கவலையற்றிருத்தலே
வீடு-பாரதியின் வார்த்தைகளுக்கு என்னுடைய
அத்தனை பதிவுகளும் ஈடாகாது.வரியின் அர்த்தமும் ஆழமும் புரிந்தவர்களுக்கு இது
தெரியும்.கடந்த ஓராண்டில் உடல் நலம்,மன நலம்,பாலியல்,சமூகப் பிரச்சினைகள்,சில
சினிமா,அரசியல்,பேருக்கு இரண்டு கவிதை,நகைச்சுவை,அனுபவங்கள்,செய்தி விமர்சன்ங்கள்
என்று பலவற்றையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
பெரும்பாலான
பதிவுகள் தனி மனிதனுக்கோ சமூகத்துக்கோ பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றே
நம்புகிறேன்.முதல் பதிவில் குறிப்பிட்ட்து இது: வலைப்பதிவுகள் நல்ல உணர்வுகளை
வாசகர்களிடம் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்.அந்த நோக்கத்தை நான் நிறைவு
செய்திருப்பேன் என்று நம்புகிறேன்.எனக்கு இது ஒரு டிஜிட்டல் டைரி
அவ்வளவுதான்.கொஞ்சம் சந்தோஷமான பொழுதுபோக்கு.
பல பதிவுகள்
முழுமையாக இல்லை.அதே சமயம் அதிகம் உழைத்து எழுதப்பட்டவையும் அல்ல.நடையும்
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.அதிக நேரம் என்னால் ஒதுக்க முடிவதில்லை.சில நேரம்
போனில் பேசிக்கொண்டே கீ போர்டை தட்டிக்கொண்டிருப்பேன்.ஓட்டு பற்றியோ,கமெண்ட்
பற்றியோ அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை.முன்பே சொன்னது போல டிஜிட்டல் டைரி
அவ்வளவுதான்.
நீண்ட காலமாக
தெரிந்த மருத்துவர் ஒருவர் இருக்கிறார்.ஆண்மைக்குறைவும் நரம்புத்தளர்ச்சியும் என்ற
பதிவிற்காக சந்தேகம் கேட்கப்போனபோது “இதெல்லாம் எதற்கு என்றார்”.நான் பதிவைப்பற்றி தெரிவித்தேன்.அதற்குப்பிறகு
எதேச்சையாக பார்க்கும்போது ’’இதைப்பற்றி எழுதுங்கள்’’ என்று ஒரு
விஷயத்தை சொல்வார்.அவர் சொல்வது ஒருவரிதான்.பிறகு நான் யோசித்து பதிவை
ஒப்பேற்றவேண்டும்.உடல்நலம் குறித்த பல பதிவுகள் அப்படி வந்த்துதான்.இது வரை அவ்ர்
படித்துவிட்டு தவறு இருப்பதாக சொன்னதில்லை.
2008 ல் பதிவு
செய்து விட்டாலும் பதிவிட துவங்கியது.2010 ஆகஸ்ட்டில் இருந்துதான்.வாரத்திற்கு ஒரு
பதிவு என்பது திட்டம்.அப்புறம் போகப்போக தினம் ஒன்று என்ற நிலைக்கு
வந்துவிட்ட்து.ஒவ்வொன்றையும் நானாக கற்றுக்கொண்டேன்.பதிவுலகில் யாரையும்
தெரியாது.முதல் பதிவுக்கு 15 நாள் கழித்துத்தான் இண்ட்லியிலும்,தமிழ்மணத்திலும்
விண்ணப்பித்தேன்.தமிழ் 10 மட்டும் ஆரம்பத்தில் எதேச்சையாக தெரிந்திருந்த்து.ஓட்டுப்பட்டை
இணைக்க மேலும் சில வாரங்கள் ஆனது.
சில
மாதங்களுக்குப்பிறகு சொந்தமாக லேப்டாப் வாங்கினேன்.ஆனால் அதிக பட்சம் ஒரு மணிநேரம்
அல்லது மேலும் சில நிமிடங்கள் மட்டுமே ஒதுக்க முடிகிறது.மொய் போலத்தான்
ஆகிவிட்ட்து.எனக்கு ஓட்டு,கமெண்ட் போடுகிறவர்களுக்கு தவறாமல் நானும் ஆஜராகிவிடுவது
என்னுடைய வழக்கம்.முடியாமல் போயிருந்தால் என்னையும் மீறி நடந்த தவறாக இருக்கும்.சில
பதிவர்களின் பதிவுகளை மட்டும் நேரம் கிடைக்கும்போது மொத்தமாக படிப்பது வழக்கம்.
பல
சந்தோஷங்களுக்கு இடையில் ஒரு மனக்குறை இருந்து கொண்டிருக்கிறது.தீவிர வாசிப்பில்
ஆர்வம் கொண்டவன் நான்.அது இப்போது குறைந்து போய்விட்ட்து.ஒரு வருட்த்தில் 240
பதிவுகள்.இதில் காபி பேஸ்ட் எதுவும் இல்லை.பாரதி கட்டுரைகளிருந்து ஒரு பதிவு
மட்டும் அவரது பிறந்த நாளுக்காக எடுத்திருக்கிறேன்.பிளாக்கர் buzz ல் கூட நீங்கள் CURATOR
OR CREATOR? என்று கேட்டிருந்தார்கள்.பிளாக்கில் பெத்த
பெயர் வாங்கி எனக்கு ஆகப்போவது எதுவுமில்லை.
இரண்டு லட்சத்து இருபதாயிரத்தை கடந்த
pageviews என்னுடைய டாஷ்போர்டு
காட்டுகிறது.நான் தொடர்ந்து இயங்கி வந்த்தற்கு வாசகர்கள்,திரட்டிகள் வழங்கிய ஆதரவே
காரணம்.இண்ட்லியில் 80 பதிவுகள் வரை ஒரு பதிவுக்கூட பிரபலமாகவில்லை.இப்போது
இண்ட்லி பயனர்கள் எனக்கு கிடைத்த வரம்.இத்தனைக்கும் அதிகம் ஈர்க்கும்
அரசியல்,சினிமா பதிவுகள் மிகமிக்க் குறைவு.பத்திரிகைகளில் தினமணி
ஆரம்பத்திலிருந்தே என்னை தட்டிக்கொடுத்து வளர்த்து வந்திருக்கிறது.விகடன் குட்
பிளாக்ஸில் ஒரு பதிவு வந்த்து.ஒரு மாதம் தினம் நான்கு பேராவது வந்தார்கள்.
என்னை
எப்போதும் ஆதரித்து வரும் அன்பு உள்ளம் கொண்ட சக பதிவர்களுக்கும்,வாசகர்களுக்கும்,இண்ட்லி,தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டி
உள்ளிட்ட திரட்டிகளுக்கும்,தினமணி,விகடன் பத்திரிகைகளுக்கும் என்னுடைய நெஞ்சம்
கனிந்த நன்றி.
23 comments:
அனுபவம் பகிர்வுக்கு நன்றி.
வருங்காலம் வாழ்த்தும் வலைப்பூக்களில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து. சில பதிவுகள் மிக சிறப்பாக எழுதப்பட்டிருந்தன. அசோகர் மரம் நட்டார், பாண்டியன்ன் குளம் வெட்டினார் என்பதுபோல் இது போன்ற பதிவுகள் பகிர்வது காலத்திற்கும் பேசப்படும். வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு. மனம் தளராதீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து படிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
தொடருங்கள் நண்பா..
பாராட்டுகள்..
வாழ்த்துக்கள்..
கவலையற்றிருத்தலே வீடு-பாரதியின் வார்த்தைகளுக்கு என்னுடைய அத்தனை பதிவுகளும் ஈடாகாது.வரியின் அர்த்தமும் ஆழமும் புரிந்தவர்களுக்கு இது தெரியும்.//
களியே அமுதம். கவலையற்றிருத்தலே வீடு. விட்டு விடுதலயாகி சிட்டுக்குருவியைப் போல பாரதியின் அமுத வார்த்தைகள் சிறைப்பிடிக்கும் நம் மன்தை.
அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்.
ullathai padam pititha pathivu ithu. vallthukkal!
தொடருங்கள் நண்பா...வாழ்த்துக்கள்
உங்களுடைய வலையுலகப் பணி தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துகள் நண்பா..
@தமிழ்வாசி - Prakash said...
அனுபவம் பகிர்வுக்கு நன்றி.
கருத்துரைக்கு நன்றி நண்பரே!
@சாகம்பரி said...
வருங்காலம் வாழ்த்தும் வலைப்பூக்களில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து. சில பதிவுகள் மிக சிறப்பாக எழுதப்பட்டிருந்தன. அசோகர் மரம் நட்டார், பாண்டியன்ன் குளம் வெட்டினார் என்பதுபோல் இது போன்ற பதிவுகள் பகிர்வது காலத்திற்கும் பேசப்படும். வாழ்த்துக்கள்.
உற்சாக வார்த்தைகளுக்கு நன்றி.
@Rathnavel said...
நல்ல பதிவு. மனம் தளராதீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து படிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
நன்றி.சார்.
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
தொடருங்கள் நண்பா..
பாராட்டுகள்..
வாழ்த்துக்கள்..
நன்றி நண்பா!
@இராஜராஜேஸ்வரி said...
கவலையற்றிருத்தலே வீடு-பாரதியின் வார்த்தைகளுக்கு என்னுடைய அத்தனை பதிவுகளும் ஈடாகாது.வரியின் அர்த்தமும் ஆழமும் புரிந்தவர்களுக்கு இது தெரியும்.//
களியே அமுதம். கவலையற்றிருத்தலே வீடு. விட்டு விடுதலயாகி சிட்டுக்குருவியைப் போல பாரதியின் அமுத வார்த்தைகள் சிறைப்பிடிக்கும் நம் மன்தை.
அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்.
கருத்துரைக்கு நன்றி.
@ராஜன் said...
ullathai padam pititha pathivu ithu. vallthukkal!
thanks sir
@மாய உலகம் said...
தொடருங்கள் நண்பா...வாழ்த்துக்கள்
நன்றி நண்பா!
@ராஜா MVS said...
உங்களுடைய வலையுலகப் பணி தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துகள் நண்பா..
நன்றி நண்பா!
பதிவுலகில், மனோதத்துவம், மருத்துவக் குறிப்புக்கள், கவுன்சிலிங் தகவல்கள் என பல பயனுள்ள தகவல்களைப் பதிவுகளாக வழங்கி வரும் உங்கள் பணி தொடர்ந்தும் சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் நண்பரே..
நல்லதோர் தன்மதிப்பீடு செய்திருக்கிறீர்கள்.
வலைப்பதிவர்களுக்கு இது தேவையான ஒன்று.
நல்லதோர் தன்மதிப்பீடு செய்திருக்கிறீர்கள்.
வலைப்பதிவர்களுக்கு இது தேவையான ஒன்று.
வலையுலகில் நான் கற்ற பாடம்..
நாம் மிகவும் உழைத்து எழுதும் எழுத்துக்களை விட..
போகிற போக்கி்ல் எழுதும் எழுத்துக்களையே பார்வையாளர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்!
நாம் கொள்கை, கருத்து, நோக்கம் பார்வையாளர்களைச் சென்று சேர இயல்பான நகைச்சுவையான சமூகத்தைப் பிரதிபலிக்கும் எழுத்துக்களையும் நாம் எழுதக்கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நண்பா.
வலையுலகில் நான் கற்ற பாடம்..
நாம் மிகவும் உழைத்து எழுதும் எழுத்துக்களை விட..
போகிற போக்கி்ல் எழுதும் எழுத்துக்களையே பார்வையாளர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்!
நாம் கொள்கை, கருத்து, நோக்கம் பார்வையாளர்களைச் சென்று சேர இயல்பான நகைச்சுவையான சமூகத்தைப் பிரதிபலிக்கும் எழுத்துக்களையும் நாம் எழுதக்கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நண்பா.
தங்கள் பதிவுகள் எப்போதுமே எனக்கு ஒரு தூண்டுதலாகவே இருந்திருக்கின்றன. தொடர்ந்து நல்ல விசயங்களை எழுதுவது மிக கடினம். அதை செம்மையாக செய்யும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மேலும் நல்ல பதிவுகள் கொடுத்து மேலும் சிறப்புகள் பெற இறைவனை வேண்டுகிறேன்.
பகிர்வுக்கு நன்றி
http://anubhudhi.blogspot.com/
Post a Comment