Thursday, July 21, 2011

களியாட்ட சாமியாரும் காட்டிக்கொடுத்த சாமியாரும்

கையில் திருவோடு,இடுப்பிலிருந்து முழங்கால் வரை ஒரு பச்சைத்துணி.நெற்றி முழுக்க பக்தி நீறு.ரட்டை நாடி சரீரம்.இப்படி ஒரு சாமியார் எங்கள் ஊரில் வந்து சேர்ந்தார்.பெரும் தலைகள் எல்லாம் எழுந்து நின்று வணங்குவார்கள்.உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை அவரிடம் பாடம் படிக்கலாம்.மருத்துவ மூலிகைகளைப்பற்றி பேசுவார்.சிலருக்கு வைத்தியமும் செய்த்தை பார்த்திருக்கிறேன்.ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கிவிட்டார்.

                                காவியில் எத்தனையோ மகான்களை பார்த்த பூமி இது.துறவிகளை பார்த்தால் மக்களுக்கு எப்போதும் ஒரு தனி மரியாதை.பெண்கள் காலில் நீர் ஊற்றி வணங்குவார்கள்.மேலே சொன்ன சாமியாருக்கும் அப்படி ஒரு மரியாதை தந்தார்கள்.பலர் ஆலோசனைக்காக தேடிப்போனார்கள்.இப்போது மதிப்பிழந்துவிட்ட ஒரு சாமியார் பற்றி வெகு காலம் முன்பே அவர் சொன்னார்.

                                                                                பேருந்து நிறுத்த்த்தில் உள்ள தேநீர்க்கடைதான் அவரது சந்திப்பு மையம். சில மாதங்களுக்குப் பிறகு வீடுவீடாக பிச்சைக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.யாரோ ஒருவர் உணவுக்கு அழைத்துச்சென்று விடுவார்.ஊரில் பல பெரியவர்கள் அவருக்கு தாசனாகிப் போனார்கள்.அடிக்கடி வெளியூர் சென்று வருவார்.திருப்பதி போனேன்,காஞ்சி போனேன் என்று அவருடைய அனுபவங்களை கேட்க பலர் காத்திருப்பார்கள்.

                               நண்பன் ஒருவன் வீட்டிற்கு வந்து அழைத்தான்.ஒரு சூப்பர் விஷயம், இங்க வா!.அவன் பின்னால் நானும் தொடர மாரியம்மன் கோயிலுக்குப் போய் சேர்ந்தோம்.அங்கே ஒரு சாமியார்.ஊதினால் விழுந்துவிடுவது போல! “ சாமி,நீங்கள் என்னவோ சொன்னீர்களே இவனிடம் சொல்லுங்கள்’’ என்றான் நண்பன்.மிக ஆவலோடு இருந்தான்.அவனுக்கு ஏதோ இனம் புரியாத சந்தோஷம்.

                                 “ அவன் ஒரு ஃப்ராடு,அவன பத்தி இவனுக்கு எதுக்கு? என்றார் சாமியார்.இவன் அடிக்கடி பணம் கொடுக்கிறான் அந்த சாமியாருக்கு என்றான் நண்பன் என்னைப்பார்த்து! சாமியாருக்கு வந்த ஆக்ரோஷத்தை பார்க்க வேண்டும்.அவன் ஒரு குடிகாரன்,ஊரெல்லாம் வைப்பாட்டி வைத்துக்கொண்டு திரிபவன்,அவனுடைய பிள்ளைகள் அடித்து துரத்திவிட்டார்கள்.கொஞ்ச நாள் என்னுடன் தான் சுற்றிக்கொண்டிருந்தான்.ரயிலில் வந்தால் டிக்கெட் எடுக்க மாட்டான்.

                                    ஊரில் நன்மதிப்பு பெற்ற சாமியார் பற்றி புதியதாக வந்த சாமியார் வெளியிட்ட விவரங்கள் ஊரில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து விட்டிருந்த்து.சிலர் நம்பினார்கள்,சிலர் நம்பவில்லை.தன்னைப்பற்றிய அவதூறுகள் சாமியாருக்கு தெரிந்து  விட்ட்து.நேரடியாக இருவருக்கும் காரசாரமான சண்டை ஏற்பட்டுவிட்ட்து.நன் மதிப்பு பெற்ற சாமியார் ஆத்திரத்தில் பேசிய வார்த்தைகளை கேட்டவர்கள் காதுகளை மூடிக்கொண்டார்கள்.

                                    புதியதாக வந்த சாமியார் போய்விட்டார்.ஊரில் அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை.அடுத்த நாளே பழைய சாமியாரின் போக்கு மாறிப்போயிருந்த்து.தனக்கு மரியாதை போய்விட்ட்து என்று முடிவு செய்திருக்க வேண்டும்.குடித்துவிட்டு வீதியில் பாட்டுபாடி திரிய ஆரம்பித்து விட்டார்.ஒரு பெண்மணி வீட்டுக்கு வந்து ஒரே சண்டை.மனைவியாக இருக்க வாய்ப்பில்லை.

                                    அவரது தொல்லை தாங்க முடியாமல் போய்க்கொண்டிருந்த்து.இனியும் இவனை ஊரில் வைக்க்க்கூடாது என்று தீர்மானித்து விட்டார்கள்.குறிப்பாக பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.வீடு கொடுத்தவர் வீட்டைக்காலி செய்யுமாறு கட்டளையிட்டு துரத்திவிட்டார்கள்.இப்போதும் ஏதேனும் ஒரு கிராமத்தில் நன் மதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.யாரேனும் குனிந்து வணங்கிக் கொண்டும் இருக்கலாம்.

                                பெரும்பாலான கோயில்களில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் பல சாமியார்கள் வீட்டுப்பிரச்சினைகள்,கடன் தொல்லை போன்றவற்றை சமாளிக்க முடியாமல் ஓடிப்போனவர்கள் என்று கேள்விப்பட்டேன்.திருவண்ணாமலை ரமணாசிரம்ம் முன்பு ஒரு சாமியார் சொன்னது இது.ஓடிப்போனவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.பெண்களும் குழந்தைகளும் ஓடிப்போவது எப்படி?

-

12 comments:

இராஜராஜேஸ்வரி said...

.பெண்களும் குழந்தைகளும் ஓடிப்போவது எப்படி?//

அருமையான் கேள்வி..

Anonymous said...

இந்த சாமியார்கள் தொல்லை பெரும் தொல்லை போல !!

பாலா said...

சாமியார்கள் என்ற வார்த்தையே தவறு. அதற்கு உள்ள மரியாதையே போய் விட்டது.

Sankar Gurusamy said...

இன்றைய சாமியார்களைப்பற்றி விளக்கமாக கூறி இருக்கிறீர்கள்.

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இப்போ இது அவசியமான பதிவு.

மாய உலகம் said...

//நன் மதிப்பு பெற்ற சாமியார் ஆத்திரத்தில் பேசிய வார்த்தைகளை கேட்டவர்கள் காதுகளை மூடிக்கொண்டார்கள்.

ஓடிப்போனவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.பெண்களும் குழந்தைகளும் ஓடிப்போவது எப்படி?//

மீசை வைத்தவன் பாரதியா...!
தாடி வச்சவன் தாகூரா..!!! இவர்களால் உண்மையான ஆன்மீகவாதிகளுக்கும் கெட்டப்பெயர்...

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

.பெண்களும் குழந்தைகளும் ஓடிப்போவது எப்படி?//

அருமையான் கேள்வி..

நன்றி மேடம்.

shanmugavel said...

@கந்தசாமி. said...

இந்த சாமியார்கள் தொல்லை பெரும் தொல்லை போல !!

thanks sir

shanmugavel said...

@கந்தசாமி. said...

இந்த சாமியார்கள் தொல்லை பெரும் தொல்லை போல !!

உண்மைதான் பாலா ! நன்றி.

shanmugavel said...

@Sankar Gurusamy said...

இன்றைய சாமியார்களைப்பற்றி விளக்கமாக கூறி இருக்கிறீர்கள்.

பகிர்வுக்கு நன்றி...

நன்றி சங்கர்.

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இப்போ இது அவசியமான பதிவு.

thanks sir

shanmugavel said...

@மாய உலகம் said...

//நன் மதிப்பு பெற்ற சாமியார் ஆத்திரத்தில் பேசிய வார்த்தைகளை கேட்டவர்கள் காதுகளை மூடிக்கொண்டார்கள்.

ஓடிப்போனவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.பெண்களும் குழந்தைகளும் ஓடிப்போவது எப்படி?//

மீசை வைத்தவன் பாரதியா...!
தாடி வச்சவன் தாகூரா..!!! இவர்களால் உண்மையான ஆன்மீகவாதிகளுக்கும் கெட்டப்பெயர்...

ஆமாம் சார்.நன்றி.