Wednesday, August 3, 2011

விபரீதம் புரியாத பாதையில் இளைஞர்கள்.

இந்தியாவில் 95000 இளைஞர்கள் எச்.அய்.வி கிருமி தொற்று உள்ளவர்கள்.இவர்கள் அத்தனை பேரும் 19 வயதுக்கு உட்பட்டவர்கள்.பத்திரிகைகளால் நட்த்தப்படும் பல்வேறு ஆய்வுகளும் இளம் வயது பாலுறவு அதிகரித்து வருவதாக கூறுகின்றன.இன்றைய இளைஞர்கள் திசை தெரியாத காட்டில் தவித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.

                                வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்திற்கு இதில் பங்கிருக்கிறது.செல்போன் உள்ளீட்ட தகவல் தொடர்பு சாதன்ங்கள்,இணையம் போன்றவை இவற்றில் முக்கிய இடம் வகிக்கின்றன.வளரிளம் பருவத்தில் கட்டற்ற உணர்வுகள் தோன்றுவது இயற்கை.அதை நிறைவேற்றிக்கொள்வதில் இன்றைய இளமைக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.ஆனால் தூண்டுவதற்கு ஏராளமான விஷயங்கள்.

                                பெற்றோர்களுக்கு குழந்தைகளை கண்காணிக்க நேரம் இருப்பதாக தெரியவில்லை.தங்களது குழந்தைகளுக்காக வாழ்வதாக,சம்பாதிப்பதாக சொல்லிக்கொண்டாலும் பல நேரங்களிள் நேரில் சந்திப்பதே குறைவு.குடும்பத்தை விடவும் நெருக்கமான உறவுகள் வெளியில் இருக்கின்றன.அங்கே போதை,பாலுறவு என்று அறிமுகங்கள்தான் கிடைக்கின்றன.

                                இன்றைய இளைஞனுக்கு சரியான முன்னுதாரணம் இல்லை என்பது உற்று நோக்கினால் தெரியும்.சினிமா கிசுகிசுவை படிப்பவனுக்கு தனக்கும் அப்படி ஒரு பிரபலம் வேண்டும் என்றுதான் தோன்றும்.ஆக இது ஒரு பெரிய விஷயமில்லை.நாட்டில் நடப்பதுதானே? பல ட்வீட்டுகள்,வாசகங்கள் பெண்களை ஈவ் டீசிங் செய்ய உதவியாகத்தான் இன்று எழுதப்படுகின்றன..ஃபேஸ்புக் உரையாடல்களில் சுமார் நாற்பத்தைந்து சதவீதம் ஆபாசங்கள் என்கிறது ஒரு ஆய்வு.

                                  தமிழகத்தில் தர்மபுரி,கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இளம்வயது திருமணங்கள் அதிகம்.இப்போது ஓரிரு ஆண்டுகளாக பலத்த பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது.பேசி முடிவு செய்து உற்றார்,உறவினர்களை அழைத்து,மண்டபம் பேசி முடிவு செய்த பின்னால் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு விடுகிறது.

                                 திருமண வயது பதினெட்டு என்பதுதான் சட்டம்.அதற்குக்கீழ் மனமோ,உடலோ பக்குவம் அடைந்து விடுவதில்லை.உண்மையில் இருபது வயதுக்கு மேல்தான் சரி என்று தோன்றுகிறது.மத்திய அரசு மசோதா ஒன்றை பற்றி எனது வேறொரு இடுகையில் பகிர்ந்திருக்கிறேன்.16 வயதிலிருந்து 18 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் பரஸ்பரம் ஒப்புதலுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்.

                                  18 வயதுக்கு முன்பு திருமணம் வேண்டாம்,செக்ஸ் சரி என்று நாம் சொல்கிறோமா? இதென்ன கூத்து என்றுதான் தோன்றும்.ஆனால் பல இடங்களில் பதினெட்டு வயதுக்குக்கீழ் உள்ளவர்களை காவல்துறை பிடிக்கும்போது என்ன செய்வதென்று தெரிவதில்லை.அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில் சங்கடம் இருக்கிறது.சாதிக்கும் வயதில் திசை மாறுவது அதிகரிக்கும் என்பதுதான் இப்போதைய கணிப்பு. 

                                   இன்றைய இளைஞர்களை நல்ல விஷயத்துக்காக பயன்படுத்தினால் இந்தியா வளம் பெற்று விடாதா? காரணங்களை கண்டறிந்து களைவதுடன் நல்ல ரோல் மாடல்கள் அவர்களுக்கு  உருவாக வேண்டும்.
-

13 comments:

Sankar Gurusamy said...

அவசியமான ஒரு விழிப்புணர்வுப்பதிவு. இளைய சமுதாயம் கவனிக்குமா??

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

shanmugavel said...

@Sankar Gurusamy said...

அவசியமான ஒரு விழிப்புணர்வுப்பதிவு. இளைய சமுதாயம் கவனிக்குமா??

பகிர்வுக்கு நன்றி..

உங்களுக்கும் நன்றி சங்கர் குருசாமி

மாய உலகம் said...

இன்றைய சூழ்நிலையில் இளைஞர்களுக்கு இந்த சமுதாயம் நல்வழிபடுத்த தியானம், யோகா என பல வழிமுறைகளை கட்டாயமாக புகுத்தினால மட்டுமே... இளைய சமுதாயம் தப்பிக்கும்... பகிர்வுக்கு நன்றி

M.R said...

நல்லதொரு விழிப்புணர்வு .

படித்து உணர வேண்டிய விஷயம் .

பகிர்வுக்கு நன்றி

ராஜன் said...

தாய்,தந்தை இரண்டு பேரும் சம்பாதிக்க போக வேண்டியிருக்கிறது.குழந்தைகளை எப்படி கண்காணிப்பது? நல்ல பதிவு.

koodal bala said...

இப்படி போனால் வல்லரசாவது எப்படி ......

மைந்தன் சிவா said...

என்னதான் இதைப்பற்றி எழுதினாலும் இது தொடரத்தான் போகிறது,,என்றாலும் விழிப்புணர்வு அவசியம் தான்!

shanmugavel said...

@மாய உலகம் said...

இன்றைய சூழ்நிலையில் இளைஞர்களுக்கு இந்த சமுதாயம் நல்வழிபடுத்த தியானம், யோகா என பல வழிமுறைகளை கட்டாயமாக புகுத்தினால மட்டுமே... இளைய சமுதாயம் தப்பிக்கும்... பகிர்வுக்கு நன்றி

நன்றி சார்

shanmugavel said...

@M.R said...

நல்லதொரு விழிப்புணர்வு .

படித்து உணர வேண்டிய விஷயம் .

பகிர்வுக்கு நன்றி

THANKS SIR

shanmugavel said...

@koodal bala said...

இப்படி போனால் வல்லரசாவது எப்படி ......

யோசிக்கவேண்டிய விஷயம்தான் சார் நன்றி

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

என்னதான் இதைப்பற்றி எழுதினாலும் இது தொடரத்தான் போகிறது,,என்றாலும் விழிப்புணர்வு அவசியம் தான்!

நாம் சொல்வதை சொல்வோம் சிவா,நன்றி

நிரூபன் said...

நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு,
உண்மையில் பாலியல் தொற்று நோய்கள் பற்றிய போதிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் இன்மை, ஊடகங்கள், சமூக மன்றங்கள் வாயிலாக எச்.ஐ.வி பற்றிய பிரச்சாரங்கள் அதிகளவில் மேற்கொள்ளப்படாமை தான் இந்த நிலமைக்குக் காரணம் என நினைக்கிறேன்.

சத்ரியன் said...

//திருமண வயதுபதினெட்டு என்பதுதான் சட்டம்....16வயதிலிருந்து 18 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் பரஸ்பரம் ஒப்புதலுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்//

சண்முகம் அண்ணே,

மேலே குறிப்பிட்டுள்ள வரிகளை கவனியுங்கள்.

“இது தான் இந்தியா”

எதிலுமே ஒரு தெளிவான, தீர்க்கமான
சட்ட திட்டங்களை வகுக்கவே மாட்டார்கள். காரணம் மிகச் சாதாரணமானது. நம் நாட்டு (வயதில்)மூஊஊஊத்த அரசியல்வாதிகள், பணக்காரர்கள்... போன்றோர்களுக்கு 16 வயது பருவப் பெண்கள் தான் தேவையாய் இருக்கிறது.அதனால்,

//16வயதிலிருந்து 18 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் பரஸ்பரம் ஒப்புதலுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்//