Saturday, August 27, 2011

பெண்கள் ஆண்களைப் புரிந்துகொள்வது எப்படி?


                              உணவகம் ஒன்றில் நான்கு பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.நண்பர் ஒருவர் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொன்னார். தங்கையின் தோழியுடன் நன்றாகப் பேசுவது வழக்கம்.சில நேரங்களில் கேட்ட உதவியும் செய்வதுண்டு.போன் செய்து சந்தேகம் கேட்டாலும் இயல்பாக பேசுவார்.அடிக்கடி வீட்டுக்கு வருவதுண்டு என்பதால் காமெடியாக பேசிக்கொள்ளும் அளவுக்கு பழக்கம்.

                              திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்து பெண் பார்க்கப்போனார்கள்.வீட்டுக்கு வரும் வழியில் தங்கையின் இன்னொரு தோழியைப்பார்த்து எதேச்சையாக பேசப்போக அவர் முகத்தை திருப்பிக்கொண்டு போய்விட்டார்.நன்கு பழகிய தங்கையின் தோழிக்கு போன் செய்தால் பேசவில்லை.தங்கையை கேட்டாலும் அவரும் ஆச்சர்யமாக கேட்கிறார்.பின்னர் தெரிய வந்த விஷயம் தங்கையின் தோழிக்கு இவர் மீது ஒருதலைக் காதல்.

                              இவருக்கு மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லை.பெண் தானாகவே ஆசையை வளர்த்துக்கொண்டிருக்கிறது.தங்கையின் தோழி இன்னொருவரிடம் சொல்லியிருக்கிறார்நான் எவ்வளவோ நம்பியிருந்தேன்”.அவராக ஏன் நம்பிக் கொள்ள வேண்டும்.தன்னை காதலிப்பதாக அவராக ஏன் நினைத்துக்கொள்ள வேண்டும்? நன்றாக பேசினால்,உதவி செய்தால் மனம் எதையெதையோ கற்பித்துக்கொள்கிறதா?

                               எங்களுடன் அமர்ந்திருந்த இன்னொரு நண்பன் கூறினான்பெண்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்’’.உன் மனதிலும் அப்படி ஏதாவது எண்ணம் இருந்திருக்கும்”.சத்தியமாக இல்லை என்று மறுக்க பத்திரிகை நண்பர் சொன்னார்பெண்கள் ஒருவன் தன்னை எவ்வாறு பார்க்கிறான் என்றுதான் ஆண்களைப் புரிந்து கொள்வார்கள்.அவர்களைப்பொறுத்தவரை ஆண்கள் இரண்டு வகைதான்,ஒருவன் ஜொள் விடுபவன்,இன்னொருவன் அப்படி இல்லாதவன்

                                  அவன் விளையாட்டாக சொன்னாலும் எனக்கு சிந்தனையைத் தூண்டியது.எளிதில் புரிந்துகொள்ளும் பெண்களை விட எளிதில் ஏமாந்து போகும் பெண்கள் அதிகமாக இருப்பதை பார்த்திருக்கிறோம்.செண்டிமெண்டுக்கு பலியாவது ஒரு பிரச்சினை என்றால் இன்னொன்று சாதாரணமாகவே மனிதமனம் பொருள் சார்ந்த்து.வழியில் ஒருவர் கோபமாக பேசிக்கொண்டிருந்தார்.அவனுக்கு தினமும் குடிக்க வாங்கிக் கொடுத்தால் நல்லவன் இல்லாவிட்டால் கெட்டவன்,அவன் சகவாசமே வேணாம்

                                  குழந்தையாக இருக்கும்போதே தின்பதற்கு ஏதாவது வாங்கி வரும் மாமாவை விட கையை வீசிக்கொண்டு வரும் மாமாவை நமக்கு பிடிப்பதில்லை.அன்பு பொருளில் இருப்பதாக நினைப்பது நமக்கு பழகிப் போய்விட்ட்து.பரிசுப்பொருள் வாங்கிக் கொடுத்தால் மிகுந்த அன்புடையவன் என்று நினைத்துக்கொள்வது அப்படித்தான்.ஆண் பெண் அனைவரிடமும் டீ வாங்கிக் கொடுத்து ஹோட்டலுக்கு கூட்டிப்போய் நல்லவன் ஆகி விடுபவர்கள் உண்டு.

                                  ஆண் திட்டமிட்டு ஏமாற்றுவதை பெண்களால் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடிவதில்லை.ஆனால் யாரைத்தான் நம்புவது? அதிலும் காதல்,காம்ம் போன்றவற்றில் உணர்ச்சிப் பெருக்கோடு இருப்பதால் யோசிக்க முடிவதில்லை.மனம் உணர்ச்சிவசப் படும்போது சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறது.நல்லவர்களின் துணை இருந்தால் மீள முடியும்.

                                  பொதுவாகவே ஆண்களைவிட பெண்கள் புரிந்து கொள்ளும் திறன் அதிகம்தான்.ஆணுக்கு வெளிவிவகாரங்கள்,புகை,குடி,போட்டிகள்,அங்கீகாரம் என்று மனம் ஒரு நிலைப்படுவதில் பிரச்சினைகள் உண்டு.பெண்ணுக்கு அப்படி எதுவும் இல்லாத்தால் மனதை ஒருமுகப்படுத்துவது எளிது.இதனால்தான் படிப்பிலும் கூட பெண்கள் ஆண்களைவிட அதிக அளவில் தேர்ச்சி பெறுவது சாத்தியமாகிறது.
-

27 comments:

ஓசூர் ராஜன் said...

//ஆணுக்கு வெளிவிவகாரங்கள்,புகை,குடி,போட்டிகள்,அங்கீகாரம் என்று மனம் ஒரு நிலைப்படுவதில் பிரச்சினைகள் உண்டு//

ஆமாம்.

ஓசூர் ராஜன் said...

//அன்பு பொருளில் இருப்பதாக நினைப்பது நமக்கு பழகிப் போய்விட்ட்து.பரிசுப்பொருள் வாங்கிக் கொடுத்தால் மிகுந்த அன்புடையவன் என்று நினைத்துக்கொள்வது அப்படித்தான்//

சரியான வார்த்தைகள் நண்பரே!

ரைட்டர் நட்சத்திரா said...

கடைசியா சொன்ன மேட்டர் சூப்பர்

மாய உலகம் said...

மனம் உணர்ச்சிவசப் படும்போது சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறது.நல்லவர்களின் துணை இருந்தால் மீள முடியும்.//


மேலே உள்ள வரிகள் பொதுவாக எல்லா விதத்திலும் பொருந்தும் விதமாக அழகாக சொல்லியுள்ளீர்கள்... அதுவும் பருவ வயதில் காதல் வந்து விட்டால் முற்றிலும் யோசிக்கும் திறன் இழந்து விடும்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .

மாய உலகம் said...

தமிழ் மணம் 3

மாய உலகம் said...

a.r ரஹ்மான் பாடலும் நீங்கள் எடிட் செய்த காணொளியும் கலக்கல் நண்பா

தமிழ்வாசி பிரகாஷ் said...

பொதுவாகவே ஆண்களைவிட பெண்கள் புரிந்து கொள்ளும் திறன் அதிகம்தான்.///

அப்படியா?

shanmugavel said...

@ராஜன் said...

//ஆணுக்கு வெளிவிவகாரங்கள்,புகை,குடி,போட்டிகள்,அங்கீகாரம் என்று மனம் ஒரு நிலைப்படுவதில் பிரச்சினைகள் உண்டு//

ஆமாம்.

நன்றி சார்

ஆச்சி ஸ்ரீதர் said...

பெண்கள் அதிகம் புரிதல் உடைவர்களே.ஆனால் அதைவிட அதிகம் எளிதில் ஏமாறுவார்கள்தான்.என் அனுபவம் அக்கம் பக்கத்தில் பார்த்ததை வைத்து சொல்லுகிறேன்

shanmugavel said...

@கார்த்தி கேயனி said...

கடைசியா சொன்ன மேட்டர் சூப்பர்

கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@மாய உலகம் said...

மனம் உணர்ச்சிவசப் படும்போது சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறது.நல்லவர்களின் துணை இருந்தால் மீள முடியும்.//


மேலே உள்ள வரிகள் பொதுவாக எல்லா விதத்திலும் பொருந்தும் விதமாக அழகாக சொல்லியுள்ளீர்கள்... அதுவும் பருவ வயதில் காதல் வந்து விட்டால் முற்றிலும் யோசிக்கும் திறன் இழந்து விடும்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .

நன்றி நண்பரே!

shanmugavel said...

@மாய உலகம் said...

a.r ரஹ்மான் பாடலும் நீங்கள் எடிட் செய்த காணொளியும் கலக்கல் நண்பா

????????????thanks sir

shanmugavel said...

@தமிழ்வாசி - Prakash said...

பொதுவாகவே ஆண்களைவிட பெண்கள் புரிந்து கொள்ளும் திறன் அதிகம்தான்.///

அப்படியா?

ஆமாம் சார் ,விளக்கமும் இருக்கே!

shanmugavel said...

@thirumathi bs sridhar said...

பெண்கள் அதிகம் புரிதல் உடைவர்களே.ஆனால் அதைவிட அதிகம் எளிதில் ஏமாறுவார்கள்தான்.என் அனுபவம் அக்கம் பக்கத்தில் பார்த்ததை வைத்து சொல்லுகிறேன்

உண்மைதான் ,தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

Unknown said...

உங்கள பாலோ பண்ணனும் சார்..எங்க இருந்து இந்த மாதிரி விடயங்களை எடுக்கிரீங்கன்னு பார்க்க

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

உங்கள பாலோ பண்ணனும் சார்..எங்க இருந்து இந்த மாதிரி விடயங்களை எடுக்கிரீங்கன்னு பார்க்க

சொந்த விஷயம்தான் சிவா,நன்றி

shanmugavel said...

@Rathnavel said...

நல்ல பதிவு.

நன்றி சார்

கூடல் பாலா said...

சிறந்த மனவியல் ஆராய்ச்சி ...

Sankar Gurusamy said...

பெண்களுக்கு அறிவுரையே தேவையில்லை... அவர்கள் தாமாகவே இதை புரிந்துகொள்ளும் வல்லமை பெற்றவர்கள்..

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

அம்பலத்தார் said...

பெண்கள் அதிகம் புரிதல் உடைவர்களே. அது OK அப்படியே ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வது எப்படின்னும் ஒரு பதிவு போட்டிடுங்களேன்

ராஜா MVS said...

நல்ல பகிர்வு நண்பரே..,
சிறந்த மனவியல் ஆராய்ச்சி...
வாழ்த்துகள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிறப்பான விஷயங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்...
வாழ்த்துக்கள்....

தமிழ்மணம் 7 ஓட்டு

முனைவர் இரா.குணசீலன் said...

எளிதில் புரிந்துகொள்ளும் பெண்களை விட எளிதில் ஏமாந்து போகும் பெண்கள் அதிகமாக இருப்பதை பார்த்திருக்கிறோம்.

உண்மைதான்.

முனைவர் இரா.குணசீலன் said...

மதிப்பெண் எடுத்தலில் பெண்கள் முன்னிலை வகித்தாலும்..

நானறிந்தவரை செயல்முறைப்படுத்துவதில் பெண்களைவிட ஆண்கள் ஒருபடி முன்னே தான் இருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்

முனைவர் இரா.குணசீலன் said...

இன்று நானும உளவியல் பதிவு தான் வெளியிட்டிருக்கிறேன்நண்பரே

http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_3806.html

நிரூபன் said...

ஆண்களும் பெண்களும் எவ்வாறு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை எளிமையான உதாரணம் மூலமாக சொல்லியிருக்கிறீங்க.