ஆனந்த விகடன்
வாங்க வேண்டும் என்றார் நண்பர்.டீ குடித்து விட்டு பக்கத்தில் உள்ள கடைக்குப் போய்
பார்த்தால்,வழக்கமாக தொங்கிக் கொண்டிருக்கும் விகடன் காணோம்.கடையில் கேட்டால்
உள்ளே இருந்து எடுத்துக் கொடுத்தார்.இலவச இணைப்பாக ஒரு ஓட்ஸ் பாக்கெட்.(இலவசம் இருப்பதால் சீக்கிரம் விற்றுவிடும்,வழக்கமான
வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்)மூன்று நிமிட்த்தில் தயாரிக்கலாம் என்கிறது
குறிப்பு.
ஓட்ஸ் இப்போதுதான்
விளம்பரத்தின் மூலம் அதிகம் தெரியவருகிறது.பெரும்பாலான மருந்துக்கடைகளில் (pharmacy) விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.மருத்துவர்கள்
பரிந்துரை செய்வதுண்டா? தெரியவில்லை.திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்லும்
பேருந்து பயணம்.ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் பக்கத்தில் அமர்ந்திருந்தார்.கையில் பெரிய
ஓட்ஸ் பாக்கெட்.ஒரு வாய் ஓட்ஸும்,கொஞ்சம் தேனும் கலந்து
சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
ஓட்ஸும்,தேனும்
அப்படி சாப்பிடவேண்டும் என்று எனக்கும் ஆசை ஏற்பட்டு விட்ட்து.ஒரு நாள் சாப்பிட்டு
பார்த்தேன்.ஆஹா! அருமையான சுவை.தேனின் மருத்துவ குணங்கள் நிறைய
கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஓட்ஸ் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோயை தடுக்கும்
என்று அதிகம் விரும்புகிறார்கள்.நிறைய கம்பெனிகள் வந்துவிட்டன.மாங்கனீசு,செலினியம்,மக்னீசியம்,நார்ச்சத்துக்களும்
நிரம்பியிருப்பது உண்மைதான்.
ஓட்ஸில்
கிடைக்கும் நன்மை வேறு எந்த உணவிலும் கிடைக்காது என்று சொல்வதற்கில்லை.எங்கும்
பயன்படுத்த எளிதானது என்பது ஒரு நல்ல அம்சம்.ஓட்ஸைப்போல குறிப்பிட்டு சொல்லக்கூடிய
நமது பாரம்பரிய உணவு ஒன்று உள்ளது.அது கேழ்வரகு.இந்தியாவில் பல மாநிலங்களிலும்
இதன் பயன்பாடு இருக்கிறது.கர்நாடகாவிலும்,ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் முக்கிய
உணவாக இருந்த்துண்டு.
குழந்தைகளுக்கு ராகிமால்ட் கொடுக்கிறார்கள்.கால்சியம்,பாஸ்பரஸ்,சில அமினோ
அமிலங்களும்,நார்ச்சத்தும் கொண்ட்து.ராகிமால்ட் என்பது கேழ்வரகுக் கூழ்தான்.வளரும்
குழந்தைகளுக்கு கொங்கு நாட்டின் முக்கிய உணவு.இன்னமும் சில இடங்களில் வழக்கத்தில்
இருக்கிறது.ஆனால் இப்போது பயிரிடுவதும்,பயன்படுத்துவதும் குறைந்து வருகிறது.
தின்று
பழக்கப்பட்ட பெரிசுகள் களி என்றால் சந்தோஷமாகி விடுவார்கள்.இன்றைய தலைமுறையில்
இந்த உணவை விரும்புபவர்கள் குறைவு.தயாரிப்பதில் இருக்கும் சங்கடம் ஒரு
காரணம்.காய்ந்து போனால் பாத்திரத்தை சுத்தம் செய்வதற்குள் போதும் போதும்
என்றாகிவிடும்.கர்நாடகத்தில் அதிகம் சுவைக்கப்படும் உணவு இது.
களியும்
கீரையும் அற்புதமான சேர்க்கை.புரட்டாசி விரதம் இருக்கும் வழக்கம் உங்களுக்குத்
தெரியும்.ஏழைகள் கூட பலவகை விருந்து சமைத்து பகவானுக்கு படைப்பார்கள்.அப்படி ஒரு
விரத்த்தில் உயர்தர உணவுகளோடு ஒரு குடும்பம் பகவானுக்காக காத்திருந்த்தாம்.இன்னொரு
குடும்பம்வசதியில்லாதவர்கள்.களியும்,கீரையும் சமைத்து படைத்து
காத்திருந்தார்கள்.கடவுள் தேர்ந்தெடுத்த்து களியும் கீரையும்.
சில
ஹோட்டல்களில் களியும்,போட்டியும்(ஆட்டுக்குடல்) சக்கைப்போடு போடும்.அப்புறம்
களியும்,கறியும்(மட்டன்,சிக்கன்) வகையறாக்கள்.சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும்
சாலையில் கிருஷ்ணகிரிக்கு ஒரு கிலோமீட்டர் முன்பு ஒரு களி ஓட்டல்
இருக்கிறது.தினமும் மதியத்தில் கூட்டம் களை கட்டும்.பல ஆண்டுகளாக அமோக வரவேற்பை
பெற்ற ஹோட்டல் அது.கேழ்வரகு அடையாகவும்,கூழாகவும்,ராகிமால்டாகவும் பல விதங்களில்
பயன்படுத்தப்படுகிறது.குழந்தைகளுக்கு மிக அவசியம் என்பதை உணருங்கள்.
28 comments:
ஓட்ஸ், மால்ட் என்றால் விரும்பி உண்பவர்கள் களி, கேழ்வரகு கூழ் என்றால் முகம் சுழிக்கிறார்கள். கேழ்வரகு பற்றிய தெளிவான விளக்கத்தை தந்திருக்கிறீர்கள் நன்றிகள்..
மிகவும் உபயோகமான பதிவு நண்பரே..
oats udan nam inthiya unavukalaiyum serththu koduththu suvaiyai kuuttiyulleerkal...vaalththukkal
@பாரத்... பாரதி... said...
ஓட்ஸ், மால்ட் என்றால் விரும்பி உண்பவர்கள் களி, கேழ்வரகு கூழ் என்றால் முகம் சுழிக்கிறார்கள். கேழ்வரகு பற்றிய தெளிவான விளக்கத்தை தந்திருக்கிறீர்கள் நன்றிகள்..
கருத்துரைக்கு நன்றி சார்
பயனுள்ள தகவல்..
பகிர்வுக்கு நன்றி
தமிழ்மணம் 3
கேட்டாலும் கிடைக்காத கேழ்வரகை பற்றி ஆரோக்கிய பதிவு ...அசத்துங்க
தமிழ் மணம் 4
@கவிதை காதலன் said...
மிகவும் உபயோகமான பதிவு நண்பரே..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!
கேழ்வரகு தோசை, களி சாப்பிட்டால் சூடு அதிகரிக்குமா?? நான் எப்போது சாப்பிட்டாலும் பைல்ஸ் தொந்தரவு வந்து விடுகிறது....
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
நம்ம கேழ்வரகு களிக்கும் ஒரு பதிவு. சூப்பர்ணே.
நமக்கெல்லாம் அது அமிர்தம்ணே.
பயனுள்ள, தேவையான பதிவு.
நன்றி..
ஓட்ஸைவிட என்னுடைய ஓட்டு கேழ்வரகிற்குதான். கூழ் குடிப்பது மிகவும் நல்லது. இதிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. தேவையான பதிவு.
நம்ம ஸ்டைலில் உணவு பதிவுகள் போடுவதற்கும் கூட்டம் சேருவது மகிழ்ச்சியாக இருக்கிறது:)
ஓட்ஸ் உணவுப் பொருளாக இருக்கும் போது பார்மசியில் வைத்து விற்கிறார்கள் எனபது ஆச்சரியமாக இருக்கிறது.
@மதுரை சரவணன் said...
oats udan nam inthiya unavukalaiyum serththu koduththu suvaiyai kuuttiyulleerkal...vaalththukkal
thanks saravanan
@மதுரன் said...
பயனுள்ள தகவல்..
பகிர்வுக்கு நன்றி
நன்றி மதுரன்.
@மாய உலகம் said...
கேட்டாலும் கிடைக்காத கேழ்வரகை பற்றி ஆரோக்கிய பதிவு ...அசத்துங்க
நன்றி நண்பா!
@Sankar Gurusamy said...
கேழ்வரகு தோசை, களி சாப்பிட்டால் சூடு அதிகரிக்குமா?? நான் எப்போது சாப்பிட்டாலும் பைல்ஸ் தொந்தரவு வந்து விடுகிறது....
பகிர்வுக்கு நன்றி..
அனைவருக்கும் ஏற்ற உணவுஇது.நீங்கள் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது.குறிப்பிட்ட புரதங்கள் அபூர்வமாக ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடும்,நன்றி
சத்ரியன் said...
நம்ம கேழ்வரகு களிக்கும் ஒரு பதிவு. சூப்பர்ணே.
நமக்கெல்லாம் அது அமிர்தம்ணே.
நன்றி சத்ரியன்.
சத்ரியன் said...
நம்ம கேழ்வரகு களிக்கும் ஒரு பதிவு. சூப்பர்ணே.
நமக்கெல்லாம் அது அமிர்தம்ணே.
நன்றி சத்ரியன்.
@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பயனுள்ள, தேவையான பதிவு.
நன்றி..
THANKS KARUN.
@சாகம்பரி said...
ஓட்ஸைவிட என்னுடைய ஓட்டு கேழ்வரகிற்குதான். கூழ் குடிப்பது மிகவும் நல்லது. இதிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. தேவையான பதிவு.
ஆமாம்,கருத்துரைக்கு நன்றி சகோதரி
@ராஜ நடராஜன் said...
நம்ம ஸ்டைலில் உணவு பதிவுகள் போடுவதற்கும் கூட்டம் சேருவது மகிழ்ச்சியாக இருக்கிறது:)
உயிரினத்துக்கு உணவு முக்கியமான விஷயமாச்சே! நன்றி சார்
@ராஜ நடராஜன் said...
ஓட்ஸ் உணவுப் பொருளாக இருக்கும் போது பார்மசியில் வைத்து விற்கிறார்கள் எனபது ஆச்சரியமாக இருக்கிறது.
மருந்து தொடர்புடைய கம்பெனிகள் மார்க்கெட்டிங் செய்வதால்தான்!நன்றி
ம்ம்ம் இப்போது களி என்றாலே ஜெயிலில் போடும் உணவா என்று கேட்கிரார்கள்
yes kelvaragu kadina ullaipaliku nallathu. kelvaragu sapitaal constipation undaagum
ஓட்ஸ் பற்றிய அருமையான விளக்கப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க பாஸ்.
Post a Comment