Friday, August 19, 2011

ஜோக் படித்தால் சிரிப்பு வருகிறதா? இல்லையா?

  நகைச்சுவை  ஒன்றை படித்தால் சிரிப்பு வரத்தானே வேண்டும்.ஆமாம் ,அது மனிதனுக்கு கிடைத்த முக்கியமான விஷயம்.அது சுமாராக இருந்தால் கூட! அவ்வளவாக ரசிக்க முடியாமல் போனால் யோசிக்க வேண்டும்.கீழே உள்ளதையும் படியுங்கள்.

  ஆசிரியர்: ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை?

  மாணவி:கரண்ட் இல்ல !

  ஆசிரியர்:மெழுகுவர்த்தி வைத்து எழுத வேண்டியதுதானே?

   மாணவி:தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்தது! எடுக்க முடியல!

   ஆசிரியர் :ஏன்?

  மாணவி: குளிக்கல! அதனால சாமி ரூமுக்குள்ள போக முடியல!

  ஆசிரியர் :ஏன் குளிக்கவில்லை?

  மாணவி: லூசா நீங்க? அதான் கரண்ட் இல்லேன்னு மொதல்லயே சொன்னனே!?


                                                          இப்படி சாதரணமாக இருந்தாலே ஓஹோவென ரசிப்பவர்கள் உண்டு.வெடி ஜோக் சொன்னாலும் சிரிப்பு வரவில்லையா? நீங்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.சிலர் ஏதேனும் கவலையாக இருந்தாலும் உற்சாகமில்லாமல் இருப்பார்கள்.மனச்சோர்வு என்பது சாதாரண கவலையிலிருந்து அதன் கால அளவுகளில் வேறுபடுகிறது.பாதிப்பு நீண்ட காலம் இருக்கும்.

                                                           மனதில் ஏற்படும் சோர்வு என்பது இயல்பு வாழ்க்கையை பாதிக்கக் கூடியது.உறவுகளை பேணுவதில்,சிந்திப்பதில் செயல்படுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.தூங்குவதிலும் பாதிப்பு இருக்கும்.காலம் காயங்களை ஆற்றும் என்பார்கள்.நமக்கு ஏற்படும் எந்த துயரமும் காலம் செல்ல செல்ல குறைந்து விடும்.சிலரால் மீண்டு வரமுடியாமல் போய்விடுகிறது.


                                                          இன்றைய நவீன வாழ்க்கையில் எதைஎதையோ யோசித்து குழப்பிக்கொள்கிறோம்.அழுத்தங்கள் அதிகமாகிவிட்டது.பரம்பரை முக்கிய காரணமாக கருதப்பட்டாலும் சூழ்நிலைகள்,மருத்துவ காரணங்கள்,வாழ்வில் நடந்த சம்பவங்கள் போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன.நாம் சிந்திக்கும் முறையும் மன அழுத்தத்தை உருவாக்கும் காரணியாக இருக்கிறது.

                                                          அதிகம் சம்பாதிக்கும் இளைய தலைமுறை பாதிக்கப்படுவது கூடி வருகிறது .இதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் மதுவுக்கு அடிமையாகி பாண்டிச்சேரியில் சுற்றித்திரிந்தது பற்றி செய்திகளில் படித்திருப்பீர்கள்.


                                                              கௌரவம்,மதிப்பு ,நல்ல வருமானம் இத்தனை இருந்தும் ஏன் பாதிக்கப்படவேண்டும்? மனம் என்பது ஒரு சிக்கலான பிரமாண்டம்.சுற்றி உள்ள நண்பர்கள்,உறவினர்கள் யாராவது ஆரம்பத்திலேயே கவனித்திருந்தால் ,அவர்களுக்கு விழிப்புணர்வு இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே சரி செய்திருக்கவும் முடியும்.

                                                               மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.ஆனால் இன்று மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலை.பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்.மனச்சோர்வும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.உடலையும் மனதையும் பலவீனப்படுத்துவது மன அழுத்தம்.


                                                                எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது,சுகாதாரத்தில் கூட அக்கறை காட்டாமல் இருப்பது,மிதமிஞ்சிய மதுப்பழக்கம்,சரியாக சாப்பிடாமல் இருப்பது,அல்லது அதிகம் உண்பது,தூக்கமின்மை கோளாறுகள் இருந்தால்,கவனிப்பவர்கள் உதவுவது அவசியம்.

                                                                 மனதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அருகில் உள்ளவர்கள் அன்பு முக்கியமான மருந்து.மன அழுத்தம் மிதமாக இருந்தால் ஆலோசனைகள் மூலமாகவே தீர்வு காண முடியும்.அதிகமாக இருந்தால் மருத்துவ உதவி தேவைப்படும்.கிண்டல் ,கேலி செய்யாமல் அணுக வேண்டும் என்பது முக்கியம்.டிப்ரஷன் ,மன அழுத்தம் ,மனச்சோர்வு எல்லாம் ஒரே பொருள்தான்.
-

29 comments:

Anonymous said...

///மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.ஆனால் இன்று மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலை.பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்./// உண்மை நிலை இது தான்.

நல்ல பதிவு ஐயா ..

shanmugavel said...

@கந்தசாமி. said...

///மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.ஆனால் இன்று மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலை.பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்./// உண்மை நிலை இது தான்.

கருத்துரைக்கு நன்றி கந்தசாமி.

நல்ல பதிவு ஐயா ..

மாய உலகம் said...

மனம் என்பது மனிதனின் சக்திகளில் முதன்மையானது... அதற்கு ஒரு பிரச்சனை வந்து அழுத்தமாகி ஆதரவு குறையும் நேரத்தில் பைத்தியமாகிவிடும் நிலைமை அருகில் வந்து விடும்,,, எனவே அன்பால் மன அழுத்தத்தை குறைக்கலாம் என்பது உண்மை தான் ஆனால் அன்பு போலி என்று தெரியும் பட்சத்தில்.... அந்த மனம் மேலும் பலகீனமாகிவிடும்... அதுவும் இன்றைய நிலையில் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தனக்குள்ளே குமறிக்கொண்டு உண்மையான ஆதரவுக்காக நிறைய பேர் இருக்கிறார்கள்...எனவே உண்மை நேசத்தை ஒவ்வொருவரும் பகிர்வோம்... மன அழுத்தத்தை குறைப்போம்.... நன்றி நண்பா நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
மனச்சோர்வு எதனால் ஏற்படுகிறது?மனச் சோர்விற்குரிய மூல காரணத்தினை எப்படிக் கண்டறிவது என்பது பற்றிய அருமையான விளக்கப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

பாலா said...

சமீப காலமாக இந்த மன அழுத்தத்தால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆமினா said...

// மனதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அருகில் உள்ளவர்கள் அன்பு முக்கியமான மருந்து.//

உண்மை......

அவசர/பண உலகில் பாசத்துக்கு கூட விலை கொடுக்க வேண்டியுள்ளது
............

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்லதொரு உளவியல் பதிவு.

முனைவர்.இரா.குணசீலன் said...

மனதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அருகில் உள்ளவர்கள் அன்பு முக்கியமான மருந்து.

முற்றிலும் உண்மை.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மனச் சோர்வு பற்றி அருமையான விளக்கத்திற்கு நன்றி சகோ..

Tirupurvalu said...

Just for laugh go to
manasaali.blogspot.com
You can get very good jokes to laugh and releive from tension

அம்பாளடியாள் said...

///மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.ஆனால் இன்று மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலை.பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்.///

சரியாகச் சொன்னிர்கள் .முடிந்தவரை மனதின் சுமைகளை இறக்க நகைச்சுவை எழுதுவோம் .
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

அம்பாளடியாள் said...

ஓட்டுப் போட்டாச்சு.......வாழ்த்துக்கள் .

நிலாமகள் said...

மனம் என்பது ஒரு சிக்கலான பிரமாண்டம்//

ஆம் ஐயா. ச‌க‌ ம‌னித‌ன் மேல் சிறிது அன்பு காட்ட‌வும் நேர‌ம‌ற்றுப் போனால் ந‌ம‌க்கும் அந்நிலை வ‌ரும் ஒரு நாள். எச்ச‌ரிப்ப‌தாக‌வும், எளிமையாக‌ விள‌ங்கும்ப‌டியும் சொல்லிய‌மைக்கு ந‌ன்றி.

ராஜா MVS said...

~*~மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.~*~

உண்மையான வாக்கியம் நண்பரே..,
நியூட்டன்3Law மாதிரி..,

நீ மற்றவர்களை அன்பாக நடத்தினால்;
மற்றவர்கள் உன்னை அன்பாக நடத்துவார்கள்.

நல்ல பகிர்வு., நன்றி நண்பரே..

shanmugavel said...

@மாய உலகம் said...

மனம் என்பது மனிதனின் சக்திகளில் முதன்மையானது... அதற்கு ஒரு பிரச்சனை வந்து அழுத்தமாகி ஆதரவு குறையும் நேரத்தில் பைத்தியமாகிவிடும் நிலைமை அருகில் வந்து விடும்,,, எனவே அன்பால் மன அழுத்தத்தை குறைக்கலாம் என்பது உண்மை தான் ஆனால் அன்பு போலி என்று தெரியும் பட்சத்தில்.... அந்த மனம் மேலும் பலகீனமாகிவிடும்...

பலகீனம் அல்ல! அதை விட கொடுமை வேறில்லை நன்றி..

shanmugavel said...

@நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
மனச்சோர்வு எதனால் ஏற்படுகிறது?மனச் சோர்விற்குரிய மூல காரணத்தினை எப்படிக் கண்டறிவது என்பது பற்றிய அருமையான விளக்கப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

thanks nirupan.

shanmugavel said...

@பாலா said...

சமீப காலமாக இந்த மன அழுத்தத்தால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆம் பாலா ,பெரும் அச்சுறுத்தலாக உள்ளது உண்மையே! நன்றி.

shanmugavel said...

@ஆமினா said...

// மனதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அருகில் உள்ளவர்கள் அன்பு முக்கியமான மருந்து.//

உண்மை......

அவசர/பண உலகில் பாசத்துக்கு கூட விலை கொடுக்க வேண்டியுள்ளது
உண்மைதான்.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

shanmugavel said...

@முனைவர்.இரா.குணசீலன் said...

நல்லதொரு உளவியல் பதிவு.

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மனச் சோர்வு பற்றி அருமையான விளக்கத்திற்கு நன்றி சகோ..

thanks karun.

shanmugavel said...

@Tirupurvalu said...

Just for laugh go to
manasaali.blogspot.com
You can get very good jokes to laugh and releive from tension

thanks sir

shanmugavel said...

@அம்பாளடியாள் said...

///மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.ஆனால் இன்று மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலை.பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்.///

சரியாகச் சொன்னிர்கள் .முடிந்தவரை மனதின் சுமைகளை இறக்க நகைச்சுவை எழுதுவோம் .
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

thanks sister

shanmugavel said...

@நிலாமகள் said...

மனம் என்பது ஒரு சிக்கலான பிரமாண்டம்//

ஆம் ஐயா. ச‌க‌ ம‌னித‌ன் மேல் சிறிது அன்பு காட்ட‌வும் நேர‌ம‌ற்றுப் போனால் ந‌ம‌க்கும் அந்நிலை வ‌ரும் ஒரு நாள். எச்ச‌ரிப்ப‌தாக‌வும், எளிமையாக‌ விள‌ங்கும்ப‌டியும் சொல்லிய‌மைக்கு ந‌ன்றி.

தங்கள் கருத்துரைக்கு நன்றி.

shanmugavel said...

@ராஜா MVS said...

~*~மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.~*~

உண்மையான வாக்கியம் நண்பரே..,
நியூட்டன்3Law மாதிரி..,

நீ மற்றவர்களை அன்பாக நடத்தினால்;
மற்றவர்கள் உன்னை அன்பாக நடத்துவார்கள்.

நல்ல பகிர்வு., நன்றி நண்பரே..

நன்றி நண்பரே!

இராஜராஜேஸ்வரி said...

கிண்டல் ,கேலி செய்யாமல் அணுக வேண்டும் என்பது முக்கியம்.டிப்ரஷன் ,மன அழுத்தம் ,மனச்சோர்வு எல்லாம் ஒரே பொருள்தான்.//

நல்ல பகிர்வு.

Jeyamaran $Nila Rasigan$ said...

Nalla pathivu nanba
Nilarasigan

ராஜன் said...

மன அழுத்தம் பற்றி நல்ல பதிவு.நன்றி.

சாகம்பரி said...

ஆமாம். பதட்டம் குறைந்து மன வியாதிகளில் இருந்து விடுபட சிரிப்பு அவசியம்.

Sankar Gurusamy said...

இன்னும் மனநலம் என்பது நம் நாட்டில் கேள்விக்குறியாகவே இருக்கிறது.. முதலில் நம் நாட்டில் இருக்கும் பெரும்பாலான அரசு ஊழியர்களும் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்த சிகிச்சை நிஜமாகவே தேவைப்படுகிறது.. கவனிப்பார்களா??

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/