Tuesday, August 16, 2011

கல்யாணம் செய்யப்போறீங்களா? உஷார்!


திருமணம் செய்வதற்காக பத்து பொருத்தங்கள் பார்க்கிறோம்.ஜாதகம் பார்க்கிறோம்.குடும்ப நிலை,பையன்,பெண் படிப்பு எல்லாவற்றிலும் கவனம் செலுத்துகிறோம்.உடல் தகுதிகளைப் பற்றி போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.திருமணத்திற்கு முன்பு மணமக்கள் ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.

                                    ரத்த வகை அறிவதில் பலருக்கும் ஆர்வம் இருப்பதை பார்த்திருக்கிறேன்.இதில் ஆர்.எச் வகை என்று உண்டு.பாசிட்டிவ்,நெகடிவ் என்பது இதுதான்.பலரும் கர்ப்பத்துக்குப்பின் பரிசோதனையில் இதை கண்டு பிடிப்பார்கள்.தாயும்,தந்தையும் வேறுவேறு வகை ஆர்.எச்.அம்சங்களை கொண்டிருந்தால் இரண்டாவது குழந்தை மரணமடையும் வாய்ப்புண்டு.

                                   பெற்றோருக்கு இப்போது ரத்தப்பரிசோதனை மூலம் கர்ப்பத்தின் போது கண்டுபிடிக்கப்படுவதால் சிகிச்சை மூலம் இதை சரி செய்கிறார்கள்.திருமணத்திற்கு முன்பே இப்பரிசோதனைகள் அவசியம் என்பதே சரியானது.நெகட்டிவ் அம்சம் இருப்பவர்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் என்ற கருத்தும் உண்டு.

                                   வட சென்னையில் மஞ்சள் காமாலையால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.இது நீரினாலும்,உணவாலும் பரவும் ஒரு வகை.(ஏ,இ).பலரும் பாரம்பர்ய மருத்துவம் மூலம் இதற்கு குணம் காண்கிறார்கள்.இன்னும் சில உண்டு.அவற்றில் முக்கியமானது.ஹெபட்டிஸ் பி,சி வகை.

                                    ஒருவருக்கு ரத்தம் செலுத்துவதற்கு முன்பு இவ்வகை வைரஸ் உள்ளதா எனவும் பரிசோதனையும் செய்வார்கள்.கிட்ட்த்தட்ட எய்ட்ஸ் வைரஸை போன்றே பரவும் தன்மை கொண்ட்து.பலருக்கு அறிகுறி இருக்காது.பரிசோதனை மூலம்தான் தெரியும்.மணமக்கள் யாருக்கேனும் இருந்தால் தவிர்த்து விடுவதே சரி.தவிர கொஞ்சம் அப்படி இப்படி பழக்கம் உள்ளவர்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.(பாலுறவு மூலம் பரவும்).

                                    ஹெபடைடிஸ் பி வகைக்கு தடுப்பூசி இருக்கிறது.கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஊசி போட்டு வரும் முன் காக்கலாமே தவிர வந்த பின்னால் இந்த வகை நாட்டு மருந்தால் குணமாவதாக நான் கேள்விப்படவில்லை.ஆங்கில மருத்துவத்திலும் இல்லை.வைரஸ் நோய்களை முழுமையாக குணமாக்க மருத்துவம் இல்லை.

                                    அடுத்து எய்ட்ஸ் பரிசோதனை.செய்யச்சொன்னால் யாரும் விரும்ப மாட்டார்கள்.பல ஆண்டுகளுக்கு அறிகுறி வெளியே தெரியாது என்பதால் அவசியம் செய்து விடுவதே நல்லது.வேறு சில குணமாக்க முடியாத பால்வினை நோய்களும் உண்டு.உரிய மருத்துவர் மூலம் திறன் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது பல பிரச்சினைகளைத் தவிர்க்கும்.

                                   திருமணத்திற்கு முன்பு உடல் பரிசோதனை இன்றைய சூழலில் பொருத்தம் பார்ப்பது போன்று அவசியம் மேற்கொள்ள வேண்டிய ஒன்று.மெத்தப்படித்த ஆண்கள்தான் இதை முன்னெடுத்துச்செல்ல முடியும்.ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையையும்,குழந்தைகளையும் இதனால் நாம் பெற முடியும்.

-

28 comments:

இராஜராஜேஸ்வரி said...

விழிப்புணர்வு தரும் பயனுள்ள பகிர்வுகுப் பாராட்டுக்கள்>

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
தலைப்பே நம்மளை மாதிரி யூத் பசங்களை எச்சரிக்கை பண்ற மாதிரி இருக்கு,

என் நெட் ரொம்ப சிலோ...
உங்கள் பதிவுகளுக்கு அதனால் தான் ஒழுங்காக வர முடியவில்லை,
வியாழக் கிழமை தான் நெட் கனெக்சனில் உள்ள ப்ராப்பளத்தை சரி செய்வார்கள்.

நிரூபன் said...

உண்மையில் மருத்துவ பரிசோதனை மூலம் எம் வருங்கால வம்சத்திற்கு தீமைகள் ஏற்படா வண்ணம் நல்லதோர் குடும்ப வாழ்வினை அமைத்திட உதவும் அற்புதமான பதிவு.

Rathnavel said...

நல்ல பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்.

மைந்தன் சிவா said...

கல்யாணம் செய்யப்போரவங்களுக்கு நிச்சயம் உதவும்!!

Anonymous said...

என்னை போன்றவர்களது நன்மைக்காக எழுதப்பட்ட பதிவு ;-)

Anonymous said...

///தாயும்,தந்தையும் வேறுவேறு வகை ஆர்.எச்.அம்சங்களை கொண்டிருந்தால் இரண்டாவது குழந்தை மரணமடையும் வாய்ப்புண்டு.// ஒ இப்படியும் இருக்கா தகவலுக்கு நன்றி பாஸ்

சத்ரியன் said...

சிறந்ததொரு விழிப்புணர்வு பதிவு. அனைவரும் உணர்ந்து, செயல்படுவதும் அவசியம்.

நன்றி.

Sankar Gurusamy said...

நல்ல கருத்துக்கள். ஆனால் எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்த முடியும் என்பது தெரியவில்லை. முயற்சி செய்யலாம்.

பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

நிரூபன் said...

அண்ணே,
ஜனநாயக கடமையினை நிறைவேற்றிட்டேனே..
அவ்....

நிரூபன் said...

மைந்தன் சிவா said...
கல்யாணம் செய்யப்போரவங்களுக்கு நிச்சயம் உதவும்!!//

அடிங்........உனக்கேதோ உதவாத மாதிரி ஒரு சவுண்டு கொடுக்கிறீங்க.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி,,

Priya said...

பயன்னுள்ள தகவல்!
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

விழிப்புணர்வு தரும் பயனுள்ள பகிர்வுகுப் பாராட்டுக்கள்>

கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
தலைப்பே நம்மளை மாதிரி யூத் பசங்களை எச்சரிக்கை பண்ற மாதிரி இருக்கு,

நிச்சயமா உங்களுக்கே,உங்களுக்கு! நன்றி

shanmugavel said...

@நிரூபன் said...

உண்மையில் மருத்துவ பரிசோதனை மூலம் எம் வருங்கால வம்சத்திற்கு தீமைகள் ஏற்படா வண்ணம் நல்லதோர் குடும்ப வாழ்வினை அமைத்திட உதவும் அற்புதமான பதிவு.

பாராட்டுக்கு நன்றி சகோ!

shanmugavel said...

@Rathnavel said...

நல்ல பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்.

நன்றி சார்

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

கல்யாணம் செய்யப்போரவங்களுக்கு நிச்சயம் உதவும்!!

அடப்பாவமே! உன்னோட பிரச்சினை என்னன்னு மெயில் அனுப்ப முடியுமா சிவா? நன்றி

shanmugavel said...

@கந்தசாமி. said...

என்னை போன்றவர்களது நன்மைக்காக எழுதப்பட்ட பதிவு ;-)

நிச்சயமாக நன்றி

shanmugavel said...

@கந்தசாமி. said...

///தாயும்,தந்தையும் வேறுவேறு வகை ஆர்.எச்.அம்சங்களை கொண்டிருந்தால் இரண்டாவது குழந்தை மரணமடையும் வாய்ப்புண்டு.// ஒ இப்படியும் இருக்கா தகவலுக்கு நன்றி பாஸ்

ஆமாம் சார்,பிரசவித்தவுடன் தாய்க்கு ஊசி போடுவார்கள்.காஸ்ட்லி,இதுதான் சிகிச்சை,நன்றி

shanmugavel said...

@சத்ரியன் said...

சிறந்ததொரு விழிப்புணர்வு பதிவு. அனைவரும் உணர்ந்து, செயல்படுவதும் அவசியம்.

நன்றி சத்ரியன்.

shanmugavel said...

@Sankar Gurusamy said...

நல்ல கருத்துக்கள். ஆனால் எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்த முடியும் என்பது தெரியவில்லை. முயற்சி செய்யலாம்.

வேறு வழியில்லை.இல்லாவிட்டால் ரிஸ்க் எடுக்க வேண்டும்.நன்றி

shanmugavel said...

@நிரூபன் said...

அண்ணே,
ஜனநாயக கடமையினை நிறைவேற்றிட்டேனே..
அவ்....

நன்றி நிரூபன்.

shanmugavel said...

@நிரூபன் said...

மைந்தன் சிவா said...
கல்யாணம் செய்யப்போரவங்களுக்கு நிச்சயம் உதவும்!!//

அடிங்........உனக்கேதோ உதவாத மாதிரி ஒரு சவுண்டு கொடுக்கிறீங்க.

அதானே?!

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி,,

நன்றி கருன்

shanmugavel said...

@Priya said...

பயன்னுள்ள தகவல்!
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

தங்கள் கருத்துரைக்கு நன்றி

mathangi said...

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை,ரத்தப் பரிசோதனையோடு , ஆண் பெண் இருவருமே 'பெர்டிலிட்டி கவுன்ட்' எண்ணிக்கையையும் சரி பார்க்கவேண்டியது இன்னொரு விஷயம்..திருமணமே லேட்டாக செய்வதோடு குழந்தைப் பிறப்பையும் தள்ளிப் போடுகிறார்கள். பெண்கள் அவர்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருந்தாலும் அதயும் சரியாக சோதித்துப் பார்ப் பது அனைவருக்குமே நல்லது.

மாய உலகம் said...

கல்யாணத்திற்கு முன்பு அனைவரும் கடைபிடிக்கவேண்டிய ஒன்று... பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வுக்கு பாராட்டுக்களுடன் நன்றி