம்பிடிக்ககளப்பணியாளர் ஒருவரை பணித்தார்கள்.களப்பணியாளர் மறுத்து விட்டார்.(எதற்காக என்று புரியவில்லை)தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த பெண்ணை தொடர்ந்து சுற்றி சுற்றி கழுகுகளை போல கவனிக்கத்துவங்கினார்கள்.அந்த அயோக்கியர்களின் தொல்லைகளுக்கு பயந்து ஐந்து மணிநேரம் பயணம் செய்து தினமும் பணிக்கு வர ஆரம்பித்தார் .அவர்களது கீழ்த்தரமான் நடவடிக்கைகள் வெளியே தெரியவரவே அந்தப்பெண்ணை பற்றி தரமற்ற செய்திகளை பரப்ப ஆரம்பித்தார்கள்.
பணியிடங்களில் பாலியல் வன்முறைகள் குறித்துநிவாரணம் பெற சட்டம் தொடர்பாக இப்போது இருப்பது 1997-ல் விசாகா எதிர் ராஜஸ்தான் அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மட்டுமே. சட்டம் வருவது இழுத்துக்கொண்டிருக்கிறது.இத் தொல்லைகள் குறித்து அவர்களுடன் பணிபுரியும் பெண்களிடம் பேசினேன்.ஆனால் சிலர் பட்டதாரிகளாக இருந்தும் அவர்களுக்கு இத்தகைய சம்பவத்தை எதிர்கொள்வது பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. சாதாரணமாக இப்படிப்பட்ட நிகழ்வுகள் பெண்ணின் வாழ்க்கை முறையாக இருப்பதாக கருதினார்கள்.அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
என்ன செய்யலாம்...........................?
பள்ளி,கல்லூரிகளில் தற்போது நுகர்வோர்சங்கங்கள்,செஞ்சுருள் சங்கங்கள்,போன்றவை உள்ளன.அதேபோல பெண்ணுரிமை சங்கங்களை ஏற்படுத்தலாம்.அடிப்படை உரிமைகள்,தீர்வு காண்பது,பாதிக்கப்படும்போது சரியாக இயங்குதல் குறித்து பயிற்சி தரலாம்.அடுத்ததாக,மகளிர் சங்கங்களுக்கும் விழிப்புணர்வும் பயிற்சியும் தரலாம். -
ஈரோடு பெண் காவலர் தனது அதிகாரிகள் மீது பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு தொடர்ந்தார்.அவ்வழக்கில் உயர்நீதிமன்றம் ,தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் குழு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டுமென்றும்,அதற்கு தமிழக அரசு உதவ வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.உண்மையில் பட்டம் பெற்றவர்களுக்குக்கூட விழிப்புணர்வு இல்லை என்பதை என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.உயர்நீதி மன்ற உத்தரவு அந்தக் குறையை போக்கும் வண்ணம் உள்ளது.
16 comments:
பாதுகாப்பு இல்லையென்றால் அவ்விடத்தை விட்டு விலகுவது நல்லது அல்லது மாற்றல் கேட்கலாம். அலுவலகத்திற்குள் ஒரு குழுவாக பெண்கள் செயல்படலாம். புகார் தந்து தீர்வு வரும்வரை காத்திருக்க ஒரு அவகாசம் தேவைப்படுகிறது. போராட்டம் எல்லா சூழலுக்கும் ஒத்து வருவதில்லை
@சாகம்பரி said...
நன்றி,பதிவில் குறிப்பிட்டுள்ள பெண் சொந்த ஊரில்தான் வேலை செய்கிறார்.ஊரை விட்டு ஓடிப்போக முடியுமா?
கொடுமை தான்...சம்மந்தப்பட்ட அமைப்புங்கள், சமூக ஆர்வலர்கள் ,சட்டம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்..
பெண்கள் வேலைக்கு அமர்த்தும் போது குழுவாக நியமிக்க அரசு முன் வந்தால் இது போன்ற தவறுகள் நடக்காமல் தடுக்க முடியும்....
தனியார் இடங்கள் எனில் அந்த வேலையை துட்சமாக தூக்கியெறிந்து வேறு இடத்தில் தேடுவது நல்லது...அல்லது தவறான நடத்தவர்களின் செய்கையை வீட்டாரிடம் முன்பே தெரிவித்து நடவடிக்கை எடுக்க அந்த ஊரின் மகளிர் அமைப்பை நாடலாம்
@கந்தசாமி. said...
கொடுமை தான்...சம்மந்தப்பட்ட அமைப்புங்கள், சமூக ஆர்வலர்கள் ,சட்டம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்..
நன்றி கந்தசாமி
@மாய உலகம் said...
பெண்கள் வேலைக்கு அமர்த்தும் போது குழுவாக நியமிக்க அரசு முன் வந்தால் இது போன்ற தவறுகள் நடக்காமல் தடுக்க முடியும்....
இன்று எல்லா வேலைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.நன்றி நண்பா!
@மாய உலகம் said...
தனியார் இடங்கள் எனில் அந்த வேலையை துட்சமாக தூக்கியெறிந்து வேறு இடத்தில் தேடுவது நல்லது...அல்லது தவறான நடத்தவர்களின் செய்கையை வீட்டாரிடம் முன்பே தெரிவித்து நடவடிக்கை எடுக்க அந்த ஊரின் மகளிர் அமைப்பை நாடலாம்
அந்தந்த இடத்திலேயே விசாரணை அமைப்புகள் ஏற்படுத்த இருக்கிறார்கள்,நன்றி
vaalthukkal
திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது... இது இந்த பாலியல் விசயத்தில் 100க்கு 100 பொருந்தும்... கடுமையான சட்டங்களும் அதை கடுமையாக நடைமுறைப்படுத்துவதும் இந்த தொல்லைகளை சற்று குறைக்கலாம்.
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
ரைட்டு...
@ராஜன் said...
vaalthukkal
THANKS SIR
@Sankar Gurusamy said...
திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது... இது இந்த பாலியல் விசயத்தில் 100க்கு 100 பொருந்தும்... கடுமையான சட்டங்களும் அதை கடுமையாக நடைமுறைப்படுத்துவதும் இந்த தொல்லைகளை சற்று குறைக்கலாம்.
பகிர்வுக்கு நன்றி..
நன்றி சங்கர்
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ரைட்டு...
நன்றி கருன்
பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் என்பது வருத்ததிற்குரிய விடயம் பாஸ்,
எல்லோரும் எல்லாருடைய உணர்வுகளையும் சரி சமமாக மதிக்கப் பழகினால் இப்படியான தொல்லைகள் இருக்காது என்பது என்னுடைய கருத்து.
Super articals
Post a Comment