இந்தியாவுக்கு இது முக்கியமான தருணம்.சுதந்திரப்போராட்ட்த்திற்குப் பிறகு
தேசம் எந்த பிரச்சினைக்காகவும் இத்தனை முக்கியத்துவம் பெற்றதில்லை.நாடு முழுக்க
மக்களின் ஆதரவைப் பெற்றதில்லை.ஊழல் போல மக்களை ஆத்திரப்படுத்துவது எதுவுமில்லை.எனது
பல பதிவுகளில் இதை குறிப்பிட்டிருக்கிறேன்.
உண்மையோ,இல்லையோ ஊழல் குற்றச்சாட்டு உள்ள ஆட்சியை மக்கள் எப்போதும் விட்டு
வைத்த்தில்லை.குறைந்தபட்சம் அப்போதைக்காவது அகற்றிவிடுகிறார்கள்.இதற்கு யாராவது
வருவார்கள் என்று காத்திருந்த்து போல பிடித்துக்கொண்டார்கள்.இந்தியாவில் எந்த ஒரு
போராட்டமும் சந்திக்காத ஆதரவு இது.
பத்திரிகைகளின் பங்கு அதிகம்.முந்தைய உண்ணாவிரத்த்தை அடுத்து
அன்னாவைப்பற்றி பத்திரிகைகள் மக்களிடம் சிறப்பான பிம்பத்தை கொண்டு சேர்த்தன.நாடு
முழுக்க ஆதரவு பெருகி நிற்கிறது.மத்திய அரசை பல்வேறு யோசனைகளுக்கு ஆளாக்கியிருக்க
வேண்டும்.கைது செய்யப்பட்டவுடன் நீர்த்துப்போகும் என்பதுதான் இவ்வளவு நாளும் நடந்த
விஷயம்.ஆனால் இப்போராட்ட்த்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது
போலாகிவிட்ட்து.
எதிர்க்கட்சிகள்
ஆதரவு தெரிவிப்பது போல காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் சில கட்சிகளுக்கு கஷ்டமாகவே
இருக்கும்.கட்சிகளைப் பொருத்தவரை மக்கள் ஆதரவு என்பது வோட்டு தொடர்பான ஒன்று.ஆதரவை
வாக்குகளாக மாற்றுவது பற்றித்தான் சிந்திப்பார்கள்.கட்சி சாராமல் தனித்து இவ்வளவு
ஆதரவைப் பெறுவது அவர்களுக்கும் கொஞ்சம் யோசனைதான்.
ஏதோ ஒரு
லோக்பால் வரட்டும்.அப்புறம் திருத்திக்கொள்ளலாம்.எதுவும் இல்லாமல் இருப்பதற்கு ஏதோ
ஒன்று இருப்பது நல்லது என்பவர்களும் இருக்கிறார்கள்.ஆனால் பலனளிக்கும் ஒன்று தேவை
என்பதே முக்கியம் என்ற கருத்தை ஆதரிப்பவர்களே அதிகம்.அடுத்து நடக்கவிருப்பவை
முக்கியமான தருணங்கள்.
உடல் நலம்
மோசமாகும் சூழலில் உண்ணாவிரதம் திசை மாறக்கூடும்.பேச்சுவார்த்தை துவங்க
வாய்ப்புண்டு.மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என்ற நிலையில் முன்னேற்றமான
போக்குகள் தென்பட வாய்ப்பிருக்கும்.அன்னா ஹசாரே குழு கோரும் லோக்பாலை
ஏற்றுக்கொண்டால் இது ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடும்.இந்த கலக்கம்தான் மத்திய
அரசுக்கு ஏற்பட்டுள்ள சங்கடம்.
தேசம்
முழுக்க மக்களின் ஆதரவு பெற்றுவிட்ட நிலையில் அடுத்தடுத்து கோரிக்கைகள் பாயும்
வாய்ப்பு அதிகம்.தேர்தல் சீர்திருத்தம்,கருப்புப்பணம் போன்றவை அடுத்து
காத்திருக்கின்றன.எப்போதும் வெளியில் இருந்து ஒரு குழு அரசை ஆட்டிவைப்பது
நினைப்பதற்கே அரசாங்கத்துக்கு கவலை தரும் ஒன்றாக இருக்கும்.ஒரே வழிதான்
இருக்கிறது.நல்ல விஷயங்களைச்செய்ய அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும்.
23 comments:
arasu nalla visayangkal seithu munthikkolla vendum..vaalththukkal
@மதுரை சரவணன் said...
arasu nalla visayangkal seithu munthikkolla vendum..vaalththukkal
THANKS SARAVANAN
இந்தியாவில் இதற்குமுன்பு வேறு பிரச்சினைகளே இல்லையா? அதற்கு போராடினார்களா?
பார்ப்போம் விளைவு எத்தகையதாய் இருக்கிறதென்று!
மேலும் படிக்கவும்.
www.generationneeds.blogspot.com
அன்னா ஹசாரே போராட்டம் உள்நோக்கம் உடையதா?
@ராஜன் said...
இந்தியாவில் இதற்குமுன்பு வேறு பிரச்சினைகளே இல்லையா? அதற்கு போராடினார்களா?
ஊழல் எல்லாவற்றுக்கும் மையம்,இப்போதாவது ஒருவர் வந்திருக்கிறார்.அதற்கு சந்தோஷப்படுவோம்,நன்றி
@மைந்தன் சிவா said...
பார்ப்போம் விளைவு எத்தகையதாய் இருக்கிறதென்று!
நன்றி சிவா
//நல்ல விஷயங்களைச்செய்ய அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும்.//
இது தான் ஒவ்வொரு குடிமகனும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது.
//நல்ல விஷயங்களைச்செய்ய அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும்.//
இத செஞ்சிருந்தா எப்பவோ நாடு உருப்பட்டிருக்கும்...
எப்படியும் அன்னா ஹசாரே வால் இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது.. இதன் பிறகு அவர்களே உண்ணாவிரதத்தை கைவிட்டுதான் ஆகவேண்டும். இந்த எதிர்பார்ப்பில்தா அரசு இருக்கிறது...
பார்ப்போம்.. பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
//நல்ல விஷயங்களைச்செய்ய அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும்.//
இனிமேலாவது அரசாகத்துக்கு புத்தி வருதான்னு பாக்கலாம்.
\\நல்ல விஷயங்களைச்செய்ய அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும்//
அரசாங்கம் முந்திக்கொள்ளுமா..
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
////நல்ல விஷயங்களைச்செய்ய அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும்.////
ம்ம்
அலசலுடன் பதிவு யோசிக்க வைக்கிறது..
ஒரே வழிதான் இருக்கிறது.நல்ல விஷயங்களைச்செய்ய அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும்.// நடந்தா நல்லது
@Sankar Gurusamy said...
//நல்ல விஷயங்களைச்செய்ய அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும்.//
இத செஞ்சிருந்தா எப்பவோ நாடு உருப்பட்டிருக்கும்...
நன்றி சங்கர்
@சத்ரியன் said...
//நல்ல விஷயங்களைச்செய்ய அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும்.//
இது தான் ஒவ்வொரு குடிமகனும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது.
ஆம்,சத்ரியன் கருத்துரைக்கு நன்றி.
@காந்தி பனங்கூர் said...
//நல்ல விஷயங்களைச்செய்ய அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும்.//
இனிமேலாவது அரசாகத்துக்கு புத்தி வருதான்னு பாக்கலாம்
தங்கள் கருத்துரைக்கு நன்றி.
@Kannan said...
\\நல்ல விஷயங்களைச்செய்ய அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும்//
அரசாங்கம் முந்திக்கொள்ளுமா..
இல்லாதுபோனால் கஷ்டம்தான் நன்றி சார்.
@ஆமினா said...
////நல்ல விஷயங்களைச்செய்ய அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும்.////
ம்ம்
தங்கள் கருத்துரைக்கு நன்றி.
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அலசலுடன் பதிவு யோசிக்க வைக்கிறது..
thanks sir
@பாரத்... பாரதி... said...
வணங்கங்களும், வாக்குகளும்..
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.
@கார்த்தி கேயனி said...
ஒரே வழிதான் இருக்கிறது.நல்ல விஷயங்களைச்செய்ய அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும்.// நடந்தா நல்லது
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
ஆனாலும் ஹசாரே, தனக்கு முன் உள்ள தடைகளைத் தாண்டி வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்ல வேண்டும்,
தற்போதைய நிலமையில் லோக்பால் நிறைவேற்றப்பட்டு விட்டதே.
Post a Comment