சீரான உடல்
வளர்ச்சிக்கும்,சில நோய்களைத் தடுக்கவும் அவசியமானது வைட்டமின்கள்.பள்ளி பாடப்
புத்தகங்களில் படித்திருப்பார்கள்.அதை வைத்தே இது உடலுக்கு ரொம்ப நல்லது என்று
நினைப்பார்கள் போல் தெரிகிறது.தேவையில்லாமல் இம்மாத்திரைகளை கடைகளில் வாங்கி
விழுங்கும் மோகம் அதிகரித்து வருகிறது.
உயிர்ச்சத்து
மாத்திரைகள் அதன் தேவையை தாண்டி அதிக அளவில் விற்பனையாகிறது.மல்டி விட்டமின்
பற்றிய கம்பெனிகளின் விளம்பரமும் ஒரு
காரணம்.வைட்டமின் இ பாலுணர்வை அதிகரிக்கும் என்ற மனோபாவம் பெரும்பாலான
இளைஞர்களிடம் இருப்பதாக விற்பனை பிரதிநிதிகள் கூறுகிறார்கள்.இளமையை தக்கவைக்கும்
என்ற எண்ணமும் இருக்கிறது.இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அன்றாடம்
நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் வைட்டமின்கள் போதுமானது என்பதே சரி.சில
நாள்பட்ட வியாதிகளுக்கு (நீரிழிவு,இரத்த அழுத்தம் போன்றவை) மருத்துவர்களால்
பரிந்துரைக்கப்படுகிறது.கிராமப்புற மருத்துவமனைகளில் இந்த மாத்திரைகள் அதிகம்
பரிந்துரைக்கப்படுவதுண்டு.ஏழைகளுக்கு சத்துக்குறைவு சகஜம்.ஆனால் நகர்ப்புறத்தில்
கடைகளில் கேட்டு வாங்கி உண்பவர்கள் வசதியானவர்கள்.
அளவுக்கு
அதிகமான உயிர்ச்சத்து மாத்திரைகள் பெரிய அளவு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்
.அதிக அளவு ஏ உயிர்ச்சத்து கல்லீரலை பாதிப்படையச்செய்கிறது.இது போன்ற சத்துக்கள்
தோலில் சேமிக்கப்படுகின்றன.பல உயிர்ச்சத்துக்களின் அதிக அளவு உடலில் சேரும்போது
தோல் புற்று நோய்க்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றன ஆய்வுகள்.
வைட்டமின்களில் நீரில் கரைபவை,கொழுப்பில் கரைபவை என்று உண்டு.பி,சி போன்றவை
நீரில் கரையும்.இவை அதிகமானால் சிறுநீர் மூலம் வெளியேறிவிடும்.இம்மாத்திரை
சாப்பிட்ட பின் மஞ்சளாக வெளியேறுவது அதனால்தான்.கொழுப்பில் கரையும்வைட்டமின்கள்(ஏ,டி,இ,கே)
அதிகமானால்தான் பிரச்சினை.நீரில் கரைபவற்றால் இல்லை என்று சொல்லி வந்தார்கள்.
நீரில்
கரையும் உயிர்ச்சத்துக்களும் சிறுநீரக்க் கல்லை உருவாக்கும் என்கிறார்கள்.எனக்கு
ஒரு முறை தோலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு 500 மிகி வைட்டமின் சி மாத்திரை
தரப்பட்ட்து.இப்போது கிடைப்பதில்லை.தடை செய்யப்பட்டுவிட்ட்து.ஒரு நாளைக்கு இந்த
அளவு மிக அதிகம்.இதன் அதிக அளவு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொந்தரவுகளை
உருவாக்கும்.ஒரு நாளுக்கு 45 மிகி போதுமானது.
விளம்பரங்களை
நம்பி நாமாக முடிவெடுப்பது தவறான போக்கு.இயற்கைக்கு மிஞ்சியது எதுவுமில்லை என்பதை
உணரவேண்டும்.நமது உணவில் போதுமான அளவு பச்சைக்காய்கறிகள்,பழங்களை சேர்த்தாலே
தேவையானது கிடைத்துவிடும்.
24 comments:
////அளவுக்கு அதிகமான உயிர்ச்சத்து மாத்திரைகள் பெரிய அளவு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் .அதிக அளவு ஏ உயிர்ச்சத்து கல்லீரலை பாதிப்படையச்செய்கிறது.// இந்த மாத்திரைகள் விடயத்தில் அவதானம் மிக அவசியம்..
உங்கள் ஒவ்வொரு பதிவும் எல்லோருக்கும் மிக பிரயோசனமாக உள்ளது நன்றிகள்...
@கந்தசாமி. said...

தங்கள் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் நன்றி கந்தசாமி.
vitamin E மாத்திரைகள் உண்பதால் மலட்டுத் தன்மை நீங்கும் என்றும் ஆண்மை அதிகரிக்கும் என்றும் மெர்க் நிறுவனம் மார் தட்டி வந்ததே இதற்க்கு காரணம்.. அதை ஆராய்ந்து பார்க்காமல் பரிந்துரைத்தது மருத்துவர்களின் தவறு... vitamin E குறைபாடு எலிகளுக்கு மட்டுமே மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று எட்டாம் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை அனைத்து பாட புத்தகங்களில் இருந்தாலும் முக்கியமான கேள்விகளில் அது வருவதில்லை என்பதால் பள்ளியில் நாம் அதை தெரிந்து கொள்ளவில்லை ஆசிரியர்களும் தெரிவிக்க முனையவில்லை... விளைவு ஒரு தனியார் நிறுவனத்தின் கொள்ளை முயற்சி...
நல்ல பதிவு.
மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் தேவையில்லாமல் நாமே எந்த மாத்திரையும் உட்கொள்ளக் கூடாது.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
இன்றைய நிறுவனகள் அவர்களுடைய பொருள் விற்பனை ஆகனும் என்பதற்காகவே எதாவது பொய் சொல்லி விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அதையே உண்மை என்று நம் மக்களும் நம்பி ஏமாருகிறார்கள் என்பது தான் வேதனை. பயனுள்ள பதிவு. நன்றி சகோதரா.
suryajeeva சொல்வது சரியானது,
விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.
ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகம் உட்கொள்வது தேவையற்றது. உடல் உண்ணும் உணவில் இருந்து தனக்குத் தேவையான விட்டமின்களை உருவாக்கிக் கொள்ளும்.மேலும் மேலும் மாத்திரைகள் மூலமாக ஊட்டச்சத்து உடலில் சேருமானால் அது கழிவுப்பொருளாக வெளியேற்றப்படும். தற்போது மக்கள் விழிப்புணர்வு என்ற பெயரில் பயப்படுகிறார்கள். அதிக அளவு விட்டமின் மாத்திரைகளை தாங்களே கடைகளில் இருந்து வாங்கி உபயோகிக்கிறார்கள். இது தவறான அணுகுமுறை.
விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி., நண்பரே..
அவசியமான ஆரோக்கிய பதிவு நன்றி நண்பரே
தமிழ் மணம் எட்டு
@suryajeeva said...
தங்கள் கருத்துக்கள் சரியானவைதான்.நன்றி.
@suryajeeva said...
தங்கள் கருத்துக்கள் சரியானவைதான்.நன்றி.
@Rathnavel said...
நல்ல பதிவு.
மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் தேவையில்லாமல் நாமே எந்த மாத்திரையும் உட்கொள்ளக் கூடாது.
வாழ்த்துக்கள்.
நன்றி அய்யா!
@காந்தி பனங்கூர் said...
இன்றைய நிறுவனகள் அவர்களுடைய பொருள் விற்பனை ஆகனும் என்பதற்காகவே எதாவது பொய் சொல்லி விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அதையே உண்மை என்று நம் மக்களும் நம்பி ஏமாருகிறார்கள் என்பது தான் வேதனை. பயனுள்ள பதிவு. நன்றி சகோதரா.
நன்றி சகோதரா!
@ராஜன் said...
suryajeeva சொல்வது சரியானது,
நன்றி சார்
@venusrinivasan said...
ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகம் உட்கொள்வது தேவையற்றது. உடல் உண்ணும் உணவில் இருந்து தனக்குத் தேவையான விட்டமின்களை உருவாக்கிக் கொள்ளும்.மேலும் மேலும் மாத்திரைகள் மூலமாக ஊட்டச்சத்து உடலில் சேருமானால் அது கழிவுப்பொருளாக வெளியேற்றப்படும். தற்போது மக்கள் விழிப்புணர்வு என்ற பெயரில் பயப்படுகிறார்கள். அதிக அளவு விட்டமின் மாத்திரைகளை தாங்களே கடைகளில் இருந்து வாங்கி உபயோகிக்கிறார்கள். இது தவறான அணுகுமுறை.
உண்மைதான் சார்.நன்றி
@ராஜா MVS said...
விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி., நண்பரே..
நன்றி நண்பரே!
@மாய உலகம் said...
அவசியமான ஆரோக்கிய பதிவு நன்றி நண்பரே
நன்றி நண்பரே!
@மாய உலகம் said...
அவசியமான ஆரோக்கிய பதிவு நன்றி நண்பரே
நன்றி நண்பரே!
மிக முக்கியமான மருத்துவ பதிவு. மற்றவர்களிடம் கலந்துரையாட வேண்டிய விவரங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.
விட்டமின்கள் மீதுள்ள மோகத்தினைக் குறைப்பதற்கான அறிவுரையாகவும்,
பச்சைக் காய்கறிகளை உண்பதால் ஏற்படும் நன்மைகளையும் உங்களின் பதிவு அற்புதமாகச் சொல்லி நிற்கிறது.
//விளம்பரங்களை நம்பி நாமாக முடிவெடுப்பது தவறான போக்கு.இயற்கைக்கு மிஞ்சியது எதுவுமில்லை என்பதை உணரவேண்டும்.நமது உணவில் போதுமான அளவு பச்சைக்காய்கறிகள்,பழங்களை சேர்த்தாலே தேவையானது கிடைத்துவிடும்.//
மூல பிரச்சினையையும் அதற்கான தீர்வையும் ஒருங்கே சொன்ன வாக்கியம்.. அற்புதம்.
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
//500 மிகி வைட்டமின் சி மாத்திரை தரப்பட்ட்து.இப்போது கிடைப்பதில்லை.தடை செய்யப்பட்டுவிட்ட்து//
யார் சொன்னது.... இது தடை செய்ய வேண்டிய அல்லது தடை செய்யக்கூடிய மருந்தல்ல... இன்னும் கிடைத்துக்கொண்டுதானிருக்கிறது... மருத்துவர்களும் கொடுக்கிறார்கள்... தேவையான காரணத்திற்காக தேவையான அளவு சாப்பிட்டால் ஒரு கெடுதலும் இல்லை...(மருத்துவரின் ஆலோசனைப்படி ).. இந்த வைட்டமின் மருந்து விஷயத்தில் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்பவர்கள்தான் அதிகம்....சும்மாவா சொன்னார்கள் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று...
Post a Comment