யாரைப்பார்த்தாலும் கண்களைக் கவனிப்பது எனக்கு பழகிப்போய் விட்ட்து.கடவுளைப் பார்த்தால் கூடவா? ஆமாம்.இணையத்தில் சாமி பட்த்தை பார்த்தால் கூட!சகோதரி ராஜராஜேஸ்வரி வலைப்பதிவில் விநாயகரைப்பார்த்தேன்.எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.கடவுள் கண்ணை அசைத்து அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார்.வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.
கும்பாபிஷேகம் செய்யும்போது கண் திறப்பது என்பார்கள்.புதியதாக சிலைஅமைத்தாலும் கண் திறப்பதே இறுதி செயல்.கண்களைக்கொண்டுதானே அருளாசி வழங்க முடியும்?கண்களைக் கவனிக்க பழகி விட்டால் உடல் மொழியில்(body language) ஒருவர் தேறிவிட்டார் என்று அர்த்தம்.எதிரில் இருப்பவர் ஒரு வார்த்தை கூட நம்மிடம் பேசத்தேவையில்லை.
கண் சிவக்கும் கோபத்திலிருந்து ஆயிரம் வாட்ஸ் விளக்காக மின்னும் காம்ம் வரை கண்களில் காண முடியும்.வெறுப்பு,ஆத்திரம்,பயம்,துக்கம் என்று அனைத்து உணர்வுகளையும் எதிரில் இருப்பவருக்கு அறிவிப்பது கண்கள்தான்.காதல் கண்களிலிருந்தே துவங்குகிறது.கண்ணோடு கண் நோக்குவதுதான் முதல் படி.
ஒருவர் மற்றவரை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறோம்.சீரான உறவுகளைப் பேண முக்கியமான வழி அது.புரிந்து கொள்வது என்பதில் ஒருவரது உணர்ச்சிகளை தெரிந்து கொள்வதுதான்.அதனால் என்ன பிரயோஜனம்? கண்களில் பயம் தெரிந்தால் எதனால் அந்த பயம் என்று கேளுங்கள்.அவரை நீங்கள் சரியாக புரிந்து கொண்ட்தாக நினைப்பார்.அதற்கான காரணத்தையும் சொல்ல முன்வருவார்.அவருடைய பயத்தை குறைக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள்.இது இயல்பாக நடக்கும்.
தாங்க முடியாத துக்கம் சில நேரம் கண்ணீராக வெளிப்படுகிறது.அழும்போது சமாதானப் படுத்த முயற்சிப்பது பரவலாக இருக்கும் ஒன்று.ஆனால் ஆலோசனை (counselling) பயிற்சி பெற்றவர்கள் அப்படி செய்வதில்லை.அழுது முடிக்கும் வரை காத்திருப்பார்கள்.அப்புறம் அவரை அழத்தூண்டிய விஷயத்தை விசாரிப்பார்கள்.பதிலை வைத்து உணர்வுகளை சமாளிக்க ,முடிவெடுக்க உதவுவார்கள்.
கண்களால் காண்பதும் பொய் என்று சொல்கிறார்கள்.ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் துரைசாமி அவர்கள்.அவருடைய கையில் பக்திப் புத்தகத்தை பார்த்துவிட்டு உடன் வந்தவர் சொன்னார்”பெரிய பக்திமான் போலிருக்கிறது” என்று.ஆனால் அவருக்கு பெரியார் மீதுதான் பக்தி அதிகம்.பெரியாரும் ராமாயணம் படித்த்துண்டு.
நீங்கள்எதிரில் இருப்பவர் கண்களில் காண்பது எப்போதும் பொய்யல்ல! பொய் பேசுபவர்கள் நேருக்கு நேராக கண்களைப் பார்த்து பேசமாட்டார்கள் என்பது பலருக்கும் தெரியும்.அவர்கள் நல்லவர்கள் இல்லை என்பதுடன் மனிதர்களும் அல்ல.அவர்களால் நமக்கு ஆகப்போவது எதுவும் இல்லை.
வேலைக்கான நேர்காணல்களின் போது கண்களைப் பார்த்து பதில் சொல்லாதவர் தோல்வி அடைவது நிச்சயம்.கணினி,டி,வி போன்றவை இன்று கண்ணுக்கு பெரும் பிரச்சினைகளை கொண்டு வருகின்றன.அடிக்கடி கண்களை அகற்றி மூடித் திறந்து பயிற்சி செய்ய வேண்டும்.கண்களைப் பார்த்து பேசுங்கள்; நீங்கள் கேட்ட்து கிடைக்கும்.
நண்பர்களுக்கு ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
22 comments:
கண்களிற்குரிய முக்கியத்துவத்தினை விளக்கும் காத்திரமான பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க பாஸ்,
உங்களுக்கும் ரம்ஸான் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,
தமிழ்மணம் ஓட்டு போட்டிட்டமில்லே.
@நிரூபன் said...
கண்களிற்குரிய முக்கியத்துவத்தினை விளக்கும் காத்திரமான பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க பாஸ்,
உங்களுக்கும் ரம்ஸான் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,
நன்றி சகோ!
நேருக்கு நேர் - பார்வை இருக்க வேண்டும் என்ற காட்டமான கலக்கலான உபயோகமான பதிவு.. பகிர்வுக்கு நன்றி நண்பரே!
வேலைக்கான நேர்காணல்களின் போது கண்களைப் பார்த்து பதில் சொல்லாதவர் தோல்வி அடைவது நிச்சயம்.கணினி,டி,வி போன்றவை இன்று கண்ணுக்கு பெரும் பிரச்சினைகளை கொண்டு வருகின்றன.அடிக்கடி கண்களை அகற்றி மூடித் திறந்து பயிற்சி செய்ய வேண்டும்.கண்களைப் பார்த்து பேசுங்கள்; நீங்கள் கேட்ட்து கிடைக்கும்.
கண்களைப்பற்றிய அருமையான பயனுள்ள தகவல் நன்றி ஐயா
பகிர்வுக்கு
. நண்பர்களுக்கு ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ......
miga arumai , useful for all
@Rathnavel said...
நல்ல பதிவு.
நன்றி சார்
@மாய உலகம் said...
நேருக்கு நேர் - பார்வை இருக்க வேண்டும் என்ற காட்டமான கலக்கலான உபயோகமான பதிவு.. பகிர்வுக்கு நன்றி நண்பரே!
நன்றி நண்பா!
நல்ல பதிவு.
கண்களைப்பார்த்து பேசுவது என்பது ஒரு நல்ல பழக்கம்.. என்ன செய்வது, மேல் அதிகாரிகளும், போலீசாரும் பொதுமக்களை குனிந்து பார்த்து பேசுவதைத்தான் ஊக்குவிக்கிறார்கள்.. கண் பார்த்து பேசுபவனை பிடரியில்தான் அடிக்கிறார்கள்..
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
நல்ல பகிர்வு..
ரம்ஜான் வாழ்த்துகள்.. நண்பா..
கண்ணில் இவ்வளவு விசயங்களா...
நல்லதொரு பதிவு.
என்னை மெயிலிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ள முடியுமா? (பதிவர் தென்றலுக்காக...)
@அம்பாளடியாள் said...
வேலைக்கான நேர்காணல்களின் போது கண்களைப் பார்த்து பதில் சொல்லாதவர் தோல்வி அடைவது நிச்சயம்.கணினி,டி,வி போன்றவை இன்று கண்ணுக்கு பெரும் பிரச்சினைகளை கொண்டு வருகின்றன.அடிக்கடி கண்களை அகற்றி மூடித் திறந்து பயிற்சி செய்ய வேண்டும்.கண்களைப் பார்த்து பேசுங்கள்; நீங்கள் கேட்ட்து கிடைக்கும்.
கண்களைப்பற்றிய அருமையான பயனுள்ள தகவல் நன்றி ஐயா
பகிர்வுக்கு
தங்கள் கருத்துரைக்கு நன்றி.
@ராஜன் said...
நல்ல பதிவு.
thanks sir
@Sankar Gurusamy said...
கண்களைப்பார்த்து பேசுவது என்பது ஒரு நல்ல பழக்கம்.. என்ன செய்வது, மேல் அதிகாரிகளும், போலீசாரும் பொதுமக்களை குனிந்து பார்த்து பேசுவதைத்தான் ஊக்குவிக்கிறார்கள்.. கண் பார்த்து பேசுபவனை பிடரியில்தான் அடிக்கிறார்கள்..
பகிர்வுக்கு நன்றி..
நன்றி சங்கர்
@ராஜா MVS said...
நல்ல பகிர்வு..
ரம்ஜான் வாழ்த்துகள்.. நண்பா..
நன்றி நண்பா!
@karurkirukkan said...
miga arumai , useful for all
thanks sir
@Blogger காந்தி பனங்கூர் said...
கண்ணில் இவ்வளவு விசயங்களா...
நல்லதொரு பதிவு.
நன்றி நண்பரே!
@குடந்தை அன்புமணி said...
என்னை மெயிலிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ள முடியுமா? (பதிவர் தென்றலுக்காக...)
மெயில் பார்க்கவும்.நன்றி.
அருமையான பகிர்வு, நன்றி நண்பா
Post a Comment