Sunday, August 14, 2011

ஆண்கள் ஏன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறார்கள்.

ஆண்கள் தங்களது உணர்ச்சிகளை வெளியே கொட்டாமல் அடக்கிக் கொள்கிறார்கள்.அதனால் பல பிரச்சினைகள் என்றும் ஒரு தகவலை படித்தேன்.உண்மையில் கோபமோ,ஆத்திரமோ எந்த உணர்வும் உள்ளேயே அடக்கப்படுவது நல்லதல்ல.இருந்தும் ஏன் வெளியே கொட்டுவதில்லை? காரணம் சாதாரணமானது.அள்ளிக்கொள்ள ஆளிருந்தால் கொட்டுவார்கள்.

                                    ஆண் தனக்குள்ளேயே முடங்கிப்போவது அதிகம்.பெண்களுக்கு இந்த பிரச்சினைகள் குறைவு.பெரும்பாலும் எல்லாவற்றையும் வெளியே சொல்லி விடுகிறார்கள்.அம்மா,சகோதரிகள்,தோழிகள் என்று அவர்களுக்கு நெருக்கமான உறவுகள் அதிகம்.ஆனால் ஆணுக்கு அப்படியெல்லாம் இல்லை.
                                     சகோதர உறவு என்பது முக்கியமானது.பெண்களைப்போல ஆண்களுக்கு இது அமைவதில்லை.சண்டை பிடித்து கோர்ட்டுக்கு போகும் அண்ணன் தம்பிகளை நீங்கள் பார்க்க முடியும்.அண்ணன் தம்பி உறவு வலுவாக இருப்பது மிகவும் குறைவு.பெண்களைக் கவனித்துப் பார்த்தால் தெரியும்.அக்கா,தங்கை உறவு என்பது மிக நெருக்கமானது.வேறெங்கும் இவ்வளவு பாசமான உறவு நிலையை நீங்கள் காண முடியாது.

                                     மற்றவர்களிடமும்,பொருளாதரத்திலும் அந்தஸ்து பெறுவதற்காக ஆண் வெளியுலகத்துடன் அதிக உறவு நிலைகளை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.போட்டி,பொறமை,துரோகம்,போட்டுக்கொடுப்பது போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருக்கிறது.அலுவலகத்திலோ,தொழில் செய்யும் இட்த்திலோ இதெல்லாம் சகஜம்.யாரிடமும் பகிர்ந்து கொள்வதுகூட கஷ்டம்தான்.

                                      நண்பர்களும் தெரிந்தவர்களும் ஒருவனது உணர்வுகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதை கேட்க விரும்புவதில்லை.நான்கு பேர் சந்தித்தால் ஆண்கள் ,அரசியலைப்பற்றியோ,சினிமா பற்றியோ,பெண்களைப்பற்றியோ பேசுவார்களே தவிர கஷ்ட்த்தை சொன்னால் ஓடிப்போய் விடுவார்கள்.ஜோக் சொல்லிக்கொண்டிருந்தால் வெகு நேரம் அங்கே இருப்பார்கள்.

                                       அரசியல்,சினிமா போன்றவற்றை அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதற்கும் இதுவே காரணம்.நான்கு பேர் முன்னால் விஷயம் தெரிந்தவன் என்று காட்டிக்கொள்வதற்கு என்று ஒரு ஆசிரியர் சொன்னார்.உண்மைதான்.ஆண்கள் கூடினால் உள்ளே அரித்துக்கொண்டிருக்கும் விஷயத்தை வெளியே விடாமல் ஏதேதோ பேசிவிட்டு டாஸ்மாக் தேடி போய் விடுகிறார்கள்.

                                      உள்ளே இருப்பதை வெளியே சொல்லாமல் சரக்கு உள்ளே போன பிறகு உளறிக்கொண்டிருப்பார்கள்.மனித உறவுகளில் இணக்கமோ,நெருக்கமோ இல்லாதநிலை பெரும் நெருக்கடி.இந்த நெருக்கடி ஆணுக்கு அதிகம்.மது,சிகரெட் என்று ஒளிந்து கொள்வதற்கு இவை முக்கியமான காரணம்.பல நேரங்களில் குழந்தைகள்மீதும்,பெண்கள்மீதும் பாய்கிறான்.இதனால் வீட்டு உறவுகளும் துண்டிக்கப்பட்டுவிடுகின்றன.

                                      ஆண்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் உறவுகளை கண்டுபிடிப்பது முக்கியமானது.பல ஆண்களும் மனைவியிடம் தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதில்லை.மனைவிக்கு போதுமான அளவுக்கு இதைப்பற்றி தெரியாது என்று நினைக்கிறான்.இது ஒரு பிரச்சினை.குறைந்தபட்சம் வெளியேவிட்ட திருப்தியாவது இருக்கும்.உணர்வு பூர்வமான ஆதரவு வீட்டில் கிடைக்க வாய்ப்புண்டு.

-

20 comments:

ராஜன் said...

அக்கா தங்கை உறவு புனிதமானது என்பது சரி

மாய உலகம் said...

உண்மை தான் ஆண்கள் தங்களுடைய கவலைகளை பகிர்ந்துகொள்வதற்கு சரியான ஆட்கள் இல்லாமல் தடுமாறுவது உண்மையே.... நன்றி நண்பா.

மாய உலகம் said...

த ம 4

மாய உலகம் said...

த 10 ஊமக்குத்து

koodal bala said...

மிகவும் சரியான கருத்து ...ஆண்கள் ,தொலைக் காட்சிகளில் காமெடி காணொளிகளையும் பெண்கள் ,தொடர்களையும் விரும்ப காரணம் இதுதான் என நினைக்கிறேன்

ராஜா MVS said...

உண்மைதான் நண்பரே..,
யாரையும் முதலில் நம்ப மறுப்பதே முக்கிய காரணம். ஆனால் பெண்கள் எல்லோரையும் நம்பிவிடுகிறார்கள் அது அவர்களுக்கு பிரச்சனை.

நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பரே.

shanmugavel said...

@ராஜன் said...

அக்கா தங்கை உறவு புனிதமானது என்பது சரி

கருத்துரைக்கு நன்றி நண்பரே!

vidivelli said...

அக்கா,தங்கை உறவு என்பது மிக நெருக்கமானது.வேறெங்கும் இவ்வளவு பாசமான உறவு நிலையை நீங்கள் காண முடியாது.
unmaithaan...
sariyaana karuththukkalai pakirnthirukkirinkal...
paaraaddukkal..

http://sempakam.blogspot.com/

மதுரன் said...

உண்மைதான்.. ஆண்கள் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்துவதற்கு சரியான சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை

Unknown said...

Kadavulai thavira namaku utra nanbar yaar? Avaridam vaay vittu solli paarungal konjam aarudhal kidaikum.

shanmugavel said...

@மாய உலகம் said...

உண்மை தான் ஆண்கள் தங்களுடைய கவலைகளை பகிர்ந்துகொள்வதற்கு சரியான ஆட்கள் இல்லாமல் தடுமாறுவது உண்மையே.... நன்றி நண்பா.

நன்றி நண்பா.

shanmugavel said...

@koodal bala said...

மிகவும் சரியான கருத்து ...ஆண்கள் ,தொலைக் காட்சிகளில் காமெடி காணொளிகளையும் பெண்கள் ,தொடர்களையும் விரும்ப காரணம் இதுதான் என நினைக்கிறேன்

ஆம் சார்,கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@ராஜா MVS said...

உண்மைதான் நண்பரே..,
யாரையும் முதலில் நம்ப மறுப்பதே முக்கிய காரணம். ஆனால் பெண்கள் எல்லோரையும் நம்பிவிடுகிறார்கள் அது அவர்களுக்கு பிரச்சனை.

நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பரே.

எல்லோரையும் நம்பி விடுகிறார்கள் என்று சொல்ல முடியாது.நன்றி நண்பரே!

shanmugavel said...

@vidivelli said...

அக்கா,தங்கை உறவு என்பது மிக நெருக்கமானது.வேறெங்கும் இவ்வளவு பாசமான உறவு நிலையை நீங்கள் காண முடியாது.
unmaithaan...
sariyaana karuththukkalai pakirnthirukkirinkal...
paaraaddukkal..

பாராட்டுக்கு நன்றி

shanmugavel said...

@மதுரன் said...

உண்மைதான்.. ஆண்கள் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்துவதற்கு சரியான சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை

நன்றி மதுரன்

shanmugavel said...

@Unknown said...

Kadavulai thavira namaku utra nanbar yaar? Avaridam vaay vittu solli paarungal konjam aarudhal kidaikum.

உண்மைதான்.இதை ஏன் மறைந்து கொண்டு சொல்கிறீர்கள்? நன்றி

சாகம்பரி said...

ஆதர்ஸத்தம்பதிகள் என்றொரு வாக்கியம் இருந்தது. இப்போது அதற்கு விளக்கத்தை தேடவேண்டியதாக உள்ளது. பகிர்வுகள் இல்லாமல் அழுத்தம் கூடிப்போய் வியாதிகள் வந்துவிடுகிறது.. நல்ல பகிர்வு.

Sankar Gurusamy said...

//பல ஆண்களும் மனைவியிடம் தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதில்லை.மனைவிக்கு போதுமான அளவுக்கு இதைப்பற்றி தெரியாது என்று நினைக்கிறான்.//

சரியாக சொன்னீர்கள்... மனைவியிடம் ஓரளவுக்காவது நம்பிக்கைவைப்பது இதில் நன்மை பயக்கும்..

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

Priya said...

பகிர்வுக்கு நன்றி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

அம்பலத்தார் said...

உள்ளதை உள்ளபடிக்கு அப்படியே சொல்லிப்புட்டிங்களே